ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

யெஸ்டி. இந்த பெயரை கேட்டாலே பலருக்கும் இனிமையான நினைவுகள் தூண்டப்படும். கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் யெஸ்டி பிராண்டின் ரீ-லான்ச் குறித்து அறிவித்தபோது, மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அறிவித்தபடியே கடந்த ஜனவரி 13ம் தேதி யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. யெஸ்டி பிராண்டு உயிர்த்தெழுந்திருப்பதை அதன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போதைய நிலையில் யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ஜர் என 3 புதிய மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பைக்கை டெஸ்ட் ரைடு செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய விரிவான தகவல்களையும் இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

டிசைன்

அருகில் இருந்து பார்த்தாலும் சரி அல்லது தூரத்தில் இருந்து பார்த்தாலும் சரி. இது ஒரு அட்வென்ஜர் டூரர் ரக பைக் என்பதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும். உடனடியாக ஆஃப் ரோடு பயணத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை இந்த பைக் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் க்ரோம் பூச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேலே பெரிய விண்டுஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

அதே சமயம் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கவனம் ஈர்க்கிறது. இதில், யெஸ்டி பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளானது, மேட் மற்றும் கேமோ என மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் கேமோ வேரியண்ட்டில் தற்போதைய நிலையில் 'ரேஞ்ஜர் கேமோ' என்ற ஒரே ஒரு வண்ண தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மேட் வேரியண்ட்டில், ஸ்லிக் சில்வர் மற்றும் மேம்போ பிளாக் என 2 வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில் இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

இதில் ஸ்லிக் சில்வர் வண்ண தேர்வுதான் கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் வண்ண தேர்வுகள் ரசனையை பொறுத்து மாறுபடும். எனவே உங்களுக்கு விருப்பமான வண்ணத்தை தேர்வு செய்யலாம். ஆனால் நீங்கள் எந்த வண்ண தேர்வை தேர்ந்து எடுத்தாலும் சரி, எரிபொருள் டேங்க் மட்டுமே அந்த வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் மற்ற பகுதிகள் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் சைடு பேனல்கள் எளிமையாக உள்ளன. அவற்றின் மீது 'அட்வென்ஜர்' என எழுதப்பட்டுள்ளது. பெரிய ஸ்பிளிட் சீட்களையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

அதே நேரத்தில் இந்த மோட்டார்சைக்கிளின் டெயில்லேம்ப் டிசைன் எளிமையாக இருக்கிறது. இது சிறிய வட்ட வடிவ டெயில் லேம்ப் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளின் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களும் வட்ட வடிவில்தான் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த டிசைன் எளிமையாக உள்ளது. ஆனால் இந்த மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை 2.09 லட்ச ரூபாய் ஆகும் (எக்ஸ் ஷோரூம்). எனவே இன்னும் கொஞ்சம் பிரீமியமாக டிசைன் செய்திருக்கலாம்.

இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள ரேக்குகள் மற்றும் ஃப்ரேம்கள், லக்கேஜ்களை கட்டி வைத்து கொள்வதற்கு அனுமதிக்கின்றன. யெஸ்டி நிறுவனம் சேடில் பாக்ஸ்கள், ஜெர்ரி கேன்கள் போன்றவற்றை ஆக்ஸஸரீஸ்களாக வழங்குகிறது. அவற்றை இந்த ஃப்ரேம்களில் பொருத்தி கொள்ளலாம். இந்த மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. சியட் நிறுவனத்தின் க்ரிப் டயர்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளின் டிசைனை பொறுத்தவரை இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட் பைப்பும் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் எக்ஸாஸ்ட் மேல்நோக்கிய வகையில் உள்ளது. இதன் முற்றிலும் மேட் பிளாக் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

வசதிகள்

யெஸ்டி பிராண்டு அறிமுகம் செய்த 3 மோட்டார்சைக்கிள்களிலேயே அதிக வசதிகள் நிரம்பியது என்றால், அது அட்வென்ஜர்தான். முதலாவதாக இந்த மோட்டார்சைக்கிள் முழு எல்இடி லைட் வசதியை பெற்றுள்ளது. இதன்படி ஹெட்லேம்ப், டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் என அனைத்திலும் எல்இடி பல்புகள்தான் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 ஸ்மார்ட்போன் சார்ஜிங் போர்ட்களையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. Type-A மற்றும் Type-C சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதால், உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிளின் எல்சிடி டிஸ்ப்ளே, இன்ஜின் வேகம், வாகனத்தின் வேகம், ஓடோமீட்டர், எந்த கியரில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டுள்ளது, சராசரி மற்றும் நிகழ்நேர எரிபொருள் சிக்கனம் உள்பட பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் இரண்டாவதாகவும் ஒரு சிறிய வட்ட வடிவ திரை வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் வழியாக செயல்படும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை இது கையாள்கிறது. ஆனால் போதிய அளவிற்கு நேரம் இல்லாத காரணத்தால், எங்களால் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை முழுமையாக பரிசோதித்து பார்க்க முடியவில்லை.

இந்த எல்சிடி திரையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பதுதான். அதாவது சாய்த்து கொள்ள முடியும். எனவே ரைடர் தன்னுடைய தேவைக்கு ஏற்ற வகையில் இதனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு வசதியாகும். யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளை காட்டிலும் பல மடங்கு விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களில்தான் இந்த வசதி வழங்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

அதே நேரத்தில் யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளின் ஸ்விட்ச் கியர் பிரீமியமாக உள்ளது. பட்டன்கள் பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ளன. திரையில் தோன்றும் தகவல்கள், ஹேண்டில்பாரில் உள்ள பட்டன்கள் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இந்த மோட்டார்சைக்கிளின் ஹேண்டில்பார் நல்ல பிடிமானமாக இருக்கிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் செயல்திறன் எப்படி உள்ளது? குறைவான ஆர்பிஎம்மிலேயே அதிக டார்க் கிடைக்கிறதா? இன்ஜினில் ஏதேனும் சிறப்பம்சங்கள் உள்ளதா? என்பது போன்ற கேள்விகள் வாடிக்கையாளர்கள் மனதில் ஓடி கொண்டிருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம்.

இந்த மோட்டார்சைக்கிளில் ஏறி அமர்ந்த உடனேயே உங்களுக்கு தோன்றும் ஒரு விஷயம் என்னவென்றால், 'ரைடிங் பொஷிஷின்' சிறப்பாக இருக்கிறது என்பதுதான். இந்த மோட்டார்சைக்கிளின் ரைடிங் பொஷிஷன் நிமிர்ந்த மற்றும் நேரான வகையில் உள்ளது. தொலைதூர பயணங்களின்போது தூக்கம் வருவதை இந்த ரைடிங் பொஷிஷன் தடுக்கிறது. அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன.

யெஸ்டி அட்வென்ஜர் பைக்கில், லிக்யூட்-கூல்டு, 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 29.7 பிஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 29.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் இன்ஜின் குறைவான ஆர்பிஎம்மில் அதிக டார்க்கை வழங்குமா? என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. ஆனால் பைக்கை ஓட்ட தொடங்கிய பின் அந்த அச்சம் காணாமல் போய் விட்டது. ஏனெனில் குறைவான ஆர்பிஎம்மிலேயே டார்க் நன்றாக கிடைக்கிறது. அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளின் க்ரூஸிங் திறன்களும் அருமையாக உள்ளன. அதே நேரத்தில் மிட்-ரேஞ்ச் மற்றும் ஹை-ரேஞ்ச் ஆகியவற்றில் இன்ஜின் உருவாக்கும் பவர் மற்றும் டார்க் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலம் ஆஃப் ரோடுகளில் ஓரளவிற்கு வேகமாக பயணிக்க முடியும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

டூரிங் செல்வதற்கு இது உண்மையிலேயே மிகவும் ஏற்ற மோட்டார்சைக்கிள் ஆகும். ஏனெனில் நெடுஞ்சாலைகளுடன், கரடு முரடான ஆஃப் ரோடு சாலைகளிலும் யெஸ்டி அட்வென்ஜர் சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரத்தில் இன்ஜினை குளிர்ச்சியாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக யெஸ்டி தெரிவித்துள்ளது. புதிய ரேடியேட்டர் செட்-அப் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ரேடியேட்டரின் இன்டர்னர் கூலிங் பைப்கள் தற்போது கிடைமட்டாக பாய்கின்றன. ஆனால் மற்ற பெரும்பாலான பைக்குகளில் செங்குத்தான பைப்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கிடைமட்டமான பைப்கள் கூலிங் 50 சதவீதம் திறன்மிக்கதாக இருப்பதற்கு உதவி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் கையாளுமையும் நன்றாக உள்ளது. சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்தவரை, முன் பகுதியில் 200 மிமீ டிராவல் உடன் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் 180 மிமீ டிராவல் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 220 மிமீ ஆகும். பிரேக்கிங்கை பொறுத்தவரை, முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்குகளின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரெயின் ஆகிய ஏபிஎஸ் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இது பிரேக்கிங்கை மிகப்பெரிய அளவில் மேம்படுத்துகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு சவால்... யெஸ்டி அட்வென்ஜர் பைக் எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் ரைடு ரிவியூ!

வண்ண தேர்வுகள், விலை மற்றும் போட்டியாளர்கள்

நாங்கள் ஏற்கனவே கூறியபடி யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள் மொத்தம் 3 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். நீங்கள் தேர்வு செய்யும் வண்ணத்தை பொறுத்து விலை மாறுபடும்.

  • ஸ்லிக் சில்வர் - 2,09,900 ரூபாய்
  • மேம்போ பிளாக் - 2,11,900 ரூபாய்
  • ரேஞ்ஜர் கேமோ - 2,18,900 ரூபாய்
  • இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

    ராயல் என்பீல்டு ஹிமாலயன் மட்டுமே யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளுக்கு இருக்கும் ஒரே ஒரு நேரடி போட்டி மாடல் ஆகும். எனினும் கேடிஎம் 250 அட்வென்ஜர் மற்றும் கேடிஎம் 390 அட்வென்ஜர் ஆகிய பைக்குகளையும் யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் போட்டியாக குறிப்பிடலாம்.

    டிரைவ்ஸ்பார்க் கருத்து

    இம்முறை யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. ஆனால் இந்த பைக்கை இன்னும் அதிக தூரம் ஓட்ட வேண்டும் என நினைக்கிறோம். அதனை நாங்கள் விரைவில் செய்வோம். அதுவரை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi adventure review design features engine performance riding impressions price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X