முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது? - ரிவியூ

கியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள கியா இவி6 காரை டிரைவ் ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இதன் அனுபவத்தை இந்த காரின் ரிவியூவாக கீழே வழங்கியுள்ளோம் காணுங்கள்

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. சர்வதேசச் சந்தைக்கு ஏற்ப இந்தியா ஆட்டோமொபைல் துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் சமீபத்தில் ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பெட்ரோல் - டீசல் வாகனத்திற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பார்க்க துவங்கிவிட்டனர்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

ஒட்டு மொத்த உலக சந்தையில் இந்தியாவில் மட்டும் தான் குறைந்த விலை எலெக்டரிக் வாகனங்கள் முதல் அதிக விலை எலெக்ட்ரிக் வாகனங்கள் வரை எல்லாவற்றிற்கும் மார்கெட் இருக்கிறது. தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயாராக இருந்தாலும் அதை விலை பெட்ரோல்-டீசல் வாகனங்களை ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

ஆனால் விலை அதிகமாக இருந்தாலும் அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் பெரிய புரட்சியை அமைதியாக நடத்தி வருகிறது என்றே சொல்லலாம். அதன் ஸ்டைல், சிறப்பான பெர்ஃபாமென்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் செல்லும் திறன், இப்படியான பல அம்சங்கள் உங்களை காரை வாங்கத் தூண்டும் அப்படியான ஒரு கார் தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார்

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கியா நிறுவனம் இந்தியாவில் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார் மார்கெட்டில் பல நல்ல கார்களை அறிமுகப்படுத்தி சூப்பர் விற்பனையைப் பெற்று வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கியா செல்டாஸ், சோனட், கார்னிவெல் மற்றும் கேரன் ஆகிய வாகனங்கள் இவை எல்லாம் இந்திய மார்கெட்டில் நல்ல விற்பனையைப் பெற்று வரும் நிலையில் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் இந்தியாவில் தன் முதல் தடத்தை கியா இவி6 கார் மூலம் பதிக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கியா இந்தியா நிறுவனம் இந்த காரை பிரிமியம் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் நிச்சயம் வெற்றிபெரும் என்ற நம்பிக்கையில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்த கியா இவி6 கார் உண்மையிலேயே இந்திய மக்களுக்கு ஏற்ற கார்தானா? எலெக்ட்ரிக் கார் உலகில் இந்த கார் தாக்குப் பிடிக்குமா? இந்த காரில் புதிதாக என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என பல கேள்விகளுடன் எங்கள் குழு கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச சர்க்யூட் பகுதிக்குச் சென்றோம். இந்த கார் குறித்த எங்கள் அனுபவத்தை விரிவாகக் கீழே வழங்கியுள்ளோம்

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

சந்தேகமே வேண்டாம் இவி6 கார் கியா நிறுவனம் உருவாக்கிய கார்களிலேயே சிறப்பான டிசைன் மற்றும் ஸ்டைல்களை பெற்ற கார். கியா இந்த காருக்கான டிசைன் மற்றும் ஸ்டைலை லான்சியா ஸ்டாராடோஸ் என்ற சர்வதேச அளவில் பிரபலமான ஒரு காரின் டிசைனை காப்பியடித்துள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் எங்களைப் பொருத்தவரை ஸ்டாராடோஸ் காருடன் இவி6 காரை ஒப்பிடவே முடியாது. ஏன் இதே பிளாட்ஃபார்மில் உருவாகும் ஹூண்டாய் ஐகானிக் 5 காருடனும் ஒப்பிட முடியாது இவி 6 கார் தனித்துவமான டிசைனை கொண்டு பிரிமியம் எலெக்டரிக் கார் கேட்டகிரியில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த கார் எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஒரு அக்ரசிவ் லுக் இருக்கிறது. இந்த காரின் முன் பகுதியில் ஒரு ஹெட்ச்பேக் கார் போலத் தோன்றுகிறது. ஆனால் இது ஒரு நாட்ச் பேக் கார். இந்த காரின் முன் பகுதியில் எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்கள், காரின் பேனட்டில் கொடுக்கப்பட்டுள்ள மஸ்குலர் லைன், சிக்னேச்சர் கிரில், பம்பரில் கொடுக்கப்பட்டுள்ள கருப்பு நிற அம்சங்கள் பல இந்த காரின் சிறப்பு அம்சங்களாகும்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

முன்பக்கத்திலேயே இவ்வளவு சிறப்பம்சங்கள் என்றால் இந்த காரின் சைடு புரோபைல் இன்னும் சிறப்பாக இருக்கிறது. இந்த காரின் ரூஃப்லைன் பின்புறத்தில் சிறப்பான வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பாய்லர்கள் காருக்கு அக்ரஸிவ் லுக்கை தருகிறது. பின்புறத்திலே மேலே உள்ள பெரிய ஷார்க் ஆண்டனா காருக்கான லுக்கை மேலும் சிறப்பிக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டர்பைன் போன்ற டிசைன் இதே கேட்டகிரியில் உள்ள மற்ற கார்களிலிருந்து இதை தனித்துவமாக காட்டுகிறது. கார் கதவுகளின் கீழ் பகுதியில் ஏர்சேனலுக்கான ஏரோடைமிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் காரின் டிசைனாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரின் பின்பகுதி டிசைனை பொருத்தவரை முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. முக்கியமாகப் பின்பக்க லைட் பாடி முழுவதுமாக எக்ஸ்டென்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை பார்த்ததும் ஒட்டு மொத்த பார்வையும் காரின் பின்புறம் இருக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பின்பக்க லைட் பம்பரின் இணைக்கப்பட்டுள்ள சில்வர் பட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் கருப்பு நிறுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டைல் முழுவதும் காரின் பின்புறத்தில் தான் இருக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கியா இவி6 கார் டிசைன் மற்றும் ஸ்டைலில் எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. எலெக்டரிக் கார் உலகில் முதன் முறையாகத் தடம் பதிக்கும் கியா முதல் முயற்சியில் டிசைனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இன்டிரியர்

காரின் வெளிப்புற கட்டமைப்பு மிக பேன்சியாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உட்புற கட்டமைப்பைப்பற்றிக் கேட்கவா வேண்டும்? கியா நிறுவனம் இந்த இவி 6காரை சர்வதேச மாடலில் அறிமுகப்படுத்தியது. இது சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுடன் போட்டியிடுகிறது. இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை பிரிமியம் அம்சங்களைப் பெற்றுள்ளது. மார்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் கார்களை ஒப்பிடும் போது அதை எல்லாம் விட இதில் நல்ல பிரிமியம் லுக் இருக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த கியா இவி6 காரில் உட்புற கட்டமைப்பைப் பொருத்தவரை டார்க் தீமை பெற்றுள்ளது. கருப்பு நிறத்தில் மூன்று ஷேட்களில் இந்த கார் வருகிறது. இந்தகாரின் ஸ்டியரிங் வீலை பொருத்தவரை சிறப்பான டிசைனை பெற்றுள்ளது. டிரைவர் இதைப் பிடித்து ஓட்டுவதற்கு நல்ல கிரிப் கிடைக்கிறது. ஸ்டியரிங்கிலேயே பல கண்டரோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரின் டேஷ்போர்டில் இன்போடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் ஃபுளோட்டிங் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் 12.3 இன்ச் டச் ஸ்கிரின் கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் 2 டிஸ்பிளேகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆனால் காரை ஆஃப் செய்து விட்டால் 2 டிஸ்பிளே ஒரே டிஸ்பிளே போலத் தெரிகிறது. இதில் ஏராளமான தகவல்கள் கிடைக்கிறது. கார் இன்னும் எவ்வளவு தூரம் செல்லும், உள்ள எவ்வளவு டெம்பரேச்சர் இருக்கிறது. நேசிவிகேஷன் மற்றும் வாகனம் குறித்த அடிப்படைத்தகவல்கள் இதில் காட்டுகிறது. ஆம் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே டச் ஸ்கிரினில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்ஆண்டராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளேயின் அம்சங்களும் இடம் பெறுகிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரில் 14 ஸ்பீக்கர் மெரிடியன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இது சிறப்பான சவுண்ட் சிஸ்டத்தை காரில்வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த காரில் ஆர்க்யூமென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ் டிஸ்பிளே இருக்கிறது. இது டிரைவர் ரோட்டை பார்த்து காரை ஓட்டும் போதே அவர் கண்முன் அவருக்கு வேண்டிய தகவல்களைத் தருகிறது. டிரைவர் ரோட்டிலிருந்து கண்களை எடுக்காமலேயே இந்த தகவல்களைப் பெறலாம்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இதேபோல இந்த காரின் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனிற்கு கீழே சில கண்ட்ரோல் பேனல்கள் இருக்கிறது. பியானோ கருப்பு நிறத்தில் உள்ள இந்த கண்டரோல் பேனல் எலக்டரிக் காருக்கான கண்ட்ரோல்களை வழங்குகிறது. இந்த கண்டரோல் பேனலில் 2 நாப்கள் இருக்கிறது. இது டச் ஸ்கிரீனில் ஏர் கண்டிஷனை கண்டரோல் செய்யும் பட்டன் எனக் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் இந்த பட்டன்களின் பயன்பாட்டை டச் ஸ்கிரினில் மாற்றும் அம்சம் இருக்கிறது. இது சற்று வித்தியாசமாக இருக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

அதாவது இந்த பட்டன்களை பயன்படுத்தி நீங்கள் கிளைமேட் கண்டரோலையும் கட்டுப்படுத்தலாம். அதே நேரத்தில் இன்ஃபோடெயின்மெண்டையும் கட்டுப்படுத்தலாம் ஆனால் ஒரே நேரத்தில் இரண்டையும் செய்ய முடியாது. காரில்உள்ள பேன்சியான விஷயங்களில் இது வும் ஒன்றும். ஆனால் வித்தியாசத்தை விட வழக்கமான விஷயங்களை விருப்புபவர்களுக்கு இந்த ஆப்ஷனை ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரின் சென்டர் கன்சோலும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. வாகனத்தைக் கட்டுப்படுத்தும் பல பட்டன்கள் இதில் இடம் பிடித்துள்ளது. வழக்கம் போல டிரைவ் மோட்களை தேர்வு செய்யும் பட்டன் சுழலும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த காரில் ரிலாக்ஷேசன் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிரைவர் மற்றும் பாசஞ்சர் சீட் வென்டிலேஷன் மற்றும் 10 வழிகளில் பவர் அட்ஜெஸ்ட் செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கம்ஃபோர்ட், பிராக்டிக்கல் மற்றும் ஃபூட் ஸ்பேஸ்

கியா இவி6 கார் ஃபயூச்சரிஸ்டிக் கார் என்பதால் இந்த காரில் கம்ஃபோர்ட், பிளாடிக்கடிாலிட்டியை எல்லாம் பெரியதாக நாங்கள் எதிர்பார்த்துச் செல்லவில்லை. ஆனால் இந்த கார் எங்கள் எண்ணம் தவறு என்பதை நிரூபித்து எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை வழங்கியது. இந்த காரின் கம்ஃபோர்ட்டிலும் சிறந்து விளங்குகிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரில் வென்டிலேட்ட் சீட் மற்றும் பவர்புல் ஏசி சிஸ்டம் உள்ளது. இந்த காரை நாங்கள் பப்ளிக் ரோடுகளில் ஓட்டி டெஸ்ட் செய்தோம். அப்பொழுதும் காரின் கம்ஃபோர்ட்டபிளிட்டி லெவல் சிறப்பாக இருந்தது. பிளாக்டிகாலிட்டியிலும் இவி6 கார் எங்களை ஆச்சரியப்படுத்தியது. தேவையான இடங்களில் கேபி ஹோல்கள் இருந்தது. ஆர்ம்ரெஸ்ட்கீழே உள்ள ஸ்டோரேஜ் பகுதி பெரியதாக இருந்தது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரின் பூட் ஸ்பேஷை பொருத்தவரை ரியர் வீல் டிரைவ் காரில் 490 லிட்டர் இடம் இருக்கிறது. இதுவே ஆல்வீல் டிரைவ் காரில் 10 லிட்டர் குறைவாக இருக்கிறது. இந்த காரின் பின்புற சீட்களை மடக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் அதிக இடம் கிடைக்கும். சிட் இட வசதியைப் பொருத்தவரை இந்த காரில் தாராளமாக 5 பேர் பயணிக்க முடியும்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

பவர்டெரைன், பெர்ஃபாமென்ஸ் மற்றும் டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸ்

கியா இவி6 கார் ஃப்யூச்சரிஸ்டிக் கார் என்பதால் அதன் செயல் திறன் சிறப்பாக இருக்கிறது. அதன் பேட்டரியும், மோட்டாரும் நல்ல திறனை வெளிப்படுத்துகிறது. கியா இவி6 கார் ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் வருகிறது. நாங்கள் ஆல்வீல் டிரைவ் காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரின் சைலண்டாக பெரும் பவரை கொடுக்கிறது. இந்த கார் 605 என்எம் டார்க் திறனை எல்லா வீல்களுக்கும் கொடுக்கிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.2 நொடிகளில் தொடும் என கியா நிறுவனம தெரிவித்துள்ளது. இந்த காரில் மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளது. எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மாடல்கள் உள்ளன. ஒவ்வொரு மாடல்களிலும் த்ராட்டல் மற்றும் ஸ்டியரிங் செயல்பாடுகளின் சென்சிடிவிட்டி மாற்றம் பெறுகிறது. இந்த காரின் ஸ்போ்ட்ஸ் மோடில் இது 192 கி.மீ வேகம் வரை செல்லும்

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கியா இவி6 காரில் 77.4kWh லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது இது 320 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இந்த காரை சார்ஜ் ஏற்ற 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 50kW சார்ஜர் 10ல் இருந்து 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய 73 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இதுவே 350 kW சார்ஜர் இதை 18 நிமிடத்தில் செய்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கியா நிறுவனம் இந்த கார் முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் எனச் சொல்கிறது. இதை அந்நிறுவனம் WLTP cycle முறையில் அளந்துள்ளது. ஆனால் ரியல் உலகில் அதை விட மிக குறைதாக தான் கிடைக்கும். இந்த காரின் பேட்டரியில் வாகனம்-டூ- வாகனம் மற்றும் வாகனம் -டூ- லோடுசார்ஜிங் வசதி இருக்கிறது. அதாவது இந்த பேட்டரியை வைத்து மற்ற வாகன பேட்டரியையும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். அல்லது மற்ற பொருட்களுக்கும் பவர் எடுத்துக்கொள்ளலாம்.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த கியா இவி6 காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. இது மொத்தம் 5 லெவல்களில் இருக்கிறது. 4வது லெவல் நல்ல ரீஜெனரேட்டிவ் அம்சங்களை ஏற்படுத்துகிறது. இந்த அம்சம் இருப்பதால் இந்த காரை ஒரே பெடலில் டிரைவ் செய்ய முடியும். இது காரின் டிரைவருக்கு நல்ல டிரைவங் அனுபவத்தைத் தருகிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

காரின் ஸ்டியரிங்கை பொருத்தவரை நல்ல அனுபவத்தைத் தருகிறது. அதிக வேகத்தில் செல்லும் போது காரை வெயிட்டை உணர முடிகிறது. அதே நேரத்தில் குறைவான வேகத்தை எடை குறைவாகவும் இலகுவாகச் செயல்படுத்தும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஸ்போர்ட் டிரைவிங் மோடில் அதிகம் பயணித்தோம். புத் சர்வதேச சர்க்யூட்டில் இது பயண அனுபவம் சிறப்பாக இருந்தது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த காரின் பேட்டரி 500 கிலோ வரை எடைகோண்டது. இது காரின் ஃபிளோரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கார் ரோல் ஒவர் ஆகவில்லை. திருப்பங்களில் கார் பேன்ஸ் செய்வது சுலபமாகவே இருக்கிறது. இந்த காரில் கும்ஹோ எஸ்டா பிஎஸ் 71 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது டிஸ்க் பிரேக் அம்சங்களுடன் வருகிறது. இந்த காரின் 4 வீலிலும் டிஎஸ்க் பிரேக் உள்ளது. இந்த பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாக லெவல் 4 ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் இந்த காருக்கான பிரேக்கிங் பவரை அதிகரிக்கிறது.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

மொத்தத்தில் இந்த கார் வெகு சிறப்பான டிரைவிங் அனுபவத்தைத் தருகிறது. நாங்கள் இந்த காரை டிராக்கில் ஓட்டும் போது அதிக வேகத்தில் பயணித்தோம். இது நல்ல டிரைவிங் உணர்வைக் கொடுத்தது. எலெக்டரிக் கார் என்ற வித்தியாசமே தெரியாத அளவிற்கு இதன் அம்சங்கள் இருந்தன.

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

கியா நிறுவனம் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த வகையில் இவி 6 காருக்கும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் :

- 8 ஏர்பேக்கள்

- அட்வான்ஸ் ADAS

- அடாப்டிவ் பீம் எல்இடி ஹெட்லைட்

-லேன் கீப் அசிஸ்ட்

-ஃபார்வேர்டு கோலிஷன் அவாய்டென்ஸ்

- பிளைண்ட் ஸ்பாட் கோலிஷன் ஆவாய்டென்ஸ்

- ஸ்டாப் அண்ட் கோ ஃபங்சனாலிட்டியுடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ்

-லேன் ஃபாலோ அசிஸ்ட்

முக்கிய அம்சங்கள்:

- ஆர்க்யூமென்டட் ரியாலிட்டி HUD

-14- ஸ்பீக்கர் மெரிடியன் ஆடியோ

-12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட்

- கியா கனெக்ட்

- ரிமோட் க்ளைமேட் கண்ட்ரோல்

- ரிமோட் சார்ஜிங் கண்ட்ரோல்

- வென்டிலேட்டட் சீட்கள்

-வாகனம்-டூ-வாகனம் சார்ஜிங்

முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் கியா இவி6 கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்திய மார்கெட்டிற்கு ஒரு புதிய எலெக்ட்ரிக் கார் கிடைத்திருக்கிறது. கியா நிறுவனத்தின் இந்த இவி6 கார் எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிரிமியம் இவி கார்களுக்கு ஏற்ற தரமான காராக இந்த கார் இருக்கிறது. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இந்த கார் வெளிநாட்டில் தயாராகி இந்தியாவிற்குள் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட காராக இறக்குமதியாகிறது. அதனால் இதன் விலை அதிகமாகத்தான் இருக்கும். மார்கெட்டில் இந்த காருக்கு என்று தனி மவுசு கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் நடக்கிறதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Kia ev car review price range performance and other details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X