இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மஹிந்திரா வெரிட்டோ எலெக்ட்ரிக் கார் வாடகை கார் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் விரைவில் தனிநபர் பயன்பாட்டிற்கான சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இடவசதி, குறைவான எரிபொருள் செலவு ஆகியவற்றுடன் மாசு உமிழ்வு இல்லாத வாகனம் என்பது இதன் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.
மெய்னி ரேவா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மஹிந்திரா இ2ஓ பிளஸ் கார் இந்திய தனிநபர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரே எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்குகிறது. தினசரி பயன்பாட்டுக்கு போதுமான அளவு இதன் பேட்டரி சார்ஜ் திறனை பெற்றிருக்கிறது. செயல்திறனில் சிறப்பான இந்த கார் மிக குறைவான எரிபொருள் செலவுடைய கார் மாடலாகவும் பெயர் பெற்றுள்ளது. உருவத்தில் சிறிய கார் என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள், சிறிய தெருக்களிலும் எளிதாக ஓட்ட முடியும். 4 பேர் செல்வதற்கான இடவசதியை அளிக்கிறது.