சிறந்த எலெக்ட்ரிக் பைக் மாடல்கள்

இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் பைக்குகளின் பட்டியலை இந்த பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை தர வரிசையில் சிறந்த எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை, ரேஞ்ச், சார்ஜ் ஏற்றுவதற்கான நேரம், தொழில்நுட்ப விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பெறலாம்.

 • 1 . Revolt RV 400

  New Revolt RV 400
  Street
  1,30,892 Onwards
  ரிவோல்ட் ஆர்வி400 பைக் இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் பைக் மாடலாக மாறி இருக்கிறது. விற்பனையில் அசத்தி வரும் இந்த எலெக்ட்ரிக் பைக் தோற்றத்திலும், செயல்திறனிலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் ஸ்டான்டர்டு மற்றும் பிரிமீயம் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த பைக்கிற்கு பிரத்யேக கடன் திட்டங்களை ரிவோல்ட் நிறுவனம் வழங்குகிறது.
 • 2 . Joy e-bike Monster

  New Joy e-bike Monster
  1,00,500 Onwards
  ஜாய் இ பைக் மான்ஸ்ட்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் எலெக்ட்ரிக் மினி பைக் மாடலாக உள்ளது. டுகாட்டி மான்ஸ்ட்டர் சூப்பர் பைக்கை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது போல தோற்றத்தை பெற்றிருக்கிறது. இது மினி பைக் ரகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த பைக்கில் 72V/39Ah லித்தியம் அயான் பேட்டரியும், 1,500 வாட் பிஎல்டிசி மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் பிடிக்கும். பேட்டரியின் முழுமையா சார்ஜ் செய்யப்பட்டால் 100 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும்.
 • 3 . Odysse Evoqis

  New Odysse Evoqis
  1,61,223 Onwards
  ஒடிசி எவோகிஸ் எலெக்ட்ரிக் பைக் டிசைனில் மிகவும் வசீகரமாக உள்ளது. எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான எல்இடி லைட்டுகள், சிறந்த ரைடிங் பொசிஷன், மியூசிக் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது. இந்த பைக் பூஜ்யத்திலிருந்து 50 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும்.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city