ரூ.1.50 லட்சத்திற்குள் 5 சிறந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகள்!

By Saravana

ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான இலகுவான, சிக்கனமான போக்குவரத்து சாதனமாக இருந்த பைக்குகள் தற்போது அடுத்த கட்ட பயன்பாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிக செயல்திறன் மிக்க பைக்குகளுக்கான வரவேற்பு இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளை வாங்கும் போக்கு கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும், அவை தினசரி பயன்பாட்டிற்கும், விலையிலும் கைக்கு தோதான விலை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணதத்துடன் காத்திருக்கும் இளைஞர்களுக்காக இந்த பட்டியலை வழங்குகிறோம் ரூ.1.50 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் 5 சிறந்த பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

05. பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200

05. பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200

அட்வென்ச்சர் ஸ்போர்ட் ரகத்திலான பஜாஜ் மோட்டார்சைக்கிள். மிக குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட மாடல். தினசரி பயன்பாடுக்கும், கரடுமுரடான சாலைகள் மற்றும் நீண்ட தூர பயணம் என அனைத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்கை விரும்புவர்களுக்கு ஏதுவாக க்ராஸ்ஓவர் மாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200 தொடர்ச்சி...

பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200 தொடர்ச்சி...

இந்த பைக்கில் 23 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க்கையும் வழங்கும் ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய 199.5சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 167 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால், அனைத்து சாலைகளையும் எளிதாக எதிர்கொள்ளும். 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. மணிக்கு 135 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.91,650 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

04. ஹோண்டா சிபிஆர் 150ஆர்

04. ஹோண்டா சிபிஆர் 150ஆர்

இந்தியர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஹோண்டா சிபிஆர் பிராண்டில் விற்பனை செய்யப்படும் குறைவான விலை மாடல். அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் டிசைன், நம்பகமான எஞ்சின் ஆகியவை இதற்கு பக்கபலம். ஆனால், துரதிருஷ்டவசமாக பல நாடுகளில் பழமையாகிவிட்டதாக கருதி விற்பனை நிறுத்தப்பட்டு விட்ட மாடல்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா சிபிஆர் 150ஆர் தொடர்ச்சி...

ஹோண்டா சிபிஆர் 150ஆர் தொடர்ச்சி...

ஹோண்டா சிபிஆர் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 149.4சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 17.5 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 109 கிமீ வேகம் வரை தொடும். ரூ.1.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 03. பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200

03. பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200

மிக கம்பீரமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவற்றால் இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட பைக் மாடலாகியிருக்கிறது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200. இந்த பைக் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. விற்பனைக்கு வந்து குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது.

 பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 தொடர்ச்சி...

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 தொடர்ச்சி...

தோற்றத்தில் மட்டுமல்ல, செயல்திறனிலும் மிகச்சிறப்பான பைக் மாடல். இந்த பைக்கில் அதிகபட்சமாக 24.2 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 199.5சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 165 கிலோ எடை கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று சொல்லப்படுகிறது. மணிக்கு 141 கிமீ வேகம் வரை தொடும். சாதாரண மாடல் ரூ.1.18 லட்சம் விலையிலும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடல் ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் பிளாக் எடிசன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

02. யமஹா ஆர்15

02. யமஹா ஆர்15

இந்திய இளைஞர்களின் கனவு மாடலாக இருந்து வந்தது. போட்டி அதிகமானாலும் தனது டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சினை வைத்து நெருக்கடிகளை சமாளித்து வருகிறது. பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற தோற்றமுடைய பைக்கை விரும்புபவர்களுக்கு சிறந்த சாய்ஸ் எனலாம்.

யமஹா ஆர்15 தொடர்ச்சி

யமஹா ஆர்15 தொடர்ச்சி

இந்த பைக்கில் 16.7 பிஎச்பி பவரை அளிக்கும் 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 42 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 130 கிமீ வேகம் வரை தொடும். ரூ.1.17 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஸ்பிளிட் சீட் இல்லாமல், ஒரே இருக்கை அமைப்பு கொண்ட பழைய மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.

01. கேடிஎம் டியூக் 200

01. கேடிஎம் டியூக் 200

இந்திய ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டுக்கு உத்வேகமும், உற்சாகமும் அளித்த மாடல். பிரத்யேகமான டிசைன், செயல்திறன் மிக்க ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆகியவை இந்த பைக்கிற்கு ஓர் தனி இடத்தை பெற்று தந்திருக்கிறது.

கேடிஎம் டியூக் 200 தொடர்ச்சி...

கேடிஎம் டியூக் 200 தொடர்ச்சி...

இந்த நேக்டு ஸ்டைல் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 19 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது மணிக்கு 135 கிமீ வேகம் வரை தொடும். ரூ.1.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Here's a list of best entry level sport bikes, priced below 1.5 lakh rupees in India:
Story first published: Tuesday, October 6, 2015, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X