இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

விரைவில் இந்தியர்களின் பயன்பாட்டில் களமிறங்க உள்ள கியா செல்டோஸ் காரை, ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதனை, பரிசோதித்து பார்த்த நமது குழுவின் நிரூபர் மெய்சிலிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்படி என்னதான் இருக்கு இந்த காரில் என்பதை கூடுதல் தகவலுடன் விரிவாக இந்த பதிவில் காணலாம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்திய வாகனத்துறையின் ஹாட் டாபிக்காக கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் மாறியுள்ளது. இந்த கார் மிக விரைவில் இந்தியர்களின் பயன்பாட்டில் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரை பற்றிய சுவாரஷ்யமான தகவல்களைப் பார்ப்பதற்கு முன்பு, காரின் பெயரில் ஒளிந்திருக்கும் சிறப்பு தகவலை பார்க்கலாம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

செல்டோஸ் என்பது கிரேக்க மொழி சொல்லாகும். இது, கிரீக் நாட்டின் கடவுள் செல்டஸை தழுவி வைக்கப்பட்டுள்ளது. இவர், ஹெரக்லஸ் மற்றும் செல்டைன் ஆகியோரின் மகன் ஆவார்.

உறுதியான உடல் கட்டமைப்பு, சிறப்பான தோற்றம், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான வேகம் என அனைத்திலும் சால சிறந்ததாக செல்டோஸ் கார் இருக்கின்றது. இதன் காரணத்தாலேயே இப்பெயர் காருக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதனை உறுதி செய்யும்வகையில், காரின் தோற்றம் பலரால் வர்ணிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அதில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் உட்பட மற்ற அம்சங்கள் இந்தியாவில் விற்பனையாகும் வெறுஎந்த எஸ்யூவிலும் இல்லாததாக காட்சியளிக்கின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்திய வாகனத்துறை கடுமையான சோதனை காலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் செல்டோஸ் கார் களமிறங்கியிருப்பது, அதுக்கு வெற்றியை தேடித் தருமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

இதில், நாங்கள் கண்டது என்ன என்பதை இங்கே காணலாம்...

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

வடிவமைப்பு மற்றும் டிசைன்:

கியா செல்டோஸ் காரின் டிசைன் மற்றும் தோற்றம் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் ஈர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. அந்தவகையில், இந்த கார் சாலையில் செல்லும்போது, அனைவரின் தலையையும் திருப்பும் வகையில் உடல் மொழியைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, அதன் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புற தோற்றமும் பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

செல்டோஸின் முகப்பு பகுதியில், க்ளாம் ஷெல் பானட் மற்றும் புலியின் மூக்கினைப் போன்ற அமைப்புக் கொண்ட கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்தை மேலும் துடிப்பானதாக காட்டும் வகையில், மகுடம் போன்ற எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பகல் நேரங்களில் ஒளிரும் வகையிலான ஹார்ட்பீட் ஸ்டைலிலான எல்இடி மின் விளக்குகளும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

மேலும், இதன் பம்பரில் ஐஸ் க்யூப் ஸ்டைலிலான பனி விளக்கு நிறுவப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு டிசைனுக்கு ஏற்பவாறு, துடிப்பான ஸ்டைலுடன் கூடிய 16 இன்ச் அல்லது 17 இன்ச் வீல்கள் இணைக்கப்படுகின்றது. இதன், ஸ்டைல் ஸ்கொயர்-இஸ் ஆர்ச்சுகளைப் போன்று காட்சியளிக்கின்றது. இதன் வீல் இன்ச் வேரியண்டைப் பொறுத்து மாறுபடும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதேபோன்று செல்டோஸுக்கு தசைப்பற்றைப் போன்ற தோள்பட்டை லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கருப்பு ஏ-தூண்கள் எஸ்யூவியின் கூரை மிதப்பதைப்போன்ற காட்சியை நமக்கு வழங்குகின்றது. சுறாவின் துடுப்பைப்போன்று வடிவத்தைப் பெற்றிருக்கும் பின்புற டி-தூண் மிதக்கும் கூரையின் தேற்றத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இருக்கின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதேபோன்று, காரின் பின்பகுதியையும் கியா நிறுவனம் மிக நேர்த்தியாக கையாண்டுள்ளது. அந்தவகையில், ஏர் டிரம் டிசைனுடன் கூடிய ரெஃப்ளக்டர்கள் மற்றும் ஸ்கிட் பிளேட் உள்ளன. இவை பின் பகுதிக்கு ஸ்டைலிஸான தோற்றத்தை வழங்குவதுடன், கூடுதல் துடிப்பான தோற்றத்தை வழங்குகின்றது. இத்துடன், பின்பகுதியிலும், ஹார்ட்பீட் லுக்கிலான எல்இடி மின் விளக்குகள், ரியர் ஸ்பாய்லர், இரண்டு மஃப்ளர்கள் மற்றும் குரோம் கார்னிஷ் கொண்ட மையப்பகுதி வழங்கப்பட்டுள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

உட்புறம், சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு:

புதிய கியா செல்டோஸின் வெளிப்புறம் மட்டுமின்றி உட்புறமும் மிகவும் அழகானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

அந்தவகையில், இந்த எஸ்யூவி காரில் ஹனிகாம்ப் பேட்டர்னிலான லெதர் இருக்கைகள் அல்லது ட்யூப் பேட்டர்ன் லெதர் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இதுவும், வேரியண்ட்டைப் பொருத்து வேறுபடும்.

இந்த இருக்கைகள் வென்டிலேட் செய்யும் திறன் கொண்டது. இத்துடன், இந்த இருக்கைகள் மிகவும் மிருதுவாக சொகுசான அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதில், டிரைவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இருக்கை எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையிலான வசதியைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், டிரைவர் மற்றும் பாஸஞ்ஜர் இருக்கைகளுக்கு ரெக்லின் மற்றும் குஷைன் டில்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

காரின் பின்புற இருக்கைகள் இரு வழிகளில் (26 டிகிரி மற்றும் 32 டிகிரி) அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இத்துடன், 60:40 என்ற விகிதத்தில் இதனை மாற்றியமைத்து பூட்ஸ்பேஸை தேவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதேபோன்று, பின்பகுதியின் க்னீ ரூம் மற்றும் இடவசதியும் மிகச் சிறப்பானதாக இருக்கின்றது. அதேபோல், மையப்பகுதியில் அமர்பவர்களுக்கும் போதுவான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆர்ம் ரெஸ்ட் மற்றும் இரு கோப்பைகளை தாங்கிக்கொள்ளும் வகையிலான ஹோல்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

காரின் பூட் ஸ்பேஸ் 433 லிட்டராக இருக்கின்றது. இதனை, பின்பக்க இருக்கையை மடக்கிக்கொள்வதன்மூலம் இருமடங்காக அதிகரித்துக் கொள்ள முடியும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

சிறப்பான ஹேண்டிலிங்கிற்காக 'டி கட்' ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவாகவும், சாலையின் பயணத்தின்போது மிகவும் ஸ்மூத்தாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டிராஃபிக்கான சாலையில் பயணிக்கும்போது அதிகம் ரெஸ்பான்சை வழங்கும் வண்ணம் உள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

காரில் பல்வேறு டிரைவிங் மோட்கள் உள்ளன. இருப்பினும், நாங்கள் அவையனைத்தையும் பயன்படுத்தவில்லை. இந்த மோட்கள், ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை, வெவ்வெறு விதமாக வேகத்தை வழங்குவதுடன் சிறப்பான அனுபவத்தையும் வழங்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்த வீல் அதிவேகத்தின்போது சற்று இருக்கமான தன்மையைப் பெறுகின்றது. இருப்பினும், காரை கட்டுபடுத்த மிகவும் சுலபமானதாக இருக்கின்றது. ஆகையால், மழை போன்ற அனைத்து காலங்களிலும் இந்த காரை உயர் வேகத்தில் இயக்குவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிகின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்துடன், வசதிக்கேற்ப ஸ்டியரிங் வீலை சற்று அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையில் இடது பக்க டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், ஒலி தன்மையை அதிகரிக்க, குறைக்க மற்றும் மீடியாக்களை கன்ட்ரோல் செய்யும் வகையிலான பொத்தான்கள் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் அழைப்புகளுக்கு பதிலளிக்க மற்றும் துண்டிக்கும் வகையிலான பொத்தான்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், டிரைவிங் மோட்களுக்கான பட்டனும் அதில்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

அதேபோன்று, வலது பக்கத்தில் க்ரூஸ் கன்ட்ரோல் பொத்தான், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தைக் கன்ட்ரோல் செய்யக்கூடிய பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், கியா செல்டோஸில் முக்கியமாக புஷ் பட்டன் இக்னிஷன், கீ லெஸ் என்ட்ரீ மற்றும் புஷ் பட்டன் ஃபோல்டிங் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளிட்டவையும் நிறுவப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருடன் கூடிய 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் பார்த்ததிலேயே மிக முக்கியமான அம்சமாக இது இருக்கின்றது. இதனை, கியா நிறுவனம் மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளது. இது, அனைவரின் பார்வைக்கும் புலப்படும் வகையில் இடம்பெற்றுள்ளது. ஆகையால், ஓட்டுநரால் இது மறைக்கப்படாது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்த டச் ஸ்கிரீனைக் கொண்டு நேவிகேஷன், க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர், ஒலிக்கு ஏற்பவாறு மறும் மின் விளக்குகள், 360 டிகிரி அளவிலான பார்வை திறன் கொண்ட கேமிரா, டிரைவர் அசிஸ்ட் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே உள்ளிட்டவை கன்ட்ரோல் செய்ய முடியும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதில், 7.0 இன்சில் கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணத்திரைக் கொண்ட க்ளஸ்டர் பலவிதமான தகவல்களை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அந்தவகையில், ஸ்பீடோ மற்றும் டேக்கோ உள்ளிட்ட தகவல்களை வழங்கும். இத்துடன், டயர் பிரஷ்ஷர் முதல் மைலேஜ் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வழங்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்துடன், கியா செல்டோஸின் டாப் மாடல்களில் 8 வழி கொண்ட போஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, பயணிகளின் மன நிலைக்கு ஏற்பவாறு அதன் சுற்றுப்புறத்தை மாற்றியமைக்கும். அந்தவகையில், காரில் 14 வெவ்வெறு திறன் வாய்ந்த மனநிலைப் பொறுத்த புரோக்கிராம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

அதனை யுவிஓ மென்பொருள் அல்லது இன்ஃபோடெயன்மெண்ட் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்த முடியும். 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, மிகவும் அதீதி திறன் வாயந்ததாக இருக்கின்றது. இது பின்பக்க மற்றும் பிளைண்ட் ஸ்பாட்டை பார்வையிட உதவுகின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்துடன், உலக கார்கள் வரலாற்றிலேயே ஏர் ப்யூரிஃபையர் அம்சம் செல்டோஸ் காரில்தான் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கள் இருக்கும் காற்றின் தரத்தை ஆராய்ந்து பார்த்த பின்னர், அதனை தூய்மைப்படுத்தும். மேலும், காரில் காற்றின் தரம் குறைந்திருப்பின், அதன் டிஸ்பிளே வழியாக பயணிகளுக்கு காண்பிக்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

சிறப்பு அம்சங்கள் மட்டுமின்றி காரில் ஏராளாமான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், வாகனத்தின் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், பிரேக்-ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐசோபிக்ஸ் இருக்கைகள் இதில் நிறுவப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இவற்றுடன், பிரிமியம் வசதியாக கியா செல்டோஸ் காரில் சன்ரூஃப், ஆன்டி-க்ளேர் கண்ணாடி, ஆட்டோ லைட் கன்ட்ரோல், ரெயின் சென்சார், டயர் பிரஷ்ஷர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இதுபோன்ற பல அம்சங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கியா நிறுவனம் தனித்துவமான யுவிஓ என்ற ஆப்-பினை தயார் செய்துள்ளது. இது, ஐ-போன் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் என அனைத்து ப்ளே ஸ்டோர்களிலும் கிடைக்கும். இது காரை நம்முடன் இணைத்துக் கொள்ள உதவும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

மேலும், வாய்ஸ் கன்ட்ரோல் ஆப்ஷனும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது நேவிகேஷன் மற்றும் மீடியாக்களைக் கட்டுபடுத்த உதவும். இத்துடன், ஸ்டார்ட்/ஸ்டாப், க்ளைமேட் கன்ட்ரோல், பயணத்தின் இலக்கு நிர்ணயித்தல், ஜியோ ஃபென்ஸிங், காரின் தன்மை ஆராய்தல் மற்றும் திருடப்பட்ட காரை டிராக் செய்தல் உள்ளிட்டவற்றை நமக்கு வழங்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

எஞ்ஜின், செயல்திறன் மற்றும் டிரைவ்:

செல்டோஸ் காரில் மூன்றுவிதமான எஞ்ஜின் தேர்வு கிடைக்கின்றது. இதில், நமது டிரைவ்ஸ்பார்க் குழு 1.4 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் உள்ள காரை சோதனை செய்து பார்த்தது. இந்த எஞ்ஜின் 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது, 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது. இதில், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்துடன், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டிலும் செல்டோஸ் கிடைக்கின்றது. அது, 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், சிக்ஸ்-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஐவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

மூன்றாவதாக, 1.5 லிட்டர் விஜிடி டீசல் எஞ்ஜின் தேர்விலும் கியா செல்டோஸ் கிடைக்கின்றது. இது, 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் அட்வான்ஸ்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

மேற்கூறிய அனைத்து எஞ்ஜின்களும் பிஎஸ்-6 தரத்திலானவை. அதேசமயம், இந்த முன்று வேரியண்ட்களில் எங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக 1.4 லிட்டர் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டே இருக்கின்றது. இந்த 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் அல்லது டிசிடி எஞ்ஜின் 140 பிஎச்பி பவரை வழங்குகின்றது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வேகமான மற்றும் உடனுக்குடனான ரிசல்டை வழங்கும் வகையில் உள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

டிசிடி திறனிலான காரை நகரத்தில் வைத்து இயக்கும்போது ஸ்மூத்தாகவும், குறைந்த நேரத்திலேயே 2,000 ஆர்பிஎம்மை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இத்துடன், எரிபொருள் சிக்கனத்திலும் இது சிறப்பானதாக இருக்கின்றது. மேலும், ஸ்போர்ட் மற்றும் அதிக வேகமான பயன்பாட்டின்போதும் சிறப்பான எஞ்ஜின் திறனை வெளிப்படுத்தும் வகையில் அது அமைந்துள்ளது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

அந்தவகையில், டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஃபிரீயான முடுக்கம் திறனையும், டிசிடி உடனடியான மற்றும் பந்தய வேகத்திலான 6,500 ஆர்பிஎம்மை வெளிப்படுத்துகின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

நகரம் மற்றும் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் பயண பிரியர்களுக்கு, இந்த 140 பிஎச்பி தரத்திலான 7 ஸ்பீடு டிசிடி 1.4 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மோடில் சிறப்பான எஞ்ஜினை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றது. ஆகையால், இந்த இரு உலகிலும் அதன் ரைடருக்கு மிக நேர்த்தியான அனுபவம் கிடைப்பது உறுதி.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்துடன், எச்டிஎக்ஸ் 1.5 லிட்டர் விஜிடி டீசல் எஞ்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் வேரியண்ட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் வேரிண்டையும் நாங்கள் டிரைவ் செய்து பார்த்தோம். இவை, எங்களின் உள்ளீடுகளுக்கு மிகவும் கட்டுப்பட்டவையாக இருந்தன. இந்த கார்களின் கியர்பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும், கையாள மிகவும் எளிமையானதாக இருக்கின்றன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்த கார்களின் பவர் மற்றும் டார்க் மிக வேகமாக வெளிப்படும் வகையில் உள்ளன. மேலும், இந்த கார் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிலவும் டிராஃபிக்கான சாலையில் பயன்படுத்த ஏதுவான அம்சங்களைக் கொண்டிருப்பதையும் இந்த டெஸ்ட் டிரைவ் மூலம் நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

அதேசமயம், இந்த கார்களின் டிரைவிங் தரம் மிகவும் அமர்க்களமானதாக இருக்கின்றது. இந்த எஸ்யூவி காரில் கடினமானதாக எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், காரின் வேகம் மற்றும் சுறு சுறுப்பான தன்மை வெளிப்படுத்துகின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

கியா மோட்டார்ஸ் அடுத்த லெவலிலான பிரேக்குகளை இந்த எஸ்யூவி காரில் பயன்படுத்தியுள்ளது. இந்த கார் நூறிலிருந்து 0 என்ற கீலோமீட்டர் வேகத்தை வெறும் 41.9 மீட்டர் இடைவெளியிலேயே பெற்றுவிடும். அதற்கேற்ப வகையிலான பிரேக்கிங் திறனைதான் செல்டோஸ் கார் பெற்றிருக்கின்றது. இது அதிக திறன் மற்றும் உடனுக்குடன் பதிலளிக்கக்கூடியவையாக இருக்கின்றன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

அதேசமயம், நீங்கள் அதிவேகத்தின்போது, செல்டோஸின் பிரேக்கை திடீரென பயன்படுத்துகிறீர்கள் என்றால், அப்போது நீங்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில், காரின் அதீத பிரேக் திறனினால், நீங்கள் காரின் வின்ட் ஷீல்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். அந்த அளவிற்கு மிகவும் ஷார்ப்பானதாக காரின் பிரேக்குகள் இருக்கின்றன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்த காரில் கிடைக்கும் வேரியண்ட் மற்றும் பவர் குறித்த முழு தகவலை பட்டியலாக கீழே காணலாம்...

Specifications Petrol

Diesel

Engine 1.5-litre/1.4-litre Turbo 1.5-litre
Power(bhp)

115/140 115
Torque(Nm)

144/242 250
Transmission MT/DCT/CVT MT/IVT
இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

மாறுபாடுகள், வண்ணங்கள் மற்றும் விலை நிர்ணயம்:

கியாவின் செல்டோஸ் கார் இருவிதமான ட்ரிம்களில் கிடைக்கின்றது. அந்தவகையில், டெக்-லைன் மற்றும் ஜிடி லைன் என ட்ரிம்களில் அது கிடைக்கும். இந்த ட்ரிம்களும் மூன்று விதமாக வேரிண்ட்களைக் கொண்டுள்ளன. அதில், டெக் லைனில் எச்டிஎக்ஸ், எச்டிகே மற்றும் எச்டிஇ ஆகிய வேரியண்ட்களிலும், ஜிடி லைனில் ஜிடிஎக்ஸ், ஜிடிகே மற்றும் ஜிடிஇ ஆகிய வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

கியா செல்டோஸஸ் 13 விதமான வண்ணத் தேர்வில் கிடைக்கின்றது. அதில், எட்டு மோனோடோன் ஆப்ஷனில் கிடைக்கின்றது. அவை, தீவிரமான சிவப்பு, அரோரா பிளாக் பியர்ல், கிளாசியர் ஒயிட் பியர்ல், பஞ்சி ஆரஞ்சு, நுண்ணறிவு நீலம், கிராவிட்டி கிரே, எஃகு வெள்ளி மற்றும் தெளிவான வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் உள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

மற்ற ஐந்து நிறங்கள் ட்யூவல் டோனில் காட்சியளிக்கின்றது. அவை - அடர் சிவப்பு / அரோரா பிளாக் பியர்ல், எஃகு வெள்ளி / பிளாக் பியர்ல், கிளாசியர் ஒயிட் பியர்ல் / அரோரா பிளாக் பியர்ல், கிளாசியர் ஒயிட் பியர்ல் / பஞ்சி ஆரஞ்சு மற்றும் எஃகு வெள்ளி / பஞ்சி ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் உள்ளன.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும் கியா செல்டோஸ் வருகின்ற 22ம் தேதி லாஞ்ச் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவி கார் ரூ. 10 லட்சத்தில் இருந்து 19 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், கியா நிறுவனம் இதில் நமக்கு இன்ப அதிர்ச்சி வழங்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

போட்டி மற்றும் உண்மை சோதனை!

இந்த கார் இந்தியாவில் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டியளிக்கும் என கூறப்படுகின்றது. இதனை தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் காணலாம்...

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!
Competitors/Specs Kia Seltos

MG Hector

Tata Harrier

Engine 1.4 turbo-petrol/1.5 diesel 1.5 petrol/2.0 diesel 2.0 diesel
Power (bhp)

140/115 140/173 173
Torque (Nm)

242/250 250/350 ;350
Transmission MT/DCT/IVT MT/DCT 6MT
Prices (ex-showroom)

NA Rs 12.18 - 16.88 Lakh Rs 13 - 16.5 Lakh
இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழுவின் பார்வையில்:

கியா நிறுவனம் புதிய செல்டோஸ் காரில் அருமையான வேலை பார்த்துள்ளது. இது, இந்திய எஸ்யூவி சந்தையில் ஓர் புயலை ஏற்படுத்தலாம் என நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால், இந்த செல்டோஸ் எஸ்யூவி காரில் அந்த அளவிற்கு சிறப்பம்சங்களும், நவீன தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகையால், இது நாம் கொடுக்க பணத்திற்கு ஏற்ற தயாரிப்பாக இருக்கும்.

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

இந்த புத்தம் புதிய கார் ஏற்கனவே புக்கிங் மூலம் இந்தியச் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ஆரம்பித்துவிட்டது. இருப்பினும், அதன் லாஞ்ச் அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், கார்குறித்த மிக ஆழமான வீடியோ மதிப்பாய்வை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருவோம். இதுகுறித்த மேலும் அறிந்துகொள்ள நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தமிழ்குழுவுடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
English summary
Kia Seltos Review: Details Of A Powerfully Surprising First Drive. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X