சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த கார் எப்படி இருக்கிறது? பழைய காருக்கும் புதிய அப்டேட்டிற்கும் என்ன வித்தியாசம்? இவற்றைத் தெரிந்து கொள்ள அந்த காரை நாங்கள் ரிவியூ செய்தோம் அதைக் காணலாம் வாருங்கள்.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாகத் தனது ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. அந்த காலம் தான் இந்தியாவில் எஸ்யூவி கார்கள் சிறப்பாக விற்பனையாகும் கார்களாக மாறியது. அன்று முதல் இன்று வரை எஸ்யூவி கார்கள்தான் இந்திய மக்கள் அதிகமாக விரும்பி வாங்கும் கார்களாக இருக்கிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

அதற்கு ஹூண்டாய் வென்யூ காருக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார்கள் குறித்த பட்டியல்கள் வெளியாகும் போது எல்லாம் ஹூண்டாய் வென்யூ காரும் அதில் இடம் பெறும். இந்திய மார்கெட்டில் அடுத்தடுத்து பல கம்பேக்ட் எஸ்யூவி கார்கள் வெளியான போதும் ஹூண்டாய் வென்யூ கார் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்யும் தரும் வந்துவிட்டதாகக் கருதி தற்போது அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிசைன்,ஸ்டைல், பல புதிய அம்சங்களுடன் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை ரூ7.53 லட்சம் முதல் ரூ12.47 லட்சம் என்ற மதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எப்படி இருக்கிறது? இதை டெஸ்ட் செய்ய டிரைவ்ஸ்பார்க் குழு ஹைதராபாத் விரைந்தோம். எங்கள் டிரைவிங் அனுபவத்தை அங்கு உங்களுடன் பகிர்கிறோம்.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

இந்த பகுதியில் தான் ஹூண்டாய் வென்யூ கார் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. தற்போதைய டிசைன் காருக்கு ஒரு புத்தம் புதிய லுக்கை பெற்றுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் புதிதாகக் கொண்ட வரப்பட்டுள்ள டிசைன் மிகவும் சிம்பிள் டிசைனாக இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்த அமைப்பில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பழைய காரை விட இந்த கார் நிச்சயம் வித்தியாசமான லுக்கை பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும்.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

புதிய ஹூண்டாய் வென்யூ காரில் முகப்பு பகுதியைப் பொருத்தவரை பல மாற்றங்கள் பெற்றுள்ளது. முக்கியமாக கிரில் பகுதியைப் பொருத்தவரை பாராமெட்ரிக் ஜூவல் கிரில் என்ற டிசைன் மாற்றப்பட்டுள்ளது. இந்த கிரில் டார்க் க்ரோம் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஃபேன்சி க்ரோம் இதில் இல்லை.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

ஹெட்லைட்களை பொருத்தவரை ஸ்பிலிட் ஹெட்லைட் அம்சம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஸ்பிலிட் ஹெட்லைட்டின் மேல் பகுதி பெரியதாக, கணமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இது கிரில் உடன் கனெக்ட் செய்யப்பட்டது போல லுக்கை தருகிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

ஸ்பிலிட் ஹெட்லைட்டின் கீழ்ப் பகுதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன் டிசைன் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் பழைய காரில் அதைச் சுற்றி க்ரோம் பட்டைகள் இருக்கும். புதிய டிசைனில் க்ரோம் பட்டைகளுக்குப் பதிலாக எல்இடி டிஆர்எல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்லைட்களாக எல்இடி புரோஜெக்டர் மற்றும் ரிஃப்லெக்டர் ஹெட் லைட்கள் லோ மற்றும் ஹை பீம்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

காரின் பம்பர் பகுதியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய டிசைன் நேர் கோட்டையும், சில்வர் ஸ்கிட் பிளேட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கிட் பிளேட்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது காரில் பக்கவாட்டு பகுதியில் உள்ள பாடி கிளாடிங்கின் கலரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது முக்கியமான அம்சமாகிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

காரில் வீலை பொருத்தவரை ஓல்டு டர்பைன் ஸ்டைல் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருந்தது அதுவும் தற்போது மாற்றப்பட்டு பிரிமியம் மல்டி ஸ்போக் அலாய் வீலாக மாற்றப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை பழைய வென்யூ காரை விட புதிய கார் பார்க்க பெரியதாக இருக்கும்படி மாற்றியுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

பின்பக்கத்தைப் பொருத்தவரை கனெக்ட்டெட் டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது காருக்கான பிரிமயம் அப்பீலை கொடுக்கிறது. பம்பர் பகுதியும் முன்பக்க பம்பர் போல நேர் கோடு டிசைனை பெற்றுள்ளது. மேல் பகுதியில் ஷார்க் ஃபின் ஆண்டனா ரூஃப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

உட்புற கட்டமைப்பு

காரின் கதவுகளைத் திறக்கும் ஹேண்டில் பார்கள் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன. காருக்குள் இருந்த க்ரே தீம் இந்த புதிய காரில் கருப்பு மற்றும் ஐவரி நிறத்திலால் ஆன டூயல் டோன் தீமாக மாற்றப்பட்டுள்ளது. இது காரின் உள்ளே இருக்கும் அனுபவத்தை வித்தியாசமாக்கியுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

கேபின் லேஅவுட்களை பொருத்தவரை பெரிய அளவில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. முன்பகுதியில் டிரைவர் சீட்டை பொருத்தவரை பிரிமியம் 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயே பல கண்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான கலர் ஸ்கிரில் பல தகவல்கள் இதில் டிஸ்பிளே ஆகிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

டேஷ்போர்டின் மத்திய பகுதியைப் பொருத்தவரை 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனை இன்ஃபோடெயின்மெண்ட் உடன் இணைப்பது சுலபமாக இருக்கிறது. ஆனால் ஹூண்டாய் வென்யூ போன்ற காருக்கு 8 இன்ச் ஸ்கிரீன் சிறிது போலத் தோன்றுகிறது. இன்னும் பெரிதாகக் கொடுத்திருக்கலாம்.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

இது போலப் பழைய காரிலிருந்த ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரால், சிங்கிள் பேன் சன்ரூப், வயர்லெஸ் போன் சார்ஜிங், உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரிலும் இடம் பெற்றுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

இது போல மேலும் பல புதிய அம்சங்கள் இந்த புதிய காரில் சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக டிரைவர் சீட் பவர் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது. இது டிரைவருக்கு வசதியை வழங்குகிறது. இதற்கான பட்டன்கள் டிரைவர் சீட்டின் அருகிலேயே வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல புதிய காரில் ஆட்டோமெட்டிக் ஏர் ப்யூரிஃபயர் மற்றும் ஆம்பியஸ்ட் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

அம்சங்களைப் பற்றிப் பேசும் போது முக்கியமான ஒரு அம்சத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த கார் ஆலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் சப்போர்ட் உடன் இயங்குகிறது. நீங்கள் இந்த காரில் அமர்ந்த படியே அலெக்ஸாவிற்கும் கூகுளுக்கும் கமெண்ட் செய்து உங்களுக்கு வேண்டிய விஷயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமல்ல ஹூண்டாய் ப்ளுலிங்க் சாஃப்ட்வேர் மூலம் கனெக்டெட் தொழிற்நுட்பத்தை வழங்குகிறது. இது 60 விதமான கனெக்டெட்ட அம்சங்களை வழங்குகிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

கம்ஃபோர்ட்,பிராக்டிகாலிட்டி மற்றும் ஃபூட் ஸ்பேஸ்

கம்ஃபோர்ட் மற்றும் பிராக்டிக்கல் காரை வழங்குவதில் ஹூண்டாய் நிறுவனம் பெயர் பெற்றது. இந்தியாவில் விற்பனையாகும் அதிக பிராக்கல் வசதி கொண்டா கார்களில் சிறிய ரக கார் தான் வென்யூ தான். இந்த சீட்கள் நல்ல கம்ஃபோர்ட்டை வழங்குகிறது. டிரைவருக்கான பவர்டு சீட் வழங்கப்பட்டது. இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

காரின் ஏசி பவர் புல்லாக இருக்கிறது. கோபினை விரைவாகக் குளிர்விக்கிறது. காரின் பின்புற சீட் சிறப்பான கம்ஃபோர்ட் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. பின்பக்க சீட் 2 ஸ்டீப் ரெக்லைன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட் காரிலேயே இந்த வசதி சீட் இருப்பது இந்த காரில் தான். புதி காரில்பின் பக்கம் அதிக கம்ஃபோர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீட்கள் சப்போர்ட்டிவாக இருக்கிறது. காரின் உயரம், கால் வைக்க அதிக இடம் மற்றும் முட்டிக்கு அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

பிராக்டிகாலிட்டியை பொருத்தவரையிலும் இந்த கார் சிறப்பாக இருக்கிறது. காரின் கிளவ் பாக்ஸ் பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. டோர் பாக்கெட்களும் அதிக பொருட்களை வைத்துக்கொள்ளும் அளவிற்கு இருக்கிறது. முக்கியமாக காரில் வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜ் வசதி இருக்கிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

காரின் பூட் ஸ்பேஸ் பகுதியைப் பொருத்தவரை 350 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏராளமான லக்கேஜ்களை வைத்துக்கொள்ளலாம். இது மட்டுமல்ல பின்பக்க சீட்களை மடக்கினால் மேலும் அதிகமாக இட வசதியும் இந்த காரில் கிடைக்கும் படியும் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

இன்ஜின் பெர்பாமென்ஸ் மற்றும் டிரைவிங் இம்பிரஷன்

இந்த ரிவியூவில் இந்த பகுதி தான் சற்று பெரிதாக இருக்கும். ஏன் என்றால் ஹூண்டாய் நிறுவனம் வென்யூ காரில் ஏகப்பட்ட பவர் டெரைன் காம்பினேஷன்களை இந்த கருடன் வழங்குகிறது. தற்போது பழைய காரில் உள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்கள் தான் இந்த காரிலும் உள்ளது. இதன் ஃபெர்பாமென்ஸ்களில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

நாங்கள் டெஸ்ட் செய்த கார் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கார், நாங்கள் ஐஎம்டி முற்றும் டிசிடி கியர் பாக்ஸ் இரண்டிலும் டெஸ்டிங்கை செய்தோம். பழைய கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்ததோ அதே போலவே புதிய காரும் அமைந்துள்ளது. இந்த இன்ஜனினும் பெப்பி இன்ஜினினாக,ஓட்டுவதற்குச் சிறப்பான அனுபவத்தை வழங்கியது. மிகச் சில இடங்களில் டர்போ லேக் இருந்தது. ஆனால் காரின் ஒட்டும் மொத்த பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருந்தது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

ஆனால் அதிகமான வேகத்தில் செல்லும் போது சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதற்கு 3 சிலிண்டர் இன்ஜினாக இருந்தது முக்கியமான காரணம். டிசிடி கியர் பாக்ஸை பொருத்தவரை கையாள்வது சுலபமாக இருந்தது. கார் ஒரு கியரிலிருந்து மற்றொரு கியருக்கு இலகுவாக மாறியது. புதிய பெடல் ஸிஃப்டர் பயன்படுத்த சுலபமாக இருக்கிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

ஐஎம்டி கியர் பாக்ஸில் பழைய கார் போலவே கியரை மாற்றும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் மேனுவல் கியர் பாக்ஸ் காரையே நீண்ட நாட்கள் ஓட்டி பழகியிருந்தால் இந்த ஐஎம்டி கியரை பாக்ஸை புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடிக்கும். காரின் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டு கியரை மாற்றும் போது ஸிவிஃப்டிங் ஸ்மூத்தாக இருக்கிறது. ஆனால் ஆக்ஸிலேட்டரிலிருந்து காரை எடுக்காமல் மாற்ற முயற்சித்தால் சற்று சிரமமாக இருக்கிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

புதிய ஹூண்டாய் வென்யூ காரின் சஸ்பென்சன் லேசாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான அனுபவத்தை வழங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சஸ்பென்சன் சற்று ஸ்டிஃப்பாக உள்ளது. ஆனால் குழிகளில் இருக்கும் போது சிறப்பான பம்ப்களை வழங்கி காருக்கும் பயணத்தை இனிமையாக்குகிறது. காரின் பாடி ரோலுக்கும் புதிய சஸ்பென்சன் உதவி செய்கிறது. புதிய சஸ்பென்சன் மாற்றம் கட்டாயம் இந்த காருக்கு தேவைப்படும் மாற்றமாகவே உணர்கிறோம்.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

காரின் ஸ்டியரிங் வீலை பொருத்தவரை பிடிப்பதற்கு பிரமாதமாக இருக்கிறது. பிரிமியம் ஃபீலை வழங்குகிறது. இது கார் மெதுவாக செல்லும் போது இலகுவாகவும், வேகம் எடுக்க எடுக்க வெயிட்டாகவும் மாறுகிறது. இது டிரைவருக்கு நல்ல அனுபவத்தையும், காரை திருப்பும் போது நல்ல உணர்வையும் வழங்குகிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

காரின் பிரேக்களும் சிறப்பாக இருக்கிறது. அதில் குறை சொல்ல எந்த அம்சங்களும் இல்லை. ஒட்டு மொத்தமாக புதிய ஹூண்டாய் வென்யூ காரும் சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது.

சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் வென்யூ கார் முதன் முறையாக அறிமுகமாகும் போது அந்த செக்மெண்ட் கார்களிலேயே புதிய பல அம்சங்களை கொண்ட காராக இருந்தது. தற்போது அது அப்டேட் செய்யப்படும் போது பல புதி அம்சஙகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பட்டியலை காணலாம் வாருங்கள்

ஹூண்டாய் வென்யூ பாதுகாப்பு அம்சம்

  • 6 ஏர்பேக்கள்
  • பின்பக்க பார்க்கிங் கேமரா மற்றம் டைனமிக் கைடுலைன்
  • கார்னரிங் ஹெட்லேம்ப்
  • ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்
  • ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்,
  • ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல்
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ

    ஹூண்டாய் வென்யூ முக்கிய அம்சங்கள்

    • எல்இடி லைட்டிங்
    • அம்பியஸ் லைட்டிங்
    • ஸ்டியரிங் மவுண்ட்டட் கண்ட்ரோல்
    • 8 இன்ச் டச் ஸ்கிரீன்
    • ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
    • டிஜிட்டல் கிளஸ்டர் கலர்
    • மல்டி டிரைவ் மோடுகள்
    • ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ரூஃப்
    • பவர்டு டிரைவர் சீட்
    • ஹூண்டாய் வென்யூ கலர் ஆப்ஷன்

      • டைஃப்பூன் சில்வர்
      • டைட்டன் க்ரே
      • டெனிம் ப்ளு
      • பாந்தோம் பிளாக்
      • போலார் ஒயிட்
      • ஃபிர்ரெ ரெட்
      • ஃபிர்ரெ ரெட் உடன் கூடிய பாந்தோம் பிளாக் ரூஃப்
      • ஹூண்டாய் வென்யூ கார் இதுவரை இந்திய மார்கெட்டில் சிறப்பாகவே விற்பனையாகி வருகிறது. தற்போதுவந்துள்ளது புதிய அப்டேட்டால் இன்னும் சிறப்பாக விற்பனையாகும் என்றே எதிர்பார்க்கலாம். புதிய காரில் பல புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிசைன்கள் உள்ளன. இது காருக்கு ஓட்டுமொத்தமாக சிறப்பான பேக்கேஜை வழங்க உதவுகிறது.

Most Read Articles
English summary
2022 new hyundai venue review performance spec interior and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X