அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் எஸ்யூவி காரை கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கை மற்றும் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு ஹாரியர்தான். மாடர்ன் ஸ்டைல் மற்றும் பல்வேறு அட்டகாசமான வசதிகளுடன் டாடா ஹாரியர் விற்பனைக்கு வந்தது.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

எனவே ஆரம்பத்தில் இதன் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் பின்னர் வந்த மாதங்களில் ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை மந்தமாக தொடங்கியது. ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை டாடா நிறுவனம் வழங்காதது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. இறுதியாக ஹாரியர் காரில், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை டாடா தற்போது அறிமுகம் செய்துள்ளது.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

புதிய கியர் பாக்ஸை வழங்கியிருப்பதுடன் சேர்த்து, 2020 ஹாரியர் காரின் இன்ஜினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மேம்படுத்தியும் உள்ளது டாடா மோட்டார்ஸ். இதன் சக்தியும் கூட கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் சவாலான எஸ்யூவி செக்மெண்ட்டில், டாடா ஹாரியர் விட்ட இடத்தை பிடிக்க இந்த அப்டேட்கள் உதவி செய்யுமா? அல்லது மிகவும் தாமதமாக இந்த அப்டேட்களை டாடா வழங்கியுள்ளதா? என்ற கேள்விகளுக்கு விடை காணலாம் வாருங்கள்.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

டிசைன் & ஸ்டைல்

சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலை போன்றேதான் 2020 டாடா ஹாரியர் பிஎஸ்-6 மாடலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் 'இம்பேக்ட் 2.0' டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு ஹாரியர்தான். 2020 மாடலுக்கும் இந்த டிசைன் அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளது. சொல்லிக்கொள்ளும்படியான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

இந்த காரின் டிசைன் பற்றிய தகவல்களை முன்பகுதியில் இருந்து தொடங்கும். 2020 டாடா ஹாரியர் எஸ்யூவி, அதே ட்யூயல்-எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்களுடன்தான் வந்துள்ளது. எல்இடி டிஆர்எல் மேலாகவும், மெயின் புரோஜெக்டர் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் கீழாகவும் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரின் மீது பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

பனி விளக்குகள் அறையை சுற்றிலும், மெல்லிய குரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் முன்பக்க க்ரில் அமைப்பானது, பழைய மாடலை போன்றேதான் உள்ளது. இனி 2020 டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகளுக்கு நகர்வோம். இங்கே புதிய 17 இன்ச் அலாய் வீல் டிசைனையும், புது தோற்றத்தில் விங் மிரர்களையும் நம்மால் காண முடிகிறது.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

மேற்கண்ட இரண்டு மாற்றங்களையும் தவிர, இந்த பகுதியில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால் 2020 ஹாரியர் எஸ்யூவி காருடன் புதிய கலர் ஆப்ஷன்களை டாடா அறிமுகம் செய்துள்ளது. இதன்படி சிக்னேச்சர் கேலிப்ஸோ ரெட், கோகோ ஸ்பார்க்கிள், ஆர்கஸ் ஒயிட், பிளாக் டார்க் எடிசன் மற்றும் டோலெஸ்டோ கிரே ஆகிய கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

இன்டீரியர் மற்றும் நடைமுறை பயன்பாடு

வெளிப்புறத்தை போலவே, 2020 டாடா ஹாரியர் காரின் கேபினிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பழைய மாடலின் கேபின் வசதிகளான 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை புதிய ஹாரியர் பிஎஸ்-6 மாடலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

அதே போன்று பல்வேறு கண்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டியரிங் வீலும் வழங்கப்பட்டுள்ளது. பழைய மாடலை போலவே, புதிய மாடலின் கேபினும் பிரீமியமாகதான் உள்ளது. ஆனால் உற்று கவனிக்கும்போது ஒரு சில அப்டேட்கள் செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பனரோமிக் சன் ரூஃப் சேர்க்கப்பட்டிருப்பது புதிய ஹாரியரின் முக்கியமான அப்டேட்களில் ஒன்றாக உள்ளது.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

இதனால் முன்பை காட்டிலும் கேபின் தற்போது இன்னும் நன்கு பிரீமியமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அத்துடன் நன்கு கற்றோட்டமான உணர்வையும் கொடுக்கிறது. இதுதவிர மின்னணு முறையில் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் இருக்கை, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விம் உள்ளிட்ட வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே முந்தைய மாடலில் இல்லை.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

அதே சமயம் முன் மற்றும் பின்பக்க இருக்கைகள் பழைய மாடலை போலவே சௌகரியமான பயணத்திற்கு துணை நிற்கின்றன. காருக்கு உள்ளே ஏறி, இறங்குவதும் சுலபமாகவே இருக்கிறது. பூட் ஸ்பேஸ் மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம் டாடா நிறுவனம் 60:40 பின்பக்க ஸ்பிளிட் இருக்கையை வழங்குகிறது. இதன்மூலம் லக்கேஜ் கெபாசிட்டியை அதிகரித்து கொள்ள முடியும்.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

வேரியண்ட்கள், முக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு

XE, XMA, XT, XZ, XZ+, XZA மற்றும் XZA+ ஆகிய வேரியண்ட்களில் புதிய 2020 டாடா ஹாரியர் எஸ்யூவி கிடைக்கும். புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல்வேறு வசதிகளும், உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

2020 டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் முக்கிய வசதிகள்

  • செனான் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்
  • ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப்ஸ்
  • ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
  • லம்பர் சப்போர்ட் உடன் மின்னணு முறையில் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை
  • 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்
  • 7 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
  • லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி
  • 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள்
  • பனரோமிக் சன் ரூஃப்
  • கீலெஸ் எண்ட்ரி
  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்
  • ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்
  • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடிக்க கூடிய ஓஆர்விஎம்கள்
  • ஸ்டியரிங் வீலில் கண்ட்ரோல்கள்
  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • 2020 டாடா ஹாரியர் காரின் முக்கியமான பாதுகாப்பு வசதிகள்

    • 6 ஏர் பேக்குகள்
    • இபிடி உடன் ஏபிஎஸ்
    • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
    • ஆஃப் ரோடு ஏபிஎஸ்
    • ஹில் டெசண்ட் கண்ட்ரோல்
    • ஹில் ஹோல்டு அஸிஸ்ட்
    • கார்னரிங் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
    • ரிமோட் சென்ட்ரல் லாக்கிங்
    • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
    • டிராக்ஸன் கண்ட்ரோல்
    • ரோல் ஓவர் மிட்டிகேஷன்
    • பெரிமெட்ரிக் அலாரம் சிஸ்டம்
    • அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

      2020 டாடா ஹாரியரில் செய்யப்பட்ட மிகப்பெரிய அப்டேட் அதன் இன்ஜின்தான். டாடா ஹாரியர் தற்போது மேம்படுத்தப்பட்ட பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான டீசல் இன்ஜின் உடன் வருகிறது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் பவர் அவுட்புட் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020 டாடா ஹாரியர் காரில் அதே 2.0 லிட்டர் ‘Kryotec' டீசல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

      அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      ஆனால் இந்த இன்ஜின் தற்போது பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த இன்ஜின் 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உடன் ஸ்டாண்டர்டு 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதனுடன் புதிதாக 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.

      அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      மேம்படுத்தப்பட்ட இந்த இன்ஜின் பவர்ஃபுல்லாக இருக்கும் உணர்வை உடனடியாக தருகிறது. பவர் மற்றும் டார்க் நன்றாக உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஹாரியர் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்மூத் ஆக இருக்கிறது. எனினும் புதிய ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனில், கியர் ஷிப்களுக்கு இடையே சிறிய தடுமாற்றத்தை உணர முடிகிறது.

      அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      2020 ஹாரியர் எஸ்யூவி காரில் சஸ்பென்ஸன் செட் அப்பையும் டாடா நிறுவனம் நன்றாக மேம்படுத்தியுள்ளது. குண்டும், குழியுமான சாலைகளிலும் கூட பயணிப்பதற்காக உகந்த காராக இது உள்ளது. அதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீல் குறைவான வேகத்தில் இலகுவானதாகவும், அதிக வேகத்தில் எடை கூடியது போன்ற உணர்வையும் தருகிறது.

      அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      மேலும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது நல்ல நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் சிறிய அளவில் பாடி ரோல் இருக்கிறது. எனினும் கட்டுப்பாட்டை இழப்பதை தடுக்கும் வகையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இந்த காரில் உள்ளன. அதேபோல் பிரேக்குகளும் மிகவும் ஷார்ப் ஆக உள்ளன. காரை எளிதாக நிறுத்த முடிகிறது.

      அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

      பழைய பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடுகையில், 2020 டாடா ஹாரியர் நிச்சயமாக மிகப்பெரிய அப்டேட்தான். 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டிருப்பதுடன், இன்ஜினும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடல் உடன் ஒப்பிடுகையில், பெர்ஃபார்மென்ஸ் மற்றும் கையாளுமை மிகவும் சிறப்பாக இருக்கிறது.

      அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

      மேலும் பெரிய பனரோமிக் சன் ரூஃப் உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக சேர்த்திருப்பதும் சிறப்பான விஷயம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தெரிவித்த சிறு சிறு குறைகளை கேட்டு, அதற்கு ஏற்ப முந்தைய மாடலில் இல்லாத வசதிகளை, தற்போதைய புதிய மாடலில் கூடுதலாக சேர்த்திருப்பது போன்று தெரிகிறது.

Most Read Articles
English summary
2020 Tata Harrier SUV BS6 Automatic Review: Test Drive Impressions, Performance, Features, specs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X