பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி : ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலக புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை காரான பிரம்மாண்ட எக்ஸ்3 20டி எஸ்யுவி காரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய கிரான் டுரீஸ்மோ செடான் காரினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலக கார் வியாபார சந்தையில் சொகுசு கார்கள் தயாரிப்பில் தனியிடம் பிடித்துள்ளது ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம். பல பிரபலமான சொகுசு கார்களை அறிமுகம் செய்து தனக்கென தனி வாடிக்கையாளர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்துள்ளது பிஎம்டபிள்யூ. இந்நிறுவனம் இந்தியாவின் குர்கான் மற்றும் சென்னையில் தனது உற்பத்தி ஆலையை துவங்கியது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டு பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி காரினை அறிமுகம் செய்தது. அதன்பின்னர் கடந்த 2011ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட எக்ஸ்3 யின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014ம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோவில் எக்ஸ்3 காரின் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எஸ்யூவி காரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு நவி மும்பையில் டெஸ்ட் டிரைவ் செய்தது. இதில் எக்ஸ்3 காரின் டிசைன், தொழில்நுட்பம், என்ஜின், செயல்திறன் மற்றும் கையாளுதல் குறித்து நாங்கள் கண்டறிந்தோம்.அது குறித்த விரிவான தகவல்கள் இதோ.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்:

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முந்தைய மாடலான எக்ஸ்3 காரினை விட மூன்றாம் தலைமுறை எக்ஸ்3 எஸ்யூவி காரின் டிசைனில் பற்பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காரின் முன்புறம் பெரிய பம்பர் உள்ளது கூடுதலாக திறந்து மூடும் வகையில் ஏர் வெண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.இது வெளியில் வரும் காற்றை உள்ள அனுப்பி என்ஜினை கூலாக வைக்க உதவுகிறது. ஏர் வென்டுகளை மூடிவிட்டு காரினை ஓட்டும்போது காரின் ஏரோடைனமிக்ஸ் செயல்திறன் அதிகரிக்கிறது..

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கூடுதல் மேம்பட்ட அம்சமாக டூயல் பேரல் ஹெட்லாம்புகள் மற்றும் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மாற்றியமைக்கப்பட்ட இதன் முன்பக்க பெனட் காருக்கு கம்பீர தோற்றத்தை தருகிறது. இதன் பக்கவாட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய எக்ஸ்3 எஸ்யூவி காரை விட இதில் வீல்பேஸ் 54மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் பின்பக்கத்தில் நேர்த்தியாக டைல் லாம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே மஹிந்திரா நிறுவன லோகோ மற்றும் அதன் அருகே எக்ஸ்3 வேரியண்ட் பேட்ச் தரப்பட்டுள்ளது. இதில் 550 லிட்டர் பூட் ஸ்பேஸ் தரப்பட்டுள்ளது. பின் சீட்டுகளை மடக்கி வைத்தால் பூட் ஸ்பேஸ் 1600 லிட்டராக அதிகரிக்க முடியும். மேலும் இதில் அழகான சன்ரூப் மற்றும் டோர் மிரர்களில் சன் பிளைண்டர்ஸ் தரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டிரியர்:

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எஸ்யூவி காரின் இன்டிரியரில் காற்றோட்டமான கேபின் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட்டுகள் பிரவுன் டகோட்டா லெதரில் கவர் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்டேரிங் மட்டும் டாஷ்போர்டு சாப்ட் டச் லெதரில் கவர் செய்யப்பட்டுள்ளது. இதன் மத்திய கன்சோல் சிஸ்டம் பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் மற்றும் 7 சீரியஸ் காரினை போலவே அமைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 10.2 டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிலே வசதிகள் உள்ளன. இதில் மற்ற பிஎம்டபிள்யூ கார்களில் உள்ள கை சைகை மூலம் காரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கேஸ்ட்சர் வசதி இதில் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இதில் 600 வாட் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கர்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் முன்பக்க சீட்டுகள் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தரும். இதன் டிரைவர் சீட்டினை எலக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். மேலும் இதன் பின் சீட்கள் 3 பேர் சவுகரியமாக பயணிக்க முடியும். இதில் நடுவில் அமர்பவர்க்கான லெக் ரூம் குறைவாக தரப்பட்டுள்ளது. பின் சீட்கள் 9 டிகிரி ரெக்லைன் சீட்களாக உள்ளதால் நீண்ட தூரம் சொகுசான பயணத்தை பெற முடியும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவி காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் ஏபிஎஸ், டைனமிக் ஸ்டாப்பிளிங் கண்ட்ரோல், கார்னிங் ப்ரேக் கண்ட்ரோல், ஆட்டோ எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஹோல்ட், கிராஷ் சென்சார்கள், எலக்ட்ரானிக் இம்மொபிலைஸர், சைடு இம்பாக்ட் பாதுகாப்பு சிஸ்டம் என ஏராளமாக பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என்ஜின் மற்றும் செயல்திறன்:

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எஸ்யூவி காரின் சக்திவாய்ந்த 2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 187.4 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி கார் 8.5 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. இந்த கார் அதிக வேகத்தில் செல்லும்போது என்ஜினில் அதிர்வுகள் ஏற்படுகிறது

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நகர்ப்புற சாலைகளில் எக்ஸ்3 20டி கார் சொகுசான பயண அனுபவத்தை தருகிறது. ஆனால் கரடு முரடான சாலைகள் அல்லது மேடு பள்ள சாலைகளில் செல்லும்போது காரில் அதிக அளவு அதிர்வுகளை உணர முடிகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எனவேதான் இந்த காரின் டிரைவிங் மோடில் ஆப் ரோடு மோட் தரவில்லை என தெரிகிறது. இதில் உள்ள 19இன்ச் அலாய் வீல்கள் அதி வேகத்தில் கார் செல்லும்போது சாலையில் சிறந்த க்ரிப்பினை அளிக்கிறது. மேலும் கார் வளைவுகளில் திருப்புவதற்கு எளிதாக உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எக்ஸ்3 20டி எஸ்யூவி காரில் காம்போர்ட், எக்கோ-ப்ரோ, ஸ்போர்ட், அடாப்டிவ் என நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புற சாலைகளில் காம்போர்ட் மோட் சிறப்பான பயணத்தை தரும். காரில் எரிபொருள் குறைவாக இருக்கும்போது அல்லது எரிபொருளை சேமிக்க எக்கோ-ப்ரோ மோடினை பயன்படுத்துவது சிறந்தது. நான்கு மோடுகளில் ஒவ்வொரு மோடினை மாற்றும்போதும் காரின் ஸ்டேரிங், என்ஜின் வேகம் மற்றும் சஸ்பென்ஷனில் மாற்றத்தினை உணர முடியும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு:

ஆடி க்யூ5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, வோல்வோ எக்ஸ்சி60, லெக்ஸஸ் என்எக்ஸ், லேண்ட் ரோவர் எவோக் மற்றும் ஜாகுவார் எஃப்-பேஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எஸ்யூவி இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் 56.70 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி பிரம்மாண்ட எஸ்யுவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எக்ஸ்3 20டி எஸ்யூவி கார் நேர்த்தியான ஸ்டைலிங் மற்றும் ஆடம்பரமான அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது. மேலும் இதன் நவீன என்ஜின் சொகுசான பயண அனுபவத்தை தருகிறது. ஆடம்பர எஸ்யூவி காரினை வாங்க விரும்புவோருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எஸ்யூவி சிறந்த தேர்வாக இருக்கும்

Most Read Articles
English summary
2018 BMW X3 xDrive 20d Review: Read In Tamil
Story first published: Saturday, May 25, 2019, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X