இந்தியாவின் சிறந்த எம்பிவி கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள எம்பிவி கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
எம்பிவி கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக மாருதி எர்டிகா கார் இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், குறைவான பராமரிப்பு செலவு ஆகிய அம்சங்களுடன் மிக சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த கார் கிடைக்கிறது. இந்த 7 சீட்டர் மாடலானது போதிய இடவசதியுடன் நடைமுறை பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாகவும் உள்ளது.
ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் மாடலாக வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரெனோ கார் நிறுவனத்தின் சிஎம்எஃப்-ஏ என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.
மாருதி எர்டிகாவைவிட கூடுதல் இடவசதி மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட சற்று குறைவான பட்ஜெட்டில் 7 சீட்டர் எம்பிவி காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே சாய்ஸாக மஹிந்திரா மராஸ்ஸோ இருந்து வருகிறது. சிறப்பான கட்டமைப்பு தரத்துடன், டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ எஸ்யூவி 8 சீட்டர் மாடலிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி எர்டிகா காரின் அடிப்படையில் பிரிமீயம் அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்ட மாடலாக எக்ஸ்எல்6 எம்பிவி கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மிக சவுகரியமான பயணத்தை பெற முடியும். இந்த கார் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட எம்பிவி கார் மாடலாகவும், அதிக இடவசதி கொண்ட 7 சீட்டர் மாடலாகவும் மாருதி ஈக்கோ உள்ளது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக கூறலாம். தனிநபர் பயன்பாடு மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடல்களில் கிடைக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு, அதிக இடவசதியுடன் மாருதியின் பரந்துவிரிந்த சர்வீஸ் நெட்வொர்க் இதற்கு பக்கபலமாக உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் பிரிமீயம் அம்சங்கள் கொண்ட சொகுசு எம்பிவி கார் மாடலாக டொயோட்டா வெல்ஃபயர் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அத்துனை அம்சங்களுடன் கூடிய இந்த கார் சினிமா நட்சத்திரங்களின் புதிய கார் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இந்த கார் விற்பனையிலும் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.