நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸ்4 (BMW X4) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கூபே போன்ற தோற்றம், முன் பகுதியில் க்ரோம் கிட்னி க்ரில் அமைப்பு ஆகிய அம்சங்களுடன் இந்த எஸ்யூவியின் டிசைன் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. கடந்த தசாப்தத்தில் உலகம் முழுவதும் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட எக்ஸ்6 (BMW X6) மற்றும் எக்ஸ்4 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த கூபே-எஸ்யூவிக்களை வாடிக்கையாளர்களை ஏற்று கொண்டதை இது நமக்கு நன்றாக உணர்த்துகிறது.

இந்த சூழலில், பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. நகர பகுதி மற்றும் நெடுஞ்சாலைகளில் இந்த எஸ்யூவியை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது பல்வேறு அம்சங்களில் இந்த கார் எங்களை வெகுவாக கவர்ந்தது. பிஎம்டபிள்யூ எக்ஸ்4 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பது உள்பட அனைத்து தகவல்களையும் விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

எக்ஸ்டீரியர் & டிசைன்

தொலைவில் இருந்து பார்க்கும்போது முதல் பார்வையில், இது எக்ஸ்4 காரா? அல்லது எக்ஸ்6 காரா? என்ற குழப்பம் உங்களுக்கு நிச்சயமாக ஏற்படும். பிஎம்டபிள்யூ எக்ஸ்4 கார், எக்ஸ்6 போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் உருவத்தில் சிறியதாக உள்ளது. முன் பகுதியை பொறுத்தவரை, பிஎம்டபிள்யூ எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட் யூனிட்களை இந்த கார் பெற்றுள்ளது. இந்த ஹெட்லைட் யூனிட் மிகவும் பிரகாசமாக உள்ளது. அத்துடன் மற்ற மாடல்களில் உள்ள அதே எல்இடி பகல் நேர விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஹெட்லைட்களை போலவே மிகவும் பிரகாசமான எல்இடி பனி விளக்குகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

தற்போது இந்த காரின் க்ரில் அமைப்பு பிரம்மாண்டமாக உள்ளது. அத்துடன் ஆக்டிவ் வெண்ட்கள் இடம்பெற்றுள்ளன. ஆக்டிவ் வெண்ட்கள் என்றால் என்ன? என நீங்கள் கேட்கலாம். இன்ஜின் பே-வில் அதிக காற்று தேவைப்படும் சமயங்களில் எல்லாம், அவை திறந்து, மூடி கொள்ளும். அவை மூடிக்கொண்டவுடன், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கிடைக்கும். இது மிகச்சிறப்பான ஒரு வசதியாகும். அத்துடன் முன் பகுதியில் முரட்டுத்தனமான பம்பரையும் இந்த கார் பெற்றுள்ளது. இதன் பக்கவாட்டில் வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ள சிறிய எம் பேட்ஜ்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இந்த எம் பேட்ஜூக்கு அப்படியே கீழாக வெண்ட் வழங்கப்பட்டுள்ளது. காரின் அழகியலை மேம்படுத்துவதற்காக மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக எம்-டிவிசனில் இருந்து வழங்கப்பட்டுள்ள 19 இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களும் உங்களின் கவனத்தை ஈர்க்கும். அவை சிங்கிள்-டோன் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள சில்வர் கிளாடிங்கும் கவர்ச்சி சேர்க்கிறது. மேலும் மேற்கூரையில் பெரிய பனரோமிக் சன் ரூஃப்பும், சுறா துடுப்பு ஆன்டெனாவும் வழங்கப்பட்டுள்ளன.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை, நேர்த்தியான தோற்றம் கொண்ட எல்இடி டெயில்லைட்கள், எக்ஸ்டிரைவ் பேட்ஜ், ட்வின் எக்ஸாஸ்ட் செட்-அப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவையும் இந்த கார் பெற்றுள்ளது. நெருக்கடியான இடங்களில் காரை எளிதாக பார்க்கிங் செய்வதற்கு இது உதவும். கேமராவின் தரம் நன்றாக இருக்கிறது.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

பூட் பகுதியை திறப்பதற்கு என தனியாக பட்டன் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக பின்னால் உள்ள பிஎம்டபிள்யூ லோகோவை நீங்கள் அழுத்த வேண்டும். பூட் லிட்டை மின்னணு முறையில் திறந்து மூடும் வசதியை இந்த கார் பெற்றுள்ளதால், இதன் மூலம் பூட் தானாகவே திறக்கும். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 525 லிட்டர்கள். இந்த இடவசதி உங்களுக்கு போதவில்லை என்றால், 60:40 ஸ்பிளிட் வசதி உள்ளது. இதன் மூலம் பின் வரிசை இருக்கைகளை மடித்து வைத்து கொள்ளலாம் என்பதால், லக்கேஜை வைப்பதற்கு கூடுதல் இடவசதியை ஏற்படுத்தி கொள்ள முடியும்.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரின் கேபின் கருப்பு மற்றும் பழுப்பு என ட்யூயல்-டோன் வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. டோர் பேனல் மற்றும் டேஷ்போர்டு ஆகிய இடங்களில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் மைய பகுதியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டச்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. அத்துடன் சைகை மூலம் வால்யூமை கூட்டுதல், குறைத்தல் மற்றும் பாடல்களை மாற்றுதல் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

தற்போது இந்த காரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது 12.3 இன்ச் ஸ்க்ரீனை பெற்றுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த கார் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியை பெறவில்லை.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

அதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீலில் எம் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. லெதர் சுற்றப்பட்ட இந்த ஸ்டியரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. ஆனால் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்படவில்லை. எனினும் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல் பட்டன்கள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஓட்டுனர் சாலையில் முழுமையாக கவனம் செலுத்தியபடியே இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை கட்டுப்படுத்தலாம்.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

இருக்கைகளை பொறுத்தவரை முன் பகுதியில், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை மிகவும் சௌகரியமாக உள்ளன. அவற்றை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே சீட் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

இந்த காரின் பின் வரிசை இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. கீழ் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. 2 கப் ஹோல்டர்களுடன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் மூன்றாவது க்ளைமேட் கண்ட்ரோலுக்கு டிஸ்ப்ளேவும், 2 டைப்-சி சார்ஜிங் சாக்கெட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பின் வரிசையில் மூன்று பேர் அமர்வதற்கான இடம் உள்ளது. ஆனால் நடுவில் அமரும் நபருக்கு டிரான்ஸ்மிஷன் ட்யூனல் தொந்தரவாக இருக்கும்.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரில், 3 லிட்டர், 6-சிலிண்டர், டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது (நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தது எக்ஸ்டிரைவ்30டி வேரியண்ட் ஆகும்). இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 6 வினாடிகளில் எட்டி விடும்.

இந்த காரில் ஈக்கோ ப்ரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் அடாப்டிவ் என மொத்தம் 4 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஈக்கோ ப்ரோ மோடில் ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக உள்ளது. த்ராட்டில் ரெஸ்பான்சும் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனினும் எரிபொருளை சேமிக்கிறது. ஆனால் கம்ஃபோர்ட் மோடில் ஸ்டியரிங் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சற்று மேம்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு நாங்கள் இந்த மோடைதான் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

அதே சமயம் ஸ்போர்ட் மோடில், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப்-ஆக உள்ளது. ஸ்டியரிங் சிஸ்டமும் இறுக்கம் பெறுகிறது. காரின் அதிகபட்ச செயல்திறனை இந்த மோடில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த காரில் பவர் டெலிவரி சீராக உள்ளது. அதே நேரத்தில் பேடில் ஷிஃப்டர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேனுவல் மோடில் திடீரென கியர்களை குறைக்க அது உதவியாக இருக்கிறது.

அதேபோல் இந்த காரின் சஸ்பென்ஸன் அமைப்பு, சௌகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. குண்டும், குழியுமான சாலைகளை இந்த கார் எளிதாக எதிர்கொள்கிறது. கேபினுக்குள் இதனை குறைவாகவே உணர முடிகிறது. அதேபோல் இந்த காரின் என்விஹெச் லெவல்களும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.

அதேபோல் ஆல்-வீல் டிரைவ் செட்-அப்பை பெற்றுள்ளதால், இந்த காரின் கையாளுமையும் சிறப்பாக உள்ளது. கார்னர்களையும் இந்த கார் நன்றாக எதிர்கொள்கிறது. அதிக வேகத்தில் செல்லும்போது, இந்த கார் கார்னர்களையும் எதிர்கொள்ளும் விதம் உங்களை நிச்சயமாக ஈர்க்கும்.

பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் உள்பட டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

மைலேஜை பொறுத்தவரை இது எஸ்யூவி காராக இருந்தாலும் கூட எங்களை கவர்ந்தது. நகர பகுதிகளை பொறுத்தவரை, போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப ஒரு லிட்டருக்கு 7 முதல் 10 கிலோ மீட்டர் மைலேஜ் வரை எங்களுக்கு கிடைத்தது. இந்த கார் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கார் இயக்கம் இல்லாமல் நிற்கும்போது இன்ஜின் அணைக்கப்பட்டு விடும். நீங்கள் மீண்டும் ஆக்ஸலரேட்டரை கொடுக்கும்போது கார் ஸ்டார்ட் ஆகி விடும். இதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை எரிபொருள் சேமிக்கப்படும் என பிஎம்டபிள்யூ கூறுகிறது. நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை வேகத்தை பொறுத்து ஒரு லிட்டருக்கு 11 முதல் 14 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது.

நேர்த்தியான டிசைனும், சொகுசு வசதிகளும் கலந்த கலவை... பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்டிரைவ்30டி ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரின் எக்ஸ்டிரைவ்30டி வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை 68.88 லட்ச ரூபாய் ஆகும். நேர்த்தியான ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகளின் கலவையாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓட்டுவதற்கும் நன்றாக உள்ளது. இந்திய சந்தையில் இந்த காருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் வழங்கப்பட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Most Read Articles
English summary
BMW X4 xDrive30d Road Test Review: Design, Features, Engine Performance, Handling And More. Read in Tamil
Story first published: Thursday, March 18, 2021, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X