மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

By Saravana

ஹோண்டா ஆளுகையின் கீழ் இருக்கும் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் முட்டி மோதி வருகின்றன. அதில், நமது உள்நாட்டு நிறுவனமான மஹிந்திராவும் ஒன்று. இருசக்கர வாகன மார்க்கெட்டில் பல புதிய யுக்திகளுடனும், பெரும் முதலீட்டுத் திட்டங்களையும் செய்து வரும் அந்த நிறுவனம், தனது கஸ்ட்டோ ஸ்கூட்டர் பிராண்டில் கூடுதல் சக்திவாய்ந்த 125சிசி மாடலை விரைவில் களமிறக்க உள்ளது. இந்த ஸ்கூட்டரை சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், இந்த ஸ்கூட்டரில் இருக்கும் சாதக, பாதகங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மஹிந்திரா கஸ்ட்டோ 125 -04

புது சட்டை...

தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா கஸ்ட்டோ 110சிசி மாடலுக்கும், இந்த புதிய 125சிசி மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வண்ணங்களில் கொஞ்சம் கலர்ஃபுல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, கஸ்டமைஸ் செய்யப்பட்டது போன்ற உணர்வை தர வேண்டும் என்று மஹிந்திரா முனைந்துள்ளது. ஆனால், அனைவரையும் இந்த பளிச் வண்ணக் கலவை கவராது. மொத்தத்தில் சட்டை புதுசு அம்புடுதேன்.

டிசைன் மாற்றங்கள்:

முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சைடு மிரர்கள் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிற வீல்களும் இந்த ஸ்கூட்டருக்கு அழகு சேர்க்கிறது. நகாசு வேலைகளுடன் வசீகரமான வண்ணக் கலவையில் கவர்கிறது.

எஞ்சின்:

மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் 8.5 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வழங்கும் 125சிசி ஏர்கூல்டு எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டர் எஞ்சின் சற்று அதிர்வுகள் அதிகம் தெரிந்த நிலையில், இந்த புதிய 125சிசி எஞ்சினில் உராய்வு குறைவான பிஸ்டன்கள் கொடுக்கப்பட்டிருப்தால், அதிர்வுகள் வெகுவாக குறைந்துள்ளது. மிட் ரேஞ்ச்சில் பவர் டெலிவிரியும் சிறப்பாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம்:

இந்த ஸ்கூட்டரின் இருக்கை அமர்ந்து ஓட்டுவதற்கு சவுகரியமாகவே தெரிகிறது. எம்ஆர்எஃப் ட்யூப்லெஸ் டயர்கள் வளைவுகளில் திருப்பும்போது, அதிக தரைப் பிடிப்புடன் நம்பிக்கையை தருகிறது. அத்துடன், வளைவுகளில் நிலைத்தன்மை நன்றாக இருப்பதுடன், கையாளுமையும் சிறப்பாகவே கூறலாம். பின்புற பிரேக்குகள் சிறப்பாக இருக்கும் நிலையில், முன்புற பிரேக்குகளின் செயல்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை.

மைலேஜ்:

இந்த ஸ்கூட்டரை குறைந்த தூரமே டெஸ்ட் டிரைவ் செய்தோம். அத்துடன், மைலேஜ் விபரமும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், லிட்டருக்கு 40- 45 கிமீ வரையிலான மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்:

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. 12 இன்ச் வீல்களில் எம்ஆர்எஃப் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் ஃப்ளிப் கீ எனும் ஸ்மார்ட் சாவி கொடுக்கப்படுகிறது. இருளான சமயங்களில் வண்டி நிற்கும்போது, எளிதாக இண்டிகேட்டர்களை ஆன் செய்து கண்டுபிடிக்க உதவி செய்கிறது. மற்றொரு அம்சம் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியும் இதன் தனித்துவ அம்சங்களாக இருக்கின்றன. முன்புறம் நோக்கிய கிக் ஸ்டார்ட்டும் எளிதாக ஸ்டார்ட் செய்ய உதவும்.

தீர்ப்பு:

தோற்றம், செயல்திறன், புதுமையான வசதிகளில் மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் மிகச்சிறப்பான மாடலே. இதன் விலை தெரியவரும்பட்சத்தில், எந்தளவுக்கு போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என அனுமானிக்க முடியும். அதேநேரத்தில், இந்த சிறப்பம்சங்களை மட்டுமே வைத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை சாய்த்துவிடும் என்று கூற இயலாது. ஆனால், கஸ்ட்டோவிற்கு மஹிந்திரா கூறும்," யாருக்கும் நாம் குறைவில்லை" என்ற பிரச்சார வாசகம் வாடிக்கையாளர்களை மனமிறங்க வைக்கலாம்.

Most Read Articles
English summary
Mahindra has plans to spoil the party with the introduction of the all-new Gusto 125cc. Will the Gusto be able to take down the reigning Honda Activa's glistening throne? There's only one way to find out. Scooter on...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X