விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர்... ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் 300-350 சிசி செக்மெண்டில் CB300F என்ற புதிய ஸ்டிரீட் ஃபைட்டர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறித்த முழுமையான ரிவியூவை காணலாம் வாருங்கள்.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

ஹோண்டா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே 300-350 சிசி செக்மெண்டில் பைக்களை விற்பனை செய்து வருகிறது. மார்கெட்டில் இந்த செக்மெண்டில் கிங்காக இருக்கும் ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியாக இந்நிறுவனம் தனது தயாரிப்புகளைக் களம் இறக்கி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு துவக்கத்தில் அந்நிறுவனம்

CB300R பைக்கின் பிஎஸ் 6 வேரியன்டை அறிமுகப்படுத்தியது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

இந்நிலையில் ஹோண்டா பிக் விங் பிரிவு இந்த செக்மெண்டில் பலமாகக் கால் வைக்கும் வகையில் இந்த செக்மெண்டில் வலிமையான "ஸ்டிரீட் ஃபைட்டர்" பைக்கை CB300F என்ற பெயரில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே CB300R பைக் விற்பனையாகி வரும் நிலையில் அதன் கடைசி வார்த்தையை மட்டும் மாற்றி CB300F என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெயருக்காக லுக் மட்டுமல்ல பல மாற்றங்கள் இந்த பைக்கில் செய்யப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

புதிய ஹோண்டா CB300F பைக்கில் அப்படி என்ன வலிமையான தன்மை இருக்கிறது? அந்த பைக் உண்மையில் சிறப்பாக இருக்கிறது. இதை டெஸ்ட் செய்ய எங்கள் டிரைவ் ஸ்பார்க் குழு ஹைதிராபாத்தில் இந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்தது. ஹோண்டாவின் இந்த ஸ்டீரீட் ஃபைட்டர் பைக்கில் அப்படி என்னதான் இருக்கிறது? வாருங்கள் காணலாம்

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

டிசைன் மற்றும் அம்சங்கள்

புதிய ஹோண்டா CB300F பைக் நாம் முன்பே சொன்னது போல ஸ்டிரீட் ஃபைட்டர் பைக் என்பதால் அதன் லுக்கை பெற்றுள்ளது. இந்த பைக்கின் டிசைன் மொழியில் ஷார்ப்பான டிசைன் லைன் பைக்கிற்கு அக்ரஷிவ் லுக்கை தருகிறது. இந்த பைக்கின் முன்பக்கத்தைப் பொறுத்தவரை பாயிண்டு அரோ ஹெட் வடிவில் உள்ளது. ஹெட்லைட்டிற்கு மேல் ஸ்லீக்கான இன்டிகேட்டர், அதன் மேலே ஹேண்டில் பார் என்ற வடிவமைப்பில் உள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

முன்புறம் தலைகீழாகப் பொருத்தப்பட்டுள்ள ஃபோர்க்கள் இடம் பெற்றுள்ளன. இது பிரிமியம் லுக்கிற்காக தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. ஃபோர்க்கிற்கு அருகே USB -C டைப் சார்ஜிங் பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் அக்ரஸிவ் லுக்கிற்காக பெட்ரோல் டேங்கில் உள்ள எக்ஸ்டென்ஷன் பைக்கின் முன் பக்க மட்கார்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கருப்பு நிறத்திலால் ஆன 17 இன்ச் 10 ஸ்போர்க் அலாய் வீல் ட்யூப்லெஸ் டயருடன் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

பக்கவாட்டு லுக்கை பொறுத்தவரை நம் பார்வை பெரும்பாலும் பைக்கின் பெட்ரோல் டேங்கிலேயே இருக்கிறது. 14.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே ஆயில் கூல்டு இன்ஜின் தங்க நிற ஹைலைட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பகுதியில் சிறிய அளவிலான எக்ஸாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் சிலிண்டர் இன்ஜினிலிருந்து ஸ்போர்ட்டி சத்தத்தைக் கொடுக்கிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

சீட்டை பொறுத்தவரை 2 பீஸ் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது 789 மிமீ உயரத்தில் ரைடர் அமரும் படி அமைக்கப்பட்டுள்ளது. ரைடர் சீட்டிலிருந்து உயர்த்தப்பட்ட சீட்டாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்புறம் ஸ்பிலிட் ஹெண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. CB300F பைக்கின் பின்புறம் மற்ற பைகளைப் போல எல்இடி இன்டிகேட்டர் பின்புற மட்கார்டு உடனும் அதன் மேலே எல்இடி டெயில் லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

புதிய ஹோண்டா CB300F பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்மெண்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எல்லாவிதமான தகவல்களும் வருகிறது. இதன் பிரைட்னெஸ் 5 லெவல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேனல்களுக்கான கண்ட்ரோல்கள் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

மேலும் இந்த பைக்குடன் ரைடர் தனது செல்போனை ப்ளு டூத் மூலம் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் போன் கால்களை அட்னென் செய்வது, மெசெஜ்களை படிப்பது, பாட்டுக் கேட்பது, நேவிகேஷன் பயன்படுத்துவது. வெதர் குறித்த தகவல்களைப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்கள் செய்ய முடியும். இது பக்க கண்ரோல்களில் ஹாரன்பட்டன் இண்டிகேட்ருக்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. இது சற்று ஆடான விஷயமாக இருக்கிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

இன்ஜின் மற்றும் செயல்திறன்

ஹோண்டா CB300F பைக்கை பொருத்தவரை இதன் முந்தைய பைக்கான CB300R பைக்கில் உள்ள 286 சிசிலிருந்து சற்று அதிகமாக இந்த பைக்கில் 293.52 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிங்களில் கேம்ஷேப்டு இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த CB300F பைக்கில் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்தபைக் 24.13 பிஎச்பி பவரை 7500 ஆர்பிஎம்மிலும், 25.6 என்எம் டார்க் திறனை 5500 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

புதிய ஹோண்டா CB300F பைக்கில் உள்ள ஆயில் கூல்டு 4 வால்வு இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. கியர் பாக்ஸ் மல்டி பிளேட் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் செட்டப் உடன் வருகிறது. புதிய ஹோண்டா CB300F பைக்கை பொருத்தவரை டைமண்ட் ஃபிரேம் டெலஸ்கோபிக் தலைகீழான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

பின்புறம் 5 விதமான அட்ஜெஸ்டபுள் ஆப்ஷன் உடன் மோனாஷாக் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பிரேக்கிங்கை பொறுத்தவரை முன்பக்கம் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறம் 220 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரேக்களில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

இந்த பைக்கின் வீலை பொருத்தவரை 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 110/70 டயர் முன்பக்கமும், 150/60 பெரிய டயர் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ரோட்டில் ஸ்டெடியாக செல்ல Honda Selectable Torque Control (HSTC) செட்டப்பும் வழங்கப்பட்டுள்ளது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

ரைடிங் இம்பிரஷன்

புதிய ஹோண்டா CB300F பைக்கை பொருத்தவரை ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டிலேயே இது தான் முதன் முறை. இந்த இன்ஜின் அதிகமாகப் பட்சமாக 8500 ஆர்பிஎம் வரை வரை செயல்படுகிறது. சிறப்பான பவர் லெவலையும், லோ மற்றும் மிட் ரேஞ்சில் வழங்குகிறது. 30-120 கிலோ மீட்டர் வேகத்தை 5வது கியரிலேயே செல்ல முடிகிறது. சிங்கிள் சிலிண்டரும் சிறப்பாக பணியாற்றுகிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மிக லைட்டான ஸ்லிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரைடர்களுக்கு கியர்களை மாற்றுவது சுலபமாக இருக்கிறது. சில நேரம் கிளட்ச் இல்லாமலேயே கியர்களை கூட்டக் குறைக்க முடிகிறது. இந்த பைக்கில் ரைடிங் போசிஷன் சுலபமாகவும் சுகமான அனுபவத்தையும் தருகிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

குறிப்பாக சிங்கிள் பீஸ் ஹேண்டில் பார், லேசாகப் பின்பக்கமாக வைக்கப்பட்ட ஃப்பூட் பெக்ஸ், பெரிய சீட், ஸ்கல்ப்டெட் ஃப்யூயல் டேங்க், ஆகிய அம்சங்கள் இருப்பதால் வேகமாக ஓட்டும் போது உதவியாக இருக்கிறது. ரைடர் சீட் நல்ல குஷன் வசதியுடன் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் பில்லியன் ரைடர் சீட் சொகுசாக இல்லை. நீண்ட பயணத்தில் அவர்கள் அடிக்கடி பிரேக் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

சஸ்பென்சனை பொருத்தவரை ஹோண்டா CB300F பைக்கில் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருக்கிறது. இது ஷார்ப் ஸ்டியரிங் ஜாமென்ட்ரியுடன் கூடியது. இதனால் திருப்பங்களின் போது சிறப்பான பெர்ஃபாமென்ஸை தரும். சஸ்பென்ஸன் ஸ்டிஃப்பாக இருப்பதால் கரடு முரடான சாலைகளில் வேகமாகச் செல்லும் போது ரைடருக்கு சொகுசாக இருக்காது. குறிப்பாக பின் சீட்டில் அமர்ந்திருப்பவருக்கு மிகுந்த அசௌகரியம் ஏற்படும்.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

பிரேக்கிங்கை பொருத்தவரை இருபக்கமும் டிஸ்க் இருப்பதால் சிறப்பான பெர்பாஃமென்ஸை வழங்குகிறது. முன்பக்க பிரேக் மட்டும் சற்று ஸ்பாஞ்ச் போல இருக்கிறது. அதைச் சற்று அழுத்திப் பிடித்தால் தான் பைக் நிற்கிறது. பின்புற பிரேக் அற்புதமாக இருக்கிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

இது போக இந்த பைக்கில் உள்ள டூயல் சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், சிறப்பான அம்சமாக இருக்கிறது. ஏபிஎஸ் செட்டப் மிக சீக்கிரமாக ரெஸ்ஃபான்ஸ் செய்கிறது. இவ்வளவு சீக்கிரம் ரெஸ்ஃபான்ஸ் செய்ய வேண்டிய தேவையில்லை. இதனால் ஃபன் ரைடிங்

அனுபவம் குறைந்து பாதுகாப்பான ரைடிங் அனுபவம் கிடைக்கிறது.

விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

ஹோண்டா CB300F பைக்கின் சிறப்பு மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள்

  • இதன் இன்ஜின் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இன்ஜின் சத்தம் ஸ்போர்ட்டி பைக்கின் ஃபீலை தருகிறது.
  • திருப்பங்களில் இந்த பைக்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.
  • டிராக்ஷன் கண்ட்ரோல் - ஏபிஎஸ் இருப்பதால் இது தேவையில்லை என்றாலும் இது ஒரு நல்ல முயற்சி
  • மேம்படுத்த வேண்டியது.

    • ஏபிஎஸ் மிக விரைவாகவே ரெஸ்ஃபான்ஸ் செய்வது எரிச்சலூட்டுகிறது.
    • சஸ்பென்சன் ஸ்டிஃப்பாக இருப்பதால் பின் சீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் அசெளகிரியம் ஏற்படும்.
    • மிக அதிகமான விலையில் விற்பனைக்கு வருகிறது.
    • விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர் . . . ஹோண்டா CB300F பைக் - ரிவியூ

      இறுதித் தீர்ப்பு

      ஹோண்டா CB300F பைக் அந்நிறுவனத்தின் இந்தியாவில் 300-350 சிசி செக்மெண்டின் புதிய என்ட்ரி, இந்த பைக்கின் பில்ட் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஜின் சிட்டி டிராஃபிக்கிலிருந்து வேகமான பயணத்திற்கு உடனடியாக பிக்கப் செய்து விடுகிறது. ஆனால் இதன் விலை அதிகமாக இருக்கிறது.

Most Read Articles
English summary
2022 Honda CB300F Review Price specs features and all other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X