சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள்

இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை தர வரிசையில் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, ரேஞ்ச், சார்ஜ் ஏற்றுவதற்கான நேரம், தொழில்நுட்ப விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பெறலாம்.

 • 1 . ஏத்தர் 450X

  New ஏத்தர் 450X
  Scooters
  1,39,757 Onwards
  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் 450எக்ஸ் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. ஸ்டைலானத் தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகளில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இந்த ஸ்கூட்டரில் 4ஜி இன்டர்நெட் வசதியுடன் கூடிய 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு, நேவிகேஷன் உள்ளிட்ட பல வசதிகளை பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.61kWh பேட்டரி பொருத்தப்ப்டடு இருக்கிறது. 3,300W மின் மோட்டார் பொருத்தப்ப்டடு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் பூஜ்யத்திலிருந்து 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 80 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என ஏத்தர் தெரிவிக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் பார்க்கிங் மோடு வசதியும் உள்ளது.
 • 2 . பஜாஜ் Chetak

  New பஜாஜ் Chetak
  Scooters
  1,37,801 Onwards
  பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைனில் மிகச் சிறப்பான மாடலாக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் மட்டும் கேடிஎம் பைக் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் விற்பனைக்கு வர இருக்கிரது. இந்த ஸ்கூட்டர் மெட்டல் பாடியுடன் பிளாஸ்டிக் பாடி பேனல்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி பேக் மற்றும் 3,800 BLDC மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். விரைவு சார்ஜர் பயன்படுத்தினால் 60 நிமிடங்களில் பூஜ்யத்தில் இருந்து 25 சதவீதம் பேட்டரியில் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.
 • 3 . டிவிஎஸ் iQube

  New டிவிஎஸ் iQube
  Scooters
  1,00,752 Onwards
  டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஐ-க்யூப் களமிறக்கப்ப்டடுள்ளது. இந்்த ஸ்கூட்டர் அடக்கமான வடிவமைப்புடன், சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முழுமையான டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், நேவிகேஷன் அசிஸ்ட், குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்துவதற்கான ஜியோஃபென்சிங் வசதி, புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இணைக்கும் வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 2.2kWh லித்தியம் அயான் பேட்டரியும், 4,400W மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 78 கிமீ வேகம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் பூஜ்யத்திலிருந்து 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.2 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
 • 4 . ஹீரோ எலெக்ட்ரிக் ஃபோட்டான்

  New ஹீரோ எலெக்ட்ரிக் ஃபோட்டான்
  Scooters
  74,468 Onwards
  ஹீரோ ஆப்டிமா ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் வேரியண்ட் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இந்த வேரியண்ட் டியூவல் பேட்டரி கொண்ட மாடலில் கிடைக்கிறது. எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி போர்ட் வசதி, பேட்டரியை கழற்றி மாட்டும் வசதி, ரிமோட் லாக்கிங் சிஸ்டம், திருட்டு போவதை எச்சரிக்கும் வசதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 51.2V/30Ah பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 550W பிஎல்டிசி மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 122 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 42 கிமீ வேகம் வரை செல்லும்.
 • 5 . ஒகினவா i-Praise

  New ஒகினவா i-Praise
  Scooters
  1,07,202 Onwards
  இந்தியர்கள் மத்தியில் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஒகினவா ஐ-பிரெய்ஸ் இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், ரேஞ்ச் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது. கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் மற்றும் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்ஃபோனுடன் பிரத்யேக அப்ளிகேஷன் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக ஜியோ ஃபென்சிங், இம்மொபைலைசர், வாகன இருப்பிடத்தை கண்டறியும் வசதிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த ஸ்கூட்டரில் கழற்றி மாட்டும் வசதியுடன் கூடிய 3.3kWh லித்தியம் அயான் பேட்டரி பொாருத்தப்பட்டு இருக்கிறது. 1,000 வாட் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 139 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 58 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 • 6 . Ampere Magnus EX

  New Ampere Magnus EX
  Scooters
  71,977 Onwards
  ஹீரோ எலெக்ட்ரிக் என்ஒய்எக்ஸ் (NYX) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரட்டை பயன்பாடு கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, சிறிய வியாபாரிகள், மளிகை கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏதுவாக, சாதாரணமாகவும், மூட்டைகள் மற்றும் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை கொடுக்கும் வகையில் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் அகலமான ஃபுட்போர்டு இருப்பதுடன், பின் இருக்கையை வேண்டும்போது மேலே தூக்கி விட்டு மூட்டைகளை வைத்து எடுத்துச் செல்லலாம். இந்த ஸ்கூட்டரில் 51.2V/30Ah திறன் வாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 1,300W மின் மோட்டார் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 மணிநேரம் பிடிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 42 கிமீ வேகம் வரை செல்லும்.
 • 7 . PURE EV EPluto 7G

  New PURE EV EPluto 7G
  Scooters
  83,837 Onwards
  ப்யூர் இவி நிறுவனத்தின் இபுளூட்டோ 7ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பழமையான டிசைன் அம்சங்கள் மற்ரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வசீகரிக்கிறது. வெஸ்பா ஸ்கூட்டர்களை நினைவூட்டும் வகையிலான டிசைன் அம்சங்களை கொண்டுள்ல இந்த ஸ்கூட்டர் சில தனித்துவமான அம்சங்களுடன் வேறுபடுகிறது. இந்த ஸ்கூட்டரில் 2.5kWh பேட்டரியும், 1,500 வாட் மின் மோட்டாரும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 முதல் 120 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
 • 8 . OLA S1 Pro

  New OLA S1 Pro
  Scooters
  1,24,999 Onwards
 • 9 . Bounce Infinity E1

  New Bounce Infinity E1
  Scooters
  52,940 Onwards
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city