அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சுற்றுசூழல் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு வெளிவந்த அவான் நிறுவனத்தின் புதிய ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய காம்பெக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகமானதால் வாகன புகை காரணமாக பல்வேறு மாநிலங்களில் சுற்றுசூழல் சீர்கெட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க கார் மற்றும் பைக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியது.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் தருவதாக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஹீரோ, ஏத்தர் மற்றும் டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் அதிரடியாக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கினர்.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அவ்வகையில் டெல்லியை மையமாக கொண்ட அவான் மோட்டர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எலக்ட்ரிக் வாகன எக்ஸ்போவில் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிக்கு வைத்தது. இதில் ஸீரோ ப்ளஸ் மக்களை பெரிதும் ஈர்த்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் ரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவான் மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மக்களிடையே சிறப்பான வரவேற்பினை பெட்ரா 800 வாட்ஸ் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நமது டிரைவ்ஸ்பார்க் குழு பெங்களூரு நகரின் நெடுஞ்சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்தது . இதில் உள்ள சிறப்பு அம்சங்கள், என்ஜின் செயல்திறன் மற்றும் வடிவமைப்பை குறித்து கண்டறிந்தோம்.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்:

ஸீரோ ப்ளஸ் ஸ்கூட்டர் நேர்த்தியான மெல்லிய மற்றும் எடை குறைவான டிசைனை பெற்றுள்ளது. ஸ்கூட்டரை சுற்றியும் கட்சிமாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்கூட்டரை பாதுக்காக்க தந்துள்ள க்ரில் அமைப்பு சற்று ஸ்கூட்டரின் அழகிய தோற்றத்தை குறைக்கிறது. இதன் முன்புறத்தில் எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் பலத்த காற்றில் கூட ஸ்கூட்டர் எளிதாக செல்லும் வகையில் கூர்மையாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் பக்கவாட்டில் 5 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும் இதன் பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. சிறப்பு அம்சமாக சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய முடியாதவாறு வடிவமைத்துள்ளனர்.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சிறப்பு அம்சங்கள்:

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 48 வோல்ட், 28 ஆம்பியர் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது, மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் திறனை வழங்கும். இந்த ஸ்கூட்டர் சிங்கிள் பேக் பேட்டரி மற்றும் டியூவல் பேக் பேட்டரி என இரண்டுவிதமான பேக்குகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில் சிங்கிள் பேட்டரி ஸ்கூட்டரானது 60 கிமீ தூரமும், டபுள் பேட்டரி ஸ்கூட்டர் 110 கிமீ தூரமும் செல்லக் கூடியது.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டு முதல் நான்கு மணிநேரம் போதுமானது. இதற்காக சார்ஜிங் நிலையங்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு பதிலாக உங்கள் வீட்டிலுள்ள சாதாரண பிளக் பாயிண்டே போதுமானது. செல்போனை சார்ஜ் போடுவதுபோல் பேட்டரியைக் கழட்டிக் கொண்டுபோய் வீட்டில் சார்ஜ் போட்டுக்கொள்ளலாம்.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸீரோ ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மோட் ஒன்றில் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். பேட்டரியின் சார்ஜ் அளவு குறைவாக இருக்கும்போது இந்த மோடினை பயன்படுத்த தரப்பட்டுள்ளது. இரண்டாவது மோட் இயல்புநிலை மோடாக கருதப்படுகிறது இதில் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 35கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். மூன்றாவது மோட் பவர் மோடாக கருதப்படுகிறது இதில் ஸ்கூட்டரின் அதிகபட்சமாக வேகமான 45கிமீ வேகத்தில் ஸ்கூட்டர் செல்லும். ஆனால் இந்த மோடில் ஸ்கூட்டரின் சார்ஜ் வேகமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு:

அவான் ஸீரோ ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான எரிபொருள் செலவீனத்தை ஒப்பிடும்போது இந்த ஸ்கூட்டருக்கு ஆகும் மின்சார செலவு வெறும் 10 சதவீதம் மட்டுமே. ஆகையால், இந்த ஸ்கூட்டரை வாங்கினால் எந்தவிதத்திலும் நஷ்டம் ஏற்படாது என தெரிகிறது. மேலும் ஒகினவா பிரெய்ஸ் மற்றும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களைவிட சிறந்த விலை தேர்வாக அவான் ஸீரோ ப்ளஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. 47,000 ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் இம்மொபிலிஷர் பாதுகாப்பு வசதி, டாப் பாக்ஸ் போன்ற சிறப்பு அம்சங்களை அவான் நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஸீரோ ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Avan Motors Xero+ Review:Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X