மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரை, டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அதன் அனுபவங்களை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

ஹோண்டா நிறுவனத்தின் லைன் அப்பில் உள்ள மிக பழமையான கார்களில் ஒன்று சிவிக் (Honda Civic). கடந்த 47 வருடங்களாக ஹோண்டா சிவிக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் பயணம் கடந்த 1972ம் ஆண்டு தொடங்கியது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

அந்த காலகட்டத்தில் என்600 (N600) காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஹோண்டா சிவிக்.ஆனால் இவ்வளவு ஆண்டுகளை கடந்தும் கூட, ஹோண்டா சிவிக் விற்பனையில் இன்றும் கம்பீரமாக வெற்றிநடை போட்டு கொண்டுள்ளது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

கடந்த 2006ம் ஆண்டு, 8வது தலைமுறை சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் உள்ள கார் ஆர்வலர்கள் மத்தியில் இது உடனடியாக பிரபலமடைந்தது. அதாவது இன்ஸ்டன்ட் வெற்றி கிடைத்தது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இந்த சூழலில் தற்போது ஹோண்டா நிறுவனம் சிவிக் காரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இம்முறை வந்திருப்பது 10வது தலைமுறை சிவிக் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை தூண்டியுள்ள இந்த கார் வரும் 7ம் தேதி (மார்ச் 7) முறைப்படி அறிமுகம் செய்யப்படுகிறது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

அதற்கு முன்னதாக, ஆல் நியூ 2019 ஹோண்டா சிவிக் எப்படி உள்ளது? என்பதை கண்டறிய பெங்களூரில் வைத்து டிரைவ்ஸ்பார்க் குழு அதனை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தது. அந்த அனுபவத்தை இனி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

டிசைன்:

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாடல், ஹோண்டா சிவிக் காரின் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷன் (Facelifted Version) ஆகும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஹோண்டா நிறுவனம் இதனை காட்சிக்கு வைத்திருந்தது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் முன்பகுதியில், ஹோண்டா பேட்ஜ் உடன் கூடிய க்ரோம் க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது காரின் முன்பகுதி நுனி வரை க்ரோம் க்ரில் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

பகல் நேரத்திலும் எரியக்கூடிய விளக்குகளுடன், முழு எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்டை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இதன் முன் பகுதி டிசைன் அமர்க்களப்படுத்துகிறது. அதே நேரத்தில் இதன் பக்கவாட்டு தோற்றம் ஸ்போர்ட்டி லுக்கில் காட்சியளிக்கிறது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

பின் பகுதியை எடுத்துக்கொண்டால், C வடிவ டெயில் லேம்ப்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகின்றன என்றே சொல்லலாம். டெயில் லைட்ஸ்களும் முழு எல்இடி யூனிட்டாகதான் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

சாலையில் செல்லும்போது, காண்பவர்கள் அனைவரையும் இது கவர்ந்திழுக்கும் என்பது மட்டும் நிச்சயம். அதே சமயம் பூட்டின் (Boot) இடது பக்கம் சிவிக் பேட்ஜ், வலது பக்கம் வேரியண்ட் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் நடுவே ஹோண்டா பேட்ஜ் உள்ளது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

காக்பிட்:

10வது தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் இன்டீரியரில் பெரும்பாலும் டார்க் தீம்தான் இடம்பெற்றுள்ளது. டேஷ்போர்டு மற்றும் டோர்களின் அப்பர் பேனல்களில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பிரீமியம் உணர்வை தருகிறது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இதன் கிளவ் பாக்ஸ் மிகவும் பெரியதாக உள்ளது. பெரிய டேப்லெட்டை கூட எளிதாக வைக்க முடியும் என தோன்றுகிறது. இந்த காரில் பெரிய 3 ஸ்போக் லெதர் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீலின் இடதுபுறத்தில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமிற்கான கண்ட்ரோல்கள் உள்ளன.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

போன் கால் செய்யவும் இது டிரைவரை அனுமதிக்கிறது. அதே சமயம் ஸ்டியரிங் வீலின் வலது பக்கத்தில், க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்துக்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹோண்டா சிவிக் காரின் பெட்ரோல் வேரியண்ட்டில் பேடில் ஷிஃப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 3 வெவ்வேறு செக்ஸன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்டர் செக்ஸனில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் கூடிய பெரிய டேக்கோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. கரண்ட் ஸ்பீடு உள்ளிட்ட தகவல்களை இது வழங்குகிறது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

புதிய ஹோண்டா சிவிக் காரின் சென்டர் கன்சோல், 7-இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றுக்கான கண்ட்ரோல்களை பெற்றுள்ளது. 7.0-இன்ச் டச் ஸ்கீரின் டிஸ்ப்ளே மூலம் இந்த காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியும்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

டச் மற்றும் பட்டன்கள் என 2 வழிகளிலும் இதனை கட்டுப்படுத்தலாம். வழக்கமான ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி கனெக்டிவிட்டி ஆகியவற்றுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் இந்த 7.0-இன்ச் டச் ஸ்கீரின் யூனிட் வழங்குகிறது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

புதிய ஹோண்டா சிவிக் காரின் ஆடியோ சிஸ்டம் அருமையாக உள்ளது. 8-ஸ்பீக்கர் செட் அப்பின் கேட்கும் அனுபவம் என்ஜாய் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

சௌரியம்:

முன்பகுதி இருக்கைகள் மிகவும் சௌகரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்பகுதியில் டிரைவர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மெண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பின்பகுதி இருக்கைகளும் அருமையாக உள்ளன.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

புதிய ஹோண்டா சிவிக் கார் 5-சீட்டர் என விளம்பரம் செய்யப்படுகிறது. என்றாலும் பின் பகுதியில் 2 பேர் மட்டும் சென்றால், என்ஜாய் செய்யக்கூடிய வகையில் இருக்கும். போதுமான அளவிற்கு லெக்ரூம் உள்ளது. ஆனால் ஹெட்ரூம் குறைவாகவே உள்ளது. இதனால் உயரமானவர்கள் சிரமப்பட நேரிடலாம்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

புதிய ஹோண்டா சிவிக் காரில் சன்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியரில் போதுமான அளவிற்கு ஸ்டோரேஸ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 430 லிட்டர்கள். மிக எளிதாக லோடிங் மற்றும் அன்லோடிங் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இன்ஜின்:

10வது தலைமுறை சிவிக் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களும் உள்ளன. இதில், 1.8-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும் ஒன்று. இந்தியாவில் உள்ள சிவிக் ரசிகர்கள் இதனை எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

ஏனெனில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முந்தைய சிவிக் மாடலில் இதே யூனிட்தான் இருந்தது. ஆனால் தற்போது அதிக பவர், எரிபொருள் சிக்கனம் ஆகிய காரணங்களுக்காக, ஹோண்டா சில மாற்றங்களை செய்துள்ளது. இது BS-VI விதிமுறைக்கு உட்பட்டதாகவும் இருக்கும்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இந்த இன்ஜின் 6,500 ஆர்பிஎம்மில் 138 பிஎச்பி பவர் மற்றும் 4,300 ஆர்பிஎம்மில் 174 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் லிட்டருக்கு 16.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்று வழங்கியுள்ளது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

பெட்ரோல் இன்ஜினில் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும். இந்த இன்ஜினில் உலகம் முழுவதும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை ஹோண்டா நிறுவனம் கழித்து விட்டது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இதுதவிர 1.6-லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிஆர்-வி காரில் இருக்கும் அதே யூனிட்தான் இது. இந்த இன்ஜின் 4,000 ஆர்பிஎம்மில் 118 பிஎச்பி பவர் மற்றும் 2,000 ஆர்பிஎம்மில் 300 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இந்த இன்ஜின் லிட்டருக்கு 26.8 கிலோ மீட்டர் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. ஆனால் டீசல் இன்ஜின் மெதுவாகதான் வேகம் எடுக்கிறது. இதனை சிவிக் காரின் குறைபாடாக குறிப்பிடலாம். டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படும்.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

பாதுகாப்பு வசதிகள்:

இபிடி உடனான ஏபிஎஸ், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிரேக் அஸிஸ்ட், ஆட்டோமெட்டிக் பிரேக் ஹோல்டு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை, 10வது தலைமுறை சிவிக் காரில் ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

எதிர்பார்க்கப்படும் விலை:

இந்த செக்மெண்ட்டில் புதிய கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பெரும்பாலான வசதிகள் 2019 ஹோண்டா சிவிக் காரில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை 18-24 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

இன்ஜின் மற்றும் டைமன்சன் அட்டவணை:

இன்ஜின்

Petrol Diesel
Displacement 1799cc 1597cc
Power 139 bhp @ 6500 rpm 118 bhp @ 4000 rpm
Torque 174 Nm @ 4300 rpm 300 Nm @ 2000 rpm
Fuel Efficiency 16.5 km/l 26.8 km/l
Transmission CVT 6MT

டைமன்சன்

Petrol Diesel
Length 4,656 mm
Width 1,799 mm
Height 1,433 mm
Wheelbase 2,700 mm
Fuel Tank Capacity 47 litres
Kerb Weight 1,300 kg 1,353 kg
Seating Capacity 5
Boot Space 430 litres
Turning Radius 5.85 metres
Tyre Size 215/50 R17 91V
மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

நாங்கள் விரும்பியது:

  • டிசைன்
  • ஹேண்டலிங்
  • ஸ்டீயரிங்
  • விசாலமான இன்டீரியர்
  • லேன் அஸிஸ்ட் சிஸ்டம்
  • மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

    நாங்கள் விரும்பாதது:

    சிவிடி கியர் பாக்ஸ்

    சற்றே மந்தமான டீசல் இன்ஜின்

    மீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா.... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

    போட்டியாளர்கள்:

    டொயோட்டா கரொல்லா, ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட கார்களுடன் புதிய ஹோண்டா சிவிக் செடான் போட்டியிடும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
2019 Honda Civic Review — Has The Magic Returned? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X