பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

யெஸ்டி பிராண்டிற்கு இந்தியாவில் அறிமுகமே தேவை இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் இது அந்த அளவிற்கு 80, 90களில் பிரபலமானதாக இருந்த மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஆகும். இருப்பினும் தற்கால இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

ஏனெனில் பிரபலமான யெஸ்டி பைக்காக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த ரோட்கிங் மாடலின் விற்பனை 1990களின் இறுதியில் நிறுத்தி கொள்ளப்பட்டது. அதன்பின் சந்தையில் யெஸ்டி பிராண்டின் பெயரும் சிறிது சிறிதாக ஓரங்கட்டப்பட்டது. ஆனால் இனி ஓரங்கட்ட முடியாத அளவிற்கு 3 புதிய மோட்டார்சைக்கிள்களுடன் யெஸ்டி ரீஎண்ட்ரி கொடுத்துள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இதில் யெஸ்டி அட்வென்ச்சர், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த மூன்றையும் சமீபத்தில் டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வாய்ப்பு நமது ட்ரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதில் ரோட்ஸ்டர் பைக்கில் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை விமர்சனமாக எழுதியுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

டிசைன் & ஸ்டைல்

பெயரில் மட்டுமில்லை, தோற்றத்திலும் ரோட்ஸ்டர் மாடல் பழமையான யெஸ்டி ரோட்கிங் பைக்கையே ஞாபகப்படுத்துகிறது. இவ்வளவு ஏன், இந்த புதிய பைக்கின் ஸ்டைலிற்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு பாகங்கள் கூட ரோட்கிங்-இல் இருந்து எடுக்கப்பட்டது போன்றே உள்ளன. இதற்கு மிக சிறந்த உதாரணமாக முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவிலான ஹெட்லேம்பை சொல்லலாம்.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இருப்பினும் புதிய ரோட்ஸ்டரில் ஹெட்லேம்ப் ஆனது பிராண்டின் லோகோ உடன் எல்இடி யூனிட்டாக வழங்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப இதனை குறைந்த ஒளியை வழங்கக்கூடியதாகவும், அதிக ஒளியை கொடுக்கக்கூடியதாகவும் மாற்றி கொள்ளலாம். தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற சற்று தாழ்வான க்ரூஸர் பைக்காக புதிய யெஸ்டி ரோட்ஸ்டர் விளங்கினாலும், இதன் ஹேண்டில்பார் நன்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இதில் இருந்து பழைய ரோட்கிங் பைக்கின் ரைடிங் நிலைப்பாட்டை இந்த புதிய பைக்கிலும் கொண்டுவர வடிவமைப்பாளர்கள் முயன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஹேண்டில்பாருக்கு மத்தியில் க்ரோம்-ஆல் சூழப்பட்ட வட்ட வடிவிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் க்ரோம் தொடுதல்களை பைக்கின் முன்பக்கத்தில் ஹெட்லேம்ப்பை சுற்றிலும் மற்றும் ஹேண்டில்பாரிலும் காண முடிகிறது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

அப்படியே பெட்ரோல் டேங்கிற்கு வந்தோமேயானால், வளைவுகளான முனைகளுடன் இதன் வடிவத்தையும் ரோட்கிங் பைக்கின் டேங்க்கிற்கு இணையானதாக கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முயற்சித்துள்ளது. இருப்பினும் தற்கால பைக்குகளில் வழங்கப்படுவதை போல பெட்ரோல் டேங்கிற்கு இரு பக்கங்களிலும் உராய்வு-தடுப்பு பேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் மட்டுமின்றி பைக்கின் மத்திய பேனல்களும் கூர்மையான லைன்களை கொண்டில்லாமல் கிளாசிக் தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

ஆனால் இவற்றை தவிர்த்து ரோட்ஸ்டரில் வழங்கப்பட்டுள்ள மற்ற பாகங்கள் அனைத்தும் ரெட்ரோ தொடுதல் உடன் மாடர்ன் தரத்தில் உள்ளன. என்ஜின் அமைப்பிற்கு முன்பாக ரேடியேட்டர் நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பில் ஓட்டுனருக்கான இருக்கை சற்று தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இதனால் நீண்ட தூர பயணங்களின்போதும் ஓட்டுனர் சவுகரியமான பயணத்தை எதிர்பார்க்கலாம். பயணிக்கான பின் இருக்கை சற்று உயரமாக ஏகப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ளது. டெயில்லேம்ப், இண்டிகேட்டர்கள் மற்றும் நம்பர் ப்ளேட் உள்ளிட்டவற்றை கொண்ட பைக்கின் பின்பகுதி மற்றும் பின்பக்க ஃபெண்டர் 90களில் விற்பனையில் இருந்த யெஸ்டி & ஜாவா பைக்குகளை நினைவூட்டுகின்றன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இத்துடன் என்ஜின் அமைப்பின் வடிவம் கூட ரோட்ஸ்டர் பைக்கின் ஸ்டைலிற்கு இணக்கமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லிக்யுடு-கூல்டு என்ஜினாக இருப்பினும், இதன் என்ஜின் அமைப்பில் சிலிண்டர் குளிர்விப்பு துடுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் இது பழமையான 2-ஸ்ட்ரோக் என்ஜினை போல் காட்சியளிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட ரோட்ஸ்டரின் எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பினை பற்றி கூறியே ஆக வேண்டும்.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

ஏனெனில் மற்ற இரு அட்வென்ச்சர், ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளில், என்ஜினில் இருந்து தாழ்வாக சென்று பின்னர் மேல்நோக்கி வளைக்கப்பட்ட ஸ்டைலிஷான எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரோட்ஸ்டரில் க்ரூஸர் ரக பைக் என்பதை வெளிக்காட்டும் விதமாக கிளாசிக் வடிவிலேயே இரட்டை-முனை எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இதுவும் ரோட்கிங்கில் இருந்து எடுக்கப்பட்டது போன்றே உள்ளது. இத்தகைய எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு மட்டுமின்றி, ஹேண்டில்பாருக்கு இறுதிமுனைகளில் பின்புறத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் அலாய் சக்கரங்கள் என மற்ற இரு புதிய யெஸ்டி பைக்குகளில் இருந்து வேறுப்படும் விதமாக சில அம்சங்களையும் புதிய ரோட்ஸ்டர் மாடல் பெற்றுள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

தொழிற்நுட்ப வசதிகள்

இவ்வாறு ரோட்ஸ்டரின் ஸ்டைலில் கவனமாக செயல்பட்டுள்ள யெஸ்டி நிறுவனம் இதன் தொழிற்நுட்ப அம்சங்களில் பெரியதாக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பைக்கை சுற்றிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, மொபைல் போன் சார்ஜிங்கிற்கு டைப்-ஏ மற்றும் டைப்-சி என இரு சார்ஜிங் துளைகள் வழங்கப்பட்டுள்ளன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

ஹேண்டில்பாருக்கு மத்தியில் வட்ட வடிவிலான எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது கியர் பொசிஷன், இருப்பில் இருக்கும் எரிபொருளின் அளவு, பயண தூரத்தை அளவிடுவதற்கு வெவ்வேறான மீட்டர்கள், வேகமானி, ஓடோமீட்டர் மற்றும் டச்சோமீட்டர் போன்ற வழக்கமான விபரங்களை வெளிக்காட்டுவதாகவே உள்ளது. மற்றப்படி மொபைல் போன் இணைப்பு வசதி எதுவும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இருப்பினும் இந்த பைக்கின் ஸ்விட்ச்கியர் புதியதாக இருக்கிறது, பயன்பாட்டின்போதும் சிறப்பான உணர்வை வழங்குகிறது. அதேபோல் மற்ற ஸ்விட்ச்கள் & பொத்தான்களும் மென்மையான பயன்பாட்டிற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ள இடம் மற்றும் ஃபினிஷிங் இன்னும் சிறப்பானதாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பது எங்களது கருத்து.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

என்ஜின் அமைப்பு & பயண அனுபவம்

யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் 334சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற இரு புதிய யெஸ்டி பைக்குகளிலும் இதே என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், ரோட்ஸ்டரை வாங்கும் க்ரூஸர் பைக் பிரியர்களின் தேவைக்கு ஏற்ப இந்த என்ஜின் அமைப்பில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

ரோட்ஸ்டர் பைக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,300 ஆர்பிஎம்-இல் 29.3 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 29 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது இதன் என்ஜினினால் அதிகப்பட்சமாகவே பைக்கிற்கு வழங்க இயலும் இயக்க ஆற்றல் இதுதான். குறைந்த என்ஜின் வேகத்தில் போதுமான உறுமல் சத்தம் கிடைக்கும் அதேவேளையில், மத்திய-ரேஞ்சில் பிக்-அப் மிக சிறப்பானதாகவே உள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

மற்ற யெஸ்டி பைக்குகளுடன் ஒப்பிடுகையில் ரோட்ஸ்டரில் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் குறைந்த என்ஜின் வேகத்திலேயே கிடைக்கிறது. அதாவது அதிக வேகத்தில் செல்ல வேண்டுமென்றால், மற்ற யெஸ்டி பைக்குகளை காட்டிலும் ரோஸ்டரில் சற்று குறைவாக ஆக்ஸலேரேட்டரை முறுக்கினாலே போதும். அதிகப்பட்சமாக மணிக்கு 100-இல் இருந்து 110kmph வேகத்தில் ரோட்ஸ்டர் பைக்கில் செல்லலாம்.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில், இந்த டாப் ஸ்பீடில் செல்லும்போது பைக்கில் சில அதிர்வுகளை உணர முடிந்தது. இருப்பினும் இது பெரிய பிரச்சனை இல்லை. டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த புதிய பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 6 கியர்கள், இவற்றை எந்தவொரு சூழலில் மாற்றும்போதும் எந்த இடையூறுகளும் இல்லை. டெஸ்ட் ரைடு செய்து பார்க்க எங்களுக்கு குறிப்பிட்ட நேரமே யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் கிடைத்தது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

ஆதலால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில் இதனை இயக்கி பார்க்க முடியவில்லை. இருப்பினும் நெடுஞ்சாலையில் அதிவேகத்திலும், சில வளைவுகளில் வேகமாகவும் இயக்கி பார்த்தோம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே கூறியதுபோல், இந்த பைக்கில் ஹேண்டில்பார் நன்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது, மேலும் ஓட்டுனர் இருக்கை சற்று தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் சவுகரியமான பயணத்திற்கு வித்திடுகின்றன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

சஸ்பென்ஷனுக்கு இந்த க்ரூஸர் பைக்கில் 135மிமீ டிராவல் உடன் டெலெஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், 100மிமீ டிராவல் உடன் இரட்டை ஷாக்குகள் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சஸ்பென்ஷன் அமைப்புகள் அவ்வளவாக விரைப்பானதாக இல்லை, சற்று மென்மையானதாகவே உள்ளன. தாழ்வான க்ரூஸர் பைக்கிற்கு இவ்வாறு இருந்தால்தான் நன்றாக இருக்கும். பிரேக்கிங் பணியை கவனிக்க முன் மற்றும் பின்பக்கத்தில் 320மிமீ மற்றும் 240மிமீ அளவுகளில் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

இவற்றுடன் கூடுதல் பாதுகாப்பிற்கு இரட்டை-சேனல் ஏபிஎஸ் நிலையான வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற 2 யெஸ்டி பைக்குகளை போல் ரோட்ஸ்டரில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் மோட்கள் வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக ரோட்ஸ்டரை இயக்கி பார்த்தது எங்களுக்கு அருமையான உணர்வை தந்தது. மீண்டும் பழமையான யெஸ்டி ரோட்கிங் பைக்கை இயக்கி பார்த்தது போன்ற உணர்வு கிடைத்தது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

நிறத்தேர்வுகள், விலை & போட்டி மாடல்கள்

யெஸ்டி ரோட்ஸ்டருக்கு ஸ்மோக் க்ரே, ஹண்டர் பச்சை, இரும்பின் நீலம், சின் சில்வர் மற்றும் அடர் க்ரே என மொத்த 5 நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஸ்மோக் க்ரே நிறத்துடனான ரோட்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,98,142 ஆகவும், அடுத்த இரண்டின் விலை ரூ.2,02,142 ஆகவும், அதற்கடுத்த இரு நிறத்தேர்வுகளில் இந்த க்ரூஸர் பைக்கின் விலை ரூ.2,06,142 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

எங்களை கேட்டால், இரும்பின் நீலம் மற்றும் ஹண்டர் க்ரீன் நிறங்களில் புதிய ரோட்ஸ்டர் பைக்கை வாங்குவது சிறந்ததாக இருக்கும். சின் சில்வர் மற்றும் அடர் க்ரே நிறத்தேர்வுகளில் பைக்கின் பெரும்பான்மையான பாகங்கள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாகங்களில் எக்ஸாஸ்ட் குழாயும் அடங்குகிறது. விற்பனையில் யெஸ்டி ரோட்ஸ்டருக்கு ராயல் என்பீல்டு மீட்டியோர் 350, ஜாவா 42, ஜாவா உள்ளிட்டவை விற்பனையில் போட்டியளிக்கக்கூடிய வகையில் உள்ளன.

பயண சவுகரியம் எப்படி இருக்கு? யெஸ்டி ரோட்ஸ்டர் டெஸ்ட் ரைடு ரிவியூ!! மீட்டியோர் 350 பைக்கை சமாளிக்குமா?

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

யெஸ்டி ரோட்கிங் பைக்கின் வாரிசு ஆக ரோட்ஸ்டர் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கே இந்த பைக்கினை தாரளமாக தேர்வு செய்யலாம். ரோட்கிங்-இல் கிடைத்த அளவிற்கு உறுமல் சத்தம் இதில் கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் அதே த்ரில்லிங்கான பயணத்திற்கு இந்த புதிய பைக் உறுதியளிக்கிறது. ஸ்டைலை பொறுத்தவரையில், குறிப்பாக என்ஜின் அமைப்பு கட்டுக்கோப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி.

Most Read Articles
English summary
Yezdi roadster review riding impressions engine specs performance features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X