ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிரீமியமான, அதே நேரத்தில் விலை குறைவான ரெட்ரோ-மாடர்ன் க்ரூஸர் மோட்டார்சைக்கிளான ஹைனெஸ் சிபி350 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. நவீன வசதிகள் உடன் ஹோண்டா நிறுவனத்தின் தனித்துவமான 'CB' மரபை ஹைனெஸ் சிபி350 கொண்டுள்ளது.

மிக நீண்ட காலமாக இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஹோண்டா அளித்து பதிலாக ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை குறிப்பிடலாம். அதிநவீன வசதிகள், உபகரணங்கள் மற்றும் ரெட்ரோ-மாடர்ன் ஸ்டைல் உடன் ஹோண்டா நிறுவனத்தின் திறன்மிக்க இன்ஜினையும் ஹைனெஸ் சிபி350 பெற்றுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட காத்திருப்பிற்கு பின், இந்த புதிய ரெட்ரோ-மாடர்ன் க்ரூஸர் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை பார்த்து ராயல் என்பீல்டு பயப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு இந்த செய்தியில் விடை காணலாம்.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் பிரீமியம் 350 சிசி மோட்டார்சைக்கிள் இதுதான். ஹோண்டா நிறுவனத்தின் தனித்துவமான சிபி வரிசை பைக்குகளை மனதில் வைத்து, மாடர்ன்-கிளாசிக் டிசைனில், ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ மாடல் என்பதால், பைக்கை சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடுகளை அதிகளவில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப் கவர்கள், முன் மற்றும் பின் பக்க ஃபெண்டர்கள், ஹேண்டில்பார், எக்ஸாஸ்ட் பைப், டெயில் லைட் கவர் மற்றும் இன்ஜின் ஆகியவற்றில் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த புதிய மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹெட்லேம்ப்பை சுற்றிலும் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப் யூனிட்டின் இருபுறமும் பக்கவாட்டில் வட்ட வடிவ எல்இடி டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் முன் பகுதியில் க்ரோம் பூசப்பட்ட ஃபெண்டரும், சஸ்பென்ஸன் செட் அப்பிற்கு டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பைக்கின் இருபுறமும் கருப்பு நிறத்தில் ஸ்டைலான அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. வேரியண்ட்டை பொறுத்து ஒற்றை மற்றும் இரட்டை வண்ண தேர்வுகளில் பெறலாம். எரிபொருள் டேங்க்கில் க்ரோம் பூச்சுக்களுடன் 'HONDA' பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாடல்களில் காணப்படும் ஹோண்டா சிறகுகள் இதில் வழங்கப்படவில்லை.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளில் சிங்கிள்-பீஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. அகலமான இந்த இருக்கை சௌகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. அத்துடன் சற்றே மேல்நோக்கிய வகையில் க்ரோம் பூச்சுகள் உடனான எக்ஸாஸ்ட் பைப், ரைடர் இருக்கைக்கு கீழே 'H'ness CB 350' பேட்ஜ் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த மோட்டார்சைக்கிளின் பின் பகுதியும் நன்றாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இங்கே க்ரோம் பூசப்பட்ட பெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக்கின் டிசைன், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் நன்றாக உள்ளது.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

முக்கியமான வசதிகள்

அதிநவீன வசதிகள், உபகரணங்கள் மற்றும் கனெக்டட் தொழில்நுட்பத்துடன் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பொறுத்தவரை, சிங்கிள்-போடு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது அனலாக் ஸ்பீடோமீட்டரை பெற்றுள்ளது. அத்துடன் கீழே சிறிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ஸ்க்ரீன் சில கூடுதல் தகவல்களையும் வழங்கும். இதில், இரண்டு ட்ரிப் மீட்டர்கள், சராசரி எரிபொருள் சிக்கனம், கியர் இன்டிகேட்டர் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு அடுத்தபடியாக சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர், ஏபிஎஸ், டர்ன் சிக்னல்கள், இன்ஜின் செக் லைட் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றுக்கான லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆம், ஹைனெஸ் சிபி350 பைக்கில் டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டமை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. இதனை அந்நிறுவனம் 'ஹோண்டா வேரியபிள் டார்க் கண்ட்ரோல்' என அழைக்கிறது.

இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் தொழில்நுட்பம், ஹோண்டா ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகள் உடன் வருகிறது. ஹோண்டாவின் ரோடுசிங்க் செயலியை பயன்படுத்தி ப்ளூடூத் மூலமாக உங்கள் ஸ்மார்ட்போனுடன், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இணைத்து கொள்ள முடியும்.

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு அடுத்தபடியாக செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் யுஎஸ்பி சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான டைப்-ஏ போர்ட்டுக்கு பதிலாக, அதிநவீன டைப்-சி போர்ட்டை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே பயணத்தின்போது உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்ய வேண்டுமென்றால், தனியே அடாப்டரை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு கீழே ட்யூயல்-ஹாரன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதிலும் க்ரோம் பூச்சுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டாப் வேரியண்ட்டான டிஎல்எக்ஸ் ப்ரோவில் மட்டுமே ட்யூயல்-ஹாரன்கள் வழங்கப்பட்டுள்ளன. பேஸ் மாடலில் சிங்கிள்-ஹாரன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் இருந்து ஹேண்டில்பாருக்கு நகர்வோம். இதன் இடது பக்கத்தில் பல்வேறு அம்பு குறியீடுகளையும், என்டர் பட்டனையும் நீங்கள் காணலாம். இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் உள்ள சிறிய திரையில் காட்டப்படும் பல்வேறு தகவல்களை மாற்றி கொள்வதற்கு இந்த பட்டன்கள் உதவுகின்றன.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் ஹாரன் மற்றும் இன்டிகேட்டர்களுக்கான ஸ்விட்ச்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன் பின் பகுதியில் ஹை-பீம் மற்றும் பாஸ் ஸ்விட்ச்களுக்கான கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வலது பக்க ஹேண்டில்பாரில் ஸ்விட்ச்கள் அதிகமாக இல்லை. ஹசார்டு ஸ்விட்ச் உடன் இன்ஜின் கட்-ஆஃப் மற்றும் இக்னீஷன் கண்ட்ரோல்கள் ஆகியவை மட்டுமே இடம்பெற்றுள்ளன.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த பைக்கின் அகலமான சிங்கிள்-பீஸ் சீட் ரைடர் மற்றும் பில்லியன் ரைடர் என இருவருக்கும் சௌகரியமான பயணத்தை வழங்குகிறது. பில்லியன் ரைடர் பிடித்து கொள்ள ஏதுவாக பின் பகுதியில் கருப்பு நிற க்ராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது.

முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், ரியர் சஸ்பென்ஸனுக்கு ட்யூயல் ஷாக்-அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இதுதவிர அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இன்ஜின், செயல்திறன் & ஹேண்ட்லிங்

சரி, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். இந்த முக்கியமான பகுதிக்குதான் தற்போது நாம் வந்துள்ளோம். இந்த பைக்கில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய 348.36 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு ஃப்யூயல்-இன்ஜெக்டட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் 20.8 பிஎச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்மில் 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தம் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். போட்டியாளரான ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை காட்டிலும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தம் அருமையாக உள்ளது.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

செயல்திறனை பொறுத்தவரை குறைவான ஆர்பிஎம்மிலேயே அதிக டார்க்கை இன்ஜின் வாரி வழங்குகிறது. குறிப்பாக முதல் இரண்டு கியர்களில் டார்க் தாராளமாக கிடைக்கிறது. இதன் மூலம் வேகமாக முன்னோக்கி செல்ல முடிகிறது. ரீஃபைன்மெண்ட் லெவல் நன்றாக இருப்பதையும், இன்ஜின் மிகவும் ஸ்மூத் ஆக இருப்பதையும், பைக்கை ஓட்டும்போது நீங்கள் நிச்சயமாக உணரலாம். அதேபோல் அதிர்வுகளும் இல்லை.

அதே சமயம் கியர்களை மாற்றுவதும் மென்மையாக உள்ளது. ஆனால் கிளட்ச் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். குறைவான ஆர்பிஎம்மில் டார்க் அதிகப்படியாக கிடைத்தாலும், இரண்டாவது கியரில் மணிக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பது சிரமமாக உள்ளது. எனவே பெரிய ஸ்பீடு பிரேக்கர்களை கடக்கும்போது ரைடர்கள் தொடர்ச்சியாக கியரை குறைத்து கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் கியர் பாக்ஸை பற்றி குறை சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த பைக்கின் எடை 181 கிலோ என்னும் நிலையில், அதிவேகத்திலும் நிலையாக உள்ளது. எனவே ரைடர்களால் கூடுதல் நம்பிக்கையுடன் இன்னும் வேகமாக செல்ல முடியும். பைக்கின் எடை இலகுவாக இருப்பது, நகர பகுதிகளிலும் கூட நன்மை பயக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களிலும் இந்த பைக்கை எளிதாக ஓட்ட முடிகிறது. அகலம் 800 மிமீ என காம்பேக்ட்டாக இருப்பதால், ஷார்ப்பான டர்ன்களை இந்த பைக் எளிதாக கையாள்கிறது. அதேபோல் ஈரமான மற்றும் உலர்ந்த என அனைத்து சூழ்நிலைகளிலும், டயர்கள் நல்ல க்ரிப்பை வழங்குகின்றன.

அத்துடன் சஸ்பென்ஸன் செட்-அப் நன்றாக இருப்பதால், குண்டும், குழியுமான சாலைகளையும், உயரமான வேகத்தடைகளையும் இந்த பைக் எளிதாக எதிர்கொள்கிறது. இதுதவிர பிரேக்கிங்கும் ஷார்ப்-ஆக உள்ளது. வேகமாக சென்று கொண்டிருக்கும்போதும் பைக்கை உடனடியாக நிறுத்தி விட முடிகிறது.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

ஆனால் இந்த பைக் எங்களிடம் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்தது. எனவே எங்களால் துல்லியமான மைலேஜை பரிசோதிக்க முடியவில்லை. எனினும் இந்த பைக் எங்களிடம் இருந்த சமயத்தில், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் உள்ள சராசரி எரிபொருள் சிக்கன இன்டிகேட்டர், லிட்டருக்கு 29 கிலோ மீட்டர் என்ற ரீடிங்கை வழங்கியது. இந்த பைக்கிற்கு இது சிறப்பான மைலேஜ் என எடுத்து கொள்ளலாம்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் இன்ஜின், கியர் பாக்ஸ் பற்றிய தகவல்களை நீங்கள் சுருக்கமாக கீழே காணலாம்.

Engine 4-stroke Air-Cooled
Displacement 348.36cc
Power (bhp) 20.8bhp 5500rpm
Torque (Nm) 30Nm 3000rpm
Gearbox 5-Speed
ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் மற்றும் விலை

டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என மொத்தம் 2 வேரியண்ட்களில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கிடைக்கிறது. இதில், பேஸ் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை 1.86 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிகப்பு, பச்சை மற்றும் கருப்பு என மூன்று சிங்கிள்-டோன் வண்ண தேர்வுகளில் இந்த வேரியண்ட் கிடைக்கிறது.

அதே சமயம் டாப் டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.92 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும். கருப்பு/க்ரே, நீலம்/வெள்ளை, கருப்பு/சில்வர் என மொத்தம் மூன்று ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

போட்டியாளர்கள்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்குடன், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 நேருக்கு நேராக போட்டியிடும். இதுதவிர ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகளுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனையில் சவால் அளிக்கும். ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் அதன் முக்கிய போட்டியாளர்கள் இடையேயான ஒப்பீட்டை நீங்கள் கீழே காணலாம்.

Specs Honda H'ness CB 350 Royal Enfield Meteor 350 Benelli Imperiale 400
Engine Displacement 348.36cc 349cc 374cc
Power 20.8bhp 5500rpm 20.2bhp 6100rpm 20.7bhp 6000rpm
Torque 30Nm 3000rpm 27Nm 4000rpm 29Nm 3500rpm
Gearbox 5-Speed 5-Speed 5-Speed
Kerb Weight 181Kg 191Kg 205Kg
Fuel Tank Capacity 15-Litres 15-Litres 12-Litres
Starting Price Rs 1.86 Lakh Rs 1.79 Lakh Rs 1.99 Lakh
ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

தீர்ப்பு

மாடர்ன்-கிளாசிக் க்ரூஸர் செக்மெண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ள மிகச்சிறந்த மோட்டார்சைக்கிளாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை குறிப்பிடலாம். இதன் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் மிக சிறப்பாக இருப்பதுடன், அதிர்வுகளும் இல்லை. அதேபோல் கியர்களை மாற்றுவதும் மென்மையாக உள்ளது. இதன் எக்ஸாஸ்ட் சத்தத்தை இந்த செக்மெண்ட்டிலேயே சிறந்த ஒன்றாக குறிப்பிடலாம்.

ராயல் என்பீல்டு வேண்டாம், ஆனால் அதேபோன்று மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் ஒரு மோட்டார்சைக்கிளை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு ஹைனெஸ் சிபி350 சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிக்விங் டீலர்ஷிப்கள் அதிகமாக இல்லை என்பது ஒரு குறைதான். எனினும் பிக்விங் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளில் ஹோண்டா தற்போது ஈடுபட்டு வருகிறது.

நாங்கள் விரும்பிய அம்சங்கள்!

இன்ஜின் ரீஃபைன்மெண்ட்

மென்மையான கியர் மாற்றங்கள் மற்றும் கிளட்ச்

எக்ஸாஸ்ட் சத்தம்

நாங்கள் விரும்பாத அம்சங்கள்!

பில்லியன் இருக்கை சற்று கடினமாக உள்ளது

பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டும் விற்பனை செய்யப்படுவது

Most Read Articles
English summary
Honda H’ness CB350 Review (First Ride): Design, Features, Engine, Performance, Handling, Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X