டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் 2.0 பைக்கை பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் வைத்து பயன்படுத்தியபோதும், நெடுந்தூர பயணங்களின்போது ஓட்டுவதற்கு அலுப்பில்லாத அனுபவத்தை தந்தது.

By Saravana Rajan

200சிசி திறன் கொண்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில், அண்மையில் அப்பாச்சி 200 பைக்கின் ரேஸ் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கை முழுமையாக ஓட்டி சோதிக்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்கியது. கடந்த மூன்று வாரங்களாக இந்த பைக்கை பல்வேறு சாலை நிலைகளில் வைத்து 1,000 கிமீ தூரம் ஓட்டி சோதித்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இதுபோன்ற ரகத்திலான மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு தோற்றம் மிக கம்பீரமாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் மிகச் சிறப்பான வடிவமைப்பு மற்றும் இரட்டை வண்ணத்தில் வசீகரிக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன் 2.0 பைக்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

கருப்பு வண்ணத்திலான பைக்கிற்கு சிவப்பு பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அதிக கவர்ச்சியை தருகிறது. எங்கு சென்றாலும், நிறுத்தினாலும் சிலர் அருகே வந்து விலை, மைலேஜ் என்ற விசாரணை போடும் அளவுக்கு வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் பிரதிநிதி வசம் இருந்து பெற்றுக் கொண்டவுடன், இதன் திறனை முழுமையாக பரிசோதிப்பதற்கான இடங்களை தேர்வு செய்தோம். அதில், நாம் வழக்கமாக தேர்வு செய்யும் நந்தி ஹில்ஸ் சிறப்பானதாக இருக்கும் என்று முடிவு செய்து நாள் குறித்து தயாரானோம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

வளைந்து நெளிந்து செல்லும் நந்தி ஹில்ஸ் மலைச்சாலையில் வைத்து அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் 2.0 பைக்கின் திறன்களை சோதித்தோம். ஏற்றமான மலைச்சாலைகளிலும், வளைவுகளிலும் அசராமல் சென்றது. இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை அமைப்பு சற்றே உயரமாக இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இதுபோன்ற உயரமான இருக்கை அமைப்புடைய பைக்குகள் வளைவுகளில் திருப்பும்போது சற்று கவனமுடன் நிலைத்தன்மையை கவனிக்க வேண்டி இருக்கும். ஆனாலும், இந்த பைக்கின் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் மற்றும் கால் வைப்பதற்கான ஃபுட் பெக் அமைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால், எளிதாக ஓட்ட முடிந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த பைக்கில் இருக்கும் எஞ்சின் டார்க் திறன் மிகவும் செம்மையாக இருப்பதும், சேஸீ அமைப்பும் எளிதாக கையாள்வதற்கு துணை புரிகின்றன. இதனால், இந்த பைக்கை ஓட்டும்போது உற்சாகத்தை தருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் 2.0 மாடலில் இருக்கும் 197.7சிசி ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 20.21 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. தோற்றத்திற்கு தக்கவாறு மிகச் சிறப்பான செயல்திறனை வழங்கும் விதத்தில், ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த பைக்கின் உச்சபட்ச டார்க் 7,000 ஆர்பிஎம்.மிலும், அதிகபட்ச சக்தி 8,500 ஆர்பிஎம்.மிலும் வெளிப்படுகிறது. இதுபோன்ற செயல்திறன் மிக்க பைக்குகளை ஒப்பிடும்போது சற்று குறைவுதான். எனினும், ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் இதன் எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பது தினசரி மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

எனினும், முழுமையாக ஸ்போர்ட்ஸ் பைக்காக கருதிக் கொண்டு சென்று ஓட்டுபவர்களுக்கு இதன் செயல்திறன் சற்று ஏமாற்றம் தரலாம். இந்த பைக்கில் இருக்கும் இதே எஞ்சின்தான் டிவிஎஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியின் சார்பில் பந்தய களங்களில் பயன்படுத்தப்படும் பைக்குகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஆனால், இந்த எஞ்சின் 23.6 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ரேஸ் பைக்கையும் ஓட்டியதால் என்னவோ, அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் 2.0 மாடலின் எஞ்சின் செயல்திறன் சற்று குறைவாக இருப்பது போன்ற உணர்வு தொடர்ந்து இருந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இருப்பினும், தினசரி பயன்பாட்டிற்கு இது சிறப்பானதாகவும், போதுமான செயல்திறனையும் பெற்றிருக்கிறது. ஏனெனில், எரிபொருள் சிக்கனம், மாசு உமிழ்வு விதிகளுக்குப்பட்டு ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. மற்றொரு சிறப்பு இந்த பைக்கின் புகைப்போக்கி சப்தம் இளைஞர்களை வசீகரிக்கும் என்று நம்பலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் 2.0 பைக் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சமாக வந்துள்ளது. தினசரி பயன்பாட்டிற்கும், நெடுந்தூர பயணங்களின்போதும் இது கூடுதல் பாதுகாப்பை தரும். 70 கிமீ வேகத்தில் சென்று பிரேக் பிடிக்கும்போதுகூட மிகச் சிறப்பான நிறுத்ததல் திறனை உணர முடிகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த பைக்கில் டிவிஎஸ் A-RT ஸ்லிப்பர் க்ளட்ச் கொடுக்கப்படுகிறது. வேகத்தை குறைக்க கியரை தடாலடியாக குறைக்கும்போது பின்சக்கரம் பூட்டிக் கொள்ளாதவாறு நுட்பத்தை ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்குகிறது. மொத்தத்தில் ஓட்டுவதற்கு உற்சாகத்தை தரும் மாடலாக இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த பைக் டெஸ்ட் டிரைவின்போது 0 -100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டியதுடன், மணிக்கு 133 கிமீ வேகம் வரை இலகுவாக தொட்டது. டிவிஎஸ் நிறுவனம் வழங்கிய கையேட்டில் இந்த பைக் 0- 100 கிமீ வேகத்தை 12.1 வினாடிகளில் எட்டும் என்று தெரிவித்திருந்தது. அதேபோன்று, மணிக்கு 129 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த பைக்கில் பெரிய குறைகள், பிரச்னைகள் என்று ஏதும் தெரியவில்லை. ஸ்டார்ட்டர் பட்டன் சில சமயங்களில் மக்கர் செய்தது. அதேபோன்று, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லை. சர்வீஸ் செய்யும்போது இந்த குறைகளை நிவர்த்தி செய்துவிடலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் வைத்து பயன்படுத்தியபோதும், நெடுந்தூர பயணங்களின்போது ஓட்டுவதற்கு அலுப்பில்லாத அனுபவத்தை தந்தது. இந்த பைக்கின் எஞ்சினின் ஆரம்ப செயல்திறன், ஓட்டுதல் தரம் மற்றும் புகைப்போக்கி சப்தம் ஆகியவை ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளுக்கு திருப்தியான உணர்வை தரும். சரிசெய்யக்கூடிய அளவிலான சிறு குறைகள் இருந்தன. மொத்தத்தில் தோற்றத்திலும் சரி, செயல்திறனிலும் சரி, கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான தேர்வாக அமையும். அப்பாச்சி வரிசை பெயரை காப்பாற்றும் மற்றொரு மாடலாகவே கருத முடியும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor #review
English summary
Here are our thoughts on the Apache RTR 200 4V Race Edition being a part of the DriveSpark long-term garage.
Story first published: Friday, July 27, 2018, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X