டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டிய அனுபவத்தையும், இந்த பைக்கின் சாதக, பாதக விஷயங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் நீண்ட பாரம்பரியம் கொண்ட நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ். 1983ம் ஆண்டு டிவிஎஸ் 50 மூலமாக ரேஸ் உலகில் காலடி பதித்த டிவிஎஸ் நிறுவனம் இன்று டக்கார் ராலி வரை தனது ரேஸ் பாரம்பரியத்தை விஸ்தரித்துள்ளது.

ரேஸ் பாரம்பரியம்

ரேஸ் பாரம்பரியம்

சுப்ரா எஸ்எஸ், ஷோகன், ஷோலின், ஃபியரோ பைக்குகள் மூலமாக தன் தொழில்நுட்ப வல்லமையை தொடர்ந்து மேம்படுத்தி வந்த அந்த நிறுவனம் தற்போது அப்பாச்சி வரிசையில் செயல்திறன் மிக்க பைக்குகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், அப்பாச்சி குடும்ப வரிசையில் மிக சக்திவாய்ந்த மாடலாக அப்பாச்சி ஆர்ஆர்310 ஸ்போர்ட்ஸ் பைக்கை அண்மையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் களமிறக்கியது.

பிஎம்டபிள்யூ கூட்டணி

பிஎம்டபிள்யூ கூட்டணி

ரேஸ் பைக்குகள் உருவாக்குவதில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்ற டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியுடன் இணைந்து அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை தயாரித்துள்ளது.

கான்செப்ட்

கான்செப்ட்

2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் கான்செப்ட்டின் அடிப்படையில் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் தயாரிப்பு நிலை மாடலாக தற்போது மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

ஆவல்

ஆவல்

இளைஞர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருந்த இந்த புத்தம் புதிய டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கை அண்மையில் சென்னை, இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ரேஸ் டிராக்கில் வைத்து ஓட்டி பார்த்தோம். அந்த அனுபவத்தில் இந்த பைக்கின் சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

மிரட்டும் டிசைன்

மிரட்டும் டிசைன்

இந்த பைக் முழுமையான ஃபேரிங் பேனல்களால் மறைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் இடம்பெறுகிறது. சுறா மீனை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்ட அகுலா கான்செப்ட் பைக்கின் அடிப்படையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதே அளவுக்கு முக அமைப்பு மிரட்டலாகவே இருக்கிறது.

Recommended Video

TVS Apache RR 310 Launched In India | Specs | Top Speed | Mileage | Price
 முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

முகப்பில் இரட்டை குடுவை அமைப்புடன் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் பெரிய விண்ட்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு கீழாக இருக்கும் ஏர் இன்டேக் மூலமாக அதிகப்படியான காற்று எஞ்சின் பகுதிக்கு செலுத்தப்படுகிறது. இதனால், பைக்கின் செயல்திறன் சிறப்பாக இருப்பதுடன், குளிரூட்டும் அமைப்பும் சிறப்பாக இருக்கிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

ஃபேரிங் பேனல்கள் டிசைன் கச்சாமுச்சாவாக இல்லாமல் மிக வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. பைக்கிற்கு மிக பிரம்மாண்டமான தோற்றத்தை கொடுக்கிறது. இந்த பேரிங் பேனல்களில் இருக்கும் துளைகள் வழியாக எஞ்சின் வெப்பக் காற்று வெளியேறுவதுடன், வெப்பம் ஓட்டுபவரின் கால்களை பதம் பார்க்காத வகையிலும் தடுப்பு அரண் போல இருக்கிறது. ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்பும் மிரட்டலாக இருக்கிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

சைலென்சர் பகுதி சற்றே மேல்நோக்கி உயர்த்தி அமைக்கப்பட்டிருக்கிறது. மிக உயர்த்தப்பட்ட வால் பகுதியும் மிக சிறப்பாக வடிவமைக்கப்ப்டடு இருக்கிறது. கோரை பற்களை போன்று கூர்மையாக தெறிக்கவிடும் டெயில் லைட்டுகள் போட்டியாளர்களிடமிருந்து இந்த பைக்கை வித்தியாசப்படுத்துகிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

முற்றிலும் டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், படுக்கை வாட்டில் இல்லாமல் செங்குத்தான அமைப்பை பெற்றிருக்கிறது. இது பார்த்தவுடன் சற்று உறுத்தலாக இருந்தாலும், பார்க்கும்போது தகவல்களை தெளிவாகவும், விரைவாகவும் பார்க்க முடிகிறது. ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கும், மைலேஜ் உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும்.

ரைடிங் பொசிஷன்

ரைடிங் பொசிஷன்

கைப்பிடி, பெட்ரோல் டேங்க், இருக்கை, கால் வைக்கும் ஃபுட் பெக்குகள் மிக சிறப்பான இடத்தில் பொருத்தி வடிவமைக்கப்பட்டு இருப்பதால், ஓட்டுனருக்கு சிறந்த ரைடிங் பொசிஷனை வழங்குகிறது. க்ரவுண்ட் க்ளியரன்ஸும் சிறப்பாக இருக்கிறது. கேடிஎம் ஆர்சி390 பைக்கைவிட இதன் ரைடிங் பொசிஷன் நன்றாகவே இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 313சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அந்த வகையில், ஆற்றல் இழப்பு ஏற்படாத வகையில் இதன் கிராங்க்சாஃப்ட்டும், ஸ்பிளிட் கனெக்டிங் ராடும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. முழுமையாக மூடப்பட்ட ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இதற்கு துல்லியமான எரிபொருள் சப்ளையை தருகிறது.

செயல்திறன்

செயல்திறன்

இதனால், இந்த எஞ்சினின் ஆரம்ப நிலை செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. ரேஸ் டிராக்கில் முழுமையான செயல்திறனை சோதிக்கும் விதத்தில், நேரான தடத்தில் ஆக்சிலரேட்டரை முழுமையாக முறுக்கும்போது, இதன் 313சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. இதன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் அதிர்வுகள் இல்லாமல் துல்லியமாக மாறுகின்றன.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

எஞ்சின் மேப்பிங் மற்றும் ட்யூனிங் போன்ற விஷயங்களில் டிவிஎஸ் நிறுவனம் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இந்த பைக் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. லிட்டருக்கு 25 முதல் 30 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும்.

கையாளுமை

கையாளுமை

ரேஸ் டிராக்கிற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற அம்சங்களுடன் இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி இருப்பதை உணர முடிகிறது. மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், சென்னை ரேஸ் டிராக்கின் வளைவுகளை அனாயசமாக கடக்கும் விதத்தில் இதன் கையாளுமை மிக சிறப்பாக இருப்பதுடன், கையாள்வதும் எளிதாக உள்ளது. ஃபுட்பெக்குகள் உயர்த்தப்பட்டதாக இருப்பதால், வளைவுகளில் திரும்பும்போது தரையில் உரசாமல் இருப்பதும் அச்சமின்றி வளைவுகளில் திரும்ப முடிகிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் 41மிமீ விட்டமுடைய கயபா அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ப்ரீலோடு வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது. அத்துடன், பின்சக்கரம் மேலே தூக்குவதை தவிர்க்கும் வீல் லிஃப்ட் ஆஃப் பாதுகாப்பு தொழில்நுட்பமும் உள்ளது.

டயர்கள்

டயர்கள்

இந்த பைக்கின் முன்புறத்தில் 110/70 செக்ஷன் டயரும், பின்சக்கரத்தில் 150/60 செக்ஷன் மிச்செலின் பைலட் ஸ்ட்ரீட் டயரும் பொருத்தப்பட்டிருப்பதுடன், அதிக தரைப்பிடிப்புடன் செல்லும் உணர்வை தருகின்றன.

 சின்ன குறைகள்

சின்ன குறைகள்

டிசைன், எஞ்சின் ஆகியவை திருப்திகரமாக அமைந்தாலும், சில குறைகள் இல்லாமல் இல்லை. ஸ்டீயரிங் அமைப்பானது துல்லியமாக இல்லை. நாம் நினைத்து ஓட்டும் அளவுக்கு ஃபீட் பேக் இல்லை. அதேபோன்று, கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் அளவுக்கு இதன் எஞ்சின் பிக்கப் இல்லை. அதேநேரத்தில், எஞ்சின் ரீமேப் செய்தால் இந்த குறை காணாமல் போகும்.

தீர்ப்பு

தீர்ப்பு

அதிக சிறப்பம்சங்களுடன் சில சிறிய குறைகளை மறக்கடிக்க செய்கிறது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக். அருமையான டிசைன், ரேஸ் டிராக்கை கையாளும் விதம் போன்றவை நிறைகளாக இருக்கின்றன. சாதாரண ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை ஓட்டியவர்கள் முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு மாற நினைப்பவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

ஜோபோ குருவில்லா கருத்து

ஜோபோ குருவில்லா கருத்து

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டிய அனுபவம் மிக சிறப்பானதாக அமைந்தது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரேஸ் அனுபவமும், உழைப்பிலும் உருவாகி இருக்கும் இந்த புதிய பைக் நிச்சயம் ஓர் சிறந்த ஆரம்பர ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக கூறலாம்.

சுவாரஸ்ய தகவல்

சுவாரஸ்ய தகவல்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் நேக்கட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த பைக் அதன் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சேஸீ, எஞ்சின், கியர்பாக்ஸ், பிரேக் சிஸ்டம், சஸ்பென்ஷன் மற்றும் எலக்ட்ரிக் சிஸ்டம் ஆகிய அனைத்துமே இரண்டிலும் ஒன்றுதான். எஞ்சின் கன்ட்ரோல் யூனிட்[ECU] டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதனால், இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் இந்த பைக்கின் எஞ்சின் பூர்தித செய்யும்.

விலை விபரம்

விலை விபரம்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது நிச்சயம் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாகவே கருத முடியும்.

தொழில்நுட்ப விபர அட்டவணை

தொழில்நுட்ப விபர அட்டவணை

Engine 1-cylinder, 4-stroke, reverse inclined engine
Displacement 312.2cc
Max. Power Output 34bhp at 9,700rpm
Max. Torque 28Nm at 7,700rpm
Top Speed (est.) 160kph
0-100kph 7.71 seconds
0-60kph 2.93 seconds
Mileage (est.) 25 - 30kpl
Fuel Tank Capacity 11 litres
Gearbox 6-speed
Clutch Wet Multiple Disc
Suspension (Front)

Kayaba 41mm Upside-Down Forks
Suspension (Rear)

Kayaba 41mm Mono-shock
Brakes Front (Disc)

300mm Petal Type
Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor #review
English summary
Review: TVS Apache RR 310 — Is It A #PureRacecraft Worthy 300cc Motorcycle?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X