மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

By Saravana Rajan

அதி செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பதில் இத்தாலிய நிறுவனங்கள் புகழ்பெற்றவை. டுகாட்டி, எம்வி அகஸ்ட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் சூப்பர் பைக்குகள் உலக அளவில் பெரும் ரசிக பட்டாளத்தை பெற்றிருக்கின்றன.

அதேநேரத்தில், அமெரிக்க பாணியில் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ரகத்தை தயாரிப்பதில் இத்தாலியை சேர்ந்த மோட்டோ குஸ்ஸி சிறந்து விளங்குகிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பை துவங்கி நூற்றாண்டை நெருங்கும் மோட்டோ குஸ்ஸி, ஐரோப்பாவின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.

வேர்ல்டு ஜீபி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், ஐலே ஆஃப் மேன் டிடி பந்தயத்தில் 11 முறை மோட்டோ குஸ்ஸி அணி வெற்றி பெற்றிருக்கிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்ட மோட்டோ குஸ்ஸி நிறுவனத்தின் பிரபலமான வி7 மோட்டார்சைக்கிளின் வழித்தோன்றலான வி9 பாபர் மோட்டார்சைக்கிளை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இத்தாலிய மோட்டார்சைக்கிள்கள் பொதுவாகவே வடிவமைப்பில் சிறந்தவையாக இருக்கும். அதேபோன்றே, இந்த மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிளும் மிகச் சிறந்த டிசைனை பெற்றிருக்கிறது. பாபர் ரகத்திற்காக பல ஆக்சஸெரீகளை உதறித் தள்ளி இருக்கிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு பக்கத்தில் பழமையான வட்ட வடிவ ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹேலஜன் பல்புடன் கூடிய இந்த ஹெட்லைட் பழமையான மோட்டார்சைக்கிள் போன்ற தோற்றத்தை தருவதால், சற்றே ஏமாற்றம் அளிக்கிறு. அதேநேரத்தில், எல்இடி டெயில் லைட்டுகளும், டர்ன் இன்டிகேட்டர்களும் நவீன யுகத்துக்கான அம்சங்களாக கூற முடியும்.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் குட்டையான ஃபென்டர் அமைப்பும், பின்புறத்தில் நறுக்கப்பட்டது போன்ற மட்கார்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பாபர் ரக மோட்டார்சைக்கிளாக தன்னை முன்னிறுத்துகிறது.

இதன் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சில்வர் வண்ண பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு கவர்வதாக உள்ளது. அதில், ரேஸ் பைக்குகளில் பயன்படுத்துவது போன்ற கோடுகளும் வசீகரத்தை கொடுக்கின்றது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் அலுமினிய மூடியும், அதன் மீதான மோட்டோ குஸ்ஸி என்று பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் கவர்கின்றன. ஒட்டுமொத்தத்தில், ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரத்தில் மிக சிறந்த மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிளில் ஒற்றை டயல் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் கீழ்பாகத்தில் மின்னணு திரை மூலமாக தகவல்களை பெறும் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டிரிப் மீட்டர், ஓடோமீட்டர், ஃப்யூவல் இண்டிகேட்டர், சராசரி வேகம், கியர் இண்டிகேட்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற தகவல்களை பெற முடியும்.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களில் சுவிட்ச் கியர் அமைப்பு சிறப்பாக இருக்கும். ஆனால், இந்த மோட்டார்சைக்கிளில் சுவிட்ச் கியர் தரம் ஏமாற்றுகிறது.

அதேநேரத்தில், இந்த மோட்டார்சைக்கிளின் வலது பக்க கைப்பிடியில் யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் எம்ஜிஎம்பி என்ற வசதி மூலமாக ஸ்மார்ட்போனை இணைத்து தொழில்நுட்ப தகவல்களை பெறும் வசதி இருக்கிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிளில் 850சிசி ஏர் கூல்டு வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 54.2 பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இதன் படுக்கைவாட்டு எஞ்சின் அமைப்பு, பிற க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களிலிருந்து வேறுபடுகிறது. இதன்மூலமாக, எஞ்சின் மிகச் சிறப்பான குளிர்விக்கும் முறையை பெறுகிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளை நெடுஞ்சாலையில் ஓட்டும்போது எஞ்சின் சூடு பிரச்னை தெரியவில்லை. ஆனால், நகர்ப்புறத்தில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஓட்டும்போது, அதிக சூடாகிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் எஞ்சின் யூரோ-4 மாசு தரத்திற்கான இணையான அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஆரம்ப ரகத்தில் மிகச் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. 2,900 ஆர்பிஎம்., எஞ்சின் சுழல் வேகத்திலேயே அதிகபட்சமான டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் சாஃப்ட் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் ஆற்றல் பின்சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாப் கியரில் குறைவான வேகத்தில் செல்லும்போது கூட ஓவர்டேக் செய்வதற்கு கியரை குறைத்து வேகமெடுக்கும் அவசியமில்லை. இது மிகச் சிறந்த அம்சமாகவே கூறலாம்.

இந்த மோட்டார்சைக்கிள் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜையும், நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் கொடுத்தது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் வேகமெடுக்கும்போது அதிக அதிர்வுகள் இருப்பதும் சற்று குறையாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இருக்கிறது.

அத்துடன், இரண்டு விதமான நிலைகளில் வைத்துக் கொள்ளக்கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது. இதனை அணைத்து வைப்பதற்கான சுவிட்சும் உள்ளது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிள் தரையிலிருந்து 770மிமீ இருக்கை உயரம் கொண்டது. உயரம் குறைந்தவர்களுக்கு இது மிகச் சிறந்த மோட்டார்சைக்கிளாக கூற முடியும்.

பிற க்ரூஸர் போன்று அல்லாமல், இதன் ஹேண்டில்பார் தட்டையான வடிவத்திலும், கால் வைப்பதற்கான ஃபுட் பெக்குகள் சற்று முன்னோக்கியும் இருக்கிறது.

நீண்ட தூர பயணங்களுக்கு இதன் இருக்கை மிக சொகுசாக இருக்கிறது. அதேநேரத்தில், பின் இருக்கையில் யாரேனும் அமர்ந்திருந்தால் பயணம் சுகமாக இருக்காது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் வளைவுகளில் எந்த அச்சமும் இல்லாமல் செல்ல உதவுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 200 கிலோ எடை கொண்டிருந்தாலும், அசராமல் செல்கிறது.

அதிகமாக வளைத்து திருப்பினால், ஃபுட் பெக்குகள் தரையில் இடிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 130மிமீ பலூன் டயரும், பின்புறத்தில் 150மிமீ பலூன் டயரும் பொருத்தப்ப்டடு இருக்கிறது.

இதனால், குறைவான வேகத்தில் சற்று கனமான மோட்டார்சைக்கிளை ஓட்டுவது போன்ற உணர்வை சிலர் பெறலாம்.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் ப்ரீ லோடட் சஸ்பென்ஷன் அமைப்பு கடினமாக இருப்பதால், வளைந்து நெளிந்து ஓட்டுவதற்கு மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

அதேநேரத்தில், பள்ளம் மேடுகளில் அதிகம் உதறுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 320மிமீ சிங்கிள் டிஸ்க் பிரக்கும், பின்புறத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ரூ.13.9 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் போட்டியாளர்களைவிட சற்று விலை அதிகமானதாக இருக்கிறது.

இந்த விலையில் 1,000திறனுடைய மோட்டார்சைக்கிளை வாங்கிவிட முடியும். அதேநேரத்தில், தனித்துவமான பிராண்டு மற்றும் ஸ்டைல் கொண்ட மோட்டார்சைக்கிளை வாங்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வளைவுகளில் இந்த மோட்டார்சைக்கிள் திரும்புவது மிகவும் வியந்து போற்றும் விஷயமாக கூறலாம். ஏனெனில், பிற க்ரூஸர்களை இவ்வாறு திருப்புவது சற்றே கடினமான உணர்வை தரும்.

மேலும், மிகவும் தனித்துவமான தோற்றம் இந்த மோட்டார்சைக்கிளை போட்டியாளர்களிடம் இருந்து உயர்த்திப் பிடிக்கிறது.

மோட்டோ குஸ்ஸி வி9 பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

The Facts

விலை ரூ. 13.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் (புனே)
எஞ்சின் 853சிசி
பெட்ரோல் டேங்க் 15 லிட்டர்கள்
மைலேஜ் Estimated: 23கிமீ/லி (நெடுஞ்சாலை)/ 18கிமீ/லி (நகர்ப்புறத்தில்)
ரேஞ்ச் 270கிமீ (தோராயமாக)
பவர்/ டார்க் 55பிஎச்பி @ 6250rpm/ 62என்எம் @ 3000rpm
டாப் ஸ்பீடு 180கிமீ வேகம்
Most Read Articles

English summary
The Italian bike manufacturer packs genuine heritage, as proven by the popularity of their V7 model and the cruiser legacy continues in the form of the V9 Bobber. DriveSpark took the V9 Bobber for a spin to find out what it's all about!
Story first published: Monday, July 10, 2017, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X