டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டிரையம் பைக்கின் போனிவில் போர்லியோவில் பாபர் பைக்கிற்கு பின்பு அந்த லையன் அப்பில் 6வது பைக்காக தற்போது இணைக்கப்பட்டுள்ளது டிரையம்ப் போனிவில் ஸ்பீடு மாஸ்டர், இந்த க்ரூஸியர் பைக்கின் லுக் கண்களை கவ

By Balasubramanian

டிரையம் பைக்கின் போனிவில் போர்லியோவில் பாபர் பைக்கிற்கு பின்பு அந்த லையன் அப்பில் 6வது பைக்காக தற்போது இணைக்கப்பட்டுள்ளது டிரையம்ப் போனிவில் ஸ்பீடு மாஸ்டர், இந்த க்ரூஸியர் பைக்கின் லுக் கண்களை கவரும் விதமாக உள்ளது. இதன் ஹை டார்க் பரலல் டுவின் இன்ஜின் ஹை டார்க் பெர்பாமென்ஸை வழங்குகிறது.

டிரையம் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் ... டெஸ்ட் டிரைவ்

இந்த பைக்கை டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக அந்நிறுவனம் வழங்கியது. இதை இரண்டு நாட்கள் ஓட்டி பார்த்தப்பின்பு அதன் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை உங்களுக்காக வழங்கியுள்ளோம். வாருங்கள் இந்த பைக் பற்றி கீழே காணலாம்

டிரையம் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் ... டெஸ்ட் டிரைவ்

இந்த ஸ்பீடு மாஸ்டர் பைக்கின் லுக் பைக் ரசிகர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக ஒரு வித மேன்லி லுக் உடன் காட்சியளிக்கிறது. இந்த பைக் டிரையம் பாபர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்கிலும் ஒரே சேஸிஸ் தான் பயன்படுத்தப்படுகிறது.

டிரையம் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் ... டெஸ்ட் டிரைவ்

பாபர் பைக்கில் உள்ள எல்லா பாகங்களும் இந்த ஸ்பீடுமாஸ்டர் பைக்கிலும் உள்ளன அது போக மேலும் சில பாகங்களும் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு சிறந்த க்ரூஸியர் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரையம் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் ... டெஸ்ட் டிரைவ்

முன்பக்கம் இரண்டு டெலஸ்கோபிக் ஃபோக்ஸ்களுக்கும் இடையேயான வட்ட வடிவிலான முழு எல்இடி ஹெட்லைட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது பகல் நேரங்களிலும் பிரகாசமான வெளிச்சத்தை தருகிறது. மேலும் இந்த பைக்கில் எல்இடி டெயில் லைட் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரையம் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் ... டெஸ்ட் டிரைவ்

இந்த பைக்கில் சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய அனலாக் ஸ்பீடா மீட்டரும், சிறிய டிஜிட்டல் ஸ்கிரீனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளஸ்டர் ஹெட்லைட்டிற்கு மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

டிரையம் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் ... டெஸ்ட் டிரைவ்

இதில் உள்ள சிறிய டிஜிட்டல் ஸ்கிரீனில் கியர் போஷிஷன், டிரிப் மீட்டர், ரியல் டைம் எஃபிஷியன்ஸி, ரேஞ்ச், பவர் மோட் மற்றும் டேசோ மீட்டர் (ஆர்பிஎம்) குறியீடு ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

அடுத்ததாக இதில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு புறங்களிலும் டிரையம்ப் பேட்ஜ் க்ரோம் கலரில் பதிக்கப்பட்டுள்ளது. க்ரூஸியர் பைக்கிற்கு இந்த டேங்க்கின் கொள்ளவு குறைவு தான் இதன் முழு டேங்க்பெட்ரோலில் சுமார் 160 கி.மீ மட்டுமே பயணிக்க முடியும்.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த போனிவிலில் உள்ள பாபர் பைக் பிரிட்டன் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான பைக், மற்ற மாடல் பைக்குகளை ஒப்பிடும் போது சிறந்த மாடல் பைக்காக அது இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருந்தன. பில்லன் சீட் இல்லாதது கூட ஒரு குறையாக சொல்லலாம்.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஸ்பீடு மாஸ்டர் பைக்கில் அந்த குறையும் சரி செய்யப்பட்டு நீண்ட தூர பயணங்களை மனதில் வைத்து பில்லன் சீட், மற்றும் லக்கேஜ் பேனியர்கள் வைக்கும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

எங்களுக்கு ரிவீயூவிற்காக வந்த பைக் கூடுதலாக கிளாசிக் கிட் ஆக்ஸசரீஸ் உடன் வந்தது. முகப்பு பக்கத்தில் பெரிய விண்ட் ஸ்கிரீன், சொகுசான பேக் ரெஸ்ட் உடன் கூடிய பில்லன் சீட், பைக்கின் இரு புறங்களிலும் பேனியர்கள், ஆகியன இருந்தன.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் அடுத்த முக்கியமான மற்றும் கவனத்தை ஈர்க்கும் டிசைன் இன் பின்பக்க லுக் தான். இதில் மேனோஷாக் பின்புற சஸ்பென்ஸனாக பொருத்தப்பட்டுள்ளது. இது சீட்டிற்கு அடியில்பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த பைக்கிற்கு ரிட்ரோ லுக்கை கொடுக்கிறது. மற்றும் பவ்க்ஸ் கார்பரேட்டர், டுவின் எக்ஸாட் மஃப்ளர்கள், பீட்ச் பார்ஸ் ஆகியன குறிப்பிடத்தக்கவையாக இருக்கிறது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த ரிட்ரோ மார்டன் டிசைன் ஸ்பீடு மாஸ்டர் அட்டகாசமாக லுக்கை பெற்றுள்ளது. இதன் பிட்டிங் மற்றும் பினிஷிங் கவனத்தை ஈர்க்கிறது. மொத்தத்தில் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் பைக் ரிட்ரோ லுக்கின் க்ரூஸியர் பைக்கிற்கு ஏற்ற டிசைனை பெற்றுள்ளது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இதன் இன்ஜினை பொருத்தவரை 1200 சிசி ஹை டார்க் பேரலல் - டுவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6100 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 106 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலான நேரங்களில் ஸ்மூத்தாக ஸிப்ட் ஆகிறது சில நேரங்களில் மட்டும் கிளங்கி அனுபவத்தை தருகிறது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

த்ரோடெயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் 260 கிலோ எடை கொண்ட வாகனத்தை சில நொடிகளில் 3 இலக்க வேகத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த பைக்கின் கிளட்ச் டார்க் அசிஸ்ட்காக லைட்டாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டிராப்பிக்கில் நின்று நின்று செல்ல சுலபமாக அனுபவத்தை தருகிறது. இதில் உள்ள முக்கிய டிராபேக் இது டிராபிக்கில் சிக்கும் போது அதிகமாக சூடாவது தான். இதில் பொருத்தப்பட்ட ரேடார் பேன் நேரடியாக காலில் சூடான காற்றை உமிழ்கிறது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கில் பொருத்தப்பட்ட ரைட் பை ஒயர் த்ரோடெயில் ரெயின் மற்றும் ரோடு ஆகிய இரண்டு விதமான மோடுகளை வழங்குகிறது. இதில் ரோடு மோடு முழு பவருடன் பைக்கை இயங்க வைக்கவும் ரெயின் மோடு ஸிலிப்பரி கண்டிஷனில் உள்ள ரோட்டில் பயணிக்கும் போதும் பயன்படுத்தவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் ஸ்டாண்டர்டாக வருகிறது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த டிரையம்ப் ஸ்பீடு மாஸ்டர் பைக்கில் ஒரு முக்கியமான டிஸ் அட்வான்டேஜ் இருக்கிறது. இது இந்த பைக்கில் உள்ள குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் தான். இந்த பைக் சில இடங்களில் அல்லது வேகத்தடை உள்ள இடங்களில் பைக்கின் அடிப்பகுதி தரையில் உரசுகிறது.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் சஸ்பென்ஸன்களை பொருத்தவரை சற்று உறுதியாக இருக்கிறது. இதனால் நீண்ட தூரம் இதில் பயணம் செய்பவர்களுக்கு முதுகு கழுத்து வலி உணரப்படலாம். இந்த டிரையம்ப் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் பைக்கில் பேட் ஏவியான் கோப்ரா டயர்கள் 16 இன்ச் வீலில் பொருத்தப்பட்டுள்ளது(130/90 முன்பக்கம், 150/80 பின் பக்கம்).

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த போனிவில் ஸ்பீடு மாஸ்டர் க்ரூஸியர் பைக் சிட்டிக்குள் லிட்டருக்கு 17 கி.மீ. மைலேஜூம், ஹைவேக்களில் 21 கி.மீ மைலேஜூம் தருகிறது. இந்த ரக பைக்குகளை ஒப்பிடும் போது சராசரியான மைலேஜ் தான். இந்த பைக்கின் முழு டேங்க் பெட்ரோலில் 160-170 கி.மீ தூரம் தான் பயணிக்க முடியும்.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஒட்டு மொத்தத்தில் இந்த போனிவில் ஸ்பீடு மாஸ்டர் பைக் சிறந்த பிட்டிங் மற்றும் பினிஷிங் உடன் சில தனித்துவமான கேரக்டர்களில் வெளியாகிறது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ 13.4 லட்சம் ஆகும். இந்த விலை கிளாசிக் அல்லது மாவெரிக் கிட் தவிர்த்து நிர்ணயிக்கப்பட்ட உள்ள விலையாகும். கிட் உடன் சேர்த்தால் விலை மாறுபடும்.

டிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கில் ஸ்டிப் சஸ்பென்ஸன், இன்ஜின் ஹீட்டிங், ஆகிய சில ட்ராபேக்குகள் உள்ளன. மற்றபடி ரிட்ரோ லுக் க்ரூஸியர் பைக்கை விருப்புபவர்களுக்கும், பிரிமியம் செக்மென்டில் க்ரூஸியர் பைக்கை விரும்புபவர்களுக்கும் டிரையம்ப் பைக் ஒரு நல்ல ஆப்ஷன் தான்.

Most Read Articles
English summary
Triumph Bonneville Speedmaster Road Test Review — A Retro Looking Modern Classic Cruiser.Read in Tamil
Story first published: Friday, August 24, 2018, 14:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X