உயர்வகை சூப்பர் சொகுசு கார் சந்தையில் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. அந்தஸ்தின் அடையாளச் சின்னமாக கருதப்படும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த தேர்வாகவும் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வண்ணத் தேர்வுகள், இன்டீரியர் அலங்கார அம்சங்கள் என ஒவ்வொரு காரும் பார்த்து பார்த்து தயாரித்துக் கொடுக்கப்படுவது கூடுதல் சிறப்பாக கூறலாம்.
போர்ஷே பனமெரா கார் இந்தியாவின் உயரிய வகை சொகுசு கார் மார்க்கெட்டில் விலை குறைவானதாகவும், தனித்துவமான தேர்வாகவும் இருக்கிறது. இந்த கார் பனமெரா, பனமெரா ஜிடிஎஸ், பனமெரா டர்போ எஸ் மற்றும் பனமெரா டர்போ எஸ்இ ஹைப்ரிட் ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிசன் மாடல்களிலும் வந்துள்ளது. இந்த கார் சக்திவாய்ந்தத எஞ்சின் மட்டுமின்றி, ஹைப்ரிட் தொழில்நுட்பத்திலும் கிடைக்கிறது. தனித்துவமான சொகுசு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.
மஸரேட்டி நிறுவனத்தின் உயரிய வகை சொகுசு செடான் கார் மாடலாக க்வாட்ரோபோர்ட்டே கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலிய நாட்டின் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் அதிசக்திவாய்ந்த வி8 எஞ்சின் தேர்வில் இந்த கார் கிடைக்கிறது. தனித்துவமான பிராண்டை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.