பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செடான் கார்களை தயாரிப்பதில் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக ஸ்கோடா திகழ்கிறது. பல்வேறு சர்வதேச சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் செடான் கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் எஸ்யூவி ரகத்தில் ஸ்கோடா நிறுவனம் நிறைய தயாரிப்புகளை உருவாக்கியதில்லை. இருப்பினும் எஸ்யூவி ரக கார்களை தயாரிக்கும்போதெல்லாம், அதனை சரியாக செய்ய வேண்டும் என்பதில் ஸ்கோடா நிறுவனம் உறுதியாக இருக்கிறது.

இதற்கு ஸ்கோடா யெட்டி காரை உதாரணமாக கூறலாம். இது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட எஸ்யூவி ரக கார். இதற்கு அடுத்தபடியாக ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq). உலகளவில் கடந்த 2016ம் ஆண்டு ஸ்கோடா கோடியாக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையை பொறுத்தவரையில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்கோடா கோடியாக் களமிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2020ம் ஆண்டில் ஸ்கோடா நிறுவனம் கோடியாக் காரை புதுப்பித்தது. ஆனால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக அதன்பின் ஸ்கோடா கோடியாக் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது.

ஸ்கோடா கோடியாக் காரின் பழைய மாடலே பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கியது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஸ்கோடா நிறுவனம் கோடியாக் காரின் பிஎஸ்-6 மாடலின் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்தது. இது உண்மையிலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா? என்பதை கண்டறிய 2022 ஸ்கோடா கோடியாக் காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த காரின் சிறப்பம்சங்களையும் இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

டிசைனை பொறுத்தவரையில் ஸ்கோடா கோடியாக் பல்வேறு விதங்களில் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக முன் பகுதியில்தான் இந்த எஸ்யூவி புத்தம் புதியதாக தோன்றுகிறது. இதன் ஹெட்லேம்ப் இந்த காருக்கு நவநாகரீக தோற்றத்தை வழங்குகிறது. ஹெட்லேம்ப்பிற்கு அடியில் எல்இடி பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அத்துடன் ஸ்கோடா கார்களுக்கே உரித்தான பட்டாம்பூச்சி ஸ்டைல் க்ரில் அமைப்பும் கவனம் ஈர்க்கிறது. இந்த க்ரில் அமைப்பு பெரிதாக உள்ளது. முன் பகுதியில் இந்த க்ரில் அமைப்பு பிரீமியமான தோற்றத்தை வழங்குகிறது. இந்த க்ரில் அமைப்பில் க்ரோம் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் முன் பக்க பம்பர் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் பானெட் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதே நேரத்தில் பக்கவாட்டில் இருந்து இந்த காரை பார்க்கும்போது பழைய ஸ்கோடா கோடியாக் காரின் டிசைன் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். தாழ்வாக செல்லும் மேற்கூரை, உயரமான நிலைப்பாடு மற்றும் நீளமான பாடி ஆகியவை அப்படியே உள்ளன. இதன் B மற்றும் C பில்லர்களும், ஸ்பாய்லரும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மேட் சில்வர் ரூஃப் ரெயில்கள் இந்த காருக்கு இன்னும் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகின்றன.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எனினும் புதிய அலாய் வீல்களின் வடிவத்தில் பக்கவாட்டு பகுதியில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2022 ஸ்கோடா கோடியாக் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த 3 வேரியண்ட்களிலும் வெவ்வேறு வகையான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாங்கள் ஓட்டியது Laurin & Klement வேரியண்ட் ஆகும். இது டாப் வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேரியண்ட்டில் 18 இன்ச் Trinity Anthracite ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இது L&K வேரியண்ட் என்பதால், இதன் முன் பக்க ஃபெண்டர்களில் Laurin & Klement பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் பின்பக்க பம்பரும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டெயில்கேட்டில் SKODA என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இதன் டெயில் லேம்ப் டிசைனும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஸ்பாய்லரும், சுறா துடுப்பு ஆன்டெனாவும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

பொதுவாக ஸ்கோடா கார்களின் இன்டீரியர் சொகுசாக இருக்கும். இதன்படி கோடியாக் காரின் இன்டீரியரும் அமர்க்களப்படுத்துகிறது. கேபின் மிகவும் விசாலமாக இருப்பதுதான் ஒருவரின் கவனத்தை முதலில் ஈர்க்கும் விஷயமாக இருக்கும்.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் இன்டீரியர் பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் ட்யூயல் டோனில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் டேஷ்போர்டு லேஅவுட் பழைய மாடலை போன்றே உள்ளது. டேஷ்போர்டின் மேல் பகுதியானது, கருப்பு நிறத்தில் லெதரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் கீழ் பகுதி பழுப்பு நிறத்தில் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் பிரிக்கும் வகையில் பியானோ பிளாக் நிற பட்டை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டேஷ்போர்டின் மைய பகுதியில் 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முந்தைய மாடலில் இருந்த வயர் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய முன்னேற்றம். இந்த சிஸ்டத்துடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணைப்பது எளிதான விஷயம். இணைக்கப்பட்டவுடன் உங்கள் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை இந்த சிஸ்டம் மூலமாக கையாள முடியும்.இந்த செக்மெண்ட்டை சேர்ந்த ஒரு காருக்கு 8.0 இன்ச் ஸ்க்ரீன் சிறியதாக தோன்றலாம். எனினும் இதில் ஸ்கோடா நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களையும், வசதிகளையும் வழங்கியுள்ளது. அதே சமயம் இந்த காரில் 12 ஸ்பீக்கர் கேன்டன் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இதுவும் முன்னேற்றம்தான். முந்தைய மாடலில் 10 ஸ்பீக்கர்கள் மட்டுமே இருந்தன. இந்த ஸ்பீக்கர்களில் பாடல்களை கேட்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது.

காரின் பல்வேறு வசதிகளை டச்ஸ்க்ரீன் மூலமாக கட்டுப்படுத்த முடியும். இதில், க்ளைமேட் கண்ட்ரோல், டிரைவர் மற்றும் பயணிகள் இருக்கை ஹீட்டிங்/கூலிங், ஆம்பியண்ட் லைட்டிங், டிரைவ் மோடுகள், நேவிகேஷன் ஆகியவை முக்கியமானவை. அத்துடன் இந்த காரில் மைஸ்கோடா கனெக்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்போடெயின்மெண்ட்டிற்கு கீழே ஹெச்விஏசி-க்கான கண்ட்ரோல்கள் உள்ளன. அதற்கும் கீழாக பார்க் அஸிஸ்ட் வசதிக்கான சில பட்டன்கள் இருக்கின்றன. இந்த பட்டன்களுக்கு கீழாக சென்டர் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே 2 டைப்-சி சார்ஜிங் போர்ட்களும், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதற்கு பின்னால் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸின் கியர் லிவர் இருக்கிறது. இதற்கும் பின்னால் காரின் டைனமிக்ஸ் மற்றும் டிரைவிங் மோடுகளை கட்டுப்படுத்துவதற்கான பட்டன்கள் இருக்கின்றன. இந்த பட்டன்கள் வழியாக செய்யப்படும் மாற்றங்கள் இன்போடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் காட்டப்படும்.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதே சமயம் இந்த காரில் புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் சமீபத்திய கார்களில் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல்தான் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பெரிய 10.25 இன்ச் விர்ச்சூவல் காக்பீட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நடைமுறை பயன்பாடு மற்றும் பூட் ஸ்பேஸ்

இந்த காரின் டோர் பேனல்களிலும் ட்யூயல்-டோன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன் பக்க டோர் பேனல்களில் குடையை வைப்பதற்கான ஹோல்டர் இடம்பெற்றுள்ளது. குடையில் உள்ள மழை நீர் வடிந்து செல்வதற்கான துளைகளையும் இந்த கார் பெற்றுள்ளது. இந்த காரின் இருக்கைகளை நாங்கள் இங்கே சிறப்பான முறையில் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இருக்கைகள் பார்ப்பதற்கு மட்டுமின்றி அமர்வதற்கும் பிரீமியமாக இருக்கின்றன. தொலை தூர பயணங்களின்போதும் சௌகரியமான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

இந்த காரின் முன் இருக்கைகளை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அத்துடன் மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும் என்பதால், சரியான டிரைவிங் பொஷிஷனை கண்டறிவது மிகவும் சுலபம்.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் 2வது வரிசை இருக்கைகளும் பிரீமியமாகவும், விசாலமாகவும் உள்ளன. இருக்கைகள் அகலமாக இருக்கிறது என்பதுடன், ஹெட்ரூம், லெக்ரூமிற்கும் பஞ்சம் இல்லை. இந்த இருக்கைகளில் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்கோடா கோடியாக் கார் மூன்று-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ளது. இரண்டாவது வரிசைக்கான டெம்ப்ரேச்சர் மற்றும் ஃபேன் ஸ்பீடு ஆகியவற்றை தனியாக கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.

இந்த காரின் இரண்டாவது வரிசை இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்து வைத்து கொள்ள முடியும். இனி மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு வருவோம். ஸ்கோடா நிறுவனம் இதனை 7 சீட்டர் எஸ்யூவியாக விற்பனை செய்கிறது. ஆனால் இந்த காரின் 7 இருக்கைகளையும் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. கடைசி வரிசையில் உள்ள 2 இருக்கைகளைதான் இங்கே குறிப்பிடுகிறோம். இந்த இருக்கைகள் நெருக்கடியாக உள்ளன. குழந்தைகளுக்கு கூட இங்கே அசௌகரியமான உணர்வு ஏற்படும்.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதற்கு பதிலாக இந்த இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டு பூட் ஸ்பேஸை அதிகரித்து கொள்ளலாம். இந்த கார் எலெக்ட்ரிக் டெயில்கேட் வசதியை பெற்றுள்ளது. அனைத்து இருக்கைகளையும் பயன்படுத்தும்போது ஸ்கோடா கோடியாக் காரின் பூட் ஸ்பேஸ் வெறும் 270 லிட்டர்கள் மட்டுமே. ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்தால் இந்த இடவசதி 630 லிட்டர்களாக உயரும். அதே சமயம் 2 வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், இந்த காரின் பூட் ஸ்பேஸ் 2,005 லிட்டர்களாக அதிகரிக்கும்.

Dimensions 2022 Skoda Kodiaq
Length 4,699mm
Width 1,882mm
Height 1,685mm
Wheelbase 2,791mm
Boot Space 270-litres
பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

ஸ்கோடா கோடியாக் கார் எப்போதுமே சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடியது. முந்தைய தலைமுறை ஸ்கோடா கோடியாக் கார் டீசல் இன்ஜின் தேர்வுடன் கிடைத்தது. அந்த இன்ஜின் அனைவராலும் அதிகம் விரும்பப்பட்டது. ஆனால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக ஸ்கோடா நிறுவனம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வை விற்பனையில் இருந்து விலக்கி விட்டது.

அதே சமயம் ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் கார்களில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை புதிய ஸ்கோடா கோடியாக் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,200 மற்றும் 6,000 ஆர்பிஎம்மிற்கு இடையே 187.5 பிஹெச்பி பவரை (190 பிஎஸ்) உருவாக்க கூடியது. அதே சமயம் 1,500 மற்றும் 4,100 ஆர்பிஎம்மிற்கு இடையே இந்த இன்ஜின் 320 என்எம் டார்க் திறனை வழங்கும்.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட் மற்றும் மேனுவல் ஆகிய மோட்கள் உடன் வருகிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 7.5 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் இந்த கார் மணிக்கு 200 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் செல்ல கூடியது.

ஆனால் நாங்கள் இதன் டாப் ஸ்பீடை பரிசோதனை செய்து பார்க்கவில்லை. அதற்கு ஏற்ற சாலைகள் இல்லாததுதான் இதற்கு காரணம். ஆனால் ஸ்கோடா கோடியாக் வேகமாக செயல்படும் என்பதை எங்களால் சொல்ல முடியும். ஈக்கோ, கம்ஃபோர்ட், நார்மல், ஸ்போர்ட், இன்டியூஜூவல் மற்றும் ஸ்னோ என மொத்தம் 6 டிரைவிங் மோட்கள் உடன் 2022 ஸ்கோடா கோடியாக் வருகிறது.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதில், ஸ்னோ தவிர மற்ற அனைத்து மோட்களையும் நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். இந்த ஒவ்வொரு மோடும் ஸ்கோடா கோடியாக் காரின் கையாளுமை மற்றும் செயல்திறனில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை வழங்குகின்றன. இந்த அனைத்து சிறப்பம்சங்களுடன் 4x4 டிரைவ்ட்ரெயினையும் கோடியாக் காரில் ஸ்கோடா நிறுவனம் கொடுத்துள்ளது. அத்துடன் ஆஃப்ரோடு சூழல்களில் ஓட்டுவற்கு என பிரத்யேகமாக ஆஃப் ரோடு மோடையும் ஸ்கோடா கோடியாக் பெற்றுள்ளது.

பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

  • அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 9 ஏர்பேக்குகள்
  • 360 டிகிரி கேமரா
  • பார்க் அஸிஸ்ட்
  • ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம்/ஆண்டி ஸ்லிப் ரெகுலேஷன்
  • ஏபிஎஸ்
  • ரோல் ஓவர் ப்ரொடெக்ஸன்
  • மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன்
  • பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

    முக்கியமான வசதிகள்

    • எல்இடி ஹெட்லேம்ப்கள்
    • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள்
    • 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட்
    • கேன்டன் 12 ஸ்பீக்கர், 625W சவுண்ட் சிஸ்டம்
    • ஆஃப்ரோடு மோட்
    • டைனமிக்ஸ் சேஸிஸ் கண்ட்ரோல்
    • மைஸ்கோடா கனெக்ட்
    • ஸ்டியரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்கள்
    • பிரீமியமான எஸ்யூவி கார்... இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது Skoda Kodiaq... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      வேரியண்ட்கள் மற்றும் விலை

      2022 ஸ்கோடா கோடியாக் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அவற்றின் விலை விபரம் பின்வருமாறு:

      • ஸ்டைல் - 34.99 லட்ச ரூபாய்
      • ஸ்போர்ட்லைன் - 35.99 லட்ச ரூபாய்
      • எல் & கே - 37.49 லட்ச ரூபாய்
Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2022 skoda kodiaq suv review design engine performance driving impressions variants pricing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X