பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 சீரிஸ் க்ரான் கூபே (BMW 2 Series Gran Coupe) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 39.30 லட்ச ரூபாய் முதல் 41.40 லட்ச ரூபாய் வரை என்ற அறிமுக சலுகை விலையில், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்திய சந்தையில் 3 சீரிஸ் மாடலுக்கு கீழாக, பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே எம் ஸ்போர்ட் டீசல் வேரியண்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நகர பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் அதனை ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த கார் எங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காரை பற்றிய முழுமையான தகவல்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன்

நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட கார் மிசானோ ப்ளூ மெட்டாலிக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. முதல் பார்வையிலேயே இந்த கார் நம்மை வசீகரித்து விடுகிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹெட்லைட்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் பனி விளக்குகளிலும் எல்இடி பல்புகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பம்பரில் சற்று கீழாக வழங்கப்பட்டுள்ளன. இது எம் ஸ்போர்ட் வேரியண்ட் என்பதால், முன் பக்க பம்பர் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. அத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உரித்தான கிட்னி க்ரில் அமைப்பு முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதில், கணிசமான அளவில் க்ரோம் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, 18 இன்ச் ட்யூயல்-டோன் எம்-ஸ்போர்ட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் காரின் பக்கவாட்டில் 'எம் பேட்ஜ்' கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷார்ப்பான பாடிலைனுக்கு பதிலாக, நுட்பமான லைன்கள் மற்றும் மடிப்புகளை இந்த கார் பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இதுதவிர பாடியின் நிறத்திலேயே ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பகுதியில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது 2 சீரிஸ் காரின் எம் ஸ்போர்ட் வேரியண்ட் என்பதால், பக்கவாட்டு பகுதியில் க்ரோம் மூலம் அழகுபடுத்தும் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக விண்டோக்களை சுற்றிலும் கருப்பு வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஃப்ரேம் இல்லாத டோர்களையும் இந்த கார் பெற்றுள்ளது. இதனை சிறப்பான ஒரு அம்சமாக குறிப்பிடலாம்.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இனி காரின் பின் பகுதிக்கு நகர்வோம். இங்கே பல விஷயங்கள் உங்களின் கவனத்தை ஈர்க்கும். இங்கே நேர்த்தியான தோற்றம் கொண்ட டெயில்லைட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. க்ரோம் பட்டைக்கு பதிலாக கருப்பு நிற பட்டை ஒன்று, அவற்றை இணைக்கிறது. மேலும் க்ரோம் உடன் 220டி பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் பார்க்கிங் கேமராவையும் இந்த கார் பெற்றுள்ளது. காரை சுற்றிலும் பார்க்கிங் சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே நெருக்கமான பகுதிகளிலும் இந்த காரை பார்க்கிங் செய்வது எளிமையாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் வெளிப்புறத்தில் இந்த காரின் டிசைனும், வண்ணமும் அருமையாக உள்ளன.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே விசாலமான இட வசதி கொண்ட கேபின் நம்மை வரவேற்கிறது. பெரிய பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளதால், கேபின் சற்றே பெரியது போல் காட்சியளிக்கிறது. அதே சமயம் கேபினில் பல்வேறு வசதிகளும், உபகரணங்களும், தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டேஷ்போர்டின் மையப்பகுதியில் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்தாலும், துரதிருஷ்டவசமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படவில்லை. மாறாக ஆப்பிள் கார்பிளே வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கும் என நம்பலாம்.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் மற்றொரு 10.25 இன்ச் ஸ்க்ரீன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். காரை பற்றிய பல்வேறு தகவல்களை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்குகிறது. இதுதவிர வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது. கியர் லிவருக்கு அருகே இதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோம் வசதியும் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில், சாஃப்ட் டச் மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதவிலும் பாட்டில் ஹோல்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இங்கே நிறைய பொருட்களை வைத்து கொள்வதற்கான இட வசதியும் உள்ளது.

அதே சமயம் இந்த காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. ஸ்டியரிங் வீலில் இடம்பெற்றுள்ள கண்ட்ரோல்கள் சரியான இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இன்போடெயின்மெண்ட் சிஸ்டமில் ஏதேனும் ஒன்றை மாற்ற வேண்டிய சமயங்களில் எல்லாம், ஓட்டுனர் சாலையில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது. ஸ்டியரிங் வீலில் எம் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது தட்டையான அடிப்பாகம் கொண்டது அல்ல.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இருக்கைகளை பொறுத்தவரை, 2 செட்டிங்குகள் உடன் ஓட்டுனர் இருக்கைகக்கு மட்டுமே சீட் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. முன் பக்க இருக்கைகள் சௌகரியமாக உள்ளன. தொலை தூர பயணங்களின்போது அவை உங்களை சோர்வடைய செய்யாது.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் பின் வரிசை இருக்கைகளில் போதிய இட வசதி இல்லை. போதிய அளவு லெக் ரூம், ஹெட் ரூம் இல்லாத காரணத்தால், உயரமான பயணிகள் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். பின் வரிசை இருக்கைகள் 2 பேருக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும். 3வது நபர் அமர்ந்தால், சௌகரியமான பயணம் கிடைப்பது சந்தேகமே.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்ஜின் சக்தி தற்போது முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. பின் சக்கரங்களுக்கு அல்ல.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் செட் அப் கொண்ட கார் என்பதால், வேகமாக ஓட்டும்போது டார்க் ஸ்டீர் நிறைய உள்ளது. நீங்கள் வேகமாக ஆக்ஸலரேஷன் கொடுக்கும்போது, டார்க் ஸ்டீர் மற்றும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் செட் அப் காரணமாக கார் ஒரு பக்கமாக செல்லலாம். எனவே ஸ்டியரிங் வீலை மிகவும் கெட்டியாக பிடித்து கொள்வது அவசியம். ஆனால் இது பொதுவாகவே ஃப்ரண்ட் வீல் டிரைவ் கார்களில் காணப்படும் ஒரு பிரச்னைதான்.

ஈக்கோ ப்ரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என இந்த காரில் மொத்தம் 3 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஈக்கோ ப்ரோ மோடில், ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. அதே சமயம் த்ராட்டில் ரெஸ்பான்ஸில் பின்னடைவு காணப்படுகிறது. எனினும் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. ஆனால் கம்ஃபோர்ட் மோடில், ஸ்டியரிங் வீல் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சற்றே மேம்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு நாங்கள் இந்த மோடை உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். அதே சமயம் ஸ்போர்ட் மோடில், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப் ஆக உள்ளது. அத்துடன் ஸ்டியரிங் வீல் இறுக்கமானதாக மாறி விடுகிறது. காரின் அதிகபட்ச செயல்திறனை நீங்கள் இந்த மோடில் பெறலாம்.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரில் பவர் டெலிவரி சீராக உள்ளது. நீங்கள் காரை வேகமாக செலுத்தும்போது, பவரில் திடீர் எழுச்சியை உணரலாம். இந்த காரின் சஸ்பென்ஸன் செட் அப், சௌகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. குண்டும், குழியுமாக இருக்கும் மோசமான சாலைகளை இந்த கார் எளிதாக கடக்கிறது. உள்ளே இதனை அவ்வளவாக உணர முடியவில்லை. ஆனால் லோ ப்ரொஃபைல் டயர்களில் இந்த கார் ஓடுவதால், சிறிய சத்தம் கேட்கிறது. ஆனால் என்விஹெச் லெவல்கள் சிறப்பாக உள்ளன. கேபின் உங்களுக்கு அமைதியான பயணத்தை வழங்கும்.

அதேபோல் கார்னர்களையும் இந்த கார் எளிதாக எதிர்கொள்கிறது. ஆனால் சிறிய பாடி ரோலை நீங்கள் உணரலாம். எனினும் எரிபொருள் சிக்கனத்தில் இந்த கார் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் நகர பகுதிகளில் ஒரு லிட்டருக்கு 11.2 கிலோ மீட்டர் முதல் 12.6 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைத்தது. ஆனால் இந்த கார் எங்களிடம் குறுகிய காலமே இருந்த காரணத்தால், நெடுஞ்சாலைகளில் நாங்கள் மைலேஜை சோதிக்கவில்லை. எனினும் நெடுஞ்சாலைகளில் ஒரு லிட்டருக்கு 12 முதல் 14 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கலாம்.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் வேகமானதாக உள்ளது. சௌகரியமான பயணத்தை வழங்குகிறது. அத்துடன் தேவையான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. டிசைனும் கவர்ச்சியாக இருப்பதுடன், மிசானோ ப்ளூ மெட்டாலிக் நிறம் கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது. மேற்கண்ட அம்சங்களுடன் குறைவான விலையில் ஒரு சொகுசு காரை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் செடான் போன்ற கார்களுடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே போட்டியிடும். பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் சமீபத்தில், பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் பெற்றது. ஆனால் நாங்கள் டீசல் மாடலை மட்டும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
All-New BMW 2 Series Gran Coupe M Sport (First Drive) Review: Design, Features, Engine, Handling. Read in Tamil
Story first published: Monday, January 25, 2021, 14:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X