கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் டூஸான் காரை கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் எஸ்யூவி இதுதான். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே ஹூண்டாய் நிறுவனம் டூஸான் எஸ்யூவிக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் புதுப்பொலிவு கொடுத்து, ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரின் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் டூஸான் எஸ்யூவியின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை, ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 22.30 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரும்) என்ற ஆரம்ப விலையில் புதிய டூஸான் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலை போன்றேதான் விற்பனைக்கு வந்த மாடலும் உள்ளது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக புதிய டூஸான் எஸ்யூவியை எங்களால் உடனடியாக டெஸ்ட் டிரைவ் செய்ய முடியவில்லை. எனினும் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஜிஎல்எஸ் 4 வீல் டிரைவ் (GLS 4WD) வேரியண்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. இதன் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஏராளமான புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. டெஸ்ட் டிரைவ்வின் போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

டிசைன் & ஸ்டைல்

இந்த காரின் முன் பகுதியை பொறுத்தவரை நேர்த்தியான தோற்றத்தில் காணப்படும் எல்இடி ஹெட்லைட் யூனிட்கள்தான் முதலில் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக உள்ளன. அதற்கு அப்படியே கீழாக பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஹாலோஜன் விளக்குகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் பனி விளக்குகள் அறையை சுற்றி, எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் முழு எல்இடி செட்அப் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

முன்பகுதியில் வழங்கப்பட்டுள்ள பெரிய க்ரில் அமைப்பை சுற்றிலும் கணிசமான அளவிற்கு க்ரோம் பூச்சுக்களை பார்க்க முடிகிறது. அத்துடன் இதன் ஹூட்டில், மெல்லிய கோடுகளையும் நீங்கள் காணலாம். இது காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக முன் பகுதியில் இந்த எஸ்யூவி கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, புத்தம் புதிய 18 இன்ச் மல்டி-ஸ்போக் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது நன்றாக இருப்பதுடன், இந்த காரின் ஒட்டுமொத்த அளவுடன் நன்றாக பொருந்தி போகிறது. அத்துடன் வீல்களை சுற்றிலும் கருப்பு நிற கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 172 மிமீ மட்டுமே. ஆனால் இது அவ்வளவு சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கிடையாது. இந்த க்ரவுண்ட் க்ளியரன்ஸை வைத்து கொண்டு ஒரு சில கரடுமுரடான நிலப்பரப்புகளை இந்த எஸ்யூவி வெற்றிகரமான எதிர்கொண்டு விட்டாலும், மிகவும் கடினமான ஆஃப்ரோடு பயணங்களின்போது தடுமாறி விடும்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த காரில் ஒருங்கிணைந்த இன்டிகேட்டர் உடன் பாடியின் நிறத்திலேயே ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் மேற்கூரை கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுறா துடுப்பு ஆன்டெனாவையும் இது பெற்றுள்ளது. அத்துடன் வலிமையான ரூஃப் ரெயில்களும் வழங்கப்பட்டுள்ளன.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த எஸ்யூவியின் பின் பகுதியை பொறுத்தவரை, எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது பூட் லிட்டில் கொஞ்சமும், பாடியில் மீதியும் என இரண்டு பிரிவாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒட்டுமொத்த டெயில்லைட் செக்ஸனும் எல்இடி கிடையாது. டர்ன் சிக்னல் மற்றும் ரிவர்ஸ் லைட்களில், ஹாலோஜன் பல்புகள்தான் வழங்கப்பட்டுள்ளன. பின் பகுதியிலும் ஓரளவிற்கு க்ரோம் பூச்சுகள் உள்ளன. பூட்டின் இருபுறமும் டூஸான் மற்றும் HTRAC (4x4) பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த காரில் எலெக்ட்ரானிக் பூட் லிட் இடம்பெற்றுள்ளது. எனவே உங்கள் கை முழுக்க லக்கேஜ் இருந்தாலும் எளிமையாக கையாள முடியும். ஆனால் பூட் லிட் கொஞ்சம் மெதுவாகதான் திறக்கிறது. மேலும் இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவும் இடம்பெற்றுள்ளது. நெருக்கடியான இடங்களில் பார்க்கிங் செய்ய இது உதவி செய்யும். இந்த கார் 360 டிகிரி கேமரா வசதியை பெறும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது இல்லை. எனினும் முன் பகுதியிலும் பார்க்கிங் சென்சார்கள் இருப்பதால், பார்க்கிங் செய்யும் வேலை கொஞ்சம் எளிதாக இருக்கும்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இன்டீரியர்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கு விசாலமான கேபின் நம்மை வரவேற்கிறது. காருக்குள் ஏறி, இறங்குவது கடினமான வேலையாக இல்லை. சுலபமாகதான் உள்ளது. ஹூண்டாய் டூஸான் காரின் டாப் வேரியண்ட்டான ஜிஎல்எஸ் 4 வீல் டிரைவ் மாடலில், முற்றிலும் கருப்பு வண்ண கேபின் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை கொடுக்கிறது. இந்த காரின் டேஷ்போர்டு ஒற்றை வண்ணத்தில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பிரீமியமாக உள்ளது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த காரின் ஸ்டியரிங் வீல் லெதரால் சுற்றப்பட்டுள்ளது. இது பிடிப்பதற்கு அருமையாக உள்ளதுடன், நல்ல க்ரிப் கிடைக்கிறது. ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்கள், ஓட்டுனர் சாலையில் கவனம் செலுத்த உதவி செய்கின்றன. பாடல்களை மாற்றவோ அல்லது தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அவர்கள் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை அடிக்கடி பார்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வருகிறது. அத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ப்ளூலிங்க் கனெக்டட் டெக்னாலஜியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் சவுண்டு சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதுவும் அருமையாக உள்ளது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

மறுபக்கம் இந்த காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் சற்றே பழைய தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் டேக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டருக்கு இரண்டு அனலாக் டயல்கள்தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு டயல்களுக்கும் நடுவே எம்ஐடி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. கார் பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. ஸ்டியரிங் வீலில் உள்ள பட்டன்கள் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இருக்கைகளை பொறுத்தவரை முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் மிகவும் சௌகரியமாக உள்ளன. எங்களிடம் கார் குறுகிய நேரம் மட்டுமே இருந்தது. எனினும் நீண்ட தூர பயணங்களின்போது நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளையும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். என்றாலும் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே லம்பர் அட்ஜெஸ்மெண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

பின் பகுதி இருக்கைகளை பொறுத்தவரை, முதுகுக்கு அவை நல்ல சப்போர்ட்டை வழங்குகின்றன. அத்துடன் போதுமான அளவிற்கு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உள்ளது. ஆனால் இரண்டாவது வரிசை இருக்கைகளில், கீழ் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கவில்லை. எனினும் அவை சௌகரியமாகதான் உள்ளன. இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் பெரிய பனரோமிக் சன் ரூஃப்பை வழங்கியுள்ளது. இது கேபினை பெரிதாக காட்டுவதுடன், நீங்கள் சூரிய வெளிச்சத்தை அனுபவிக்கவும் உதவி செய்கிறது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

ஹூண்டாய் டூஸான் காரின் பூட் ஸ்பேஸ் சுமார் 500 லிட்டர்கள். இது நல்ல பூட் ஸ்பேஸ்தான். 5 பயணிகளின் லக்கேஜ்களை எளிதாக வைத்து கொள்ளலாம். அத்துடன் 60:40 ஸ்பிளிட் வசதியும் உள்ளது. தேவைப்படும் நேரங்களில், பின் வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொள்வதன் மூலம் பூட் ஸ்பேஸை அதிகரித்து கொள்ள முடியும்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளையும் ஹூண்டாய் டூஸான் பெற்றுள்ளது. டாப் டீசல் வேரியண்ட்டில் (ஜிஎல்எஸ்), 4 வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் என இரண்டுமே டர்போசார்ஜர் கொண்ட 2 லிட்டர் யூனிட்கள்தான். இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த காரில், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படவில்லை. நாங்கள் ஓட்டியது டீசல் வேரியண்ட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த காரின் சஸ்பென்ஸன் செட்அப் எங்களை வெகுவாக ஈர்த்தது. மிகவும் மென்மையான இந்த சஸ்பென்ஸன் செட்அப், உங்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்கும். இது பெரிய எஸ்யூவி என்பதால், பாடி ரோல் கொஞ்சம் இருக்கவே செய்தது. ஆனால் இந்த அளவில் உள்ள மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடும்போது, பாடி ரோல் கொஞ்சம் குறைவாக உள்ளது என கூறலாம்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

இந்த காரில் டிஃப்ரன்ஷியல்-லாக் (Differential-lock) வழங்கப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ் ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ள இது அனுமதிக்கிறது. நீங்கள் நகர பகுதிகளில் கார் ஓட்டுவதாக இருந்தால், இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்து கொள்ளலாம். அப்போது முன் சக்கரங்கள் மட்டும் தங்கள் பணியை செய்யும். இதன் மூலம் நீங்கள் எரிபொருளை சேமிக்க முடியும். அத்துடன் ஆட்டோ-ஹோல்டு, ஹில்-கிளிம்ப் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

ஈக்கோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. ஈக்கோ மோடில் நீங்கள் அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தை பெறலாம். அதே சமயம் திராட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் ஸ்டியரிங் வீல் இலகுவான உணர்வை தருகிறது. ஓரளவிற்கு சிறப்பான திராட்டில் ரெஸ்பான்ஸ் உடன் நீங்கள் நகர சாலைகளில் பயணம் செய்ய கம்ஃபோர்ட் மோடை தேர்வு செய்யலாம். ஸ்போர்ட் மோடில் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் அட்டகாசமாக உள்ளது. அத்துடன் ஸ்டியரிங் வீல் சற்றே இறுக்கமாக மாறுவதையும் உணர முடியும். நம்பிக்கையுடன் ஓட்டலாம் என்பதால், இது நல்ல விஷயம்தான். இந்த காரின் ஸ்டியரிங் வீலில் எந்த குறையும் இல்லை. லேன்கள் மாறுவது எளிதாக உள்ளது. 1,700 என்ற குறைவான ஆர்பிஎம் அளவிலேயே டார்க் திறன் அருமையான அளவில் வெளிப்படுகிறது. 4,500 ஆர்பிஎம் என்ற அளவில் சிகப்பு கோடுகளை தொடுகிறது.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

ஹூண்டாய் டூஸான் கார் எங்களிடம் நீண்ட காலம் இல்லை என்பதால், மைலேஜை பரிசோதிக்க முடியவில்லை. என்றாலும் 62 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வழங்கப்பட்டுள்ளதால், ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில், 550 கிலோ மீட்டர்களை ஹூண்டாய் டூஸான் கடக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.

கலக்கலான எஸ்யூவி... எப்படி இருக்கு ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சிறப்பாக உள்ளன. ஆனால் முழு எல்இடி லைட் செட்அப், 360 டிகிரி கேமரா மற்றும் பேடில் ஷிஃப்டர் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே போல் க்ரவுண்ட் க்ளியரன்சும் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்களில் எல்லாம் ஆர்வம் இல்லை என்றும், சௌகரியமான அதே சமயம் சிறப்பான செயல்திறனை வழங்க கூடிய ஒரு எஸ்யூவி கார் வேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால், ஹூண்டாய் டூஸானை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

Most Read Articles

English summary
2020 Hyundai Tucson Facelift First Drive Review: Engine Performance & Handling. Read in Tamil
Story first published: Friday, October 23, 2020, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X