பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் ரூ.1.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த பைக்கின் தோற்றம், எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் சிறப்பானதாகவே இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் வரிசை பைக் மாடல்கள் இந்திய இளைஞர்களை வசியம் செய்து வைத்துள்ளது. அந்த வரிசையில் வெளியிடப்பட்ட அனைத்து மாடல்களுமே சூப்பர் ஹிட்டாக உள்ளன. இந்த நிலையில், ட்யூக் கனவில் மிதக்கும் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் ஆசைய பூர்த்தி செய்யும் விதத்தில், அண்மையில் 125 ட்யூக் மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கேடிஎம் நிறுவனம் வழங்கியது. மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள பஜாஜ் ஆலையின் வளாகத்தில் அமைந்துள்ள சோதனை ஓட்ட தடத்தில் வைத்து இந்த புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கை ஓட்டி பார்த்தபோது கிடைத்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தோற்றம்

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் சிசி அடிப்படையில் குறைவான திறனை பெற்றிருந்தாலும், தோற்றத்தில் ஒரு முழுமையா நேக்கட் ரக பைக் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் அச்சு அசலான பல டிசைன் தாத்பரியங்களை பெற்று அசத்துகிறது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கவர்ச்சியான வண்ணக் கலவை

கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணக் கலவை அசத்துகிறது. மேலும், கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் சேஸீ, பாடி பேனல்கள், சஸ்பென்ஷன், சக்கரங்கள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை அப்படியே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எல்இடி ஹெட்லைட்?

கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் ஹெட்லைட் ஹவுசிங்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் 125 ட்யூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வந்துள்ள மாடலில் ஹாலஜன் பல்பு ஹெட்லைட்தான் கொடுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம்.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

அடுத்து கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இந்த புதிய 125 ட்யூக் மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எரிபொருள் அளவு, ஓடிய தூரம், டிரிப் மீட்டர்கள், கடிகாரம், கியர் ஷிஃப்ட் விளக்கு மற்றும் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை இதன் மூலமாக பெற முடியும்.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ட்ரெல்லிஸ் ஃப்ரேம்

இந்த பைக்கில் கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்களுக்கு உரிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் இந்த பைக்கின் கவர்ச்சிக்கும், உறுதிக்கும் வலு சேர்க்கிறது. இந்த பைக்கில் 10.2 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் தோற்றத்திலும், உதிரிபாகங்களிலும் கேடிஎம் 200 ட்யூக் பைக்கை ஒத்திருந்தாலும், மிக முக்கிய மாற்றம் எஞ்சின்தான். இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 124.7 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும்,, 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதாவது, 150 - 160 சிசி பைக்குகளுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

பொதுவாக கேடிஎம் பைக் மாடல்களில் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இருந்தாலும், அதன் செயல்திறன் மெச்சத்தக்கதாக இருக்கும். ஆனால், இந்த பைக்கின் எஞ்சின் 150சிசி திறன் கொண்ட மாடல்களுக்கு இணையாக இருந்தாலும், செயல்திறனை வெளிக்கொணரும் விதம் என்பது எதிர்பார்த்த அளவு இல்லை ஏமாற்றியது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நல்ல விஷயம்

அதேநேரத்தில், அதிர்வுகள் குறைவாக சிறப்பான முறையில் எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பைக்கின் எஞ்சின் 10,000ஆர்பிஎம் என்ற அதிகபட்ச சுழல் வேகத்தை பெற்றிருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ்

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கியர் மாற்றம் என்பது மிக மென்மையாகவும், அதிர்வுகள் இல்லாமல் இருப்பது ஆகச் சிறந்த விஷயம். ஆரம்ப நிலை கியர்கள் துல்லியமாக மாறுகின்றன. மேலும், இதன் டாப் கியரில் நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்து ஓட்டும்போது செயல்திறன் மற்றும் சைலென்சர் சப்தத்தின் ஒலியும் உற்சாகத்தை அதிகரிக்கின்றன.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாப் ஸ்பீடு

டெஸ்ட் டிராக்கின் நேரான தடத்தில் ஓட்டும்போது விரைவாக 90 கிமீ வேகத்தை எட்டிவிடுகிறது. ஆனால், அதன்பிறகு 100 கிமீ வேகத்தை கடப்பதற்கு சற்று கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டு திணறுகிறது. நாம் அதிகபட்சமாக 108 கிமீ வேகத்தை எமது சோதனை ஓட்டத்தின்போது எட்டினோம். 80 -90 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டுவதற்கு அருமையாக இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எம்ஆர்எஃப் டயர்கள்

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 110/70 R17 அளவுடைய எம்ஆர்எஃப் டயரும், பின்சக்கரத்தில் 150/60 R17 அளவுடைய எம்ஆர்எஃப் டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் 125 ட்யூக் பைக்கிற்கு மிகச் சிறந்த தரைப்பிடிப்பை வழங்குகின்றன.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன்

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷன் அதிர்வுகளை உள்வாங்கி கொள்வதால் சிறந்த பயணத்தை பெற முடிகிறது.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் சிஸ்டம்

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் பாஷ் நிறுவனத்தின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதற்கு சிறந்த பாதுகாப்பு வசதியாக இருக்கிறது. குறித்த இடத்தில் பிரேக் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகிறது. மேலும், பின்சக்கரம் மேலே தூக்கா லிஃப்ட் புரொடெக்ஷன் பாதுகாப்பு தொழில்நுட்பமும் இருப்பது சிறப்பு.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் தரைப்பிடிப்புடைய டயர்கள் காரணமாக வளைவுகளில் மிகச் சிறந்த கையாளுமையை வழங்குகிறது. இதனால், அச்சமின்றி, வளைவுகளை கடக்க முடிகிறது. பிற கேடிஎம் மாடல்களை போன்ற சிறந்த கையாளுமை கொண்ட பைக் மாடலாகவும் இதனை அடித்துக் கூறலாம்.

பட்ஜெட் ராக்கெட்... கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரிவ்யூ எடிட்டர் கருத்து

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் ரூ.1.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ட்யூக் வரிசை மாடல்களின் தனித்துவமான தோற்றம், சிறந்த எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் சிறப்பானதாகவே இருக்கிறது. செயல்திறன் சற்று ஏமாற்றத்தை தந்தாலும், பிற கேடிஎம் மாடல்களை போலவே, இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்புவாய்ந்த மாடல். அத்துடன் பட்ஜெட்டால் தயங்கி நிற்கும் கேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு இது நிச்சயம் சிறந்த சாய்ஸாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
DriveSpark was invited to Bajaj Auto's Chakan test track facility for the first ride experience of the 125 Duke. We did a couple of laps on the trace and were very impressed with the motorcycle. So, is the baby Duke worth its price for a 125cc?
Story first published: Monday, January 14, 2019, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X