என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் பல்வேறு அப்டேட்களை ஹிமாலயன் பெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த அப்டேட் கடந்த 2020ம் ஆண்டு செய்யப்பட்டது. அப்போது பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான இன்ஜினை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பெற்றது.

இந்த வரிசையில் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இன்னும் மேம்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் சில மாற்றங்களை கண்டுள்ள அதே நேரத்தில், புதிய வசதிகளையும் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பெற்றுள்ளது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் விலை 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது இதன் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை 2.01 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை நாங்கள் பெங்களூரில் வைத்து சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த புதிய மாடல் குறித்து தெரிந்து கொண்ட விஷயங்களை, இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த டிசைன் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட முன்பு இருந்ததை போலவேதான் உள்ளது. எனினும் நுட்பமான ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மிகவும் முக்கியமான அப்டேட் என்றால், அது வண்ண தேர்வுகள்தான். 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் தற்போது பைன் க்ரீன், க்ரானைட் ப்ளாக் மற்றும் மிராஜ் சில்வர் என மூன்று புதிய வண்ண தேர்வுகளுடன் வருகிறது.

ஆனால் 2021 ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் அதே ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள் தொடர்கின்றன. அதேபோல் விண்டுஸ்க்ரீனும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் வைசரை சற்றே மாற்றியமைத்துள்ளது. வைசர் முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது உயரமாகவும், அகலமாகவும் உள்ளது. இதன் மூலம் காற்றுக்கு எதிரான பாதுகாப்பு சிறப்பாக இருக்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் கூறுகிறது. உயரமான ரைடர்கள் நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்வதற்கும் இது ஏற்றதாக இருக்கும்.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

அதேபோல் டேங்க் கார்டையும் ராயல் என்பீல்டு நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. கால் வைப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது என உயரமான ரைடர்கள் புகார் தெரிவித்து வந்தனர். தற்போது அந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

அத்துடன் பைக்கின் பின் பகுதியில் பொருட்களை வைப்பதற்கான ரேக்கையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ரேக் மெட்டல் பிளேட் உடன் வருகிறது. முன்பு 5 கிலோ எடையை மட்டுமே வைக்க முடியும். ஆனால் தற்போது 2 கிலோ கூடுதலாக, அதாவது 7 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம். தொலை தூர பயணங்களின்போது இது உதவியாக இருக்கும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களை தவிர, 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் டிசைனில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

வசதிகள்

முந்தைய பிஎஸ்-6 மாடலில் இருந்த அதே வசதிகளுடன்தான் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுதான் மிக முக்கியமான மாற்றமாக உள்ளது.

இந்த வசதி முதல் முறையாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய மீட்டியோர் 350 க்ரூஸர் பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மெயின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு அடுத்தபடியாக வழங்கப்பட்டுள்ள பிரத்யேகமான போட் உடன் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி வருகிறது.

கூகுள் நிறுவனத்துடனான கூட்டணியில் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்குகிறது. பிரத்யேகமான செயலி மற்றும் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் இது வருகிறது. ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டவுடன், இந்த புதிய போட் ரைடருக்கு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை வழங்கும். ஆனால் மெசேஜ் மற்றும் கால் அலர்ட் வசதிகள் வழங்கப்படவில்லை. ட்ரிப்பர் நேவிகேஷன் வசதிக்காக கூடுதலாக ஒரு போட் வழங்கப்பட்டிருந்தாலும், பிஎஸ்-6 மாடலில் இருந்த அதே செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்தான் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

அதே நேரத்தில் புதிய 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இருக்கைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்பை விட தற்போது இன்னும் சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் இருக்கைகளை மேம்படுத்தியுள்ளது. ஆனால் இருக்கை உயரம் 800 மிமீ என்ற அளவிலேயே தொடர்கிறது.

அதேபோல் மெக்கானிக்கல் ரீதியாகவும், 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. முன்பு இருந்ததை போல், அதே ஃப்ரேம், சஸ்பென்ஸன் அமைப்பு, பிரேக் மற்றும் டயர்கள்தான் புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஸன் அமைப்பை பொறுத்தவரை முன் பகுதியில் 200 மிமீ டிராவல் உடன் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் 180 மிமீ டிராவல் உடன் மோனோஷாக் செட்அப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. 2020 பிஎஸ்-6 ஹிமாலயனில் ஸ்விச்சபிள் ஏபிஎஸ் வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. 2021 ஹிமாலயனிலும் அந்த வசதி அப்படியே வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

அதேபோல் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் தொடர்கின்றன. இந்த பைக் 220 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றுள்ளது. இதனை சிறப்பான ஒன்றாக கூறலாம். அதே சமயம் இந்த பைக்கின் எடை 199 கிலோவாக உள்ளது. மேலும் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பெரிய எரிபொருள் டேங்க் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த பைக் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஹேண்ட்லிங்

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான அதே 411 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஸ்ஓஹெச்சி இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6500 ஆர்பிஎம்மில் 24.3 பிஎச்பி பவரையும், 4000-4500 ஆர்பிஎம்மில் 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பவர் அவுட்புட்டும் முன்பை போல் அப்படியேதான் உள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் பிஎஸ்-6 மாடலை நாங்கள் கடந்த ஆண்டு டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதே செயல்திறன் மற்றும் கையாளுமைதான் தற்போதைய புதிய மாடலிலும் உள்ளது. இன்ஜின் முன்பைபோலவே மென்மையாக உள்ளது. ரீஃபைன்மெண்ட் சிறப்பாக இருக்கிறது. பவர் டெலிவரி சீராகவும், மென்மையாகவும் உள்ளது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

ஆரம்பத்தில் சற்றே பின்னடைவு இருந்தாலும், நடுத்தர நிலையில் பவர் டெலிவரி நன்றாக இருக்கிறது. குறிப்பாக 1,500 ஆர்பிஎம்மிற்கு பிறகு அனைத்து கியர்களிலும் பவர் தாராளமாக கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்றாலும், மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்வது சிறப்பானதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அதே நேரத்தில் இந்த பைக்கின் கியர் பாக்சும் மென்மையாக உள்ளது. கியர்களை மாற்றுவது எளிமையாக இருக்கிறது. அதேபோல் ஆஃப் ரோடு திறன்களிலும், ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்ஜர் பைக் தலைசிறந்து விளங்குகிறது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

இரு பக்கமும் லாங் டிராவல் சஸ்பென்ஸன் மற்றும் 220 மிமீ என்ற சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் ஆகியவை இதன் திறன்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ஆனால் 199 கிலோ எடை காரணமாக, பயணம் சில சமயங்களில் சற்றே கடினமாகிறது. குறிப்பாக கடினமான ஆஃப் ரோடு பயணங்களில் இது கவனிக்க கூடியதாக உள்ளது. அதேபோல் இந்த பைக்கின் பிரேக் மந்தமாக இருப்பது போல் தோன்றுகிறது. பைக்கை நிறுத்த வேண்டுமென்றால், ரைடர் லிவரை பலமாக அழுத்தி பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

என்னென்ன வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரிவியூ!

தீர்ப்பு

முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் ஒரு சில மாற்றங்களுடன் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை அறிமுகம் செய்திருப்பதும், புதிய வண்ண தேர்வுகளை வழங்கியிருப்பதும்தான் முக்கியமான மாற்றங்களாக உள்ளன.

மேலும் முன்பு இருந்ததை போல் அதே அளவு செயல்திறன் மற்றும் ரீஃபைன்மெண்ட்டைதான் இந்த புதிய மாடலும் வழங்குகிறது. அத்துடன் ஆஃப் ரோடு திறன்களும் முன்பு போலவே உள்ளன. இது மோசமான விஷயம் ஒன்றும் கிடையாது. ஆனால் விலையை 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தியிருப்பது சற்று அதிகமாகவே தோன்றுகிறது. எனினும் இந்த ரகத்தில் சிறந்த அட்வென்ஜர்-டூரர் பைக்குகளில் ஒன்றாகவே ராயல் என்பீல்டு ஹிமாலயனை நாங்கள் கருதுகிறோம்.

Most Read Articles
English summary
2021 Royal Enfield Himalayan Review: Changes, Design, Features, Engine, Performance, Handling, Price. Read in Tamil
Story first published: Tuesday, March 2, 2021, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X