டிவிஎஸ் நியூ விக்டர் Vs ஸ்பிலெண்டர் ஐ-ஸ்மார்ட்... உள்ளத்தைக் கொள்ளையடிக்கப் போகும் மாடல் எது?....

Written By: Krishna

ஸ்பிலெண்டர் பைக்கை ஓட்டாத இந்தத் தலைமுறை இளைஞர்கள் இருக்கவே மாட்டார்கள் எனலாம். அந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பாஸ்தீனியச் செடி போல கடந்த 10 ஆண்டுகளில் அந்த பைக் பரவி விட்டது. கிட்டத்தட்ட தெருவுக்கு 4 பேராவது ஸ்பிலெண்டர் பைக் வைத்திருப்பார்கள். அப்படி ஒரு வரவேற்பு கொண்ட வண்டி அது. டிவிஎஸ் விக்டரைப் பொருத்தவரை முதன் முதலாக சச்சின் டெண்டுல்கர் அந்த பைக் விளம்பரத்தில் வந்தார். அதன் பிறகு வேகமாக பிக் அப் ஆனது அந்த மாடல். ஆனால், மிகச் சில வருடங்களே டிவிஎஸ் விக்டர் இந்தியாவில் தாக்குப் பிடித்தது. டிவிஎஸ் அப்பாச்சி வந்த பிறகு விக்டர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

இந்த நிலையில் ஹீரோ ஸ்பிலெண்டர், தனது புதிய மாடலான ஐ - ஸ்மார்ட்டை சந்தையில் களமிறக்கியுள்ளது. அதேபோல் டிவிஎஸ் விக்டரும் மேம்படுத்தப்பட்ட புது மாடலை இந்த ஆண்டிவ் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த இரு வண்டிகளும் 110 சிசி எஞ்சின் திறனுடன் வந்துள்ளன. ஆகவே, அந்த வகை எஞ்சின் செயல்திறனுடன் பைக் வாங்க நினைப்பவர்களி்ன் சாய்ஸ் எதுவாக இருக்கும்?

 டிசைன்: விக்டர்

டிசைன்: விக்டர்

டிசைனைப் பொருத்தவரை டிவிஎஸ் விக்டர் பாக்ஸி டைப் வடிவமைப்பைக் கொண்டது. கிட்டத்தட்ட ஸ்டார் சிட்டியைப் போன்ற டிசைன்தான் இதிலும் உள்ளது. வளைவுகள் மற்றும் ஷார்ப்பான லைன் டிசைன் ஆகியவை ஸ்போர்ட்டி லுக்கைத் தருகின்றன. மேட் ஃபினிஷில் கருப்பு வண்ண கோட்டிங் கொடுத்திருப்பது விக்டருக்கு ப்ரீமியமான தோற்றத்தைத் தருகிறது.

டிசைன்: ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110

டிசைன்: ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110

ஸ்பிலென்டர் ஐ-ஸ்மார்ட்டை எடுத்துக் கொண்டால், அதன் வடிவமைப்பு அப்படியே இளைஞர்களை மனதில் வைத்து உருக்கியெடுக்கப்பட்டதைப் போல உள்ளது. அதிலுள்ள கிராபிக்ஸ், டூயல் கலர்கள் ஆகியவை அந்த வண்டிக்கு செம ஸ்மார்ட்டான லுக்கைத் தருகின்றன.

சஸ்பென்ஷன்: விக்டர்

சஸ்பென்ஷன்: விக்டர்

டிவிஸ் விக்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் கொண்ட சஸ்பெஷன் அமைப்பு உள்ளது. பின்புறம் இரண்டு ஷாக் - அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிஸ்க் பிரேக் ஆப்ஷன், 17 இன்ச் அலாய் வீல், உயர் திறன் கொண்ட முகப்பு விளக்குகள், செமி டிஜிட்டல் டிஸ்பிளே ஆகியவை அந்த மாடலில் உள்ள சிறப்பம்சங்கள்.

சஸ்பென்ஷன்: ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் 110

சஸ்பென்ஷன்: ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் 110

ஸ்பிலெண்டர் ஐ-ஸ்மார்ட்டிலும் அதே மாதிரியான சஸ்பென்சன் வசதிகளே உள்ளன. 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் ஆப்ஷனும், ஆர்பிஎம் மீட்டரும் இந்த மாடலில் இல்லை. அதேவேளையில், செமி டிஜிட்டல் டிஸ்பிளே சிஸ்டம் உள்ளது.

எஞ்சின்: விக்டர்

எஞ்சின்: விக்டர்

எஞ்சின் திறனைப் பார்க்கும்போது டிவிஎஸ் விக்டரில் 109.7 சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அது 9.5 பிஎச்பி மற்றும் 9.4 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. 4 கியர்கள் கொண்ட கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 74 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் உறுதியளி்க்கிறது.

எஞ்சின்: ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110

எஞ்சின்: ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110

ஸ்பிலெண்டர் ஐ-ஸ்மார்டில் 109.15 சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. பிஎஸ்-ஐவி எஞ்சினான அது 9.2 பிஎச்பி மற்றும் 9.0 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதிலும் 4 கியர்கள் உள்ளன. மைலேஜைப் பொருத்தவரை லிட்டருக்கு 68 கிலோ மீட்டர்கள் வரை ஸ்பிலெண்டர் ஐ-ஸ்மார்ட் பயணிக்கும் என்கிறது ஹீரோ நிறுவனம்.

ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் ஸ்பெஷல்

ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் ஸ்பெஷல்

இந்த எஞ்சினில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது ஐ3எஸ் (ஐடில், ஸ்டாப், ஸ்டார்ட்) தொழில்நுட்பத்திலானது. அதாவது டிராஃபிக் சிக்னல்களில் கியரை நியூட்ரலுக்கு கொண்டு வந்துவிட்டால் எஞ்சின் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். இதன் மூலம் எரிபொருள் பெருமளவு மிச்சமாகும்.

விலை

விலை

விலையை எடுத்துக் கொண்டால், டிவிஎஸ் விக்டர் (டிரம் பிரேக்) - ரூ.56,900-க்கும் டிஸ்க் பிரேக் ரூ.59,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பிலென்டர் ஐ - ஸ்மார்ட்டைப் பொருத்தவரை அதன் விலை ரூ.60,700-ஆக உள்ளது. (இவை அனைத்துமே தில்லி எக்ஸ் ஷோ ரூமின் விலை).

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

மொத்தத்தில் ஸ்பிலென்டர் ஐ-ஸ்மார்ட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அதேவேளையில், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் அதில் இல்லை. விக்டரில் அவை அனைத்துமே கொடுக்கப்படடுள்ளன. இருப்பினும், மறுவிற்பனை மதிப்பு, சிறப்பம்சங்கள், தொழில்நுட்பத்தில் வழக்கம்போல் ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் பைக் முந்துகிறது. எஞ்சினும், மென்மையான கியர்பாக்ஸும் மேலும் வலு சேர்க்கிறது. அதேநேரத்தில், கையாளுமை, பாதுகாப்பு, குறைவான விலை போன்றவற்றில் விக்டர் சிறப்பாக இருக்கிறது. இரண்டு பைக்குகளையும் டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தில் டிவிஎஸ் விக்டர் சிறப்பானதாக இருக்கிறது. மறுவிற்பனை மதிப்பு குறைவு என்பதுதான் ஒரே மைனஸ்.

புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

 
English summary
TVS Victor Vs Hero Splendor ISmart 110 – The Crucial Commuter Comparo.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark