இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்! அவ்வளவு சொகுசு!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு காலடி எடுத்து வைத்தது. இந்திய மார்க்கெட்டிற்கான தனது முதல் தயாரிப்பாக செல்டோஸ் எஸ்யூவி காரை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. செல்டோஸ் எஸ்யூவி காருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளதால், முதல் தயாரிப்பின் மூலமாகவே இந்திய மார்க்கெட்டில் கியா மோட்டார்ஸ் தனி முத்திரையை பதித்து விட்டது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இந்திய மார்க்கெட்டில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு புதிய தயாரிப்பை களமிறக்க உள்ளதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கியா மோட்டார்ஸ் உறுதியாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கார்னிவல் எம்பிவி காரை கியா மோட்டார்ஸ் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில், கியா கார்னிவல் எம்பிவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய மார்க்கெட்டிற்கான கியா நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக கார்னிவல் இருக்கும். ஆனால் கியா செல்டோஸை போல் கியா கார்னிவல் புத்தம் புதிய தயாரிப்பு கிடையாது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இது ஏற்கனவே பல சர்வதேச மார்க்கெட்களில் விற்பனையில் இருக்கும் கார் ஆகும். அதனைதான் கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வரவுள்ளது. இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் கியா கார்னிவல், தனக்கென தனியாக ஒரு செக்மெண்ட்டை உருவாக்கும். டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான மாடலாக இது இருக்கும்.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

செல்டோஸ் என்ற ஒரே ஒரு காரை மட்டும் விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு பிரிமீயம் எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது என கியா மோட்டார்ஸ் எடுத்திருக்கும் முடிவு உண்மையில் துணிச்சலானது. ஆனால் இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவனம் தன்னை ஒரு பிரிமீயம் பிராண்டாக நிலை நிறுத்தி கொள்வதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள கியா கார்னிவல் காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது கார்னிவல் கார் எங்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்தது. செல்டோஸ் போலவே கார்னிவலும் பிரம்மாண்ட வெற்றியை சந்திக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், எங்களின் விரிவான ரிவியூவை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

டிசைன் & ஸ்டைல்

கியா கார்னிவல் காரின் டிசைன் & ஸ்டைலை ஒரே வரியில் விவரித்து விடலாம். நிச்சயமாக இந்த கார் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். கியா கார்னிவல் காரை பார்த்த உடனேயே அதன் பிரம்மாண்டமான தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவர்ந்து விடும். கியா கார்னிவல் கார் கம்பீரமாகவும், அதே சமயம் மிக நேர்த்தியாகவும் வடிமைக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத லைன்கள் போன்ற எதையும் கியா கார்னிவல் கொண்டிருக்கவில்லை.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

கார்னிவல் லக்ஸரி எம்பிவி காரின் முன்பகுதியில், கியா நிறுவனத்திற்கே உரிய புலி மூக்கு வடிவ க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. முன் பகுதி முழுக்க இதுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. மெல்லிய குரோம் பட்டைகளுடன் இந்த க்ரில் வருகிறது. அதே சமயம் க்ரில் முழுவதையும் சுற்றி தடித்த குரோம் பட்டையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

முன்பக்க க்ரில்லின் இருபுறமும் பக்கவாட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த டர்ன் சிக்னல்களையும் கொண்டுள்ளன. ஹெட்லேம்ப்களுக்கு கீழாக எல்இடி பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சி-வடிவ அறையில் இந்த பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதை சுற்றிலும் குரோம் வழங்கப்பட்டுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

கியா கார்னிவல் எம்பிவி காரின் பக்கவாட்டு டிசைன் எளிமையாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் இருக்கிறது. இந்த காரில், 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இனி கியா கார்னிவல் காரின் பின்பகுதிக்கு செல்வோம். கியா கார்னிவல் காரின் பெரிய பூட் லிட், நடுவில் அதாவது நம்பர் பிளேட்டிற்கு மேலே மெல்லிய குரோம் பட்டையுடன் வருகிறது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

கியா கார்னிவல் காரின் பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பம்பர்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் கார் பாடியின் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. ஓஆர்விஎம்களில், எல்இடி டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

அத்துடன் முன் மற்றும் பின் பகுதிகளில் ஸ்கிட் பிளேட்கள் உடனும் கியா கார்னிவல் லக்ஸரி எம்பிவி கார் வருகிறது. இதன் டோர் ஹேண்டில்களில் குரோம் பூச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் கியா கார்னிவல் லக்ஸரி எம்பிவி காரின் டிசைன் அட்டகாசமாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இன்டீரியர்கள் & நடைமுறை பயன்பாடு

உண்மையில் இந்த ஏரியாவில்தான் கியா கார்னிவல் நமது ஆர்வத்தை தூண்டுவதுடன், அட்டகாசமாகவும் இருக்கிறது. நீளமான எம்பிவி காராக இருப்பதால், கியா கார்னிவல் உட்புறத்தில் நல்ல விசாலமான இட வசதியை வழங்குகிறது. 5 மீட்டருக்கும் மேலான நீளத்தில் கியா கார்னிவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை விட கியா கார்னிவல் நீளமானது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் நீளம் 4.7 மீட்டர்கள் மட்டுமே.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

ஆனால் கியா கார்னிவல் காரின் இருக்கை அமைப்பு நீங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொறுத்து மாறுபடும். 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 9 சீட்டர் மாடல்களில் கியா கார்னிவல் எம்பிவி கிடைக்கும். 7 இருக்கைகளுடன் வரும் டாப் வேரியண்ட்டான லிமோசின் வேரியண்ட்டைதான் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

கியா கார்னிவல் காரின் டிரைவர் இருக்கை, மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வசதியுடன் வருகிறது. இந்த இருக்கை சௌகரியமாக இருப்பதுடன், சாலை நன்றாகவும் தெரிகிறது. இந்த காரின் டிரைவர் இருக்கையை மின்னணு முறையில் 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அத்துடன் இந்த காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இது பிரிமீயமான உணர்வை தருகிறது. கியா கார்னிவல் காரில் வழங்கப்பட்டிருப்பது பவர் ஸ்டியரிங். டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் அட்ஜெஸ்மெண்ட் வசதியும் உள்ளது. அத்துடன் ஆடியோ மற்றும் கால்கள் போன்றவற்றுக்கான கண்ட்ரோல்களுடனும் ஸ்டியரிங் வீல் வருகிறது. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால், 2 வட்ட வடிவ டயல்களுடன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இதில், ஒன்று டேக்கோ மீட்டருக்கானது. மற்றொன்று ஸ்பீடோமீட்டருக்கானது. இந்த இரண்டு அனலாக் டயல்களுக்கு இடையே 3.5 இன்ச் எம்ஐடி வழங்கப்பட்டுள்ளது. கியர் இன்டிகேட்டர், எரிபொருள் அளவு உள்பட வாகனம் பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. கியா கார்னிவல் காரின் டேஷ்போர்டு, ட்யூயல்-டோன் ஸ்கீம் உடன் வருகிறது. சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இந்த காரில் டேஷ்போர்டு லே-அவுட் மிகவும் ஸ்மார்ட் ஆக உள்ளது. அனைத்து கண்ட்ரோல்களையும் டிரைவரால் எளிதில் கட்டுப்படுத்த முடியும். அதே சமயம் கியா கார்னிவல் காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கியா நிறுவனத்தின் யுவோ கனெக்டட் ஆப்பையும் கார்னிவல் கார் பெற்றுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

அதே சமயம் டேஷ்போர்டுக்கு மேலே உள்ள சுவிட்கள் மூலம் ட்யூயல் சன்ரூஃப்களை திறந்து மூட முடியும். அத்துடன் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவிற்கு பக்கவாட்டில் இரு புறமும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவிற்கு கீழே க்ளைமேட் கண்ட்ரோல் செட்டிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

மூன்று-ஜோன் ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியுடன் கியா கார்னிவல் எம்பிவி கார் வருகிறது. பெரிய கேபினாக இருக்கும் சூழ்நிலையிலும், இது வேகமாக குளிர்ச்சிப்படுத்தி விடுவது ஆச்சரியத்தை கொடுக்கிறது. அதே சமயம் இந்த காரின் கியர் லிவர் டிரைவருக்கு வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

அத்துடன் டிரைவருக்கு வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் முன்பக்க பாசஞ்சர் மற்றும் டிரைவர் இருக்கைகள் சௌகரியமாக இருக்கின்றன. தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இந்த இருக்கைகள் டேஷ்போர்டை போலவே ட்யூயல்-டோன் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் இருப்பதால், முன்பகுதியில் இன்னும் கூடுதல் சௌகரியம் கிடைக்கிறது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

அதே போல் இந்த காரின் பவர் ஸ்லைடிங் டோர்களும் அற்புதமாக உள்ளன. பட்டனை தொடுவதன் மூலமாக அவற்றை திறந்து, மூட முடியும். பொதுவாக ஒரு எம்பிவி காரின் உள்ளே செல்வது கொஞ்சம் கடினமான காரியம்தான். குறிப்பாக வயதானவர்களுக்கு. ஆனால் இந்த காரின் பி-பில்லரில் வழங்கப்பட்டுள்ள கைப்பிடிகள், வயதானவர்கள் உள்ளே செல்ல உதவுகின்றன.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

அதே சமயம் இருக்கைகளை சாய்த்து கொள்ள முடியும் என்பதால், இரண்டாவது வரிசையில் லெக்ரூம் இன்னும் அதிகரிக்கும். இதுதவிர கேப்டன் இருக்கைகள், மடிக்க கூடிய லெக்ரெஸ்ட்களுடன் வருகின்றன. இது மத்திய வரிசை பயணிகளுக்கு இன்னும் லக்ஸரியான அனுபவத்தை கொடுக்கும். அத்துடன் இரண்டு கேப்டன் இருக்கைகளும், தனித்தனி ஆர்ம்ரெஸ்ட்களுடன் வருகின்றன. மத்திய வரிசையில் இது இன்னும் சௌகரியத்தை அதிகரிக்கிறது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

கியா கார்னிவல் எம்பிவி காரின் மூன்றாவது வரிசை பென்ச் இருக்கைகளுடன் வருகிறது. இந்த இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. இந்த காரின் மத்திய மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கும் ஏசி வெண்ட்கள் உள்ளன. இதன் கண்ட்ரோல்கள் ரியர் டோருக்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது. 7 சீட்டர் வேரியண்ட்டை போல், 8 மற்றும் 9-சீட்டர் வேரியண்ட்களையும் கியா நிறுவனம் வழங்குகிறது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இதில், 8 சீட்டர் வேரியண்ட், மத்திய வரிசையில் கூடுதல் இருக்கையுடன் வருகிறது. அதே சமயம் 9 சீட்டர் வேரியண்ட், 4 வரிசை இருக்கை அமைப்புடன் வருகிறது. அதாவது முன்பகுதியில் டிரைவர் மற்றும் பாசஞ்சர் இருக்கைகள், 2 வரிசைகளில் தனித்தனி கேப்டன் இருக்கைகள் (2 வரிசை - 4 இருக்கைகள்) மற்றும் நான்காவது வரிசையில் பென்ச் இருக்கைகள் அமைப்புடன் இந்த வேரியண்ட் வரும்.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

இந்த காரின் இன்டீரியரில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது. இதில், டேஷ்போர்டில் உள்ள ட்யூயல் க்ளவ் பாக்ஸ், சென்டர் கன்சோலில் உள்ள இடங்கள் மற்றும் டோர்களில் உள்ள இடங்கள் ஆகியவை அடங்கும். பூட் கெபாசிட்டியை பொறுத்தவரை, 7 சீட்டர் லிமோசின் வேரியண்ட்டில், அனைத்து இருக்கைகளும் மடிக்காமல் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், 540 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது.

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலம் இதனை 1,647 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். இன்னும் பூட் ஸ்பேஸ் வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால் மத்திய வரிசையையும் மடித்து வைத்து விடுங்கள். இதன் மூலம் பூட் ஸ்பேஸை 2,700 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்.

Length (mm) 5115
Width (mm) 1985
Height (mm) 1740
Wheelbase (mm) 3060
Ground Clearance (mm) 180
Boot Capacity (litres) 540
இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

வேரியண்ட்கள், முக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு

கியா கார்னிவல் எம்பிவி கார், பிரிமீயம், பிரஸ்டீஜ் மற்றும் லிமோசின் (இதுதான் டாப் வேரியண்ட். இதைதான் நாங்கள் ஓட்டினோம்) ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். கியா கார்னிவல் எம்பிவி காரில் வழங்கப்படும் சில முக்கியமான வசதிகளை கீழே காணலாம்.

  • 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்டெண்ட் சிஸ்டம்
  • 8 ஸ்பீக்கர் ஹார்மன்/கார்டன் சவுண்ட் சிஸ்டம்
  • 220V லேப்டாப் சார்ஜர்
  • மின்னணு முறையில் 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் இருக்கை
  • வெண்டிலேட்டட் டிரைவர் இருக்கை
  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் ஸ்மார்ட் கீ
  • சென்ட்ரல் லாக்கிங்
  • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடிக்க கூடிய ஓஆர்விஎம்கள்
  • 18 இன்ச் அலாய் வீல்கள்
  • யுவோ கனெக்டட் டெக்னாலஜி
  • வயர்லெஸ் சார்ஜிங்
  • இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

    கியா கார்னிவல் காரின் சில முக்கியமான பாதுகாப்பு வசதிகளை கீழே காணலாம்:

    • இபிடி உடன் ஏபிஎஸ்
    • ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல்
    • ரோல் ஓவர் மிட்டிகேஷன்
    • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
    • ஏர்பேக்குகள்
    • ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள்
    • ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள்
    • இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      ஓட்டுதல் அனுபவம் & பெர்ஃபார்மென்ஸ்

      கியா கார்னிவல் காரில், 2.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3800 ஆர்பிஎம்மில் 200 பிஎச்பி பவரையும், 1500-2750 ஆர்பிஎம்முக்கு இடையே 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 8 ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      கியா கார்னிவல் எம்பிவியின் எடை சுமார் 2.2 டன்கள் என்ற நிலையிலும், இந்த காரின் டீசல் இன்ஜின் சிறப்பாக செயல்படுகிறது. இந்த காரின் இன்ஜினில் இருந்து பவர் படிப்படியாக வருகிறது. இது சக்தியற்ற இன்ஜின் என்பது போன்ற உணர்வு ஏற்படவில்லை. உடனடியாக வேகம் எடுப்பதை விட படிப்படியாக வேகம் எடுக்கும் வகையில் இந்த கார் உள்ளது.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      ஆனால் டிரான்ஸ்மிஷன் யூனிட்டை அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியவில்லை. ஒரு சில பின்னடைவுகள் இருக்கின்றன. எனினும் சிட்டியில் குறைவான வேகத்தில் செல்லும்போதும், நெடுஞ்சாலைகளில் மிதமான வேகத்தில் செல்லும்போதும், கியர் பாக்ஸிடம் இருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸிவ்னெஸ் சிறப்பாக உள்ளது.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      கார்னிவல் நீங்கள் கடினமாக ஓட்டுவதற்கு ஏற்ற கார் அல்ல. மாறாக மிதமான வேகத்தில் நீண்ட தொலைவு பயணிப்பதற்கு ஏற்ற காராக இது இருக்கும். அதற்கு ஏற்ப லக்ஸரி வசதிகளையும் கார்னிவல் கொண்டுள்ளது. அதே சமயம் கியா கார்னிவல் காரின் சஸ்பென்ஸன் நன்றாகவே உள்ளது. ஆனால் சிம்பிளாக லேன் மாறும்போது கூட, பாடி ரோல் ஏற்படுகிறது.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      கியா கார்னிவல் காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறது. நல்ல ஸ்டாப்பிங் பவரை இந்த எம்பிவி வழங்குகிறது. அதேபோல் என்விஎச் லெவல்களும் நன்றாக உள்ளன. கேபினுக்குள் சத்தம் எதுவும் பெரிதாக நுழைவதில்லை.

      Engine 2.2-litre
      Power (bhp) 200
      Torque (Nm) 440
      Transmission 8-AT
      Fuel Tank Capacity 60-litres
      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      விலை மற்றும் கலர்கள்

      இந்திய மார்க்கெட்டிற்கான கார்னிவல் காரின் விலையை கியா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் இந்த காரில் வழங்கப்படும் லக்ஸரி வசதிகள், பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை வைத்து பார்க்கையில், கார்னிவல் எம்பிவியின் விலையை கியா நிறுவனம் 25 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      ஆனால் இது எதிர்பார்க்கப்படும் விலை மட்டுமே. ஏற்கனவே கூறியது போல விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் விலை அறிவிக்கப்படும். அதே சமயம் கருப்பு, சில்வர் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கியா கார்னிவல் எம்பிவி கிடைக்கும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் இந்திய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கியா டீலர்ஷிப்களிலும் கார்னிவல் லக்ஸரி எம்பிவி கார் கிடைக்கும்.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      போட்டியாளர்கள்:

      கியா கார்னிவல் எம்பிவி கார் பல்வேறு பிரிமீயம் மற்றும் லக்ஸரி வசதிகளை வழங்குகிறது. இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் மாடல்களுக்கு இடையே தனக்கென ஒரு தனி செக்மெண்ட்டை உருவாக்கும். எனவே கியா கார்னிவல் லக்ஸரி எம்பிவி காருக்கு என இந்திய மார்க்கெட்டில் தற்போதைக்கு நேரடி போட்டி மாடல் எதுவும் இல்லை.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      எனினும் இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் கியா கார்னிவல் கார்களுக்கு இடையேயான ஒப்பீடு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

      Specifications Kia Carnival Toyota Innova Crysta
      Engine 2.2-litre Diesel 2.7-litre Diesel
      Power (bhp) 200 150
      Torque (Nm) 400 343
      Transmission 8AT 6AT
      Price NA* Rs 15.36 Lakh
      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

      இந்திய மார்க்கெட்டிற்கு வெகு விரைவில் வரவுள்ள லக்ஸரி எம்பிவி காராக கியா கார்னிவல் உள்ளது. வலுவான பெர்ஃபார்மென்ஸை வழங்க கூடிய இன்ஜின் உடன் லக்ஸரி வசதிகளும் கியா கார்னிவல் காரில் வழங்கப்படுகின்றன. கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், செல்டோஸ் எஸ்யூவி காருக்கு பிறகு, இந்திய மார்க்கெட்டிற்கு கியா நிறுவனம் கொண்டு வரும் 2வது தயாரிப்பாக இது இருக்கும்.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      ஆனால் கியா நிறுவனம் செல்டோஸ் காரை போல், மாஸ்-வால்யூம் சேல்ஸ்ஸை குறி வைத்து கார்னிவல் காரை களமிறக்கவில்லை. அதற்கு மாறாக இந்திய மார்க்கெட்டில் தன்னை ஒரு பிரிமீயம் பிராண்டாக நிலை நிறுத்தி கொள்வதே கியா மோட்டார்ஸின் திட்டம்.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      அதே சமயம் நேரடி போட்டியாளர் இல்லை என்றாலும் கூட, இந்தியாவில் மிகவும் பிரபலமாக திகழும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு, கியா கார்னிவல் வடிவில் மிகப்பெரிய சவால் வந்து கொண்டுள்ளது. இன்னோவா கிரிஸ்டாவின் நம்பகத்தன்மையை நாங்கள் ஒப்பு கொள்கிறோம்.

      இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்ளோ சொகுசு

      அதே சமயம் இன்னோவா கிரிஸ்டாவிற்கு இந்தியாவில் இதுவரை சரி நிகரான போட்டியாளர்கள் இல்லை என்பதையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் கியா கார்னிவல் காரின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதால், இதற்கு காலம்தான் பதில் சொல்லும். எனவே தற்போதைக்கு 5ல் 4 ஸ்டார்களை நாங்கள் கியா கார்னிவலுக்கு வழங்குகிறோம்.

Most Read Articles
English summary
Kia Carnival Luxury MPV First Drive Review : Handling, Performance, Specs, Features, Expected Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X