சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

கடந்த சில மாதங்களாக புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை 2,400 கிமீ தூரம் ஓட்டிய அனுபவத்தில், இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பான மாடல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் குறுகிய காலத்தில் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வெற்றிகரமான ஸ்கூட்டர் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட். இந்த புதிய ஸ்கூட்டரை சில மாதங்கள் கையில் வைத்து இதன் சாதக, பாதகங்களை சோதித்து பார்த்தது. அதில், கிடைத்த விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

டிசைன்

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி என்ற வகையிலான ஸ்கூட்டர்களின் டிசைன் தாத்பரியங்களுடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்கூட்டர் மாடல் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட். பெயருக்கு ஏற்றாற்போலவே, உருவத்தில் பிரம்மாண்டமாய் கவர்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி பர்க்மேன் 650 மாடலின் மினி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

சாலை ஆளுமை

மேலும், ஏராளமான ஸ்கூட்டர்களுடன் ததும்பி வழியும் இந்திய சாலைகளில் தனித்துவமான டிசைனுடன் கவர்கிறது சுஸுகி பர்க்மேன். சாலை ஆளுமையிலும் சிறப்பான மாடலாக எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கிறது. குறிப்பாக, பிரம்மாண்டமான முன்புற பேனல்கள்தான் இந்த ஸ்கூட்டரை தனித்துவப்படுத்துகிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

சிறப்புகள்

எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், ஃப்ளை விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவையும் குறிப்பிடத்தக்க விஷயங்கள். இன்டிகேட்டர்கள் முன்புற அப்ரான் பேனல்களில் இருபுறங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டிலும் பெரிய ஸ்கூட்டர் போன்ற தோற்றத்தை பெற்றிருப்பதுடன் மிக வலிமையான தோற்றத்தை தக்க வைக்கிறது. பர்க்மேன் ஸ்ட்ரீட் பேட்ஜுகளும் இதற்கு சிறப்பான தோற்றத்தை தருகின்றன. இருக்கை அமைப்பு பெரிதாக இருப்பதுடன், கிராப் ரெயில் கைப்பிடிகளும் பொருந்தி போகின்றன.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

பின்புற டிசைன்

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஹாலஜன் பல்புகளுடன் கூடிய இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. சுஸுகி ஜிக்ஸெர் போன்றே தனித்துவமான சைலென்சர் மஃப்ளர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஏமாற்றமான விஷயம், 10 அங்குலமே அளவுடைய அலாய் வீல்களும், 100 மிமீ டயர்களும்தான். 12 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தி இருந்தால், ஸ்கூட்டரின் தோற்றத்தை கூடுதல் ஆளுமையுடன் மாற்றியிருக்கும்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெரிய திரையில் வெள்ளை வண்ண பேக்லிட் மற்றும் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்கள் தெரிகின்றன. இது தெளிவாக இருப்பதால் ஓட்டும்போது எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்ர், இரண்டு டிரிப் மீட்டர்கள், கடிகாரம் மற்றும் எரிபொருள் அளவு விபரங்களை பெற முடியும்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

ஸ்டோரேஜ் வசதி

இந்த ஸ்கூட்டரில் முன்புற பேனலில் இரண்டு பெரிய ஸ்டோரேஜ் அறைகள் இடம்பெற்றிருக்கின்றன. வாட்டர் பாட்டில் வைப்பதற்கான வசதியுடன் ஒரு அறையும், 12V சார்ஜர் வசதியுடன் ஒரு சிறிய அறையுமாக இருக்கின்றன. மொபைல்போன்கள், சிறிய கைப்பைகளை வைக்க ஏதுவாக இருக்கும். ஆனால் பூட்டி திறக்கும் வசதியுடன் மூடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

இருக்கை அமைப்பு

இந்த ஸ்கூட்டரில் இருக்கையில் அமர்ந்தவுடனேயே விசாலமான இருக்கை என்பதை உணர முடிகறது. அதேபோன்று, ஃபுட் ஃபோர்டு மிக பெரிதாக இருப்பதும் கால் வைப்பதற்கு வசதியாக இருக்கிறது. பின்னால் அமர்பவருக்கு அலுமினிய ஃபுட் ரெஸ்ட்டுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

பூட் ரூம் இடவசதி

இந்த ஸ்கூட்டரில் இருக்கைக்கு கீழே 21.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெரிய ஸ்டோரேஜ் அறை உள்ளது. அதேநேரத்தில், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை வைப்பதற்கு சிரமமாக இருக்ககிறது. அதேபோன்று, விளக்கும் கொடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றம்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

எஞ்சின்

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 124சிசி எஞ்சின்தான் இந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும்,, 10.2 என்எம் டார்க் திறனையும வெளிப்படுத்தும்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

செயல்திறன்

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் செயல்திறனுக்கு பெயர் பெற்றது. அதேவகையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் எஞ்சின் சிறந்த பிக்கப்பை வழங்குகிறது. நகர்ப்புறத்தில் பயன்படுத்தும்போது அதிர்வுகள் குறைவாகவும் சிறப்பான செயல்திறனை உணர முடிகிறது. ஆனால், நெடுஞ்சாலையில் வேகம் பிடிக்கும்போது எஞ்சினிலிருந்து அதிர்வுகள் சப்தம் அதிகம் கிளம்புகிறது. எனவே, ஓட்டுதல் உற்சாகத்திற்கு இவை தடங்கலாக இருக்கின்றன.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

கையாளுமை

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் தோற்றம் பிரம்மாண்டமாக இருந்தாலும், இதன் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு காரணமாக, எளிதான கையாளுமை வழங்குகிறது. அதேபோன்று, இதன் ரைடிங் பொசிஷனும் ஒரு புதுமையான ஓட்டுதல் உணர்வை தருகிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

சுஸுகியின் சர்வீஸ் சேவை

இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவிற்காக பயன்படுத்தியபோது, ஆயில் மாற்றுவதற்கான எச்சரிக்கை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக தெரியப்படுத்தியது. அருகிலிருந்து சுஸுகி மோட்டார்சைக்கிள் டீலர் வழியாக 45 நிமிடங்களில் ஆயில் மாற்றித் தந்தனர். எனவே, சர்வீஸ் மையத்தின் சேவையும் திருப்திகரமாகவே கருத முடிந்தது.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

மைலேஜ்

அடுத்து, இந்த ஸ்கூட்டர் நடைமுறை பயன்பாட்டில் சராசரியாக லிட்டருக்ககு 43 கிமீ மைலேஜை வழங்கியது. இந்த ஸ்கூட்டரில் 5.6 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒருமுறை டேங்க் ஃபுல் செய்தால், 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

ரிவ்யூ எடிட்டர் கருத்து

கடந்த சில மாதங்களாக புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை 2,400 கிமீ தூரம் ஓட்டிய அனுபவத்தில், இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பான மாடல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த ஸ்கூட்டரின் தோற்றம் எம்மை வெகுவாக கவர்ந்தது. மேலும், எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்பதுடன், சுஸுகி சர்வீஸ் மையத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையும் திருப்திகரமாக இருந்தது. மேலும், இது குறைவான பராமரிப்பு கொண்ட ஸ்கூட்டராகவும் கூற முடியும். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த அம்சங்களுடன் 125 சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஓர் சிறந்த தேர்வாக கூறலாம்.

Most Read Articles
English summary
Suzuki Burgman Street Long-Term Report.
Story first published: Friday, January 18, 2019, 14:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X