பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட்

கடந்த தசாப்தத்தில் செயல்திறன் மிக்க பைக் மாடல்களுக்கான வரவேற்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறத் துவங்கியது. பெர்ஃபார்மென்ஸ் வகை பைக் மாடல்களுக்கு தொடர்ந்து வரவேற்பு இருந்து வருவதால், இருசக்கர வாகன நிறுவனங்களும் தொடர்ந்து பல புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன. இருப்பினும், சாதாரண பைக்குகளில் இருந்து செயல்திறன் மிக்க மாடல்களுக்கான ஆரம்ப ரகமாக 160சிசி ரக பைக் மாடல்கள் மாறி இருக்கின்றன.

அதாவது, 160சிசி முதல் 200சிசி வரையிலான இந்த ஆரம்ப ரக பெர்ஃபார்மென்ஸ் பைக் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் இருக்கின்றன. இதில், டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. தோதுவான பட்ஜெட், போதுமான செயல்திறன் போன்றவற்றால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த பைக் சிறந்த தேர்வாக முன்னிறுத்தி வருகிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

கடந்த 2005ம் ஆண்டு முதல்முதலாக டிவிஎஸ் அப்பாச்சி பைக் 13.5 பிஎச்பி திறன் கொண்ட 147.5 சிசி எஞ்சினுடன் அறிமுகமானது. அந்த காலத்தின் சிறந்த செயல்திறன் மிக்க ஆரம்ப ரக பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்களில் ஒன்றாகவும் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர் மனதில் இடம்பிடித்தது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்களுக்கு தொடர்ந்து கிடைத்த பேராதரவு காரணமாக, அப்பாச்சி வரிசையில் புதிய மாடல்களை டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்தது. அதில், தற்போது உள்ள டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி மாடல் செயல்திறனுக்கும், தொழில்நுட்ப அம்சங்களுக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த நிலையில், டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக் மாடலை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிசைன்

2019ம் ஆண்டு பிஎஸ்-6 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது முதல் டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. எல்இடி ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான எல்இடி பொசிஷன் லைட்டுகள் முகப்பை வசீகரமாக காட்டுகின்றன. எல்இடி பொசிஷன் லைட்டுகளும், ஹெட்லைட்டின் லோ பீம் விளக்கும் சேர்ந்து பகல்நேர விளக்குகளாகவும், எப்போதும் ஒளிரும் வகையிலும் செயல்படுகின்றன.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

பக்கவாட்டில் டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் டிசைன் கவரும் வகையில் அமைந்துள்ளது. கூர்மையான பாகங்கள், முரட்டுத்தனமான பெட்ரோல் டேங்க், இருக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கோண வடிவிலான அலங்கார பாகம், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக்கில் 6 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், பெட்டல் டிஸ்க்குகள் கொண்ட பிரேக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த பைக்கில் டபுள் பேரல்கள் கொண்ட சைலென்சர் முக்கிய அம்சமாக உள்ளது. எல்இடி டெயில் லைட்டுகளும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக்கின் ரேஸிங் ரெட் என்ற வண்ணக் கலவை அதிகமாக விற்பனையாகும் வண்ணத் தேர்வாக உள்ளது. இதில், பந்தய பைக்குகளை பிரதிபலிக்கும் வகையிலான ஸ்டிக்கர் அலங்காரம் சிறப்பானதாக இருக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

முக்கிய அம்சங்கள்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கில் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இந்த பைக்கில் ரேஸ் பைக் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக எஞ்சின் சிறந்த பிக்கப், சீரான பவர் டெலிவிரியை வழங்குவதால் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

அடுத்து இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை சிறப்பு தொழில்நுட்பத்துடன் உருவாக்கி ரேஸ் டிராக்கில் வைத்து சோதனை செய்யப்பட்டதாக டிவிஎஸ் தெரிவிக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. டாக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் மானி, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், நேரம் உள்ளிட்ட பல தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை கொடுக்கிறது. இந்த பைக்கில் 0 - 60 கிமீ வேகத்தை எட்டுவது குறித்த தகவலை பெறுவதற்கான வேக கணக்கீட்டு கடிகாரம் இருப்பதும் சிறப்பு.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159.7சிசி ஏர் - ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 9,250 ஆர்பிஎம் என்ற சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 17.38 பிஎச்பி பவரையும், 7,250 என்ற சுழல் வேகத்தில் 14.73 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

ஏற்கனவே கூறியது போல இந்த எஞ்சினில் பந்தய பைக் அடிப்படையிலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மிகச் சிறந்த செயல்திறனை வெளிக்கொணர உதவிபுரிகிறது. இதன் எஞ்சின் 160சிசி புரோ ஸ்டாக் வகை பந்தய பைக்குகளின் எஞ்சின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு இருப்பதாக டிவிஎஸ் தெரிவிக்கிறது. இந்த பைக் மணிக்கு 114 கிமீ வேகம் என்ற டாப் ஸ்பீடு தெரிவிக்கப்படுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது மணிக்கு 123 கிமீ வேகம் வரை எட்ட முடிந்தது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக் 147 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ளதால், மிக சிறப்பான செயல்திறனை காட்டுகிறது. 0 - 60 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடுகிறது. எஞ்சினை ஸ்டார்ட் செய்த உடனே, இதன் சைலென்சர் சப்தம் நம் காதுகளில் ரீங்காரமிடத் துவங்குகிறது. டபுள் பேரல் சைலென்சர் சப்தம் நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

பைக் வேகம் எடுக்கும்போது 4,500 ஆர்பிஎம் வரை எஞ்சின் மிகவும் மென்மையான ஓட்டுதல் அனுபவம் இருந்தால் சப்தம் அதிகம் தெரிகிறது. ஆனால், 4,500 ஆர்பிஎம் வேகத்தை எஞ்சின் தாண்டும்போது அதிர்வுகள் குறைந்து மிகவும் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. பிக்கப் அருமையாக இருப்பதால் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு உற்சாகத்தை தருகிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக்கில் மற்றொரு முக்கிய தொழில்நுட்ப அம்சம், 'க்ளைடு த்ரூ' என்ற தொழில்நுட்பத்தை குறிப்பிடலாம். இதன் ரகத்தில் முதல்முறையாக இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆக்சிலரேட்டரை கொடுக்காமலேயே ஒவ்வொரு கியரிலும் குறிப்பிட்ட வேகத்தில் பைக் செல்லும் வகையில் இந்த ஜிடிடி தொழில்நுட்பம் செயல்படுகிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

க்ளட்ச்சை மெதுவாக விடும்போது முதல் கியரில் மணிக்கு 7 கிமீ வேகம் வரையிலும், இரண்டாவது கியரில் 12 கிமீ வேகம் வரையிலும், மூன்றாவது கியரில் 17 கிமீ வேகம் வரையிலும் பைக் செல்லும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்லும்போது ஆசுவாசமான பயணத்தை வழங்கும்.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக் 6,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 70 கிமீ வேகம் வரையிலும், 7,000 ஆர்பிஎம்.,மில் 80 கிமீ வேகம் வரையிலும், 8,000 ஆர்பிஎம்.,மில் 100 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறனை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மூன்று இலக்க வேகத்தில் சென்று ஓவர்டேக் செய்யும்போது போதுமான பவர் கிடைக்கவில்லை. எனவே, இதனை மனதில் வைத்து அதிவேகத்தில் செல்லும் பிற வாகனங்களை ஓவர்டேக் செய்வது அவசியம். நடுத்தர நிலையில் இருந்து உச்ச நிலை வரை எஞ்சின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

கடந்த 2005ம் ஆண்டு அறிமுகம் செய்ய்பட்ட 150சிசி மாடலில் இருந்து அப்பாச்சி பைக்குகள் கையாளுமைக்கு பெயர் பெற்றவை. அந்த வரிசையில், புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் கையாளுமையும் சிறப்பாக உள்ளது. எடை குறைவாக இருப்பதுடன், இதன் சிறந்த சேஸீ மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பான கையாாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்தை உறுதி செய்கின்றன. இது பந்தய கள பைக் இல்லை என்றாலும், முன்புறத்தில் உள்ள டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் உள்ள ஷோவா மோனோஷாக் அப்சார்பர் சிறப்பான கையாளுமை மற்றும் பயண அனுபவத்தை தருகின்றன.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இதன் சஸ்பென்ஷன் அமைப்பு சற்று கடினமானதாக இருந்தாலும் மோசமான சாலைகளில் கூட ஓட்டுபவர் மற்றும் பின்னால் பயணிப்பவரை சொகுசான பயண அனுபவத்தை வழங்குகிறது. அதேநேரத்தில், வளைவுகளில் அதிக நிலைத்தன்மையுடன் பயணிக்க உதவுகிறது. ஓட்டுபவர் நேராக அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கை மற்றும் கைப்பிடிகள் இருப்பதால், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏதுவானதாக இருக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

நகர்ப்புறத்தில் மிக எளிதாக வளைத்து திருப்பி ஓட்டுவதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. கையாளுமை போன்றே மிகச் சிறந்த பிரேக் சிஸ்டத்தை இந்த பைக் பெற்றிருக்கிறது. இதன் போட்டி பைக் மாடல்களை ஒப்பிடும்போது, இந்த பைக்கின் பிரேக் சிஸ்டம் மிகச் சிறந்ததாக கருத முடிகிறது. இந்த பைக்கின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் முன்புறத்தில் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 200 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

முன்புற பிரேக் லிவர் மிகவும் மென்மையாக இருக்கிறது. ஆனால், பிரேக் பிடிக்கும்போது, மிகச் சிறப்பான நிறுத்துதல் திறனை உணர முடிகிறது. பின்புற பிரேக்கும், சிறப்பானதாகவே இருக்கிறது. எந்த சூழலிலும் ஓட்டுபவர் பைக்கை நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் வகையில் இதன் பிரேக் சிஸ்டம் செயல்பாடு உள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முன்புற சக்கரங்கள் எந்த நிலையிலும் வழுக்காமல் செல்லும் வகையில் செயல்படுகிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக்கில் அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும்போது வால் பகுதி திருப்பும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது பைக் பிரியர்களுக்கு குதூகலத்தை தரும் விஷயமாக இருக்கும். அப்பாச்சி 160 4வி பைக்கில் 6 ஸ்போக்குகள் கொண்ட 17 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் டிவிஎஸ் ரெமோரா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் சிறந்த தரைப் பிடிப்பு திறனை வழங்குகிறது. இந்திய சாலைகளுக்கு உகந்ததாக இந்த டயர்கள் இருக்கின்றன.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த பைக்கில் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் இல்லாமல் 130 மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்ட விலை குறைவான வேரியண்ட்டும் வழங்கப்படுகிது. இந்த மாடலை ஓட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது சற்றே குறைவான பிரேக் செயல்திறன் கொண்டதாக கருதலாம்.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

வண்ணத் தேர்வுகள்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடலானது நைட் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் ரேஸிங் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. அனைத்து வண்ணத் தேர்வுகளுக்கும் ஒரே விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

வேரியண்ட் விபரம்

இந்த பைக் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்ட இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்ட மாடல் ரூ.1,06,215 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.1,09,265 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் பர்ஃபெக்ட் சாய்ஸ்... புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கின் ரோடு டெஸ்ட் ரிவியூ!

தீர்ப்பு

சாதாரண பைக்கிலிருந்து ஆரம்ப ரக பெர்ஃபார்மென்ஸ் பைக்கை வாங்க விரும்புவோருக்கு இந்த பைக் மிகச ்சிறந்த தேர்வாக இருக்கும். இதன் 0 - 60 கிமீ வேகத்தை எட்டுவது குறித்த தகவலை அளிக்கும் தொழில்நுட்பம் மிகச் சிறந்ததாக இருக்கும். முதல்முறையாக பைக் வாங்கும் இளைஞர்களுக்கும் இந்த பைக் உற்சாகசமான ஓட்டுதல் அனுபவத்துடன் சிறந்த தேர்வாக அமையும். இதன் ரகத்தில் அதிக செயல்திறன் கொண்ட மாடலாகவும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் இருப்பதுடன் பாக்கெட்டிற்கு தோதுவான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாகவும் கூறலாம்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
The Apache RTR 160 4V is the weapon wielded by TVS in this segment. We rode the motorcycle in the urban jungle and on the highway to find out what it is all about.
Story first published: Thursday, April 15, 2021, 13:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X