ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 90 காலக்கட்டத்தில் துறுதுறு நாயகனாக வலம் வந்த ரஜினியை பேட்ட படம் மூலமாக திரும்பி காட்ட முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட ரஜினியை பார்த்து 6 முதல் 60 வயதான ரசிகர்கள் சிலாகித்துபேசி வரும் நிலையில், அதேபோன்ற ஒரு முயற்சியை கையில் எடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாரம்பரியம்

ஆம், 1960களில் அமெரிக்க இளைஞர்களின் மனங்கவர்ந்த மாடலாக இருந்த இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிளை ரஜினியை போலவே, புதிய மேக்கப்பில் புதிய மாடலாக உருவாக்கி அசத்தி உள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்நிறுவனத்தின் புத்தம் புதிய பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய 650சிசி மாடல்களாக இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எதிர்பார்ப்புடன் ஓர் டெஸ்ட் டிரைவ்

இதில், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடல் தனித்துவமான வடிவமைப்பால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெங்களூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு டீலரான சிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது. உங்களை போலவே பல எதிர்பார்ப்புகளுடன் இந்த மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய அத்தியாயம்

நூற்றாண்டை தாண்டி மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய அத்தியாயத்தில் காலடி பதிக்கும் விதத்தில் இந்த இன்டர்செப்டார் 650 மாடலை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் மாடல்களில் வடிவமைப்பு சாயல் விழாமல் முற்றிலும் புதிய ரகத்தில் இந்த மாடலை உருவாக்கி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பழமையை போற்றும் டிசைன்

1960களில் வெளிவந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மாடலின் பழமையும், பாரம்பரியமும் மிக்க டிசைன் தாத்பரியத்துடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கலந்து கட்டி இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கச்சிதமான ராயல் என்ஃபீல்டு

பொதுவாக ராயல் என்ஃபீல்டு மாடல்கள் பிரம்மாண்டத்தை தனது அடையாளமாக வைத்திருக்கின்றன. ஆனால், இந்த புதிய இன்டர்செப்டார் முற்றிலும் வேறுபட்டு, மிக எளிமையாகவும், கச்சிதமான மோட்டார்சைக்கிளாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

வட்ட வடிவிலான ஹெட்லைட், ஆரஞ்ச் வண்ண கண்ணாடிகளுடன் கூடிய இன்டிகேட்டர்கள், க்ரோம் பூச்சுடன் கூடிய ஹேண்டில்பார் அமைப்பு, அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் கூடுதலான க்ராஸ் பார் ஆகியவை பழமையான தோற்றத்தை தருகிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் பெட்ரோல் டேங்க், எஞ்சின் பகுதி, சைலென்சர் ஆகியவை உருவத்தை பிரம்மாண்டமாக்கி காட்டுகின்றன. அதேநேரத்தில், மெல்லிய ஒற்றை இருக்கை தனித்துவத்தை அளிக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்திலும் மிக எளிமையான டிசைனுடன் கூடிய டெயில் லைட், இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை சைலென்சர் குழாய்களானது பின்புறத்தில் மேல்நோக்கி இருப்பது போன்று பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்ரோம் அலங்காரம்

எஞ்சின் கிராங் கேஸ் மற்றும் செலென்சர்கள் ஆகியவை க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்போக்ஸ் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் பழமையை நினைவூட்டும் மோட்டார்சைக்கிளாகவே இருக்கிறது. மொத்தத்தில் மிக தனித்துவமான டிசைனுடன் கவர்கிறது இன்டர்செப்டார் 650.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் 648சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏர்- ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் 7,250ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 5,250 ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்தில் 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என் வழி, தனி வழி...

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் எஞ்சினின் அதிகபட்ச திறனை பிற மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் குறைவு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த ஒப்பீட்டை தவிர்த்துவிட்டு, இதனை தனி ரகமாக பார்ப்பதே ஆகச்சிறந்த விஷயம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் செயல்திறன்

இந்த மோட்டார்சைக்கிளின் 650சிசி எஞ்சின் 3,000 ஆர்பிஎம் அளவிற்குள் 80 சதவீத டார்க் திறனை வெளிக்கொணருகிறது. இதனால், குறைவான வேகத்தில் மிகச் சிறந்த பிக்கப்பை உணர முடிவதால், பிற ராயல் என்ஃபீல்டு போல அல்லாமல், நகர்ப்புற சாலைகளிலும் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாப் ஸ்பீடு

நெடுஞ்சாலைகளிலும் அசத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 0 - 100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மிக எளிதாக மூன்று இலக்க வேகத்தை எட்டிவிடுகிறது. 120 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டும்போது உன்னதமான அனுபவத்தை வழங்குகிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போயே போச்சு...

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் பொதுவாக அதிர்வுகள் அதிகமாக இருக்கிறது. நீண்ட தூரம் பிராயணிக்கும்போது முதுகுவலி, தோள்பட்டை வலி போன்ற உடல் உபாதைகளை உணர முடிவதாக தெரிவிப்பதுண்டு. ஆனால், அதிர்வுகள் குறைவாக இருப்பது இதன் முக்கிய பலமாக குறிப்பிடலாம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன்

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் சாதாரண ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இது மிக எளிமையான சஸ்பென்ஷன் தொழில்நுட்பமாக இருந்தாலும் சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பது அனைத்து சாலைகளிலும் எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுதல் தரம்

இந்த மோட்டார்சைக்கிளை அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரம் மற்றும் நெடுஞ்சாலையில் வைத்து 8 மணிநேரம் ஓட்டி பார்த்து சோதனை செய்தோம். அதிர்வுகள் குறைவான எஞ்சின், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு காரணமாக, இந்த மோட்டார்சைக்கிளின் ஓட்டுதல் தரம் என்பது நன்றாகவே இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் கச்சிதமாக இருப்பதால் வளைவுகளில் திருப்புவதற்கும் லாவகமாக இருக்கிறது. அதிவேகத்திலும் எளிதாக கையாளும்படி இருக்கிறது. பிற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை ஒப்பிடும்போது கையாள்வதற்கும் மிக இலகுவான மாடல்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சைலென்சர் சப்தம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் என்றவுடனே எல்லோரும் எதிர்பார்ப்பது, அதன் சைலென்சர் சப்தம்தாம். வழக்கமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய அந்த அழுத்தமான தட தட சப்தம் இல்லாவிட்டாலும், இதன் இரட்டை சிலிண்டர் எஞ்சினின் சைலென்சர் சப்தம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. குறைவான வேகத்திலும், க்ரூஸ் செய்து செல்லும்போதும், இதன் இரட்டை சிலிண்டர்களின் சைலென்சர் சப்தம் ஓட்டுவதற்கு உற்சாகத்தை கூட்டுகிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சிறப்பு நுட்பம்

இதன் இரட்டை சிலிண்டர்களின் இயங்கு தொழில்நுட்பத்தில் இருக்கும் தொழில்நுட்ப சிறப்பு காரணமாக, அதிர்வுகள் வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிக நீண்ட தூரம் ஓட்டும்போதும் அலுப்பில்லாத ஓட்டுதல் அனுபவத்தை உணர முடியும்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பைரெல்லி டயர்கள்

இந்த மோட்டார்சைக்கிளுக்காகவே தயாரிக்கப்பட்ட பைரெல்லி ஃபான்டம் ஸ்போர்ட்காம்ப் டயர்கள் தார் சாலைகளில் சிறந்த தரைப்பிடிப்பை வழங்குகின்றன. இதன் டிரெட் அமைப்பானது தார் சாலைகளில் க்ரூஸ் செய்து ஓட்டுவதற்காக விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பைப்ரே பிரேக்குகள்

இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் பைப்ரே நிறுவனத்தின் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் பைப்ரே 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக உள்ளது. துல்லியமான நிறுத்துதல் திறனை வழங்கும் இதன் பிரேக்குகள் அதிவேகத்தில் செல்லும்போது கூட வண்டியை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு உதவுகின்றன.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் கவர்ச்சிகரமான அம்சங்கள் என்பதற்கே வேலையில்லை. ஸ்பீடோ மீட்டர் மற்றும் டாக்கோமீட்டருக்காக இரண்டு அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஸ்பீடோ மீட்டர் டயலில் சிறிய மின்னணு திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில், ஓடிய மொத்த தூரம் மற்றும் டிரிப் மீட்டர்கள் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணங்கள்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இதன் தரமான பெயிண்ட் வேலைப்பாடுகளை கூறலாம். மேலும், கவர்ச்சிகரமான வண்ணங்களில் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது. இதன் வண்ணத்தை பொறுத்தே விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஆரஞ்ச் க்ரஷ், கிளிட்டர் அண்ட் டஸ்ட், சில்வர் ஸ்பெக்டர், பேக்கர் எக்ஸ்பிரஸ், மார்க் த்ரீ மற்றும் ரேவிஷிங் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதில், ஆரஞ்ச் க்ரஷ் விலை குறைவாகவும், ஒயிட் க்ளிட்டர் அண்ட் டஸ்ட் வண்ணம் விலை அதிகம் கொண்டதாகவும் கிடைக்கிறது. ரூ.20,000 வரை விலை அதிகம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டிசைன் மிக எளிமையாக இருந்தாலும், மிக தனித்துவமான மாடலாக இருக்கிறது. தற்போது வரும் நவீன பைக் மாடல்களில் இருப்பது போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இல்லை என்றாலும், பேரலல் டிவின் சிலிண்டர் எஞ்சினுடன் ரூ.2.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைப்பது, இதன் ரகத்தில் மிக சவாலான விஷயம். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என்பதை மாற்றுக் கருத்தில்லை.

ரஜினியை சுவாசமாக கொண்டிருப்பவர்களுக்கு பேட்ட திரைப்படம் எவ்வாறு பழைய நினைவுகளை மீட்டெடுத்து அசைபோட வைத்ததோ, அதேபோன்றே ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை நேசிக்கும் அதன் ரசிகர்களை உச்சி முகர்ந்து பார்க்க வைக்கும் மாடலாக இன்டர்செப்டார் 650 இருக்கும். ஏற்கனவே சொன்னது போல, பிற 650சிசி மாடல்களுடன் ஒப்பிடாமல், இதற்கு உரிய தனித்துவத்தை உணர்ந்தவர்களுக்கான சிறந்த சாய்ஸாக இருக்கும். மேலும், ஜாவா பிராண்டு மீண்டும் வந்துள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு இன்டர்செப்டார் 650 மாடலும் பக்க பலமாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரிவ்யூ எடிட்டர் கருத்து

நான் ராயல் என்ஃபீல்டு ரசிகன் அல்ல. எனவே, இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் இங்கே பட்டியலிட்டு இருப்பேன். ஆனால், ராயல் என்ஃபீல்டு குறித்த என் மனதில் உள்ள பிம்பத்தை இந்த புதிய இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளை ஓட்டியதற்கு பின் மாறிவிட்டது.

வண்டியை ஸ்டார்ட் செய்து முதல் கியரை போடும்போதே, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு சிறந்த மோட்டார்சைக்கிளை உருவாக்க எவ்வளவு சிரத்தை எடுத்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. இதே பாணியில் புதிய மாடல்களை ராயல் என்ஃபீல்டு உருவாக்க முனைந்தால் அது நிச்சயம் அந்நிறுவனத்தை புதிய உயரங்களை எட்ட செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Most Read Articles
English summary
It was in November 2018 that Royal Enfield launched the much-awaited Continental GT 650 and Interceptor 650 motorcycles amidst much fanfare. Thanks to CVS Motors in Bangalore, we got to take the motorcycles for a spin and find out what the hype is all about.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X