டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அண்மையில் டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 சூப்பர் பைக்கை டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், இந்த பைக்கின் இருக்கை அமைப்பு, எஞ்சின் செயல்திறன் மற்றும் தோற்றம் ஆகியவை சிறப்பாக இருக்கின்றன.

By Saravana Rajan

டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனத்தின் இந்திய மாடல்களில் மான்ஸ்ட்டர் தவிர்க்க முடியாத மாடலாக விளங்குகிறது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடல்களுக்கு அடுத்து விலை குறைவான டுகாட்டி சூப்பர் பைக் மாடல் என்தே இதற்கு காரணமாக கூறலாம்.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 25 ஆண்டுகளில் பல மானஸ்ட்டர் மாடல்களை டுகாட்டி தயாரித்து வாடிக்கையாளர்களை வசியப்படுத்தி இருக்கிறது. அதில், ஸ்க்ராம்ப்ளர் மாடல்களுக்கு அடுத்து இந்தியர்களுக்கு தோதான விலையில் கிடைக்கும் மாடல் டுகாட்டி மான்ஸ்ட்டர் 797.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அண்மையில் டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 சூப்பர் பைக்கை டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மான்ஸ்ட்டர் வரிசையிலான பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களை இந்த டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக்கும் பெற்றிருக்கிறது. மிரட்டலான ஹெட்லைட், வலிமையான பெட்ரோல் டேங்க், அகலமான ஹேண்டில்பார் அமைப்பு, ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் இரண்டு பக்கமும் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்ட டிசைன் பார்ப்போரை மிரள வைக்கிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக்கின் ஹெட்லைட் ஹவுசிங்கில் எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விலை உயர்ந்த டுகாட்டி மான்ஸ்ட்டர் மாடல்களில் எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த பைக்கில் ஹாலஜன் பல்புகள் உள்ளன. முன்புறத்தில் 43மிமீ கயாபா ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சாக்ஸ் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட்டின் மேலே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் க்ரீடம் போல இடம்பெற்றிருக்கிறது. சிறிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பும் உள்ளது. இதன் எல்சிடி திரையில் எழுத்துக்கள் தெளிவாக இருக்கின்றன.

பகல்நேரத்திலும் எளிதாக பார்த்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. டிரிப் மீட்டர், ஆர்பிஎம் மற்றும் வேக அளவை காட்டும் அடிப்படை விஷயங்கள் உள்ளன. ஆனால், எந்த கியரில் இருக்கிறது என்பதை காட்டும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் எரிபொருள் அளவை காட்டும் வசதி இல்லை என்பது பெரும் குறை.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் போலவே 797 பைக்கிலும் இருக்கை உயரம் 805மிமீ ஆக கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனினும், தாழ்வான கால் வைக்கும் ஃபுட்பெக்குகள், அகலமான ஹேண்டில்பார் மற்றும் குறைவான எடை மற்றும் வீல்பேஸ் போன்றவை போக்குவரத்து நெரிசலிலும் பைக்கை எளிதாக கையாள உதவுகின்றன.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த பைக்கில் எல்இடி இண்டிகேட்டர்கள் மற்றும் ப்ளைஸ்க்ரீன் போன்ற ஆப்ஷனல் ஆக்சஸெரீகளை பெற்றிருந்தது. பின்புற இருக்கைக்கான விசேஷ கவுல் அமைப்பையும் கூடுதல் ஆக்சஸெரீயாக வாடிக்கையாளர்கள் வாங்கி பொருத்த முடியும். இது பைக்கின் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சியை தரும்.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக்கில் யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் நிரந்தர அம்சமாக இருக்கிறது. இருக்கைக்கு கீழே இந்த சார்ஜிங் சாக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் பயனுள்ள விஷயம்.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக்கில் இரட்டை சிலிண்டர் அமைப்புடைய 803சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் யூரோ-6 மாசு உமிழ்வு தரம் கொண்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 73பிஎச்பி பவரையும், 67 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஞ்சின் சீரான செயல்திறனையும், மென்மையான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கியர்கள் மாற்றும்போது அதிர்வுகள் இல்லாமல் மிக இலகுவாக இருக்கிறது. அதேநேரத்தில், நியூட்ரல் கியருக்கு மாற்றுவது சிலவேளைகளில் சற்று கடினமான விஷயமாக இருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பைக்கில் ஏபிடிசி என்ற நவீன ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவசர சமயங்களில் வேகமாக கியரை குறைக்கும்போது பின்புற சக்கரம் பூட்டிக்கொள்ளாமல் சீராகவும், விரைவாகவும் நிற்பதற்கு உதவுகிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், பிற பிரிமியம் மோட்டார்சைக்கிளில் காணப்படும் ரைடு பை ஒயர், ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் இல்லை என்பது பெரும் குறை. எனினும், பாஷ் நிறுவனத்தின் பாஷ் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பது ஆறுதல். இதனை தேவையில்லாத போது அணைத்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சினை ஸ்டார்ட் செய்தவுடன் இதன் அலாதியான சைலென்சர் சப்தம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. ஆரம்ப நிலையில் டார்க் திறனை அபரிமிதமாக வெளிப்படுத்துவதால், உடனடி பிக்கப்பால் உற்சாகத்தை கூட்டுகிறது. செயல்திறனிலும் சிறப்பாக இருப்பதால், க்ரூஸ் செய்து ஓட்டுவதற்கு அருமையாக இருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக்கின் பிக்கப் சிறப்பாக இருந்தாலும், மிட் ரேஞ்ச்சில் ஓட்டுவதற்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. தனது திராணியை முழுவதுமாக மிட்ரேஞ்சில் காட்டி அசத்துகிறது. மிட்ரேஞ்ச் பவர் வெளிப்படுத்தும் திறன் சிறப்பாக இருப்பதால், சொடக்கு போட்டு ஓவர்டேக் செய்யலாம். மணிக்கு 210 கிமீ வேகம் வரை அசால்ட்டாக செல்லும் வல்லமையும் பெற்றிருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்சக்கரங்களில் 4 பிஸ்டன்களுடன் கூடிய எம்4.32 காலிபர்கள் மற்றும் 320 மிமீ விட்டமுடைய இரட்டை டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்சக்கரத்தில் 245மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 120/70/ZR17 அளவுடைய பைரெல்லி டயாப்லோ ராஸோ-II டயரும், பின்சக்கரத்தில் 180/55/ZR17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் மிகச் சிறப்பான தரைப் பிடிப்பை வழங்குவதால், வளைவுகளில் கூட நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நேக்கட் ரக பைக்கில் இருக்கை மிகவும் சவுகரியமாக இருப்பது ஆச்சரியமான விஷயம். பின்புறத்தில் அமர்ந்து செல்பவருக்கும் வசதியாக இருக்கிரது. போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது எஞ்சின் சூடு அதிகம் தெரிகிறது. நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் தருகிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புரோமித் கோஷ் கருத்து

குறைவான பட்ஜெட் மற்றும் நடுத்தர பட்ஜெட் சூப்பர் பைக்குகளுக்கு இடையிலான விலையில் இந்த புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பைக்கிலிருந்து சூப்பர் பைக்கிற்கு மாற நினைப்பவர்களுக்கு பர்ஃபெக்ட் சாய்ஸாக இருக்கும்.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரூ.8.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த பைக் சற்றே கூடுதல் விலை கொண்டதாக தோன்றுகிறது. ஏனெனில், இதன் ரகத்திலான ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் மற்றும் கவாஸாகி இசட்900 பைக்குகள் டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 பைக்கைவிட அதிக பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருப்பதே காரணம்.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati #review
English summary
How good is the most affordable Ducati Monster 797? To find out, we took the monster for a spin and here are our thoughts about the motorcycle.
Story first published: Monday, May 7, 2018, 18:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X