தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை... புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் டுஸான் காரின் 4ம் தலைமுறை காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரில் உள்ள பல்வேறு விஷயங்கள், இதன் செயல்பாடு எப்படி இருக்கிறது? இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஹூண்டாய். இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபட்டு பெரும் அளவில் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தனது எஸ்யூவி காராக டூஸான் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் மூன்று தலைமுறை காரை அறிமுகப்படுத்திய நிலையில் அடுத்த தலைமுறையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

ஹூண்டாய் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட விற்பனை சரிவிலிருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் தனது பிரமியம் தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் விதமாக இந்த அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட் வெளிப்புற டிசைன்களில் மாற்றம் மற்றும் உட்புற டிசைனில் சிறிய மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய 4ம் தலைறை கார் டி செக்மெண்ட் எஸ்யூவி காராக விற்பனையாகி வருகிறது.

ஹூண்டாய் டுஸான் - வெளிப்புற டிசைன்

பழைய டுஸான் காரின் வெளிப்புறத் தோன்றும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால் பார்க்கக் கொஞ்சம் சாதுவாக இருந்தது. புதிய காரும் அதே சாதுவான லுக்கை கொண்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் ஸ்போர்ட்டியர் டிசைன் மொழி அதிகமாகக் கொண்டுள்ளது. இது காரின் முகப்பு பகுதியிலிருந்து பார்க்கும் போதே சிறப்பாகத் தெரிகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

முகப்பு பக்கத்தில் பெரிய டார்க் க்ரோம் கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அருகே ரன்னிங் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது பகல் நேரத்தில் கிரில் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது. இரவு நேரத்தில் லைட் போட்டால் மட்டுமே அது லைட் எனத் தெரிகிறது. கிரிலின் இரண்டு பக்கங்களிலும் டர்ன் சிக்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பானட்டின் இரு புறங்களிலும் சில பல்ஜ் மற்றும் ஷார்ப் லைன்கள் உள்ளன. இது புதிய டுஸான் காருக்கு ஸ்போட்டி லுக்கை தருகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

ஹெட்லைட்கள் வழக்கமான சிறிய ரக ஹூண்டாய் எஸ்யூவி கார்களைபோல கீழ்புற பம்பரை காட்டிலும் பெரிய அளவில் இருக்கிறது. கீழ் புற முகப்பு பம்பர் பிளாஸ்டிக் கிளாடிங் உடன் இது காரை சுற்றிலும் கிளாடின் காரின் பின்புறம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் காரின் இன்ஜினிற்குள் காற்று செல்லும் வகையில் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

புதிய டுஸான் காரின் பக்கவாட்டு பகுதிகளைப் பொருத்தவரை பார்த்த உடன் உங்கள் கண்கள் பெரிய வட்ட வடிவிலான வீல் ஆர்ச்தான் கண்களுக்குத் தெரியும். இது 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், கார் கண்ணாடிக் கதவுகளைச் சுற்றி க்ரோம் பட்டை பின்புற விண்ட் ஷில்டு வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் ஆங்காங்கே கேரக்டர் லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது காருக்கு ஒரு சிறப்பான வடிவமைப்பு லுக்கை தருகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

புதிய டுஸான் காரின் பின்புறத்தைப் பொருத்தவரை வரை எல்இடி லைட்களின் டாமினேஷன் தான் அதிகம் இருக்கிறது. ஹூண்டாய் பேட்ஜ் விண்ட் ஸ்கிரீனிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேல் புறம் உள்ள ஸ்பாய்லர்களில் சிவப்பு பிரேக் லைட் எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே பேஷ் பிளேட் முன்பக்கம் இருப்பது போலவே கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

ஹூண்டாய் டுஸான் உட்புற கட்டமைப்பு மற்றும் அம்சங்கள்

காரின் பாடி நிறத்திலேயே உள்ள டோர் ஹேண்டிலை திறந்து உள்ளே சென்றால் நீங்கள் மினிமலிஸ்ட் இன்டிரீயர் டிசைன் பார்க்க முடியும். இந்த கார் தனித்துவமான ஸ்டைலில் இருக்கிறது. உள்பக்கம் மேலே பெரிய பானரோமிக் சன் ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. உள்பக்கம் முழுவதும் சாஃப்ட் டச் மெட்டிரீயல் கொண்டு பிரிமியம் ஃபீலை வழங்குகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

சீட்களில் லெதர்ரேட் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது இது சொகுசான பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த சீட் வென்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. டிரைவருக்கு 10 வழி அட்ஜெஸ்டபிள் மெமரி ஃபங்சனுடைய பவர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் லும்பம் சப்போர்ட் சீட் வசதியும் இருக்கிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

பின்பக்க சீட்டில் அமர்ந்திருப்பவர்களும், சொகுசு பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பெரிய வீல் பேஸ் இருப்பதால் தாராளமான இட வசதி இருக்கிறது. இதனால் பயணிகள் கை கால்களை நீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும். முன்பக்க சீட்டை ஒரு பட்டனை அழுத்தி முன்பக்கம் இழுத்து வைக்கும் ஆப்ஷனும் இருக்கிறது. வார இறுதி ரோட் ட்ரிப் செல்வதற்கு அதிக பொருட்களை எடுத்து செல்லும் வகையில் 539 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது. குடும்பத்துடன் ஷாப்பிங் சென்றால் எளிதாகப் பயன்படுத்தும் படி பின்பக்கம் பவர் டெயில்கேட் கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

புதிய ஹூண்டாய் டுஸான் காரில் மல்டி லேயர் டேஷ்போர்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசியை பொருத்தவரை டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. HVAC சிஸ்டம் ஆன் செய்யப்பட்டிருந்தால் டூயல் சோன் சிஸ்டத்தையும் ஆன் செய்யலாம்.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

டேஷ்போர்டில் 10.25 இன்ச் டிஸ்பிளே ஸ்கிரீன்கள் உள்ளது. ஒன்று ஸ்கிரீனிற்கு பின்புறம் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, மற்றொன்று மத்தியில் சென்டர் கன்சோலில் உள்ள டிஸ்பிளே, டிரைவர் டிஸ்பிளே டிரைவிங் மோடிற்கு ஏற்ப மாற்றி மாறி தெரிகிறது. இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் இருக்கிறது. ஹூண்டாய் ப்ளு லிங்க் சூட் கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 8 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆடியோவில் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

ஹூண்டாய் டுஸான் பாதுகாப்பு

புதிய ஹூண்டாய் டுஸான் கார் 60க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 6 ஏர் பேக்கள், ஆல் வீல் டிஸ்க் பிரேக், பார்க்கிங் அசிஸ்ட், கைடு லைன்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள், டவுண்ஹில் பிரேக் கண்ட்ரோல், ஈஎஸ்சி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், என ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

இது போக ADAS லெவல் 2 ஸ்மார்ட் சென்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்டென்ஸ், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல், ஃபார்வேர்டு கோலிஷன் வார்னிங், லேன் ஃபாலோயிங் அசிஸ்டென்ட், ஹைபீம் அசிஸ்ட், சரவுண்ட் வியூ மானிட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. எங்களுக்குக் குறைவான டெஸ்டிங் நேரமே கிடைத்ததால் ADAS தொழிற்நுட்பத்தை டெஸ்ட் செய்ய முடியவில்லை. ஆனால் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது சரவுண்ட் வியூ சிஸ்டம் மூலம் சிறப்பான கேமரா வியூ கிடைத்தது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்கள்

ஹூண்டாய் டுஸான் காரை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் இருக்கிறது. இதில் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 154 பிஎச்பி பவரை 6200 ஆர்பிஎம்மிலும், 192 என்எம் டார்க் திறனை 4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டார்க் கன்வெர்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை அதில் முன் பக்க வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் மட்டும் தான் வருகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

டீசல் வெர்ஷனை பொருத்தவரை டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 184 பிஎச்பி பவரை 4000 ஆர்பிஎம்மபிலும், 416 எம் என் டார்க் திறனை 2000 மற்றும் 2700 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் முன்பக்கம் மற்றும் ஆல்வில் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களுடன் வருகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

ஹூண்டாய் டுஸான் டிரைவிங் இம்பிரஷன்

நாங்கள் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் வெர்ஷன் ஹூண்டாய் டுஸான் காரை ஓட்டிப்பார்த்தோம். இந்த கார் 4 சிலிண்டர் இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பெர்பாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. அதிக வேகத்தில் செல்லும் போது காருக்குள் சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

டார்க் கன்வெர்டரை பொருத்தவரை கியர் மாறுவதே தெரியாத அளவிற்கு இலகுவாக கியர் மாறுகிறது. வேகமாகச் செல்ல வேண்டும் என ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் டார்க் கன்வெர்டர் தானாக ஓரிரு கியர்களை குறைத்து நல்ல டார்க்கை எடுத்துக் கொடுக்கிறது. இந்த காரில் மொத்தம் 4 டிரைவிங் மோட்கள் உள்ளன. எக்கோ, நார்மல், ஸ்போட் மற்றும் ஸ்மார்ட் ஆகிய டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

இதில் எக்கோ மோட் த்ராட்டலுக்கு மிக மெதுவாகவே ரெஸ்பான்ஸ் செய்கிறது. ஆனால் இந்த நேரத்தில் ஸ்டியரிங் வெயிட் இல்லாமல் இலகுவாக மாறி எளிதாகக் காரை இயக்க உதவி செய்கிறது. ஸ்போர்ட் மோடில் த்ராட்டலுக்கு மிக வேகமான ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் ஸ்டியரிங் வெயிட்டாகி எளிதாகக் கையாள உதவி செய்கிறது. இதனால் கார்களில் கான்ஃபிடென்ஸாக திருப்ப முடிகிறது.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

கார்னர்களில் ஹூண்டாய் டுஸான் எஸ்யூவி சிறப்பான செயல்படவில்லை. ஆனால் பாடிரோல்களை பெரிய டயர்கள் குறைக்கிறது. சஸ்பென்சன்கள் சாஃப்டாகவே அமைக்கப்பட்டுள்ளது. இது நெடுஞ்சாலைகளில் ரெகுலரான வேகத்தில் செல்லும் போது சிறப்பாக இருக்கிறது. ஆனால் கரடு முரடான சாலைகளுக்கு ஏற்றது இல்லை. வேகமாகக் கரடு முரடான சாலைகளில் சென்றால் காருக்குள் பெரிய அளவில் அதிர்வுகள் இருக்கும்.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

புதிய ஹூண்டாய் டுஸான் காரின் டாப் ஸ்பெக் மாடலின் டீசல் வேரியன்டில் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் இந்த காரை கொண்டு யாரும் கரடு முரடான பாதைகளில் செல்லப்போவதில்லை. ஆல் வீல் டிரைவின் பயன்பாடு மிகவும் குறைவு தான்.

தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை . . . புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ

இறுதித் தீர்ப்பு

ஹூண்டாய் நிறுவனம் தனது டுஸான் காரின் 4வது தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பார்ப்பதற்குச் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு பெர்பாமென்ஸில் அப்டேட் இல்லை. ஆனால் இந்த டுஸான் காரை குறை சொல்ல பெரியதாக எதுவும் இல்லை. இதன் பெர்பாமென்ஸ், தொழிற்நுட்பம் மற்றும் சில அம்சங்கள் பயணிகளை பாதுகாப்பாகப் பயணிக்க வழி வகுக்கும். நீங்கள் ஹூண்டாயின் சிறந்த காரை வாங்க நினைத்தால் புதிய டுஸான் கார் உங்களுக்குச் சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles
English summary
Hyundai Tucson 4th generation car Review price engine design and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X