நடுநடுங்க வைக்கும் குளிரில் கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

- ஜோபோ குருவில்லா

அருணாச்சல பிரதேசம். இந்தியாவின் வட கிழக்கு பகுதியில், இமயமலை சாரலில் அமைந்துள்ள ஓர் அழகிய மாநிலம். இங்குள்ள டவாங் நகரம் தனது அழகால் அனைவரையும் வசீகரித்து விடுகிறது. இங்கு கண்களுக்கு விருந்தளிப்பதுடன், மனதுக்கு இதமளிக்கும் ஏராளமான இடங்கள் நிறைந்துள்ளன. பனி மூடிய குட்பி, சோங் - சுக்மி மலை தொடர்கள், டவாங் சூ ஆறு, டவாங் பள்ளத்தாக்கு ஆகியற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். டவாங் நகரின் இயற்றை அழகு மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ளது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

இந்த சூழலில் ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் (Red Panda Adventures) நடத்திய, Enchanting Tawang ride-ன் மூன்றாவது எடிசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்கிய இந்த பயணம், 10 நாட்கள் நீடித்தது. உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நான்கு ரைடர்களுடன் நான் இணைந்து கொண்டேன். கவுஹாத்தியில் இருந்து டவாங் வரை 1,350 கிலோ மீட்டர்களுக்கும் மேல் நாங்கள் பயணம் செய்தோம். இந்தியாவின் மிக சவாலான நிலப்பரப்புகளுக்கு இந்த பயணம் எங்களை எடுத்து சென்றது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

உலகின் மிக உயரமான மலை தொடர்களில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில், ஒரு அற்புதமாக சாகச பயணம் எங்களுக்காக காத்து கொண்டிருந்தது. பனி படர்ந்த, மிக சவாலான சாலைகளில் உற்சாகமாக பயணம் மேற்கொண்டோம்.

அஸ்ஸாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி நான் ''லேண்ட்'' ஆனேன். விமானத்தின் சிறிய இருக்கைகளில் அமர்ந்து வந்ததால் எனக்கு களைப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஓய்வு எடுப்பதற்காக ஹோட்டல் அறைக்கு நேராக சென்றேன்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

முதல் நாள்:

பிப்ரவரி மாதம் 10ம் தேதி காலை, கவுஹாத்தி நகரில் இருந்து எங்கள் பயணத்தை தொடங்கினோம். அன்று சுமார் 230 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து டென்ஜின்கயோன் செல்வதாக இருந்தது. ஆரம்பத்தில் அஸ்ஸாம் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்தோம். ஆனால் நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு, மீண்டும் பயணத்தை தொடங்கியபோது சாலை மாற தொடங்கியது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

பாய்ரப்குண்டாவிற்கு பிறகு சாலை மூன்று திசைகளில் பிரிந்தது. ஒன்று பூடான் செல்வது. மற்றொன்று மீண்டும் அஸ்ஸாம் வருவது. ஆனால் நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்லும் சாலையில் தொடர்ந்து பயணித்தோம்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்த பிறகு, காலக்டங் மற்றும் அன்கிலிங் பகுதிகள் வழியாக பயணம் செய்தோம். அப்போது நிலப்பரப்பு தொடர்ந்து மாறி கொண்டே இருந்தது. ஒரு வழியாக டென்ஜின்கயோன் பகுதியை நாங்கள் அடைந்தோம்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

அங்கே வெப்ப நிலை தொடர்ந்து கடுமையாக குறைந்து கொண்டே இருந்தது. குளிரை சமாளிக்க என்ன விதமான ஆடை அணிந்திருந்தாலும் கூட, பெங்களூரை சேர்ந்த எனக்கு இந்த சூழல் மிகவும் புதியது. இரவு உணவை முடித்து விட்டு அங்கேயே தங்கினோம்.

MOST READ: காருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

இரண்டாம் நாள்:

இரண்டாம் நாள் எங்களுக்கு வெகு விரைவாகவே தொடங்கியது. ஏனெனில் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் காலை 5 மணிக்கெல்லாம் சூரியன் உதிக்க தொடங்கி விடுகிறது. அன்றைய தினம் நாங்கள் டிராங் செல்ல தயாரானோம். டிராங் செல்லும் வழியில் மார்ஷிங் என்ற இடத்தில், சிறிய ஆஃப் ரோடு சாகச பயணத்திற்கு ரெட் பாண்டா அட்வென்சர்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

இதன்பின் மண்டலாவை நோக்கி செல்லும் சாலையில் மீண்டும் பயணிக்க தொடங்கினோம். அப்போது உள்ளூரை சேர்ந்த மக்கள் அங்கு சாலைகளில் பனி படர்வது தொடர்பாக எங்களை எச்சரிக்கை செய்தனர். அப்போது வெப்ப நிலையும் வேகமாக குறைந்து கொண்டிருந்தது. எனினும் நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

MOST READ: ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

வழியில் ஓரிடத்தில் நாங்கள் தடுமாறி விழுந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த சிறு விபத்தை எண்ணி நாங்கள் பெரிதாக அலட்டி கொள்ளாமல், பனி படர்ந்த சாலையில் மீண்டும் மண்டாலாவை நோக்கி பயணம் செய்ய தொடங்கினோம்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

இடையில் சூடாக லால் சாய் அடித்து விட்டு, டிராங்கை அடைந்தோம். அங்கே எங்களுக்காக இரவு உணவு, வெதுவெதுப்பான போர்வைகள் மற்றும் படுக்கை காத்து கொண்டிருந்தது. அன்றைய தின பயணத்தை டிராங்கில் நிறைவு செய்து விட்டு அங்கேயே தங்கினோம்.

MOST READ: பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா மோட்டார்ஸ் திட்டம்!

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

மூன்றாம் நாள்:

மூன்றாம் நாள் பயணத்தில் நாங்கள் டிராங்கில் இருந்து டவாங் செல்வதாக இருந்தது. காலை உணவை வேகமாக முடித்து விட்டு, நியூக்மடோங் போர் நினைவிடம் நோக்கி சென்றோம். 1962ம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா-சீனா போரின் முக்கியமான மற்றும் புகழ்பெற்ற போர்க்களங்களில் இதுவும் ஒன்று.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

நியூக்மடோங் போர் நினைவிடம் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 25 அடி உயர ஸ்தூபி போர் நினைவு சின்னமாக நிறுவப்பட்டுள்ளது. வீர மரணம் அடைந்த நமது வீரர்களின் பெயரை நியூக்மடோங் போர் நினைவிடம் தாங்கி நிற்கிறது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

அங்கு வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பிறகு, சூடாக காபி அருந்துவதற்காக பைசகி ராணுவ முகாமிற்கு சென்றோம். சிஎஸ்டி கேன்டீன் மூலமாக ராணுவ ஜாக்கெட், பூட்ஸ், டி-சர்ட்ஸ் உள்ளிட்டவற்றை பொதுமக்களும் வாங்கி கொள்ள இந்த ராணுவ முகாம் அனுமதிக்கிறது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ராணுவ முகாமில் புத்துணர்ச்சி அடைந்த பிறகு செல்லா டாப் நோக்கி ஏற தொடங்கினோம். இதுதான் டவாங் மாவட்டத்தின் நுழைவு வாயில். அங்குள்ள ஏரி முழுவதும் பனியால் உறைந்து போயிருந்தது. அப்போது டெம்ப்ரேச்சர் ஒற்றை இலக்கத்திற்கு மாறி கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக பனி வாட்டி வதைக்க தொடங்கியது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

இந்த சூழலில் ஜஸ்வந்த்கர் பகுதியை (1962ம் ஆண்டு இந்தோ-சீனா போரின் போது, நுர்னாங் பகுதியில் தனி ஆளாக சீன ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜஸ்வந்த் சிங் ராவத்தின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜஸ்வந்த் சிங் ராவத்தின் மரணத்திற்கு பிறகு அவருக்கு மஹா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது) கடந்த பிறகு சாலை முழுவதும் பனி படர்ந்திருந்த ஓரிடத்தை அடைந்தோம். சாலையில் படர்ந்திருந்ததால், பனி கட்டிகளே கருப்பு நிறமாக மாறியிருந்தன.

அந்த பகுதியை கடப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது. இதற்கு நீண்ட நேரம் ஆனதுடன், எங்கள் ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் தளர்ந்து விடாமல் ஒரு வழியாக அந்த பகுதியை நாங்கள் கடந்தோம்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ஜஸ்வந்த்கர் பகுதிக்கு பிறகு ஜங் பகுதியையும் நாங்கள் கடந்தோம். ஆனால் அங்கு நடைபெற்று வந்த சாலை பணிகள் எங்களின் வேகத்தை குறைத்தது. இதன் காரணமாக விலை மதிப்பற்ற பகல் நேர வெளிச்சத்தை நாங்கள் இழக்க நேரிட்டது. இதுபோன்ற பகுதிகளில் பகல் நேர வெளிச்சம் மிகவும் அவசியம். நாங்கள் டவாங்கை அடைந்த நேரத்தில், சூரியன் மறைந்து கொண்டிருந்தது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

நான்காம் நாள்:

நான்காம் நாள் ஓய்வு என்பதால், அதனை பயன்படுத்தி கொண்டு டவாங் நகரை சுற்றிப்பார்க்க முடிவு செய்தோம். அந்த சமயத்தில் அப்பகுதி மக்கள் லாசர் (திபெத் புத்தாண்டு) பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தனர். தவாங்கை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாங்கள் சென்று வந்தோம். இதில், சர்க்யூட் ஹவுஸ் அருகே உள்ள பெரிய புத்தர் சிலையும் அடங்கும்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

எனினும் டவாங்கில் உள்ள மடாலயத்திற்கு சென்றதுதான் அன்றைய தினத்தின் ஹைலைட். லாசாவில் உள்ளதற்கு அடுத்தபடியாக பார்த்தால் இதுதான் உலகிலேயே 2வது மிகப்பெரியது. இது 1860-61 காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ஐந்தாம் நாள்:

ஒரு நாள் ஓய்விற்கு பிறகு, ஐந்தாம் நாளில் மீண்டும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அழகான பகுதிகளுக்கு எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்றைய தினம் நாங்கள் முதலில் பன்கங் டெங் டிசோ ஏரியை கண்டோம். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மற்றொரு அழகான இடம் அது. அங்கு கண்கவர் இயற்கை காட்சிகளுக்கு சற்றும் பஞ்சமே இல்லை.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

இந்த ஏரிக்கு அருகே கம்ராலா ஃபயரிங் ரேஞ்ச் உள்ளது. இது 4,200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் இருப்பதிலேயே கம்ராலாதான் உயரமான ஃபயரிங் ரேஞ்ச். துப்பாக்கி சூடுதல் தொடர்பான பயிற்சிகளை பெறுவதற்காக இந்திய ராணுவம் இதனை பயன்படுத்தி வருகிறது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

அங்கிருந்து நாங்கள் பும் லா பாஸ் நோக்கி சென்றோம். ஆனால் துரதிருஷ்வசமாக பனி அதிகமாக இருந்ததால், எங்கள் பயணத்தை தொடர அனுமதி கிடைக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் நாங்கள் மீண்டும் டவாங் திரும்ப வேண்டியதாகி விட்டது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ஆறாம் நாள்:

6வது நாளில் நாங்கள் பொம்டிலா செல்வதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடக்கவில்லை. ஏனெனில் எங்கள் பேக்-அப் வாகனம் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தபோதும் எங்கள் பேக்-அப் வாகனம் வருவதற்காக நாங்கள் காத்து கொண்டிருந்தோம்.

எனவே உடனடியாக 2வது வாகனத்தை கொண்டு வருவதற்கான பணிகளில் ரெட் பாண்டா அட்வென்சர்ஸ் முனைப்பு காட்டியது. எனினும் அன்றைய தினம் எங்கள் பயணத்தை குறைத்து கொண்டோம். அன்றைய தினத்தை நாங்கள் டிரங் பகுதியிலேயே நிறைவு செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. அன்றைய தின பயணம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. சூரியன் மறைந்த பின் மிக நீண்ட தாமதத்திற்கு பிறகே ஹோட்டலை வந்தடைந்தோம்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ஏழாம் நாள்:

அருணாச்சல பிரதேச மாநில பயணத்தில் எங்களின் கடைசி நாள் இது. அன்றைய தினம் டிரங்கில் இருந்து டென்ஜின்கயோன் செல்ல வேண்டும். இந்த பயணத்தில் இறுதியாக நாங்கள் பொம்டிலாவிற்கும் சென்றோம். அதன்பின் ரூபாவில் உள்ள நெடுஞ்சாலையையும் அடைந்தோம். எங்கள் ரைடின் கடைசி நாள் என்பதால், அனைத்து பகுதிகளை கண்டு ரசிக்க எங்கள் நேரத்தை செலவிட்டோம். இறுதியாக அன்றைய தினம் டென்ஜின்கயோன் பகுதியை அடைந்து, இரவு அங்கேயே தங்கினோம்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

எட்டாம் நாள்:

இறுதியாக அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பிரியா விடை கொடுத்து விட்டு, அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைந்தோம். அப்போது மீண்டும் ஒரு முறை வானிலை மாற தொடங்கியிருந்தது. டெம்ப்ரேச்சர் உயர்வதை எங்களால் உணர முடிந்தது.

காஸிரங்கா தேசிய பூங்காதான் அன்றைய தினம் இரவு நாங்கள் சென்று சேரும் இடமாக இருந்தது. ஒற்றை கொம்பு காண்டாமிருங்கள் நிறைந்திருக்கும் இடம் அது. அழகிய சுற்றுலா தளமும் கூட. மிகவும் மெதுவாக வந்ததால், மாலையில்தான் எங்களால் ஹோட்டல் அறையை அடைய முடிந்தது.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ஒன்பதாம் நாள்:

ஒன்பதாம் நாளில், காஸிரங்கா தேசிய பூங்காவிற்குள் சென்று வர ரெட் பாண்டா அட்வென்சர்ஸ் சஃபாரி ரைடுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய தினத்தை வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு எங்களுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

பத்தாம் நாள்:

எங்கள் பயணத்தின் இறுதி நாள். அன்றைய தினம் காஸிரங்கா காடுகளை விட்டு, கவுஹாத்திக்கு நாங்கள் திரும்பினோம். சுமார் 200 கிலோ மீட்டர்கள் நீண்ட பயணம் அது. ஆனால் அது மிகவும் சாந்தமான பயணமாக இருந்தது. அப்போது எனது மனம் அருணாச்சல பிரதேசத்தில் கண்ட இடங்களைதான் நினைத்து கொண்டிருந்தது. அங்கு கிடைத்த அனுபவங்களை அசை போட்டு கொண்டிருந்தேன். நீங்கள் அருணாச்சல பிரதேசத்தை சுற்றி பார்ப்பதாக இருந்தால் கண்டிப்பாக டவாங் செல்லுங்கள்.

கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்!!

ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் பற்றி:

ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள் டூர் ஆபரேட்டர் ஆகும். உள்ளூர் மட்டுமல்லாது சர்வதேச ரைடர்களுக்கும் ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் சேவையாற்றுகிறது.

பாலாஜி தேவநாதன் மற்றும் மார்டின் ஆல்வா ஆகியோரால் ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் தொடங்கப்பட்டது. இவர்கள் இருவரும் ஹிமாலயன் ரைடிற்காக கடந்த 2011ம் ஆண்டு சந்தித்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் அணியில், இந்தியாவின் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களுக்கு வட கிழக்கு பகுதிகள் அனைத்தும் அத்துப்படி. இதன் மூலம் அவர்களால் சரியான திட்டமிடல் மற்றும் உள்ளூர் அறிவுடன் பயணங்களை ஏற்பாடு செய்ய முடிகிறது.

'Enchanting Tawang' ரைடிற்கான கட்டணம் எவ்வளவு? நான் கொடுக்கும் பணத்திற்கு எனக்கு என்ன கிடைக்கும்?

Enchanting Tawang ரைடிற்காக, ரைடர்களிடம் இருந்து ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் 65,800 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது. இந்த கட்டணம் 2 ரைடர்கள் 1 அறையை பகிர்ந்து கொள்வதை அடிப்படையாக கொண்டது.

இந்த பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஏர்போர்ட் பிக் அப் மற்றும் டிராப்

தங்குமிட வசதி

மோட்டார்சைக்கிள் வாடகை கட்டணம்

டூர் வழிகாட்டி

எரிபொருள்

உள்ளூர் போக்குவரத்து செலவு

காலை, மதிய, இரவு உணவு

உள்ளூர் அனுமதிகள்

மோட்டார்சைக்கிள் இன்சூரன்ஸ்*

கீழ்க்காணும் அம்சங்களை இந்த விலை உள்ளடக்கியது அல்ல

சர்வதேச விமான கட்டணம்

விசா கட்டணங்கள்

டிப்ஸ்

ரூம் சர்வீஸ் கட்டணம்

ஆல்கஹால்

கூடுதல் உணவு

பர்சனல் இன்சூரன்ஸ்

உள்ளூர் சொத்து சேதாரம்

வானிலை எப்படி?

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் குளிர். அதற்கு ஏற்ப உடை அணிந்து கொள்வது நல்லது. காலையில் சூரியன் முன்னதாகவே உதித்து விடுகிறது (ஒரு சில இடங்களில் காலை 5 மணிக்கு சூரியன் உதிக்கிறது). மாலை நேரத்தின் தொடக்கத்திலேயே பகல் வெளிச்சம் மங்க தொடங்கி விடுகிறது.

உணவு எப்படி?

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அசைவ உணவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. மோமோஸ், துக்பா, நூடுல்ஸ், சாதம் மற்றும் சாப்தா ஆகியவற்றை அதிகம் பார்க்க முடிகிறது. நீங்கள் சைவம் என்றால், அதற்கேற்ற உணவுகளும் கிடைக்கின்றன.

டவாங்கில் பார்க்க வேண்டிய இடங்கள்:

சேலா பாஸ்

டவாங் மடாலயம்

மாதுரி ஏரி

டவாங் போர் நினைவு சின்னம்

பன்கங் டெங் டிசோ ஏரி

ஜஸ்வந்த்கர்

மோட்டார்சைக்கிள்?

Enchanting Tawang ரைடிற்காக ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் ரைடர்களுக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை வழங்குகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் என்ட்ரி-லெவல் அட்வென்ஜர் டூரர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இதில், 411 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவர் மற்றும் 32 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் மீதான தீர்ப்பு:

நட்புணர்வுடன் பழக கூடிய அனுபவம் வாய்ந்த ரைடர்கள். அதிகபட்ச திருப்தியுடன் மோட்டார்சைக்கிள் சாகச பயணம் மேற்கொள்ள நீங்கள் முடிவு செய்தால், உடனடியாக ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸை தொடர்பு கொள்ளுங்கள். கொடுக்கும் பணத்திற்கு வொர்த். ரெட் பாண்டா அட்வென்ஜர்சுக்கு ஐந்து நட்சத்திரங்களை வழங்கலாம்!!

Photography: Rahul Jaswal, Hetal Trivedi, Girish Shet, Pradeep Warrier and Red Panda Adventures (Balaji Devanathan)

Most Read Articles

English summary
Escape The Ordinary — Tales From Tawang. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X