மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

புதிய மாற்றங்கள் மற்றும் சிறப்பான பெர்ஃபாமென்ஸ்களுடன் களமிறங்கியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸூகி பிரெஸ்ஸா கார் எப்படி இருக்கிறது? விமர்சனத்தைக் காணலாம் வாருங்கள்

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

மாருதி சுஸூகி இந்தியாவின் முன்னணியான கார் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையான சென், ஆல்டோ, 800, ஸிவிஃப்ட், ரிட்ஸ், வேகன் ஆர் போன்ற சிறிய கார்களை தயாரித்து விற்பனை செய்து இன்று இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிற்குள் தன் தயாரிப்பைக் கொண்டு சேர்ந்து வருகிறது. முன்பு ஜிப்ஸி மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது விற்பனையில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பின்னர் காலப்போக்கில் இந்தியர்கள் எஸ்யூவி கார்களாக மாறத்துவங்கினர். இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனமும் எஸ்யூவி காரை மீண்டும் புதுப்பொழிவுடன் களம்

இறக்கத் தயாரானது. இந்த முறை விற்பனையில் சாதிக்க வேண்டிய கட்டாயம் அந்நிறுவனத்திற்கு இருந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸூகி நிறுவனம் ஒரு காரை அறிமுகப்படுத்தியது. அன்று பல பலருக்கும் இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு வரலாற்றையே எழுதப்போகிறது என்று, ஆம் விட்டாரா பிரஸ்ஸாவை தான் அறிமுகப்படுத்தியது. இந்த கார் விற்பனைக்கு வந்த மாத்திரத்தில் அதிரிபுதிரியான விற்பனையைப் பெற்றது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

டொயோட்டா நிறுவனமும் சுஸூகி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த காரை ரீபேட்ஜ் செய்து வெளியிடுகிறது. தற்போது மாருதி நிறுவனம் இந்த காரின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு மாற்றங்களுடன் மார்கெட்டிற்கு வரவுள்ள இந்த மாருதி சுஸூகி பிரெஸ்ஸா காரை டிரைவ்ஸ்பார்க் குழு சென்னை ஈசிஆர் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் டெஸ்ட் டிரைவ் செய்தோம் அதன் ரிவியூவை கீழே காணுங்கள்

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

டிசைன் மற்றும் ஸ்டைல்

உங்களுக்குப் பழைய பிரெஸ்ஸா காரின் டிசைன் மற்றும் ஸ்டைல் பிடித்திருந்தால் புதிய காரின் டிசைன் மற்றும் ஸ்டைலும் பிடிக்கும் பழைய டிசைன் மற்றும் ஸ்டைலிருந்து புதிய கார் இன்னும் மஸ்குலராகவும், எஸ்யூவி அம்சங்கள் நிறைந்ததாகவும் வடிமவைக்கப்பட்டுள்ளது. புதிய டிசைன் காருக்கு பொருத்தமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பைவிட கார் இன்னும் கொஞ்சம் பாக்ஸியர் ஸ்டைலில் மாற்றப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இந்த புதிய மாருதி பிரஸ்ஸா எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் வித்தியாசமாகத் தெரியும் படி மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய எல்இடி டிஆர்எல் மற்றும் புதிய கிரில் என காரின் முன்பக்கத்திலேயே மாற்றங்கள் துவங்கிவிடுகிறது. இதில் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது புதிய ஹெட்லைட் செட்டப் தான். தூரத்திலிருந்து பார்க்கும் போது சதுரமான வடிவில் இருப்பது போலத் தோன்றும் ஆனால் அருகில் பார்க்கும் போது அதில் கர்வ்கள் இருப்பது தெரிகிறது. எல்இடி டிஆர்எல்லை பொருத்தவரை வித்தியாசமாகவும், புதிய கிரில் டிசைன் உடன் ஒத்துப் போகும் வடிவிலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

கிரில் சற்று வித்தியாசமாகவும் குழப்பமான டிசைனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே சுஸூகி லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இது போக முன்பக்கம் பம்பர் டிசைன் ஈர்க்கும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் ஃபாக் லைட் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு கிளாடிங் மூலம் பம்பர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு கிளாடிக் பம்பர் உடன் முடியாமல் பக்கவாட்டிலும் தொடர்கிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பானட் பழைய காரில் உள்ளது போல ரவுண்ட் டிசைனில் இல்லை. ஹெட்லைட் சற்று கீழ் தள்ளி இருக்கிறது. பம்பருக்கு கீழே சில்வர் ஸ்காஃப் பிளேட் இருக்கிறது. பக்கவாட்டைப் பொருத்தவரை 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் இருக்கிறது. லேயர் வேரியன்டில் பெயிண்டட் வீலும், பேஸ் வேரியண்டில் ஸ்டீல் வீலும் பொருத்தப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

வீல் ஆர்ச்கள் தற்போது ஜொலிக்கிறது. எஸ்யூவி காருக்கான மஸ்குலர் லுக்கை கொடுக்கிறது. டிசைன் லைன்கள் நேரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரஸ்ஸா காருக்கு ஒரு பாக்ஸி லுக்கை கொடுக்கிறது. கீழ்ப் பகுதியில் முன்பக்கம் உள்ள கருப்பு கிளாடிங் பக்கவாட்டிலும் இருக்கிறது. இந்த கருப்பு கிளாடிங்கள் திக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. வீல் ஆர்ச் பகுதியில் மேலும் திக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இந்த காரின் ஏ, பி, சி, மற்றும் டிபில்லர்கள் எல்லா காரிலும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ZXi மற்றும் ZXi+ ஆகிய வேரியன்டில் மட்டும் ரூஃப் பகுதியும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காம்பினேஷன் ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின் பகுதி மேலும் ஈக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பின்பக்கம் ஸ்பிலிட் எல்இடி டெயில் லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க கதவு சிறிதாக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ள பொருட்கள் வைக்கும் பகுதியில் இன்னும் அதிக இடம் இருக்கிறது. கதவின் நடுவில் வெளிப்புறம் சுஸூகி மற்றும் பிரஸ்ஸா லோகோ இடம் பெற்றுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

கீழ்ப் பகுதியில் சில்வர் ஸ்காப் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேலே இரண்டு ரிஃப்லெக்டர்கள் உள்ளன. நம்பர் பிளேட் இருக்கும் பகுதியில் சிறப்பான டிசைனை பெற்றுள்ளது. இந்த காரின் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்ட டிசைனிலேயே பின்பகுதி தான் சிறப்பான மாற்றத்தை பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக புதிய பிரெஸ்ஸா காருக்கான டிசைன் மாற்றம் ஸ்போர்ட்டி மற்றும் யூத்புஃல்லாக வழங்கப்பட்டுள்ளது. சாலையில் சென்றால் மற்றவர்களை இது நிச்சயம் திரும்பிப் பார்க்க வைக்கும்.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

காக்பிட் மற்றும் இன்டீரியர்

இந்த காரின் உட்புற கட்டமைப்பு மற்றும் காக்பிட் பகுதியும் மாற்றத்தைப் பெற்றுள்ளது. நல்ல மெச்சூர் மாற்றங்களைப் பெற்றாலும் இன்னும் டிசைன் யூத்ஃபுல்லாகவே இருக்கிறது. மாருதி சுஸூகி நிறுவனம் இதை "ஹாட் மற்றும் டெக்கி" என அழைக்கிறார்கள். அது முற்றும் உண்மையாக இருக்கிறது. புதிய பிரெஸ்ஸா காரை பொருத்தவரை டூயல் டோனாக கருப்பு மற்றும் பிரளென் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காண்ட்ராஸ்ட் கார் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

ஸ்டியரிங் வீலை பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே பழைய ஸ்டிரிங் வீல்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஸிவிஃப்ட் மற்றும் புதிய பலேனோ காரின் ஸ்டியரிங் வீல் தான் இந்த காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டிரிங் மவுண்டட் கண்ட்ரோல் ,சில்வர் இன்செர்ட் மற்றும் பிளாட் பாட்டம் டிசைன் ஒரு ஸ்போர்ட்டியர் லுக்கை தருகிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் முழு வண்ண MID டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தகவல்கள் வருகிறது. பழைய காரிலிருந்து புதிய காரில் இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மாற்றங்களைப் பெற்றுள்ளது MID டிஸ்பிளே அனலாக் டெக்னோ மீட்டருடன் இடது பக்கமும், ஸ்பீடோ மீட்டருடன் வலது பக்கமும் இருக்கிறது. டேஷ்போர்டும் சிறப்பான வடிவமைப்பைப் பெற்றுள்ளது. அதுவும் இடது பக்கம் பிரஷ்டு அலுமினியம் எலெமெண்ட்களுடன் இருக்கிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

மத்திய பகுதியைப் பொருத்தவரை 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்டான ZXi+ வேரியன்டில் மட்டும் 9 இன்ச் டிஸ்பிளே ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் பிளே ப்ரோ மற்றும் இன்ஃபொடெயின்மெண்ட் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதில் ஆப்பிள் கார் பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய பகுதியை அம்சங்கள் இருக்கிறது. இதில் 4 ஸ்பீக்கம் மற்றும் 2 ட்வீட்டர்கள் கொண்டு ARKAMYS ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது..

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

ஆடியோ சிஸ்டம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த காசுக்கு இதை விடச் சிறந்த குவாலிட்டி ஆடியோ சிஸ்டம் கொடுக்க முடியாது. போட்டியாளர்களிடம் இருப்பதை விடச் சிறந்த குவாலிட்டியாக இருக்கிறது. இந்த டச் ஸ்கிரீன் இமேஜினரி கேமரா இமேஜ் உள்ளது. புதிய தலைமுறை சுஸூகி கனெக்ட் என்ற கனெக்ட்டிவிட்டி சூட் உடன் இணைந்து வருகிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழே ஏசி வென்ட்கள் உள்ளது. அதற்குக் கீழே கிளைமேட் கண்ட்ரோல் பட்டன்கள் உள்ளது. இது பிரெஸ்ஸா காருக்கு பிரிமியம் வைப்ஸை வழங்குகிறது. புதிய பிரெஸ்ஸா காரில் டெம்பரேச்சர் மற்றும் ஃபேன் ஸ்பீடு ஆகியவற்றைச் சொல்லும் சிறிய எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

சென்டர் கன்சோலை பொருத்தவரை யூஎஸ்பி ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது செல்போனை சார்ஜ் செய்யவும், இன்ஃபோடெயின்மெண்ட் உடன் கனெக்ட் செய்யவும் பயன்படுகிறது.யூஎஸ்பி போர்ட்டிற்கு கீழே வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்கள் இருக்கிறது. இது நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் போது பயனுள்ளதாக இருந்தது. சென்ட்ரல் ஸ்கோர் சிம்பிளாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. கியர் லிவர், ஹேண்ட்பிரேக் எல்லாம் மார்டன் மற்றும் யூத்ஃபுல் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

கம்ஃபோர்ட் மற்றும் பிராக்கடிகாலிட்டி

மாருதி பிரெஸ்ஸா காரின் சிறப்பான விஷயம் கம்ஃபோர்ட் மற்றும் பிராக்டிகால்லிட்டி தான். பிரெஸ்ஸா வாடிக்கையாளர்கள்

அதை அதிகம் விரும்புகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் புதிய பிரஸ்ஸா காரிலும் சிறப்பான கம்ஃபோர்ட் மற்றும் பிராக்கடிகாலிட்டியுடன் வடிவமைத்துள்ளனர்.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

சொல்லபோனால் பழைய காரை விட புதிய காரில் கம்ஃபோர்ட் மற்றும் பிராக்டிகாலிட்டி சிறப்பாக இருக்கிறது. சீட்கள் வசதியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் அதில் அதில் அமர்ந்து பயணித்தாலும் அலுப்பு தெரியவில்லை. மாருதி நிறுவனம் இந்த காரை "சிட்டி பிரிட்" என விளம்பரப்படுத்துகிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

சீட்டில் முதுகு பகுதியிலும் சிறப்பான சொகுசு வசதி கிடைக்கிறது. பின்பக்க சீட்டில் உள்ளவர்களுக்குச் சிறப்பான இட வசதி இருக்கிறது. கை மற்றும் கால்களுக்கான இடவசதி சிறப்பாக இரக்கிறது. தொடைப் பகுதி சப்போர்ட் மற்றும் இன்னும் சிறப்பாக டிசைன்செய்திருக்கலாம் ஆனால் இது பெரிதாகச் சொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை. பின்பக்க மடக்கி வைக்கும் அளவிலான கப் ஹேல்டருடன் கூடிய ஆர்ம் ரெஸ்ட் இருக்கிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இந்த காரின் கிளவ் பாக்ஸ் போதுமான இடவசதியுடன் இருக்கிறது. அதே போல டோர் பாக்கெட்களும் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளன. முன்பக்க சீட்டிற்கு பின்னால் செட்பேக் பாக்கெட் மற்றும் ஹூக் இருக்கிறது. இதனால் பின் சீட்டில் அமர்பவர்கள் போதுமான அளவு பொருட்களையும் எடுத்துச் செல்லலாம் பைக்களை தொங்க விடலாம்.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பூட் ஸ்பேஸ் பகுதியைப் பொருத்தவரை புதிய மாருதி பிரெஸ்ஸா காரில் 328 லிட்டர் பூட் ஸ்பேஸ் பகுதி இருக்கிறது. பின்பக்க சீட்டை மடக்கினால் மிகப்பெரிய அளவு இடம் கிடைக்கும். பிராக்டிகாலிட்டியை பொருத்தவரை பிரெஸ்ஸா பழைய நிலையிலேயே அப்படியே தொடர்கிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இன்ஜின், பெர்பாஃமென்ஸ் மற்றும் டிரைவிங் இம்பிரஷன்

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா காரை பொருத்தவரை இந்த செக்மெண்டிலேயே டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாத ஒரே காராக இருக்கிறது. இந்த காரில் மைல்டு ஹைபிரிட் உடன் கூடிய பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் வருகிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் பெட்ரோல் இன்ஜின்கள் டீசல் இன்ஜினை விடக் குறைவான புகையை கக்கும். இது போக தற்போது மார்கெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் பெரிய மாற்றம் இல்லை என்பதால் டீசல் காருக்கான தேவை குறையும். இதை எல்லாம் மனதில் வைத்த மாருதி தன் தயாரிப்பில் முதல் ஆளாக டீசல் காரை நீக்கிவிட்டது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 1,463 சிசி கே15 சி டூயல் -விவிடி- 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரை 6000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது. 136.8 என்எம் டார்க் திறனை 4,400 ஆர்பிஎம்மில் தருகிறது. இதே இன்ஜின் தான் மாருதி சுஸூகி எக்ஸ் எல் 6 காரிலும் இருக்கிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இந்த இன்ஜினில் குறைவான NVH லெவல்களுடன் காரை டிரைவ் செய்ய முடியும். இது எந்த அளவிற்கு ஸ்மூத்தாக இருக்கும் என்றால் காருக்குள் இருக்கும் போது கார் பயணிக்காமல் நின்று கொண்டிருந்தால் கார் ஸ்ட்டிராட் செய்யப்பட்ட நிலையிலிருந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு இன்ஜின் ஆஃப்பில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். ஆனால் பயணிக்கும் சிறப்பான டார்க் மற்றும் பவரை வெளிப்படுத்துகிறார்.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பழைய மாடல் காரை விட இது சிறப்பான செயல்பாட்டைத் தருகிறது. எல்லா கியர்களிலும் சிறப்பான டிரைவிங் கிடைக்கிறது. நாங்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய இரண்டு கியர் பாக்ஸ் காரையும் ஒட்டிப்பார்த்தோம்.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

மேனுவல் கியர் பாக்ஸ் லைட் கிளட் அம்சத்துடன் வருகிறது. இது நகர்ப்புறங்களில் காரை சுலபமாக ஓட்ட உதவி செய்கிறது. குறிப்பாக பம்பர் டூ பம்பர் டிராபிக்கில் பயணிக்கச் சுலபமாக இருக்கிறது. கியர் லிவர்கள் ஈஸியாக செயல்படுத்தும்படிகொடுக்கப்பட்டள்ளது. லிவர்கள் மிகப்பெரியதாகவோ அல்லது மிகச் சிறியதாகவே இல்லாமல் சரியா அளவில் இருக்கிறது. அதன் ரேஷியோவும் சரியாக மேட்ச் ஆகிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை பொருத்தவரை டார்க் கன்வர்ட்டர்கள் பெரிய இன்ஜின் தான் சிறப்பாகச் செயலாற்றுகிறது. இன்ஜின் கியர் பாக்ஸை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எதிர்பார்த்த அளவு இந்த கியர் பாக்ஸ் இல்லை. மெதுவாகவே செயல்படுகிறது

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

ஆனால் இந்த ஆட்டோ கியர் பாக்ஸில் மேனுவல் ஆப்ஷனை செலெக்ட் செய்து விட்டு பெடல் ஸிஃப்டர் வைத்து பயணித்தால் ஆட்டோ கியர் பாக்ஸில் உள்ள குறைகள் எல்லாம் நீங்கிச் சிறப்பாகச் செயல்படுகிறது. காரின் ஹேண்டிலிங்கை பொருத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஸ்டியரிங் லைட்டாக இருக்கிறது. இதனால் நகர்ப் பகுதிகளில் காரில் மெதுவாக செல்வது சுலபமாக இருக்கிறது. மேலும் இந்த காரின் குறைவான டர்னிங் ரேடியஸ் காரை சந்துகளில் எடுத்துச் செல்லும் போது சிறப்பாக உதவி செய்யும்.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

புதிய மாருதி பிரெஸ்ஸா காரில் பழைய காரில் இருந்த அதே சஸ்பென்சன்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் சாஃப்டாவும் இல்லை. மிகவும் ரக்கட்டாகவும் இல்லை. மிதமான அளவுக்கு ஷாப் அப்சர்பர்களை பயன்படுத்துகிறது. பாடி ரோல் அதிகம் ஆகவில்லை. இந்த காரில் பயணிப்பது சொகுசாக இருக்கிறது. ஆனால் இதற்கான கிரெடிட்டை சீட்டிற்கு தான் வழங்க வேண்டும். முன்பே சொன்னது போலச் சிறப்பான சொகுசு வசதியை சீட் வழங்குகிறது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

இந்த காரின் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க், மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக்கள் உள்ளது. ஒட்டுமொத்தமாக மாருதி சுஸூகி பிரெஸ்ஸா கார் நீண்ட தூர பயணத்திற்குச் சிறந்த கார் இது மட்டுமல்ல நகர் புற பயணங்களுக்கான வசதிகளும் இந்த காரில் உள்ளது.

மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா காரை பொருத்தவரை முதல் தலைமுறையான தலைமுறையை விட 2016-ல் வந்த காரை விட அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக வந்திருக்கிறது.

புதிய மாருதி பிரெஸ்ஸா பாதுகாப்பு அம்சங்கள்

  • ஹெட்ஸ் அப் டிஸ்பிளே
  • 360 டிகிரி கேமரா
  • டிரைவர் மற்றும் கோ டிரைவர் ஏர் பேக்
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
  • ஹில் ஹோல்டு அசிஸ்ட்
  • சீட் பெல்ட் ப்ரீ டென்ஷனர்
  • சுஸூகி - TECT படி
  • இன்ஜின் இம்மொபிலைஷர்
  • ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் குழந்தைகளுக்கான சீட் மவுண்ட்
  • இம்பேக்ட் சென்ஸிங் டோர் அன்லாக்
  • புதிய மாருதி பிரெஸ்ஸா முக்கிய அம்சங்கள்

    • 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே
    • முழு கலர் MID
    • எலெக்ட்ரானிக் சன் ரூப்
    • பின்பக்கம் ஃபாஸ்ட் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட்
    • எலெக்ட்ரிக் ஓவிஆர்எம்
    • ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள்
    • மாற்றங்களுடன் களமிறங்கிய புதிய மாருதி சுஸூகி பிரெஸ்ஸா எப்படி இருக்கு?

      கலர் ஆப்ஷன்

      சிங்கிள் டோன்

      • பிரேவ் காக்கி
      • ஸ்பிளெண்டட் சில்வர்
      • ஸ்லைஸிங் ரெட்
      • எக்ஸ்ப்யூரென்ட் ப்ளு
      • ப்யர்ல் ஆர்க்டிக் ஒயிட்
      • மேக்னா க்ரே
      • டூயல் டோன்

        • ஸ்பிளெண்டட் சில்வர் வித் மிட் நைட் பிளாக் ரூப்
        • ஸ்லைஸிங் ரெட் வித் மிட் நைட் பிளாக் ரூப்
        • பிரேவ் காக்கி வித் ஆர்க்டிக் ஒயிட் ரூப்
        • மாருதி விட்டாரா பிரெஸ்ஸா முதல் தலைமுறை வாகனமாக வரும் போது பிராக்கடிகாலிட்டி, நம்பிக்கை தன்மை,சிறப்பான பயன்பாடு, சொகுசு வசதி ஆகியவை முக்கியமான அம்சங்களாக இருந்தது. இது தான் காரின் அதிகமான விற்பனைக்கு வழி வகுத்தது. தற்போதைய புதிய தலைமுறை காரிலும் இந்த வசதி எதுவும் குறையாமல் அப்படியே இருக்கிறது. புதிய காரும் சிறப்பான விற்பனையைப் பெறும் என எதிர்பார்க்கலாம். மாருதி சுஸூகி நிறுவனத்தின் மற்றுமொரு வெற்றி இந்த புதிய தலைமுறை மாருதி பிரெஸ்ஸா கார்.

Most Read Articles
English summary
2022 New Maruti Suzuki Brezza review performance colors engine interior
Story first published: Wednesday, July 6, 2022, 14:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X