பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசு கார்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பிஎம்டபிள்யூ 6 சீரியஸ் ஜிடி காரின் ஒரு வேரியாண்டான பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய கிரான் டுரீஸ்மோ செடான் காரினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜெர்மனி நாட்டை மையமாக கொண்ட பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு கார்கள் தயாரிப்பில் உலக புகழ் பெற்றது. கடந்த 2018ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 6 சிரீஸ் கிரான் டுரீஸ்மோ காரை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ நிறுவன 6 சிரீஸ் கிரான் டுரீஸ்மோ 4 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ 6 சீரியஸ் ஜிடி 5 சீரியஸ் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக விற்பனை செய்யப்படுகிறது. 5 சீரியஸ் கார் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில். தற்போது இந்தியாவில் 5 சீரியஸ் மாடலில் 630ஐ ஸ்போர்ட்லைன் வேரியன்ட் மட்டுமே விற்பனையில் உள்ளது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் மாடலுக்கு மாற்றாக வந்துள்ள 6 சீரியஸ் ஜிடி காரின் டாப் வேரியண்டான பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரினை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நெடுஞ்சாலையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன் :

பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் காரினை விட 6 சீரியஸ் ஜிடி கார் 150 மிமீ நீளம் அதிகமாக வடிவைமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் 5 சீரியஸ் காரினை விட 3,070 மிமீ உயரமாக தரப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க டிசைன் வடிவமைப்பு 5 சீரியஸ் காரினை போலவே உள்ளது. 6 சீரியஸ் ஜிடி காரில் கூடுதலாக திறந்து மூடும் வகையில் ஏர் வெண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.இது வெளியில் வரும் காற்றை உள்ள அனுப்பி என்ஜினை கூலாக வைக்க உதவுகிறது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஏர் வென்டுகளை மூடிவிட்டு காரினை ஓடும்போது காரின் ஏரோடைனமிக்ஸ் செயல்திறன் அதிகரிக்கிறது. மேலும் 630ஐ காரில் உள்ள டிஆர்எல் உடன் கூடிய எல்இடி ஹெட்லாம்புகள் இரவு நேரத்தில் ப்ரகாசமான ஒளியை தருகிறது. மேலும் இதன் பின்புறம் நேர்த்தியான வடிவில் டைல் லாம்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 610 லிட்டர் பூட் ஸ்பைஸ் தரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டிரியர் :

பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரின் இன்டிரியர் அப்படியே 5 சீரியஸ் காரில் உள்ள இன்டிரியரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் காக்பிட் அனைத்தும் சாஃப்ட் லெதர் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதன் கியர் ஜாய்ஸ்டிக் வடிவில் வடிவைமைக்கப்பட்டுள்ளது. கியர் அருகே கிளைமேட் கொன்றோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

630ஐ ஜிடி காரில் 10.25 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்பிலே வசதிகள் உள்ளன. இதில் கூடுதல் சிறப்பு அம்சமாக பிஎம்டபிள்யூ ஐ-டிரைவ் வசதி மூலமாக கை சைகை மூலம் காரின் ஆறு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.மேலும் இதில் ப்ளூரே பிளேயர் மற்றும் 19 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என்ஜின்:

பிஎம்டபிள்யூ 330ஐ மற்றும் 530ஐ காரில் உள்ள 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜின்தான் 630ஐ ஜிடி காருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த என்ஜின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. 630ஐ ஜிடி கார் 6.5 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரில் ஸ்போர்ட், கம்போர்ட், எக்கோ-ப்ரோ, அடாப்டிவ் என நான்கு டிரைவிங் மோடுகள் உள்ளது. சிறந்த மைலேஜ் கிடைக்க கம்போர்ட் மற்றும் எக்கோ-ப்ரோ மோடுகளை பயன்படுத்த வேண்டும். 630ஐ ஜிடி லிட்டருக்கு 8 கிமீ மைலேஜ் தருகிறது. கம்போர்ட் மற்றும் எக்கோ-ப்ரோ மோடுகளில் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தருகிறது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

630ஐ ஜிடி காரில் உள்ள ஏர் சஸ்பென்ஷன் காரினை கரடுமுரடான சாலையில் கூட கார் குலுங்காமல் செல்கிறது. இதில் உள்ள 18இன்ச் அலாய் வீல்கள் சாலையில் சிறப்பான பயண அனுபவத்தை தருகிறது. இந்த அலாய் வீல்கள் மூலம் கார் வேகமா செல்லும்போதும் மற்றும் வளைவுகளிலும் சவுகரியமாக காரினை செலுத்த முடிகிறது.

பிஎம்டபிள்யூ 630ஐ கிரான் டுரீஸ்மோ: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு:

இந்திய வியாபார சந்தையில் எக்ஸ்ஷோரூம் விலையில் ரூபாய் 59 லட்சத்திற்கு விற்பனையாகும் பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி செடான் கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சாலைகளில் இதன் செயல்திறன் சிறப்பாகவே உள்ளது மேலும் இதன் கம்பீரமான தோற்றம் காண்பவர்களை கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இ 350டி காருடன் நேரடியாக போட்டியிடும் பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
BMW 630i Gran Turismo Sport Line Review: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X