புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி 650: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக அறிமுகம் செய்யப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில், இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை அண்மையில் வழங்கினோம். இந்த செய்தியில் கான்டினென்டல் ஜிடி 650 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்கலாம்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பெங்களூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான சிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த புதிய கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிளின் சாதக, பாதக விஷயங்களை பார்க்கலாம்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

டிசைன்

பாரம்பரியம் மிக்க கஃபே ரேஸர் ரகத்தில் சக்திவாய்ந்த எஞ்சினுடன் புதிய மாடலாக வந்திருக்கிறது. 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 535 மோட்டார்சைக்கிளின் டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சில சிறிய மாற்றங்களுடன் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பாரம்பரிய டிசைன் அம்சங்கள்

வட்ட வடிவிலான ஹெட்லைட், பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற இன்டிகேட்டர் லென்ஸ், அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. கச்சிதமான பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கை அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இருக்கை வடிவமைப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பிரம்மாண்ட எஞ்சின்

சக்திவாய்ந்த புதிய எஞ்சின் பகுதி க்ரோம் பூச்சுடன் பிரம்மாண்டமான தோற்றத்தை தருகிறது. இந்த இரட்டை சிலிண்டர்கள் கொண்ட மோட்டார்சைக்கிளில் இரட்டை சைலென்சர் குழாய்கள் பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய அம்சம்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

இரட்டை சைலென்சர்கள்

பின்புறத்தில் மிக எளிமையான தோற்றத்தை பெற்றிருக்கிறது. எனினும், இதன் இரட்டை சைலென்சர் குழாய்கள் பின்புறத்திலிருந்து பார்க்கும்போது, இது சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் என்பதை உணர்த்துகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

வித்தியமான ரைடிங் பொசிஷன்

இந்த மோட்டார்சைக்கிளில் முக்கிய அம்சமாக, ஓட்டுபவர் கால் வைப்பதற்கான ஃபுட் பெக்குகள் சற்று பின்னோக்கி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், ஓட்டுனர் கஃபே ரேஸர் ஸ்டைலில் அமர்ந்து செல்வதற்கான வாய்ப்பை தருகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

எஞ்சின்

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய புதிய 648 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

கியர்பாக்ஸ்

இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்்டு இருக்கிறது. பழைய மாடலில் இருக்கும் 535சிசி எஞ்சின் 29 பிஎச்பி பவரையும், 44 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், புதிய மாடல் அதிக சக்திவாய்ந்ததாக இருப்பது மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கவனிக்கும் அம்சமாக இருக்கிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

அதிர்வுகள் குறைவு

பழைய கான்டினென்டல் ஜிடி 535 மோட்டார்சைக்கிள் எஞ்சின் அதிக அதிர்வுகள் கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், புதிய மாடலில் இரட்டை சிலிண்டர்கள் அதிர்வுகள் மிக குறைவாக இருப்பது சிறப்பு. எனினும், 650சிசி ரக மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடும்போது பவர் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

சைலென்சர் சப்தம்

இரட்டை சைலென்சர் குழாய்கள் மூலமாக ஆழமான புகைப்போக்கி சப்தத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், பிற ராயல் என்ஃபீல்டு மாடல்களிலிருந்து இது முற்றிலும் வேறான சப்தத்தை வெளிப்படுத்துகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பிக்கப் அருமை

இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் இருக்கும் அதே எஞ்சின்தான் என்பதால், இந்த எஞ்சின் 80 சதவீத அளவுக்கான டார்க் திறனை வெளும் 3,000 ஆர்பிஎம் என்ற அளவிலேயே வழங்குவது ஆகச் சிறந்த விஷயம். இதனால், பிக்கப் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 0 -100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 170 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

மந்தமான நிலை

ஆரம்ப நிலையில் பிக்கப் சிறப்பாக இருந்தாலும் நடுத்தர மற்றும் உயர் நிலைகளில் எஞ்சின் செயல்திறன் சீராக உயர்வது பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளை ஏமாற்றம் அடைய செய்யலாம். நடுத்தர நிலைகளில் எஞ்சின் செயல்திறன் துல்லியமாக கூற இயலாது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

மைலேஜ்

புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

கையாளுமை

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளின் இருக்கை, ஹேண்டில்பார், ஃபுட் பெக்குகளின் அமைப்பு வித்தியாசமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. டிசைன் பழமையானதாக இருந்தாலும், கையாளுமையில் சிறந்த மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், வேகமாக ஓட்டுவதற்கும் லாவகமாக இருக்கிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

வேகம்

இந்த மோட்டார்சைக்கிள் 120 கிமீ வேகம் வரை அனாயசமாக எட்டுகிறது. அதற்கு மேல் செல்லும்போது செயல்திறனில் தொய்வு காணப்படுகிறது. அதிவேகத்தில் வளைவுகளில் நம்பிக்கையுடன் திருப்பும் வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

ரேஸ் டிராக் திறன்

வளைவுகளில் கையாளுமை சிறப்பாக இருந்தாலும் ரேஸ் டிராக்குகளில் ஓட்டும்போது அதிவேகமாக சுற்றுகளை கடந்துவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம், நடுத்தர நிலையில் இதன் செயல்திறன் மற்றும் பிக்கப் எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், அதிர்வுகள் குறைவாக இருப்பது பெரிய ப்ளஸ்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

சிரமம்

இதன் வித்தியாசமான ரைடிங் பொசிஷன் காரணமாக தொடர்ந்து நீண்ட தூரம் ஓட்டிச் செல்வதில் சிரமம் இருக்கலாம். குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ளும் நிலையும் ஏற்படும்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

சஸ்பென்ஷன்

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில்் டெலிஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது பழமையான தொழில்நுட்பம் கொண்ட சஸ்பென்ஷனாக இருந்தாலும் நன்றாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இதன் ரைடிங் பொசிஷன் காரணமாக, பெரிய பள்ளம் மேடுகளில் ஏறி, இறங்கும்போது அதிர்வு நேரடியாக ஓட்டுனரின் தோள்பட்டையில் தாக்கத்தை தருகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பைரெல்லி டயர்கள்

புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளில் பைரெல்லி ஃபான்டம் ஸ்போர்ட்காம்ப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் மிகச் சிறந்த தரைப் பிடிப்பை வழங்குவது இந்த மோட்டார்சைக்கிளின் அடுத்த ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பைப்ரே பிரேக்குகள்

இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் 320 மிமீ பைப்ரே டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ பைப்ரே டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது. இதனால் துல்லியமான பிரேக்கிங் திறனை உணர முடிகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளில் எளிமையான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பீடோ மீட்டர் மற்றும் டாக்கோமீட்டர் ஆகியவற்றிற்காக இரண்டு அனலாக் டயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்பீடோமீட்டர் டயலில் இருக்ககும் சிறிய மின்னணு திரை மூலமாக ட்ரிப் மீட்டர், ஓடிய மொத்த தூரம், எரிபொருள் அளவு உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

மதிப்பை கூட்டும் விஷயம்

ஹேண்டில்பார் மற்றும் பெட்ரோல் டேங்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருப்பது இந்த மோட்டார்சைக்கிளின் மதிப்பை உயர்த்தும் விஷயம். அதேபோன்று, ஃபுட் பெக்குகளிலும் உள்ளன.

royal-enfield-continental-gt-650-review-test-ride

வண்ணத் தேர்வுகள்

இந்த மோட்டார்சைக்கிள் ஐஸ் குயின், வென்ச்சுரா புளூ, மிஸ்ட்ர் க்ளீன், பிளாக் மேஜிக் மற்றும் டாக்டர் மாஹேம் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது. உயர்தரமான பெயிண்ட்டிங்கும் இந்த மோட்டார்சைக்கிளின் முக்கிய அம்சமாக கூறலாம். நாம் டெஸ்ட் டிரைவ் செய்த மோட்டார்சைக்கிள் ஐஸ் குயின் வண்ணத்தில் குறிப்பிடப்படுகிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

தீர்ப்பு

தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, கான்டினென்டல் ஜிடி 650 மாடலை உலகளாவிய சந்தையை கணக்கில் கொண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. வித்தியாசமான ரைடிங் பொசிஷன், சக்திவாய்ந்த எஞ்சினுடன் மிக சவாலான விலையில் இந்த மோட்டார்சைக்கிள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் விரும்பும் மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

கஃபே ரேஸர் பிறந்த கதை

சென்னையை சேர்ந்த பைக், கார் ஆர்வலர்கள் விடுமுறை தினங்களில் ஈசிஆர் சாலைகளில் உள்ள ஓட்டல்களுக்கு காலை சிற்றுண்டி டிரிப் என்ற பெயரில் ஒன்று கூடலை நடத்துகின்றனர். இந்த டிரிப்பின்போது சிலர் அதிவேகமாக ரேஸ் அடித்து செல்வது வழக்கம்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

பாரம்பரியம்

இதேபோன்று, 1960 காலக்கட்டங்களில் இங்கிலாந்தை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிரியர்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள காஃபி கஃபேக்களுக்கு இடையே ரேஸ் அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்காக, சிலர் இலகு எடையுடன் கூடிய அதிசெயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்களை சொந்த ஐடியாவில் உருவாக்கினர். அந்த வகையில் பிறந்ததுதான் கஃபே ரேஸர் மாடல்.

royal-enfield-continental-gt-650-review-test-ride

இலகு ரகம்

பார்க்க எளிமையான தோற்றத்துடன் சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள்களில் ஒரு காஃபி கஃபேயிலிருந்து மற்றொரு காஃபி கஃபேவுக்கு சிட்டாக பறந்து செல்வது அவர்களுக்கு அலாதி அனுபவத்தை கொடுத்தது. அதுபோன்ற ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் 1965ல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கான்டினென்டல் ஜிடி என்ற கஃபே ரேஸர் மாடலை களமிறக்கியது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

முதல் கஃபே ரேஸர்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் கஃபே ரேஸர் மாடல் 250சிசி எஞ்சினுடன் வந்தது. இந்த எஞ்சின் 21 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. மேலும், எடையை குறைக்கும் விதத்தில் அந்த மாடலில் ஃபைபர் கிளாஸ் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டது. க்ளிப் ஆன் ஹேண்டில்பாருடன் வந்த முதல் ராயல் என்ஃபீல்டு மாடல். அந்த மாடல் பிரத்யேக ஒற்றை இருக்கை அமைப்பை பெற்றிருந்தது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

மீண்டும் கஃபே ரேஸர்

அதன்பிறகு கஃபே ரேஸர் ஸ்டைலுக்கான வரவேற்பு குறைந்ததால் மறக்கப்பட்டது. இந்த நிலையில், மிக நீண்ட காலத்திற்கு பின்னர் புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்க நினைத்த ராயல் என்ஃபீல்டுக்கு பழைய கஃபே ரேஸர் ஸ்டைலை கையில் எடுத்தது. அதன்படி, 2013ம் ஆண்டில் புதிய கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

royal-enfield-continental-gt-650-review-test-ride

புதிய கஃபே ரேஸர் மாடல்கள்

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலில் 535சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தது.துவக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றாலும், தொடர்ந்து எதிர்பார்த்த அளவு வரவேற்பை இல்லை. இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் 650சிசி எஞ்சினுடன் கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் சக்திவாய்ந்த மாடலை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளுடன் இந்த கான்டினென்டல் ஜிடி 650 மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
Royal Enfield launched their latest cafe racer - The Continental GT 650 in November 2018 and we got to take it for a spin through CVS Motors, Royal Enfield's Dealership in Bangalore. The Continental GT was always intended to be a performance brand for Royal Enfield.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X