இந்தியாவின் சிறந்த எஸ்யூவி கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள எஸ்யூவி கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. அசத்தலான டிசைன், இளம் தலைமுறை குடும்பத்தினரை கவர்ந்து இழுக்கும் தொழில்நுட்ப அம்சங்கள், இடவசதி, எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் என அனைத்திலும் அதிக தேர்வுகளை வழங்குகிறது. இதனால், விற்பனையிலும் சிறந்த மாடலாக தக்க வைத்து வருகிறது.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா சொனெட் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மார்க்கெட்டில் கியா சொனெட் எஸ்யூவி டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்த தேர்வாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.
ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் மதிப்பை வழங்கும் மாடலாக மாறி இருக்கிறது. இளம் தலைமுறையினரை கவரும் கவர்ச்சியான டிசைன், பட்ஜெட்டிற்கு தக்கவாறு எஞ்சின் தேர்வுகளுடன் போதுமான இடவசதியுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.
இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த மாடலாக இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களின் நன்மதிப்புடன் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறது. மோசமான இடங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களுடன் மிக சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் பல புதிய மாடல்கள் வந்தாலும், விற்பனையில் தனக்கென தனி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி முதலிடத்தை பிடித்து வைத்திருக்கிறது. டிசைன், இடவசதியில் நிறைவை தருவதுடன், மாருதி நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை இந்த எஸ்யூவியின் விற்பனைக்கு பக்கபலமாக இருக்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்புவாய்ந்த மாடல்களில் ஒன்றாகவும் கூறலாம்.
கியா செல்டோஸ் எஸ்யூவி டிசைன் மூலமாக இந்தியர்களின் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுவிட்டது. அத்துடன், அதற்கு இணையாக உட்புற டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்திலும் சிறந்த மதிப்பை தரும் மாடலாக இருந்து வருகிறது. பட்ஜெட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு தோதுவான மாடலாக இருப்பதால் விற்பனையிலும் கலக்கி வருகிறது.
ஃபுல் சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர் இருந்து வருகிறது. டிசைன், தொழில்நுட்ப வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் அனைத்திலும் தன்னிகரற்ற மாடலாகவும், அதிக நம்பகமான மாடலாகவும் இருக்கிறது. சாதாரண சாலை மற்றும் ஆஃப்ரோடு பயன்பாடு என இரண்டிலும் கலக்கலான எஸ்யூவி மாடலாக கூறலாம்.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனையில் உள்ளது. டொயோட்டா பிராண்டு மீதான நம்பகத்தன்மை புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு பெரிய பக்கபலமாக கூறலாம். இந்த எஸ்யூவி பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம், பட்ஜெட் என அனைத்திலும் சிறப்பான தேர்வாக இருக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் டாடா நெக்ஸான் சிறந்த மாடலாக பெயர் பெற்றுவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் இந்த நெக்ஸான் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. விலை, வசதிகள், டிசைன் என அனைத்திலும் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
ஆஜானுபாகுவான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் மிகச் சிறந்த எஸ்யூவி மாடலாக மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது ஏராளமான மாற்றங்களுடன் வாடிக்கையாளர்கள் மத்தியில் தன்னை சிறந்த தேர்வாக தக்க வைத்து வருகிறது. இதனால், விற்பனையிலும் மிக கலக்கலான எஸ்யூவி மாடலாக இருக்கிறது.