செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஹூண்டாய் ஐ10 கார் இந்திய சந்தையில் கடந்த 2007ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையான ஹூண்டாய் சாண்ட்ரோவின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்பு, ஐ10 கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் சாண்ட்ரோ காரை விற்பனையில் இருந்து விலக்கிய பிறகு, அந்நிறுவனத்திடம் இருந்த ஒரே ஒரு எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் ஐ10 மட்டும்தான்.

ஹூண்டாய் சாண்ட்ரோவை போல், ஐ10 காரும் விற்பனையில் அமர்க்களப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியதால், மூன்றாம் தலைமுறை ஐ10 காரை, கிராண்ட் ஐ10 நியோஸ் என்னும் பெயரில், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

தற்போதைய தலைமுறை மாடலும் அட்டகாசமாகவே உள்ளது. இருந்தாலும் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தோம்.

அப்படி ஒரு நாளும் வந்தது. ஆம், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில், எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

டிசைன் & ஸ்டைல்

ட்யூயல் டோன் சிகப்பு மற்றும் கருப்பு வர்ணம் காரணமாக முதல் பார்வையிலேயே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் நம்மை வசீகரித்து விடுகிறது. இதன் முன் பகுதியில் கருப்பு நிற க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் வலது பக்கத்தின் மேலே டர்போ பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. க்ரில் அமைப்பின் இருபுறமும் பக்கவாட்டில், 7 எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் பிரகாசமாக ஒளிர்கின்றன.

ஹெட்லைட்டிற்கு உள்ளே மற்றும் பனி விளக்குகளை சுற்றிலும் என காரின் முன் பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான க்ரோம் வேலைப்பாடுகளை மட்டுமே காண முடிகிறது. காரின் ஸ்போர்ட்டியான தன்மையை தக்க வைப்பதற்காக குறைந்த அளவு க்ரோம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் முன் பக்க பம்பர், காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இனி காரின் பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் மிகவும் அழகான ட்யூயல் டோன் 4 ஸ்போக் அலாய் வீல்களை பெற்றுள்ளது. பக்கவாட்டு பகுதியிலும் பெரிதாக க்ரோம் வேலைப்பாடுகள் இல்லை. அதற்கு பதிலாக காரின் மேல் பாதி கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

பில்லர்கள், ஓஆர்விஎம்கள் மற்றும் மேற்கூரை ஆகியவை கருப்பு வண்ணத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூஃப் ரெயில்களையும் இந்த கார் பெற்றுள்ளது. சுறா துடுப்பு ஆன்டெனா, சக்கரங்கள் ஆகியவை காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கின்றன. இனி ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காருடைய பின் பகுதிக்கு நகர்வோம்.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இங்கே லோகோ மற்றும் பேட்ஜ்கள் வடிவில் கொஞ்சம் க்ரோம் பூச்சுகளை காண முடிகிறது. இடது பக்கத்தில் பெரிய கிராண்ட் ஐ10 பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பேட்ஜ்ஜை பார்க்க முடிகிறது. நடுவில் ஹூண்டாய் நிறுவனத்தின் லோகோ வழங்கப்பட்டிருப்பதுடன், அதற்கு கீழ் நியோஸ் என எழுதப்பட்டுள்ளது.

இது வழக்கமான கிராண்ட் ஐ10 நியோஸ் கார் என யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக வலது பக்கத்தின் கீழே சிறிய அளவில் டர்போ பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் டெயில் லைட்கள் ஹாலோஜென் பல்ப்களைதான் பெற்றுள்ளன. எனினும் எல்இடி ஸ்டாப் லைட் வழங்கப்பட்டுள்ளது.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் இன்டீரியருக்குள் செல்லலாம். இங்கே ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட கேபின் உங்களை வரவேற்கும். இந்த காரின் இன்டீரியர் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில், ட்யூயல்-டோன் டேஷ்போர்டு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் டர்போ வேரியண்ட் முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தை பெற்றுள்ளது.

அதே சமயம் ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கைகளில் சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகளை காண முடிகிறது. முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் பக்கெட் இருக்கைகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும். தொடைக்கு அதிக அளவு சப்போர்ட் இருக்கிறது.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஆரம்பத்தில் இது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும், சிறிது தூரம் ஓட்டிய பிறகு பழக்கமாகி விட்டது. இந்த காரின் இரண்டாவது வரிசை இருக்கைகளும் நன்றாக உள்ளன. மூன்று பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்யலாம். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காரின் ஏசியை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த காரின் ஏர்-கண்டிஷன் மிகவும் சிறப்பாக உள்ளது. ரியர் ஏசி வெண்ட்கள் இருப்பதால், கேபின் வேகமாக குளிர்ச்சியடைகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காரின் பூட் ஸ்பேஸ் 260 லிட்டர். ஆனால் ஸ்பிளிட் பின் பக்க இருக்கையை இந்த கார் பெறவில்லை. எனவே பொருட்களை வைப்பதற்கு கூடுதல் இடவசதி தேவைப்பட்டால், இருக்கையை முழுமையாக கீழே மடக்க வேண்டும்.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

டேஷ்போர்டின் மையப்பகுதியில் 7 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டச் ஸ்க்ரீன் இயக்குவதற்கு நன்றாக உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இது சப்போர்ட் செய்யும். இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழே க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

அத்துடன் டெம்ப்ரேச்சர் செட்டிங் வசதிகளுக்காக எல்சிடி ஸ்கீரினும் கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காரில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேக்கோமீட்டர் அனலாக் யூனிட் ஆகும். அதே சமயம் க்ளஸ்ட்டரின் மறு பாதியில் எம்ஐடி ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது.

வேகம், நேரம், டெம்ப்ரேச்சர் மற்றும் ட்ரிப்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த ஸ்க்ரீன் வழங்குகிறது. பிரகாசமான நேரத்திலும் எளிதாக தகவல்களை பார்க்கும் வகையில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் இரவு நேரத்தில் இது இன்னும் அருமையாக இருக்கிறது.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

3 ஸ்போக் ஸ்டியரிங் வீலை இந்த கார் பெற்றுள்ளது. சாஃப்ட்-டச் மெட்டீரியலால் அது சுற்றப்பட்டுள்ளதுடன், சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகளையும் பார்க்க முடிகிறது. ஸ்டியரிங் வீலின் இடது புறத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்ஜின் & ஹேண்ட்லிங்

இனி இந்த செய்தியின் முக்கியமான பகுதிக்கு வருவோம். இந்த காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அவ்ரா மற்றும் வெனியூ (அதிக பவரை உருவாக்கும் வகையிலான ட்யூனிங் உடன்) ஆகிய கார்களிலும் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காரில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இது கேட்பதற்கு பிரமாதமான பவர் மற்றும் டார்க் அவுட்போல் தெரியவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த காரின் எடை வெறும் 983 கிலோ மட்டுமே. இதன் காரணமாக மிகச்சிறப்பான செயல்திறன் வெளிப்படுவதுடன், ஓட்டுவதற்கும் அருமையாக உள்ளது. இந்த காரின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் 'ஷார்ப்' ஆக இருக்கிறது. கியர்களை மாற்றுவது மிகவும் எளிமையாக இருப்பதுடன், எந்த பின்னடைவையும் உணர முடியவில்லை.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

1500 என்ற ஆரம்ப நிலை ஆர்பிஎம்களில், பவர் டெலிவரி சற்றே மெதுவாக உள்ளது. ஆனால் மத்திய மற்றும் அதிகபட்ச ஆர்பிஎம்களில் பவர் டெலிவரி மிகவும் அருமையாக உள்ளது. அதாவது 3 இலக்க வேகத்தை தொடுவதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை.

மற்ற ஹூண்டாய் கார்களை போல் அல்லாமல், இந்த காரின் ஸ்டியரிங் வீல் சற்றே இறுக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது. இருந்தாலும் ஸ்டியரிங் வீலிடம் இருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸ் அட்டகாசமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு லேனில் இருந்து இன்னொரு லேனுக்கு மாறுவதில் எந்த பிரச்னையும் இல்லை. அத்துடன் மிக சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பையும் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது. நகரங்களில் இருக்கும் குண்டும், குழியுமான சாலைகளை எந்த பிரச்னையும் இன்றி இந்த கார் கடக்கிறது.

அத்துடன் அதிக வேகத்தில் செல்லும்போதும் பாடி ரோலை பெரிய அளவில் உணர முடியவில்லை. எனவே இந்த காரின் கையாளுமை மிகச்சிறப்பாக உள்ளது என்றே சொல்லலாம்.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

அதேபோல் காரின் என்விஹெச் லெவல்களிலும் ஹூண்டாய் நிறுவனம் நன்றாக வேலை செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வெளிப்புற சத்தம் கேபினிற்குள் பெரிய அளவில் நுழைவதில்லை.

அதே சமயம் இன்ஜின் சத்தத்தை பொறுத்தவரை, 3,000 ஆர்பிஎம் வரையில் கார் மிகவும் அமைதியானதாக உள்ளது. ஆனால் அதன்பின் இன்ஜின் சத்தம் சற்றே கேபினிற்குள் நுழைகிறது.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

எரிபொருள் சிக்கனத்தை பொறுத்தவரை, இந்த கார் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கிறது. நாங்கள் இதனை நகர பகுதியில் சோதனை செய்தபோது லிட்டருக்கு 9 மற்றும் 12 கிலோ மீட்டர்களுக்கு இடையிலான மைலேஜ் கிடைத்தது. ஆனால் இது சோதனைதான். எனவே சரியான முறையில் ஓட்டினால், இந்த கார் மிக எளிதாக லிட்டருக்கு 13 முதல் 14 கிலோ மீட்டர்கள் வரையிலான மைலேஜை கடக்கும். நெடுஞ்சாலைகளில் இதை விட அதிகமாக கிடைக்கலாம்.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில், டர்போ பெட்ரோல் இன்ஜின் செயல்படும் விதமானது எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஆர்வலர்களை கவரக்கூடிய மாடல் என்பதால், ஆரம்பத்தில் இருந்து காரை திரும்ப ஒப்படைக்கும் வரை நாங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தோம். சிறப்பான அனுபவங்கள் கிடைத்தன. பவர் டெலிவரியும், இலகுவான எடை காரணமாக வெளிப்படும் அருமையான செயல்திறனும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ காரை மிகச்சிறப்பானதாக மாற்றுகின்றன.

செம பெர்ஃபார்மென்ஸ்! டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்! டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடல், ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ட்யூயல் டோன் என இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டின் விலை 7.70 லட்ச ரூபாய் எனவும், ஸ்போர்ட்ஸ் ட்யூயல் டோன் வேரியண்ட்டின் விலை 7.75 லட்ச ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

அட்டகாசமான வண்ணம், கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் சிறப்பான செயல்திறனுடன் ஸ்போர்ட்டியான ஹேட்ச்பேக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு, க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ நல்ல தேர்வாக இருக்கும்!!

Most Read Articles

English summary
2020 Hyundai Grand i10 Nios Turbo-Petrol Test Drive Review - Performance, Handling, Mileage. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X