இந்தியாவின் சிறந்த ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹேட்ச்பேக் கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
டிசைன், வசதிகள், எஞ்சின் அனைத்திலும் நிறைவை தருவதோடு, மிகச் சரியான விலையில் கிடைக்கும் மாடல் ஃபோர்டு ஃபிகோ கார். கையாளுமையில் வெகு ஜோரான கார் என்று வாடிக்கையாளர்களிடம் பெயர் பெற்ற மாடல்.
இந்தியாவில் முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இந்த கார் இருந்து வருகிறது. மிக குறைவான பட்ஜெட்டில் பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி ஆல்ட்டோ கார் விற்பனை செய்யப்படுகிறது. அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் குறைவான பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ் போன்றவற்றுடன் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இந்த கார் இருந்து வருகிறது.
நடுத்தர பட்ஜெட் கொண்ட ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் அம்சங்கள் கொண்ட மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. தனித்துவமான டிசைன் அம்சங்கள், அதிக வசதிகளுடன் பிஎஸ்-6 தரமுடைய எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கிறது. மிக சரியான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்கிறது.
நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள், மிகச் சரியான விலையில் கிடைக்கும் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மாருதி வேகன் ஆர். உயரமான பயணிகளுக்கு ஏற்ற உட்புற இடவசதி, குறைவான பராமரிப்பு செலவு, நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருப்பதும் இதன் முக்கிய அம்சங்கள்.
மிக குறைவான பட்ஜெட் கொண்ட மார்க்கெட்டில் எஸ்யூவி ரக கார்களுக்கு உரிய தாத்பரியங்களுடன் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் கிடைக்கிறது. ரெனோ க்விட் காருக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த கார் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் ஈர்த்துவிட்டது. டால் பாய் எனப்படும் பிரத்யேக டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் போதுமான இடவசதியுடன் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.
ஹேட்ச்பேக் கார்களில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக மாருதி வேகன் ஆர் கார் இருந்து வருகிறது. குறைவான பட்ஜெட்டில், நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த கார் கிடைப்பதால், விற்பனையிலும் சிறந்த மாடலாக இடம்பிடித்துள்ளது. பிஎஸ்-6 தரமுடைய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள், சிஎன்ஜி எரிபொருள் வேரியண்ட்டுகள் மற்றும் போதுமான வசதிகளுடன் குறைவான பராமரிப்பு செலவு கொண்டதாக இந்த கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது.
இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ கார் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. அருமையான டிசைன், வசதிகளுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் இந்த கார் கிடைப்பதால், அதிக ஆதரவை பெற்றுள்ளது. இந்த கார் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் பட்ஜெட்டிற்கு தக்கவாறு பல்வேறு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.
பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி செலிரியோ கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. குறிப்பாக, பட்ஜெட் பிரச்னை உள்ளவர்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளையும் இந்த கார் சிறப்பாக பூர்த்தி செய்கிறது. ஆல்ட்டோ காரைவிட சற்று கூடுதல் பிரிமீயம் அம்சங்களுடன் போதுமான இடவசதி கொண்டதாக இருப்பதால் இந்த காரும் அதிக வரவேற்பை பெற்ற மாருதி தயாரிப்பாக இருந்து வருகிறது. இந்த கார் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைப்பது குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயமாக இருக்கிறது.
இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிக குறைவான விலையில் கிடைக்கும் மிக ஸ்டைலான கார் மாடலாக ரெனோ க்விட் பெயர் பெற்றுவிட்டது. ஹேட்ச்பேக் டிசைன் என்ற தாத்பரியத்திலிருந்து விலகி, எஸ்யூவி அம்சங்களுடன் பார்ப்பதற்கு பிரமீயம் மாடல் போன்று இருப்பதால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இந்த கார் வெளிப்புற டிசைன் மட்டுமின்றி, உட்புறத்திலும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் கவர்ந்து வருகிறது. போதுமான இடவசதியும் இந்த கார் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.