ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக் அந்நிறுவனத்தின் முதல் க்ரூஸியர் பைக், இந்த பைக்கை அந்நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு வெளியிட்டது. இந்த பைக்கில் 350 சிசி ஏவிஎல் - பர்ன் இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன

By Balasubramanian

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக் அந்நிறுவனத்தின் முதல் க்ரூஸியர் பைக், இந்த பைக்கை அந்நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு வெளியிட்டது. இந்த பைக்கில் 350 சிசி ஏவிஎல் - பர்ன் இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஏவிஎல் என்பது ஒரு ஜெர்மன் சொல்லின் சுறுக்கம் இதற்கு கம்பஷன் இன்ஜின்களின் இன்ஸ்டியூட் என பொருள்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த ராயல் என்பீல்டு பைக்கை இந்தியர்கள் தங்கள் கவுரவமாக கருதுகின்றனர். தலைமுறைகள் கடந்து இந்த எண்ணம் மக்கள் மனதில் ஆழமாய் வேரூன்றி உள்ளது. இந்நிலையில் ராயல் என்பல்டு தண்டர்பேர்டு பைக்கின் எக்ஸ் மாடல் பைக்கை இந்தாண்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் 350 மற்றும் 500 சிசி இன்ஜின் உடன் வருகிறது. இதில் அலாய் வீல்கள், டியூப் லெஸ் டயர்கள், வித்தியாசமான ஹெண்டில் பார், பெரிய பெட்ரோல் டேங்க், வேறு வேறு கலர் ஸ்கீம்களில் வருகிறது. அந்த இந்த ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்கை டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்து ரிவியூ செய்துள்ளது. இதை நீங்கள் கீழே காணுங்கள்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் லுக்கே எல்லா பாகங்களும் கருப்பு நிறத்தில் இருப்பதையும், டேங்க் மட்டும் ஆரஞ்ச் அல்லது நீல நிறத்தில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஆரஞ்ச் மற்றும் நீல நிறம் தான் இந்த பைக்கின் கலர் ஆப்ஷன்களாக உள்ளன. இந்த பைக்கை தூரத்தில் இருந்து பார்த்தாலும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த கலர் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் முகப்பு பகுதியில் கருப்பு நிற ஃபோக்ஸ் மற்றும் ஹெட்லைட் கிளஸ்டர்கள் அதே பழைய தண்டர்பேர்டு பைக்கில் உள்ளதே இந்த பைக்கிலும் இருக்கிறது. பழைய தண்டர்பேர்டு பைக்கில் இருந்த ஹசார்டு லைட் அம்சத்தை இந்த பைக்கில் அவர்கள் எடுத்து விட்டனர்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லோகோ அதில் பதிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கலர் ஸ்கீமிலும் வசீகரிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த தண்டர்பேர்டு எக்ஸ் பைக்கில் கியர் மாற்றுவது சற்று கடினமாக இருக்கிறது. மேலும் இதில் கறுப்பு நிறத்தில் நீளமான ஹேண்டில் பார் வழங்கப்பட்டுள்ளது. பழைய பைக்கில் வழங்கப்பட்ட ஹேண்டில் பார் சற்று வளைந்த வடிவில் இருக்கும்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஹேண்டில் பார் வித்தியாசமாக அமைக்கப்பட்டதால் அதற்கு தகுந்தார்போல் கால் வைக்கும் பகுதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான போஷிஷன் கிடைக்கும்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

முக்கிய அம்சமாக இந்த பைக்கில் ராயல் என்பீல்டு வரலாற்றில் முதன்முறையாக சிறப்பான சீட் வசதியை வழங்கியுள்ளது. அதன் குஷன் வசதி சிறப்பாக இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அப்டர் மார்கெட் சீட்டில் இனி வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது இருக்காது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கில் உள்ள ஒரே குறை இதில் பேக் ரெஸ்ட் பகுதி இல்லை. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கலாம். ஆனால் அதை ஆப்டர் மார்கெட் ஆக்ஸசரீஸ் ஆக பொருத்தி கொள்ளலாம்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

எங்கள் குழு டெஸ்ட் செய்த தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக் 499 சிசி ஏர் கூல்டு ஒரு சிலிண்டர் இன்ஜின், இந்த இன்ஜின் 27 பிஎச்பி பவரையும், 41 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த டார்க் நீங்கள் ஈக்கட்டான சூழலில் சிக்கும் போது கியரை குறைக்காமலேயே வண்டியை இழுக்க வைக்க உதவும்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பைக்கின் எடையை பொருத்தவரை பழைய தண்டர் பேர்டு பைக்கும் இந்த பைக்கும் ஒரே எடையில்தான் உள்ளன. இரு பைக்குகளும் 197 கிலோ எடையை கொண்டுள்ளது. பெர்பாமென்ஸூம் இரண்டு பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான அமைந்துள்ளது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மேலும் ராயல் என்பீல்டு நிறுவனம் முதன் முறையாக அலாய் வீலையும் டியூப் லெஸ் டயரையும் ஸ்டாக்கிலேயே கொண்டு வந்துள்ளன. இதற்கு முன்னர் வந்த பைக்குகள் எல்லாம் அதை ஆப்டர் மார்கெட்டில்தான் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் க்ரூஸர் அனுபவத்தை பொருத்தவரை 90 கி.மீ. வேகம் என்பது சரியான வேகமாக இருக்கிறது. அதற்கு அதிகமான வேகத்தில் செல்லும் போது ஹேண்டில்பார் மற்றும் கால் வைக்கும் பகுதிகளில் அதிர்வுகளை உணர முடிகிறது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் டயரை பொருத்தவரை

முகப்பு பகுதியில் 19 இன்ச் மற்றும் பின்பக்கம் 18 இன்ச் இருக்கிறது. இந்த பைக்கின் சஸ்பென்ஸனும் பழைய பைக்கில் உள்ள அதே சஸ்பென்ஸனை கொண்டுள்ளது. கரடுமுரடான சாலைகளையும் அசால்ட்டாக இது கடந்து செல்லும்.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் முன் பகுதியில் அதிக எடை இல்லை இதனால் அந்த பைக்கில் திருப்பங்களில் கவனமாக இருக்கவேண்டும். பிரேக்கிங் காம்போனென்ட்களை பொருத்தவரை தற்போது உள்ள தண்டர்பேர்டு பைக்கில் உள்ள அதே பிரேக்கிங் காம்போனென்ட்கள் தான் இந்த பைக்கிலும் உள்ளது. முன்பக்க வீலில் 280 மிமீ டிஸ்க் பின் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க் பொரு்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்கில் ஏபிஎஸ் வசதி ஒரு ஆப்ஷனாக இருக்கிறது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக் டிராப்பிக்கில் செல்லும் போது அதிகமாக சூடாகிறது. ஆனால் சரியான ரைடிங் கியருடன் பயணித்தால் பெரிதாக உணர முடியாது. இந்த பைக்கின் மைலேஜை பொருத்தவரை லிட்டருக்கு 27 கி.மீ. மைலேஜ் கிடைக்கிறது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் பைக் …. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

தண்டர்பேர்டு பைக் வாங்க விரும்புபவர்கள் நிச்சயம் தண்டர்பேர்டு எக்ஸ் பைக்கையும் கருத்தில் கொள்ளலாம். இதன் விலை டில்லி எக்ஸ் ஷோரூம் மதிப்பின் படி ரூ 1.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண தண்டர்பேர்டு பைக்கைவிட ரூ 8000 அதிகமாக உள்ளது. நீண்ட தூர பயணத்திற்கு இந்த பைக் ஏற்றது.

Most Read Articles
English summary
2018 Royal Enfield Thunderbird 500X Road Test Review. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X