பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற சிறந்த ஸ்கூட்டர்கள்

பெண்களுக்கான சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே காணலாம். பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற சிறந்த ஸ்கூட்டர்களின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், வசதிகள் மற்றும் இதர முக்கிய விபரங்களை இங்கே பெறலாம்.

 • 1 . டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110

  New டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110
  Scooters | 109.7 CC
  66,755 Onwards
  இலகுவான எடையுடன் சற்று அதிக செயல்திறன் கொண்ட ஸ்கூட்டரை வாங்க விரும்பும் பெண்களுக்கு டிவிஎஸ் ஸெஸ்ட் சிறப்பானதாக அமையும். இந்த ஸ்கூட்டர் ஸ்டைலாக இருப்பதுடன், சிறந்த செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 110சிசி எஞ்சின் 7.7 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 98 கிலோ எடை கொண்டது. லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 • 2 . ஹீரோ Pleasure+ 110

  New ஹீரோ Pleasure+ 110
  Scooters | 110.9 CC
  63,235 Onwards
  ஹீரோ பிளஷர் ப்ளஸ் 110 ஸ்கூட்டர் பெண்கள் எளிதாக ஓட்டுவதற்கும், கையாள்வதற்குமான வாய்ப்பை அளிக்கிறது. அடக்கமான, அழகிய டிசைன் வசீகரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி சார்ஜர் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.70 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு சக்கரங்களிலும் உள்ள பிரேக் சிஸ்டம் ஒ!ருங்கிணைந்து செயல்படும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் வசதியும் உள்ளது. விலை, டிசைன், எஞ்சின் அனைத்திலும் சிறப்பானதாக இருப்பதோடு, நாட்டின் மிகப்பெரிய சர்வீஸ் கட்டமைப்பை ஹீரோ மோட்டோகார்ப் நிறவனம் வைத்திருப்பதும் வாடிக்கையாளர்களுக்கு அனுகூலமான விஷயமாக பார்க்க முடியும்.
 • 3 . டிவிஎஸ் ஜுபிடர்

  New டிவிஎஸ் ஜுபிடர்
  Scooters | 109.7 CC
  68,401 Onwards
  ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜுபிடர் இருந்து வருகிறது. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் சிறந்ததாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 10.9.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இருபாலரும் பயன்படுத்தக்கூடிய அம்சங்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 109 கிலோ எடை கொண்டது என்பதை கவனத்தில் வைத்து பெண்கள் ஓட்டிப் பார்த்து வாங்குவது அவசியம்.
 • 4 . ஹோண்டா டியோ

  New ஹோண்டா டியோ
  Scooters | 109.51 CC
  68,750 Onwards
  ஸ்டைலான தோற்றம் கொண்ட ஸ்கூட்டரை விரும்பும் இளம் பெண்களுக்கு சிறந்த தேர்வாக ஹோண்டா டியோ இருந்து வருகிறது. துள்ளலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இளம் பெண்களை கவர்ந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் மிகவும் கவர்ச்சிகரமான பாடி ஸ்டிக்கர்களுடன் அழகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.14 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் 102 கிலோ எடை கொண்டது. இருசக்கரங்களில் உள்ள பிரேக்குகளும் ஒருங்கிணைந்து செயல்படும் சிபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பம் உள்ளது.
 • 5 . டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

  New டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
  Scooters | 87.8 CC
  57,994 Onwards
  முதல்முறையாக இருசக்கர வாகனம் கற்றுக் கொண்டு ஓட்டும் பெண்களுக்கு மிகச் சரியான தேர்வாக இருந்து வருகிறது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ். பெண்களுக்கு ஏற்ற இலகு எடையுடன், மிதமான செயல்திறன் மற்றும் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் இதற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 88சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 5.36 பிஎச்பி பவரையும், 6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 95 கிலோ எடை கொண்டது.
 • 6 . வெஸ்பா UC 125

  New வெஸ்பா UC 125
  Scooters | 124.45 CC
  97,650 Onwards
  நன்றாக ஸ்கூட்டர் ஓட்டத் தெரிந்த பெண்களுக்கு மிகவும் சிறப்பானதாகவும், பிரிமீயம் தேர்வாகவும் வெஸ்பா யூசி 125 ஸ்கூட்டர் இருக்கிறது. பாரம்பரியமான வெஸ்பாவின் அசத்தலான டிசைன், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதி இதன் முக்கிய அம்சங்கள். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இருசக்கரங்களிலும் உள்ள பிரேக்குகள் ஒருங்கிணைந்து செயல்படும் தொழில்நுட்ப வசதியும் உண்டு. சற்று பிரிமீயம் ஸ்கூட்டரை வாங்க விரும்பும் பெண்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city