2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!

6 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் எலெக்ட்ரிக் ஃபெர்பாமென்ஸ் பைக்கை உருவாக்க ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கப்பட்டது. அல்ட்ரா வைலட் என பெயரிடப்பட்ட இந்நிறுவனம் இது துவங்கப்பட்ட 2 ஆண்டுகளில் தனது எஃப்77 என்ற பைக்கின் முதல் பார்வையைப் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தியது. இது எஃப் 77 பைட்டர் ஜெட்டின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பைக் இதன் முதன் பார்வையே ஏராளமானவர்களை ஈர்த்தது.

இந்த ஸ்கூட்டரை வாங்க நினைத்த பலரின் கனவிற்குக் குறுக்கே வந்ததது கொரோனா பரவல். ஆனால் அலட்ரா வைலட் நிறுவனம் இந்த நேரத்தில் சும்மா உட்காராமல் தனது எஃப் 77 பைக்கை மேம்படுத்தத் துவங்கியது. இதனால் 2019ம் ஆண்டு நாம் பார்த்த எஃப் 77 பைக் பெரிய மாறுதல்களுடன் அறிமுகமானது. கடந்த டிசம்பர் மாதம் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகம் நடந்தது.

2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!

இந்த எஃப் 77 பைக்கின் ரீக்கான் வெர்ஷனை பொருத்தவரை ரூ4.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு டிரைவ் ஸ்பார்க் குழுவிற்குக் கிடைத்தது. அதன்படி பெங்களூருவில் எங்கள் குழு இந்த அல்ட்ராவைலட் எஃப் 77 பைக்கை ஓட்டி பார்த்தது. அந்த பைக் எப்படி இருக்கிறது என்ற ரிவியூவை காணலாம் வாருங்கள்.

டிசைன் மற்றும் அம்சங்கள்

அலட்ராவைலட் குழுவினர் தங்களை முறையான பைக்கர்கள் என சொல்லிக்கொள்ளும் நிலையில் அவர்கள் அதிகமாகப் பறவை மற்றும் ஃபைட்டர் ஜெட் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஏரோ டைனமிக்ஸ்க்கு சிறப்பாகக் காற்றைக் கழித்துக்கொண்டு வேகமாகச் சீறிப் பாயும் விதமாக வடிவமைத்துள்ளனர்.

2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!

இந்த எஃப் 77 பைக்கின் முன்பக்கத்தில் ஆங்குலர் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க்க டிரான்ஸ்பார்மர் படத்தில் வருவது ஃபேஸ் பிளேட் போல இருக்கிறது. இதன் டூயல் பாட் லைட்டிங் கான்ஃபிகேரேஷன் ஷார்ப்பான லுக்கை தருகிறது. 3 டே டைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் தலைகீழாக ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. இது முகப்பு பக்கத்தில் ஆங்குலர் டிசைனிற்கு ஏற்றவாறு இருக்கிறது. முன்பக்க ஃபென்டர்கள் காற்றை ஒரு கத்தி போல கிழித்துக்கொண்டு செல்லும் வடிவமைப்பில் உள்ளது. முன்பக்கம் 17 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. புதிய டிசைனில் எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்கவாட்டிலிருந்து பார்க்கும் போது எஃப் 77 பைக், ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் ஃபைட்டர் ஜெட் வடிவமைப்பில் இருப்பதால் இதற்கான பவர் ஃபுல் லுக் கிடைக்கிறது. இந்த பைக்கில் ஒரு நட் அல்லது போல்டை வெளியில் பார்க்க முடியாது. எஃப் 77 ஃபைட்டர் ஜெட் போல இந்த பைக்கும், பிரஷ் ஃபிட் வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!

இந்த பைக்கில் போலியான ஃப்யூயல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சார்ஜில் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. ரைடருக்கும் நல்ல கிரிப் கிடைக்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் சிறிய ஏரோ விங்லெட் பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு கிராஷ் கார்டு போல செயல்படும்.

இந்த பைக்கில் 2 ஸ்டெப் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு வசதியாக பைக் ஓட்டவும், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்குச் சற்று உயரமாக அமர்ந்து ரோட்டை பார்க்கவும் வசதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பின்புறம் பைக்கின் பெயர் மற்றும் கலர் ஆப்ஷன் அச்சிடப்பட்டுள்ளது. பின்பக்க லைட்டிங்கை பொருத்தவரை முழு எல்இடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பின்பக்க டயர் ஹக்ர் இல்லை. ஆனால் இது பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை.

இந்த எஃப் 77 பைக்கில் ரைடர்கள் இன்ட்ராக்ட் செய்யும் வகையில் ஸ்கிரீன் ஹேண்டில் பாரின் இடையே வழங்கப்பட்டுள்ளது. இது டச் ஸ்கிரீன் இல்லை. இதை ஸ்விட்ச்கள் மூலம் தான் நீங்கள் கையாள முடியும். அதற்காக இடதுபுறம் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் செல்போனை இணைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் நேவிகேஷன் மற்றும் பிற தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இது போக வழக்கமாக ஸ்பீடு, ரைடிங் மோடு உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது.

பவர்டெரைன்

இந்தியாவின் உள்ள எலெக்ட்ரிக் டூவீலர்களில் இரண்டாவது பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட பைக் இதுதான். இதன் ரெகுலர் வேரியன்டில் 7.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் மூலம் இந்த பைக் ஐடிசி ரேஞ்ச் படி 206 கி.மீ வரை பயணிக்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. ரியல் வேல்டில் 176 கி.மீ பயணிக்கும் திறன் இந்த பைக்கிற்கு இருக்கிறது.

இந்த பைக்கில் மிட் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 36.2 பிஎச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 3.4 நொடியில் பக்கப் செய்து கொள்ளும் திறன் கொண்டது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.3 நொடியில் பிக்கப் செய்து கொள்ளும். அதிகபட்சமாக இந்த பைக் 140 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

எஃப் 77 ரெக்கான் வேரியன்டை பொருத்தவரை பெரிய பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. 10.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுதான் இந்திய டூவீலர்களிலேயே பொருத்தப்பட்ட பெரிய பேட்டரி பேக் ஆகும். இதில் ஐடிசி ரேஞ்ச் 307 கி.மீ வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. ரியல் வேலர்டில் 261 கி.மீ ரேஞ்ச் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெக்கான் வேரியன்டின் பெரிய பேட்டரி பேக் அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ளது. இது பின்பக்க வீலுக்கு செயின் டிரைவ் மூலம் பவரை வழங்குகிறது. இந்த பைக்கின் மோட்டார் 38.8 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 3.1 நொடியிலும், 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8 நொடியிலும் எப்படிப் பிடிக்கும் திறன் கொண்டது. இந்த பைக் அதிகபட்சமாக 147 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இந்த எஃப்77 மற்றும் எஃப்77 ரெக்கான் ஆகிய 2 வேரியன்ட்களும் ஸ்டாண்டர்டான சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரம் சார்ஜ் போட்டால் 35 கி.மீ வரை பயணிக்க முடியும். இரவு முழுவதும் சார்ஜ் போட்டால் தான் பேட்டரி முழுமையாகும். இது போக ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு மணி நேரம் சார்ஜ் போட்டால் 75 கி.மீ வரை பயணிக்கும். ஆனால் இதைத் தனியாகப் பணம் செலுத்தி வாங்க வேண்டும்.

அல்ட்ரா வைலட் நிறுவனம் இதை விட வேகமாக சார்ஜ் ஏற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இது போக இந்த பைக்கில் 3 லெவல் ரீஜென் பிரேக்கிங் இருக்கிறது. இதை ஓடிஏ அப்டேட் மூலம் 10 லெலவல் வரை அப்டேட் செய்து கொள்ள முடியும். இந்த இருண்டு வேரியன்டிற்கும் பைக்கின் எடை வேறுபடுகிறது. இதற்கு பேட்டரி பேக் தான் முக்கியமான காரணம். எஃப் 77 பைக் 197 கிலோவும், ரெக்கான் வேரியன்ட் 207 கிலோவும் இருக்கிறது. வீல்பேஸை பொருத்தவரை 1340 மிமீ நீளம் இருக்கிறது. 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. சீட் உயரம் 800 மிமீ இருக்கிறது.

அலட்ராவைல் எஃப் 77 ரெக்கான் பைக்கில் அலுமினியம் பல்க் ஹெட் உடன் ஸ்டீல் டிரெல்லீஸ் ஃபிரேம் பொருத்தப்பட்டுள்ளது. கடினமான ரோடுகளை கையாள இந்த பைக்கின் ஆட்டோமெட்டிக் ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 41 மிமீ தலைகீழாகப் பொருத்தப்பட்டுள்ள ஃபிரண்ட் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டும் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட் வசதியைக் கொண்டது. பின்பக்கம் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது.

எஃப் 77 பைக்கை பொருத்தவரை 17 இன்ச் வீல்கள், புதிய எம்ஆர்எஃப் டயர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 110/70 R17 என்ற அளவுகளில் முன்பக்கத்திலும், 150/60 R17 என்ற அளவுகளில் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை பைப்ரீ டிஸ்க் பிரேக் டூயல் சேனல் ஏடிபிஎஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பக்கம் 4 ரேடினல் பிஸ்டன் உடன் 320 மிமீ டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஃப்ளோட்டிங் கேலிபர் சிங்கிள் பிஸ்டன் உடன் 230 மிமீ டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

ரைடிங் இம்பிரஷன்

இந்த பைக்கின் விலையைப் பார்த்ததும். இந்த பைக்கின் குறித்து உங்களுக்கு ஒரு அனுமானம் இருந்திருக்கும். ஆனால் அதை எல்லாம் மாற்றும் வகையில் இந்த பைக்கின் பெர்ஃபாமென்ஸ் இருக்கிறது. இந்த பைக்கில் மொத்தம் 3 விதமான ரைடிங் மோட்கள் உள்ளன. கிளைடு, காம்பேக்ட் மற்றும் பாலிஸ்டிக், இதில் கிளைடு மற்றும் காம்பேக்ட் ஆகிய இரண்டு மோடிற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. கிளைடு மோட் வழக்கமான பயணத்திற்கு ஏற்ற மோட் தான். காம்பேக்ட் அதை விட சற்று பவர் அதிகமாக இருக்கும் சிட்டி பகுதிகளில் ஓட்ட இது சிறந்தது.

பாலிஸ்டிக் மோட் டிராக்கில் செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாலிஸ்டிக் மோடில் எஃப்77 ரெக்கான் பைக் தனது முழு திறனையும் வெளிக்காட்டுகிறது. இதன் 207 கிலோ எடை இதை விரைவாக செல்ல உதவி செய்கிறது. இது நிற்கும் போது முதல் நகரும் வரை ஆக்ஸிலரேஷன் சிறப்பாக இருக்கிறது.

இந்த எஃப் 77 ரெக்கான் பைக்கின் சஸ்பென்சனை பொருத்தவரை ஸ்டிஃப்பாக இருக்கிறது. ஆனால் கார்னர்களில் இது சிறப்பாகச் செயல்படுகிறது. பயணத்தின் போது ரெக்கான் பைக்கின் இந்த 207 கிலோ எடையை உயர முடியும். ஆனால் இதன் சஸ்பென்சன் செட்டப், ஃபார்வேர்டு லீனிங் ஸ்போர்ட் பைக் ரைடிங் போஷிசன், ரியர் -சீட் ஃபூட்பெக்ஸ், சப்போர்ட்டிங் ஃபேரிங் மற்றும் ஃப்யூயல் டேங்க் பேட்ஸ் ஆகிய வை பைக்கை ஓட்ட சிறப்பான
அனுபவத்தைத் தருகிறது.

இதன் ஸ்டிஃப்பான் சஸ்பென்சன் செட்டப் சிட்டி பயன்பாட்டிற்குச் சிறப்பானதாக இருக்காது என நினைக்கலாம். ஆனால் நாங்கள் பெங்களூரு சாலைகளில் குழிகளிலும் மேடுகளிலும் ஏறிப் பயன்படுத்தும் போது சிறப்பாகவே இருந்தது. இந்த பைக்கின் பிரேக்கிங்கை பொருத்தவரை சிறப்பாக இருக்கிறது. சடன் பிரேக் போடும் போது பின்பக்க வீலர் எளிதாக தூக்கம் படி இருக்கிறது. ஏபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால் பாதுகாப்பாக இருக்கும். பின்பக்க ஏபிஏஸை ஆஃப் செய்யும் வசதியும் இருக்கிறது. ஆனால் இதை நீங்கள் பைக் ஸ்டண்ட் பயிற்சி பெற்றவராக இல்லாத வரை பின்பக்க ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்ய வேண்டாம். பின்பக்க வீலை தூக்கி ஸ்டண்ட் காட்டுவதை அனுமதியில்லாத இடங்களில் செய்ய வேண்டாம்.

இறுதித் தீர்ப்பு!

இந்த அல்ட்ராவைலட் எஃப்77 பைக்கை பொருத்தவரை இதன் அம்சங்கள் குறித்து பேப்பரில் பார்ப்பதை விட அதை ஓட்டி பார்க்கும் போது நமக்கு அந்த பைக் குறித்த வேறு ஒரு பிம்பம் கிடைக்கிறது. இதை விலை வைத்து இதை கேடிஎம் ஆர்சி390 பைக்கின் எலெக்ட்ரிக் மாற்று பைக் எனத் தோன்றலாம்.ஆனால் இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் போல செயல்படுகிறது. இந்தபைக் லுக் மட்டுமல்ல ஃபெர்பாமென்ஸூம் சிறப்பாகவே இருக்கிறது. அல்டராவைலட்டிற்கு சிறப்பான எதிர்காலம் பிறந்துவிட்டது.

Most Read Articles
English summary
Ultraviolette F77 electric sports bike review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X