3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

இந்தியர்கள் யுடிலிட்டி வாகனங்களை (Utility Vehicles) அதிகம் விரும்ப கூடியவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதிக இருக்கைகளும், இடவசதியும் கொண்ட வாகனங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன. இதன் காரணமாக விற்பனையிலும் அவை ஜொலிக்கின்றன. இந்த விஷயத்தை கியா இந்தியா நிறுவனம் நன்றாக புரிந்து வைத்துள்ளது.

இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு செல்டோஸ். இந்த எஸ்யூவி ரக கார் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு கியா கார்னிவல் எம்பிவி ரக காரும், கியா சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த 3 கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து தனது 4வது தயாரிப்பான கேரன்ஸ் (Kia Carens) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு, கியா இந்தியா நிறுவனம் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இது எஸ்யூவி போன்ற பரிமாணங்களை கொண்ட எம்பிவி கார் ஆகும். எனினும் கியா இந்தியா நிறுவனம் இதனை ஆர்வி ( RV - Recreational Vehicle) என அழைக்க விரும்புகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் பற்றிய முழுமையான தகவல்களையும் இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

டிசைன்

எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் கியா கேரன்ஸ் கார் கவர்ச்சிகரமாக இருக்கிறது. பல்வேறு தனித்துவமான டிசைன் அம்சங்களை கியா கேரன்ஸ் பெற்றுள்ளது. முன் பகுதியில் புதிய கியா லோகோ முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பிறகு உங்கள் கவனம் எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் ஹெட்லேம்ப் செட்-அப்பிற்கு செல்லலாம். நட்சத்திர கூட்டத்தை மனதில் வைத்து இந்த எல்இடி பகல் நேர விளக்குகளை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

எல்இடி பகல் நேர விளக்குகளுக்கு கீழே 3-மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பகுதியில் கியா நிறுவனத்திற்கே உரித்தான புலி மூக்கு வடிவிலான க்ரில் அமைப்பும் கவனம் ஈர்க்கிறது. இதில் தேன் கூடு வடிவ 'பேட்டர்ன்' கொடுக்கப்பட்டுள்ளது. பின்னால் உள்ள ரேடியேட்டருக்கு காற்றோட்டம் செல்வதற்கு இது அனுமதிக்கிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் கியா நிறுவனத்திற்கே உரித்தான ஐஸ் க்யூப் பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பானெட் சற்றே உயர்த்தப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மேலும் கியா கேரன்ஸ் காரில் ஷோல்டர் லைனும் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன் பகுதியில் தொடங்கி பின் பகுதி வரை இது செல்கிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போதுதான் கியா கேரன்ஸ் கார் எவ்வளவு பெரியது? என்பதை தெளிவாக உணர முடியும். A, B மற்றும் C பில்லர்கள் கருப்பு நிறத்திலும், D பில்லர் பாடியின் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் டோர் ஹேண்டில்கள் நன்றாக உள்ளன. இதில், க்ரோம் பூச்சு வழங்கப்பட்டுள்ளது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

கியா கேரன்ஸ் காரில் 16 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. இந்த ட்யூயல்-டோன் அலாய் வீல்கள், டர்பைன் போன்ற டிசைனை பெற்றுள்ளன. வீல் ஆர்ச்சுகளும், கார் முழுவதும் வழங்கப்பட்டுள்ள மேட்-பிளாக் நிற க்ளாடிங்கும் கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன. பக்கவாட்டு க்ளாடிங்கின் மீது சில்வர் பட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

பின் பகுதியில்தான் கியா கேரன்ஸ் கார் எஸ்யூவி போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இங்கே டெயில்லேம்ப்கள்தான் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான விஷயமாக இருக்கும். இது ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகும். இதுவும் நட்சத்திர கூட்டத்தை மனதில் வைத்துதான் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டெயில்கேட் அளவில் பெரியதாக உள்ளது. இங்கே புதிய கியா லோகோ மீண்டும் ஒரு முறை முக்கியத்துவம் பெறுகிறது. கீழே பருத்த பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதில், க்ரோம் பட்டை இடம்பெற்றுள்ளது. மேலே ஸ்டாப் லேம்ப் உடன் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

இன்டீரியர்

கதவுகளை திறந்து உள்ளே சென்றதும், விசாலமான மற்றும் காற்றோட்டனமான இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. கியா கேரன்ஸ் காரின் கேபினில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் ஓட்டியது டாப் மாடல் ஆகும். இது நேவி ப்ளூ மற்றும் பழுப்பு நிற கலவையில் தனித்துவமான ட்யூயல்-டோன் இன்டீரியர் உடன் வருகிறது. நாங்கள் நினைத்ததை விட இந்த கேபின் பிரீமியமாக இருக்கிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

டேஷ்போர்டின் மேல் பகுதி நேவி ப்ளூ நிறத்திலும், கீழ் பகுதி பழுப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மைய பகுதியில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் இது வருகிறது. ஆனால் இந்த 2 வசதிகளுக்கும் வயர்லெஸ் கனெக்டிவிட்டி இல்லை. ஆனால் இந்த சிஸ்டத்துடன் உங்கள் செல்போனை இணைப்பது மிகவும் எளிமையான விஷயமாகதான் உள்ளது. அதே சமயம் இந்த காரில் போஸ் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒலி தரம் அருமையாக இருக்கிறது. கியா செல்டோஸ் காரிலும் கூட போஸ் ஆடியோ சிஸ்டம்தான் இடம்பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

செல்போன் அழைப்புகளை செய்யவும், மெசேஜ்களை படிக்கவும், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங்கை கட்டுப்படுத்தவும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை பயன்படுத்தி கொள்ள முடியும். அத்துடன் கியா கனெக்ட் வசதியையும் கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. எனவே செல்போன் செயலி மூலமாக கியா கேரன்ஸ் காரை கண்காணிக்க முடியும். மேலும் 'Quiet Mode' என்ற வசதியும் கியா கேரன்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பின்புற ஸ்பீக்கர்கள் துண்டிக்கப்பட்டு விடுவதால் பயணிகளுக்கு அமைதியான பயணம் கிடைக்கும். இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழே தனித்துவமான 'லைன்' ஒன்று வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் ஒட்டுமொத்த அகலத்திற்கும் இது செல்கிறது. இதற்கெல்லாம் கீழே ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறிய திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. டெம்ப்ரேச்சர், ஃபேன் ஸ்பீடு உள்ளிட்ட தகவல்களை இது காட்டுகிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் சென்டர் கன்சோல் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பயனுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் ட்ரைவிங் மோடுகளை மாற்றுவதற்கும், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் முன் இருக்கைகளுக்கான வெண்டிலேஷன்/கூலிங் வசதியை ஆன்/ஆஃப் செய்வதற்கும் சில பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

அத்துடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேட் வசதியையும் கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. அத்துடன் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயர் கியல் லிவருக்கு அருகே கூலிங் ஃபங்ஷன் உடன் கப் ஹோல்டர் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் பானங்களை இங்கே குளிர்ச்சியாக வைத்து கொள்ள முடியும். கப் ஹோல்டருக்கு பின்னால் டிரைவர் மற்றும் கோ-டிரைவருக்கு ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆர்ம்ரெஸ்ட்டை தூக்கினால் கழற்ற கூடிய வகையில் ட்ரே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பர்ஸ் போன்றவற்றை வைத்து கொள்ளலாம்.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

அதே நேரத்தில் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது இந்த செக்மெண்ட்டில் மிகவும் விரிவான இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது பெரிய முழு கலர் எல்சிடி திரை ஆகும். இதன் நடுவில் சிறிய 4.2 இன்ச் எம்ஐடி வழங்கப்பட்டுள்ளது. ரேஞ்ச், சராசரி எரிபொருள் சிக்கனம் மற்றும் ட்ரைவிங் மோடுகள் உள்பட பல்வேறு தகவல்களை இந்த எம்ஐடி வழங்குகிறது. இந்த காரின் டோர் பேனல்களும் பிரீமியமான உணர்வை தருகின்றன. இந்த காரில் குடையை வைப்பதற்கான ஹோல்டரும் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதியில் தண்ணீர் வடிவதற்கான துவாரமும் இடம்பெற்றுள்ளது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு, பூட் ஸ்பேஸ்

இங்கேதான் கியா கேரன்ஸ் கார் அதிகமாக ஸ்கோர் செய்கிறது. எம்பிவி கார்கள் என்றாலே அனைவரும் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயங்களாக சௌகரியம், நடைமுறை பயன்பாடு மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவை இருக்கும். இந்த எதிர்பார்ப்பை கியா இந்தியா நிறுவனம் அருமையாக பூர்த்தி செய்துள்ளது.

குறிப்பாக கியா கேரன்ஸ் இருக்கைகளை தனியாக குறிப்பிட்டே ஆக வேண்டும். நாங்கள் ஓட்டியது லக்ஸரி ப்ளஸ் வேரியண்ட் ஆகும். இது டாப் மாடல் என்பதை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதன் முன் இருக்கைகளில் வெண்டிலேஷன்/கூலிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே உங்களுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும் என்பது உறுதி. அத்துடன் இந்த பெரிய இருக்கைகளின் குஷனிங்கும் நன்றாக இருக்கிறது. எனவே இந்த வசதிகள் இந்த இருக்கைகளுக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கின்றன.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

அதே சமயம் இந்த வேரியண்ட்டின் இரண்டாவது வரிசையில் 2 கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. முன் இருக்கைகளை போல் அளவு மற்றும் வடிவத்தில் இவையும் பெரிதாக இருக்கின்றன. இந்த இருக்கைகளில் தொடை மற்றும் முதுகுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இந்த இரண்டு கேப்டன் இருக்கைகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளை முன்னோக்கியும், பின்னோக்கியும் நகர்த்த முடியும். சாய்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

மூன்றாவது வரிசை இருக்கைகள் உடன் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கியா கேரன்ஸ் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கைகள், மற்ற எம்பிவி கார்களை போலவே இட நெருக்கடியுடன் இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு என்பதை கியா கேரன்ஸ் நிரூபித்து விட்டது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

இனி இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு செல்வோம். உண்மையிலேயே இந்த காரின் மூன்றாவது வரிசையில் உள்ள இடவசதி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு இங்கே சௌகரியமான பயணம் கிடைக்கிறது. இது உண்மையிலேயே மிக சிறப்பான விஷயம். ஏனெனில் ஒரு சில கார்களில் மூன்றாவது வரிசை இருக்கைகளில் சிறியவர்கள் மட்டுமே அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது வரிசை இருக்கைகளில் சாய்வு வசதியுடன், அட்ஜெஸ்ட் செய்ய கூடிய ஹெட்ரெஸ்ட் வசதியும் இருப்பது சிறப்பான ஒரு விஷயம். மூன்றாவது வரிசையில் அமரும் இரண்டு பயணிகளுக்கும் தலைக்கு மேலே ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தி தருகிறது. அத்துடன் டைப்-சி ஸ்மார்ட்போன் சார்ஜிங் ஸ்லாட், செல்போன்/டேப்லெட் ஹோல்டர் ஆகிய வசதிகளும் இருக்கின்றன. இதன் மூலம் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகளுக்கு இணையான சௌகரியம் இங்கே கிடைக்கிறது என கூற முடியும். எங்கள் குழுவில் இருந்த ஒரு சிலருக்கு மூன்றாவது வரிசை இருக்கைகளில் இருந்து வருவதற்கு மனமே இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்!

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

மூன்று வரிசை இருக்கைகளும் உயர்ந்து இருக்கும் நிலையில், 3 கேபின் பேக்குகளை வைக்கும் அளவிற்கான பூட் ஸ்பேஸ் இடவசதியை கியா கேரன்ஸ் பெற்றுள்ளது. எனினும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் ஃப்ளாட்பெட் பெரிதாக உள்ளது. அதேபோல் இரண்டாவது வரிசை இருக்கைகளையும் மடக்கி வைத்து கொண்டால், பொருட்களை வைப்பதற்கான இடவசதி இன்னும் அதிகரிக்கும். ஆனால் கியா கேரன்ஸ் காரின் அதிகாரப்பூர்வ கார்கோ ஸ்பேஸ் நம்பர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனினும் இந்த காரில் ஒரு சில குறைகளும் இருக்கின்றன. முன் பகுதி இருக்கைகளில் வெண்டிலேஷன்/கூலிங் வசதிகள் இருந்தாலும், ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி வழங்கப்படவில்லை. இருப்பினும் எலெக்ட்ரிக் டெயில்கேட் வசதியை இந்த கார் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு பயணிக்கும் தலைக்கு மேலே ஏசி வெண்ட் வழங்கியிருப்பதால், கியா நிறுவனம் பெரிய பனரோமிக் சன்ரூஃப்பை வழங்கவில்லை. இருப்பினும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

நமக்கு நன்கு பரிட்சயமான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள்தான் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பவர்ட்ரெயின் தேர்வுகள் முதலில் கியா செல்டோஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் அல்கஸார் காரிலும் வழங்கப்பட்டன. இதில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் இன்ஜின் தேர்வுகள் அடங்கும்.

கியா கேரன்ஸ் லைன்-அப்பில் சக்தி வாய்ந்த இன்ஜின் என்ற பெருமையை 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் பெறுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். மற்றொரு பெட்ரோல் இன்ஜின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 113.4 பிஹெச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படும். ஆட்டோமேட்டிக் தேர்வு இல்லை.

நாங்கள் ஓட்டியது CRDi டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட லக்ஸரி ப்ளஸ் வேரியண்ட் ஆகும். இந்த இன்ஜின் 4,000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 113.4 பிஹெச்பி பவரையும், 1,500-2,750 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுடன் இந்த இன்ஜின் வழங்கப்படுகிறது. இதில் நாங்கள் ஓட்டியது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் ஆகும்.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனை அழுத்திய பின், நமக்கு நன்கு பரிட்சயமான டீசல் இன்ஜின் சப்தம் நம்மை வரவேற்கிறது. ஆனால் அதிக சப்தம் இல்லை. இது மெல்லிய சப்தம் மட்டுமே. எனவே இது நமக்கு எந்த வகையிலும் தொந்தரவை ஏற்படுத்தவில்லை. நகர பகுதிகளில் கியா கேரன்ஸ் காரை ரிலாக்ஸாக ஓட்ட முடிகிறது. இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் 250 என்எம் டார்க் திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த காரில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. கியா கேரன்ஸ் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் மட்டுமே இந்த டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

டிரைவிங் மோடுகளை மாற்றுவதற்கு சென்டர் கன்சோலில் உள்ள பட்டனை டிரைவர் பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு டிரைவிங் மோடும் ஒவ்வொரு வகையான பண்புகளை கொண்டுள்ளது. ஈக்கோ மோடை பொறுத்தவரை, எரிபொருள் சிக்கனம்தான் முக்கிய நோக்கம். எனவே கியர் ஷிஃப்ட்கள் முன்கூட்டியே நடப்பது போல் இருக்கிறது. அதே நேரத்தில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சற்று தாமதமாவதை போல் உள்ளது. அதே நேரத்தில் ஸ்டியரிங் வீல் இலகுவாகவும், நன்றாகவும் உள்ளது. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு ஈக்கோ மோடு ஏற்றது. அதே சமயம் நார்மல் மோடுக்கு மாற்றியவுடன், இந்த விஷயங்கள் உடனடியாக மாறி விடுகின்றன. நார்மல் மோடில் ஸ்டியரிங் வீல் சற்று இறுக்கம் பெறுகிறது. இன்ஜின் ரெஸ்பான்ஸ் சிறப்பாக மாறுகிறது. அதே நேரத்தில் ஸ்போர்ட் மோடில் இந்த விஷயங்கள் இன்னும் மாற்றம் பெறுகின்றன. ஸ்போர்ட் மோடில் இன்ஜின் சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆனால் கேரன்ஸ் போன்ற ஒரு பெரிய காருக்கு இந்த இன்ஜின் உற்பத்தி செய்யும் சக்தி சற்று குறைவு என எங்களுக்கு தோன்றியது. இன்ஜின் இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கையாளுமையை பொறுத்தவரையில், நாங்கள் ஏற்கனவே கூறியபடி தேர்வு செய்யப்படும் டிரைவிங் மோடுக்கு ஏற்ப ஸ்டியரிங் சிஸ்டம் மாற்றம் பெறுகிறது. அதே நேரத்தில் அனைத்து டிரைவிங் மோடுகளிலும் பாடி ரோலையும் உணர முடிகிறது. சௌகரியமான பயணத்தையும், நல்ல கையாளுமையையும் வழங்கும் வகையில் கியா இந்தியா நிறுவனம் சஸ்பென்ஸனை ட்யூன் செய்துள்ளது. அதே நேரத்தில் பிரேக்கிங்கும் தேவைக்கு அதிகமாகவே நன்றாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் கியா கேரன்ஸ் காரை ஓட்டுவது உற்சாகமான அனுபவத்தை வழங்குகிறது.

3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கிய வசதிகள்

கியா இந்தியா நிறுவனம் கேரன்ஸ் கார் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

கியா கேரன்ஸ் பாதுகாப்பு வசதிகள்

  • 6 ஏர்பேக்குகள்
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட்
  • அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள்
  • டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்
  • ஹில் அசெண்ட் கண்ட்ரோல்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • ஆன்டி-லாக் பிரேக்குகள்
  • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
  • ஸ்பீடு சென்சிங் டோர் லாக்
  • இந்த அனைத்து வசதிகளும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

    கியா கேரன்ஸ் முக்கிய வசதிகள்

    • 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங்
    • வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்
    • முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள்
    • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
    • இரண்டாவது வரிசைக்கு ஒன்-டச் டம்பிள் (இருக்கைகளை மடக்கி வைக்கும் வசதி)
    • கியா கனெக்ட் தொழில்நுட்பம்
    • 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
    • 8 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம்
    • ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர்
    • 3வது வரிசையில் கூட தாராளமான இடவசதி... எம்பிவி கார்னா இப்படிதான் இருக்கணும்... Kia Carens ரிவியூ!

      டிரைவ்ஸ்பார்க் கருத்து

      நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்ததை போல், அதிக இருக்கைகளுடன் விற்பனைக்கு வரும் எம்பிவி கார்களை இந்தியர்கள் அதிகம் நேசிக்கின்றனர். ஆனால் 7 சீட்டர் என வந்து விட்டால் நிறைய எம்பிவி கார்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதில்லை. பெரும்பாலான எம்பிவி கார்கள் 7 பேருக்கு சௌகரியமாக இருப்பதில்லை. மூன்றாவது வரிசையில் குழந்தைகள் கூட நெருக்கடியை சந்திக்கின்றனர். ஆனால் கியா கேரன்ஸ் அப்படிப்பட்டது கிடையாது.

      மூன்றாவது வரிசையில் இடவசதியும், சௌகரியமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற புதிய தரத்தை கேரன்ஸ் மூலம் கியா நிர்ணயித்துள்ளது. அத்துடன் கியா கேரன்ஸ் காரின் வசதிகளின் பட்டியலும் நீளமாக உள்ளது. பாதுகாப்பு மற்றும் டிசைன் அம்சங்களிலும் இந்த கார் அசத்துகிறது. இதன் மூலம் இந்தியாவின் மிக சிறந்த எம்பிவி கார்களில் ஒன்று என்ற பெருமையை கியா கேரன்ஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Kia carens review design interior features engine performance driving impressions
Story first published: Saturday, January 29, 2022, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X