புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல், டீசல் மாடலுக்கு இணையான பல சிறப்பம்சங்களுடன் அசத்துகிறது. எனினும், இந்த விலை ரகத்தில் பலரும் அந்தஸ்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் - 2 எஸ்யூவிக்கு மாற்றாக லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி 2015ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் சிறிய மாற்றங்களுடன் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் (HSE வேரியண்ட்) மாடலை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதன் அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன் சிறப்பு

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் கெர்ரி மெக்கோவர்ன் கைவண்ணத்தில், புதிய லேண்ட்ரோவர் மாடல்களின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பழைய டிஸ்கவரி எஸ்யூவி பெட்டி போன்ற தோற்றத்தை பெற்ற நிலையில், கொஞ்சம் நளிமான டிசைன் தாத்பரியங்களுடன் டிஸ்கவரி ஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நவீன கால டிசைன் தாத்பரியங்களுடன் ஒத்துப்போவது மட்டுமில்லாமல், அதிக ஏரோடைனமிக் தத்துவத்தை பெற்றதாகவும் டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

முகப்பில் இரட்டை பட்டை க்ரில் அமைப்பு லேண்ட்ரோவர் மாடல்களின் வாரிசு என்பதை காட்டுகிறது. க்ரில் அமைப்புக்கு மேல் பானட்டில் டிஸ்கவரி பிராண்டு பெயர் கம்பீரத்தையும், வாடிக்கையாளரின் அந்தஸ்தை உயர்த்தும் வித்திலும் கம்பீரமாக இடம்பெற்றுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், மிக வலிமையான பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை மிரட்டலான எஸ்யூவியாக தோற்றமளிக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் பிரம்மாண்ட எஸ்யூவியாக காட்சி தருகிறது அதிக தரை இடைவெளி, வலிமையான வீல் ஆர்ச்சுகள், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை சிறப்பு. கருப்பு வண்ண கூரை, முன்னோக்கி சரிந்த சி பில்லர், கருப்பு வண்ண டி பில்லர் ஆகியவை வித்தியாசமான தோற்றத்தை தருகிறது. முன்புற ஃபென்டரிலிருந்து டெயில் லைட் க்ளஸ்ட்டரை கேரக்டர் லைன் இணைக்கிறது. அதில், கைப்பிடிகள் இடம்பெற்றுள்ளன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் கவர்கிறது. டிசைன் மிக எளிமையாக இருந்தாலும் பிரம்மாண்டமாக இருப்பது இதன் பலம். ஸ்கிட் பிளேட், டிஸ்கவரி பெயர் பேட்ஜ் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன. ரியர் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சொகுசு மற்றும் ஆஃப்ரோடு என இரண்டுக்கு சரிசமமான ஆக்சஸெரீ கலவையுடன் வசீகரிக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

உட்புறத்திலும் மிக நேர்த்தியான டிசைன் அமைப்பை பெற்றிருக்கிறது. உட்புறம் பீஜ் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது. டேஷ்போர்டு அமைப்பு மிக எளிமையாகவும், கச்சிதமாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. கச்சாமுச்சா டிசைன் இல்லாமல் இருப்பதே ஆறுதல். பிளாஸ்டிக் தரமும் சிறப்பானதாகவே இருக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் வீல்

இந்த காரின் ஸ்டீயரிங் வீல் சற்று பெரிதாகவும், கைகளுக்கு நல்ல க்ரிப்பை தருகிறது. க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டுள்ளன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த எஸ்யூவியில் அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டாக்கோமீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டயல்களுக்கும் நடுவில் 5.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய காரின் இயக்கம் குறித்த தகவல்களை பெறுவதற்கான மின்னணு திரை உள்ளது. கூலண்ட் வெப்பநிலை, எரிபொருள் செலவு உள்ளிட்ட பல தகவல்களை பெற முடிகிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆனால், பெரும்பாலான வசதிகளை பட்டன்கள் மூலமாக இயக்கும் வகையில் இருக்கிறது. டேஷ்போர்டில் மிக உயரமாக இருப்பது இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது.

இதன் தொடுதிரை இயக்குவதற்கு துல்லியமாக இருப்பதும் சிறப்பு. ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இது சப்போர்ட் செய்யாது. நேவிகேஷன், ரேடியோ, ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் வைஃபை ஹாட் ஸ்பாட் வசதிகளை அளிக்கும். பார்க்கிங் அலர்ட் மற்றும் பிராக்ஸிமிட்டி அலர்ட் வசதிகளை அணைத்து வைப்பதற்கு பிரத்யேக பட்டன் உள்ளது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆடியோ சிஸ்டம்

இந்த எஸ்யூவியில் 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய மெரிடியன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆடியோ சிஸ்டத்தின் ஒலி தரம் சிறப்பாக இருக்கிறது. மேலும், கார் முழுவதும் சிறப்பான ஒலி தரத்தை கேட்க முடிகிறது. அவ்வாறு இதன் ஸ்பீக்கர்கள் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சுவிட்சுகள் தரம்

க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆடியோ சிஸ்டத்தின் வால்யூம் கன்ட்ரோல் பட்டன்கள் சிறப்பாகவே இருக்கிறது. இயக்குவதற்கும் எளிதான உணர்வை தருகிறது. பார்ப்பதற்கும் பிரிமீயமான மாடலுக்கு உரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இடவசதி

உட்புறத்தில் மிக விசாலமான உணர்வை தருவது இதன் சிறப்பு. மிகப்பெரிய பனோரமிக் சன்ரூஃப் இருப்பது அற்புதமான பயண உணர்வை பெற முடியும். சுத்தமான காற்றை சுவாசிக்கவும், இரவு பயணங்களில் கூடுதல் இனிமையை சேர்க்கவும் இந்த கண்ணாடி கூரை பயன்படும்.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பவர் விண்டோ பட்டன்கள்

காரில் இன்ஃபோடெயின்மென்ட் உள்ளிட்ட இடங்களில் உள்ள பட்டன்களையும், சுவிட்சுகளையும் இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால், பவர் விண்டோ பட்டன்கள் கண்ணாடி ஜன்னலை ஒட்டியை கொடுக்கப்பட்டு இருப்பது அசகரியமாக இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவியில் ஏராளமான ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகள்

முன் இருக்கைகள் மிக சொகுசாகவும், கால்களுக்கு நல்ல சப்போர்ட்டையும் வழங்குகிறது. ஓட்டுனர் இருக்கையிலிருந்து சாலையை தெளிவாக பார்க்க முடிகிறது. முன் இருக்கைகளின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி உள்ளது. ஆனால், மெமரி வசதி இல்லாதது குறை.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இரண்டாவது வரிசை இருக்கை

பின் இருக்கைகளை சாய்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. மூன்று பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து கொள்ள முடியும். முன் இருக்கையில் இருக்கும் சொகுசு உணர்வு பின் இருக்கையில் குறைவாக இருக்கிறது. பி பில்லரில் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் நடுவில் அமர்ந்து செல்பவருக்கு பிரச்னை இல்லை.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மூன்றாவது வரிசை இருக்கை

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் மூன்றாவது வரிசை இருக்கை ஒப்புக்குத்தான். பெரியவர்கள் அமர்ந்து செல்வதற்கு ஏதுவாக இல்லை. சிறியவர்கள் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். எனினும், அந்த வரிசை இருக்கைக்கும் பாட்டில் ஹோல்டர் இருப்பது சிறப்பான விஷயம்.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட் ரூம்

மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 981 லிட்டர் பூட்ரூம் இடவசதியும், இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கினால் 1,698 லிட்டர் பூட் ரூம் இடவசதியையும் பெற முடியும். இது 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், பொதுவாக 5 பெரியவர்கள் உடைமைகளுடன் பயணிக்கும் இடவசதியை அளிக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

எப்போதுமே டீசல் எஸ்யூவிக்குதான் முக்கியத்துவம் அதிகம் இருக்கும். எனினும், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் இங்கெனியம் பெட்ரோல் எஞ்சின் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் தனித்துவமான வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 237 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

இந்த எஸ்யூவியில் 9 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் ஆற்றல் செலுத்தப்படுகிறது. இந்த எஸ்யூவியின் கியர் லிவர் அமைந்துள்ள பகுதி இக்னிஷனை அணைக்கும்போது உள்ளிழுத்து கொள்கிறது. இக்னிஷன் ஆன் செய்யும்போது ஆமை போல தலை காட்டுகிறது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 204 கிமீ வேகத்தை தொடவல்லது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பேடில் ஷிஃப்ட் வசதி

மேனுவலாக ஓட்ட விரும்புவோருக்காக, பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. ஆனால், பேடில் ஷிஃப்ட் மூலமாக கியர் மாற்றும்போது துல்லியமான உணர்வை தரவில்லை. மேலும், அதிவேகத்தில் செல்லும்போது தானாக குறைந்த கியருக்கு சென்றுவிடுவதும் வினோதமான அனுபவமாக இறுக்கிறது. நெடுஞ்சாலையில் ஓட்டும்போது இந்த பிரச்னையை உணர முடிகிறது. இந்த பிரச்னை டிஸ்கவரி ஸ்போர்ட் டீசல் மாடலில் இல்லை.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

டிஸ்கவரி ஸ்போர்ட் டீசல் மாடலைவிட, இரண்டு டர்போசார்ஜர்கள் உதவியுடன் இயங்கும் இந்த பெட்ரோல் எஞ்சின் ஆரம்ப நிலையில் சிறப்பான செயல்திறனை அளிக்கிறது. டர்போலேக் குறைவாக இருப்பதால், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு டீசலைவிட சிறப்பாக இருக்கிறது. சப்த தடுப்பு அமைப்பும் சிறப்பாக இருப்பதால், உட்புறத்தில் எஞ்சின் அதிர்வுகள் என்பதே குறிப்பிடத்தக்க அளவு இல்லை.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் செயல்திறன் இந்த எஸ்யூவிக்கு பக்கபலமாக இருந்ததுடன், இந்த எஸ்யூவியில் எம்மை கவர்ந்த மற்றொரு விஷயம் சிறப்பான ஸ்டீயரிங் சிஸ்டம். குறைவான வேகத்தில் இயக்குவதற்கு எளிதாக இருப்பதுடன், அதிவேகத்தில் இறுக்கமாகி நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு துணை நிற்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பிரம்மாண்ட எஸ்யூவிக்கு பாடி ரோல் சற்று குறைவாக பட்டது. ஆஃப்ரோடு பயணத்திற்கு ஏற்றவாறு அதிக முக்கியத்துவத்துடன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பள்ளம் மேடுகளை அனாயசமாக கடக்கிறது. பொதுவாக ஆஃப்ரோடு எஸ்யூவியில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு அதிக குலுங்கல் தெரியும். ஆனால், இதில் மிக குறைவாக இருக்கிறது.

குறிப்பு: பொதுவாக ஆஃப்ரோடு வாகனங்களில் சஸ்பென்ஷன் அமைப்பு மென்மையாக கொடுக்கப்படும். பள்ளம், மேடுகளை எளிதாக உள்வாங்கிச் செல்லும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இந்த எஸ்யூவியில் சாதாரண சாலை மற்றும் ஆஃப்ரோடு சாலை என இரண்டிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்பை ட்யூனிங் செய்துள்ளனர்.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் இயக்கத்தில் தடுமாற்றம்

அதிவேகத்தில் செல்லும்போது எஞ்சின் இயக்கம் நின்று வருவதை கண்டுணர முடிந்தது. அதேநேரத்தில், இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எஞ்சின் சக்தியை சக்கரங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கடத்துவதால், ஓட்டும்போது உற்சாகமாக இருக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆட்டோமேட்டிக் ஸ்பீடு லிமிட்டர்

குறிப்பிட்ட சாலையில் உள்ள வேக வரம்புக்கு தக்கவாறு ஓட்டுவதற்கு ஏதுவாக, ஸ்பீடு லிமிட்டர் வசதி உள்ளது. ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன் மூலமாக இந்த ஸ்பீடு லிமிட்டர் பட்டனை ஆன் செய்துவிட்டால், அதற்கு மேல் வேகம் செல்லாது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆஃப்ரோடில் எப்படி?

லேண்ட்ரோவர் மாடல் என்றாலே, அது ஆஃப்ரோடுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாகவே கருதலாம். கரடுமுரடான நிலப்பரப்புடைய சாலைகளில் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியை செலுத்தினோம். பழைய மாடல்களில் இருக்கும் ஹை அல்லது லோ டிரைவிங் மோடுகளுக்கு பதிலாக, இதிலுள்ள டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் ஓட்டுனருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறது. சாதாரண டிரைவிங், புல் தரை, சரளை கற்கள் நிறைந்த சாலை அல்லது பனிபடர்ந்த சாலை, சேறு, மணல் சார்ந்த சாலைகளில் செலுத்துவதற்கு ஏதுவாக 4 டிரைவிங் மோடுகள் உள்ளன. சாலை நிலைகளுக்கு ஏற்ப நாம் அதனை தேர்வு செய்யலாம்.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முதலில் புல் தரைக்கான டிரைவிங் மோடு தேர்வு செய்து செலுத்தினோம். இதில், செயல்திறன் சற்று குறைவாக வெளிப்படுவதோடு, அதிக தரைப்பிடிப்புடன் வாகனம் செல்கிறது. கியர் மாற்றங்களும் துல்லியமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அடுத்து சேறு நிறைந்த நீர் நிலையில் வைத்து செலுத்தினோம். இந்த எஸ்யூவி 600 மிமீ ஆழம் வரை நீர் நிலையில் எந்த சிரமும் இல்லாமல் செல்ல முடியும். சேற்றில் செலுத்துவதற்கான மோடில் வைத்து செலுத்தினோம். எந்த திக்கு திணறலும் இல்லாமல் எளிதாக கடந்து வருகிறது. இந்த மோடில் இதன் ஏர் சஸ்பென்ஷன் தரை இடைவெளியை சற்று உயர்த்திக் கொடுக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மணல்பாங்கான இடத்தில் வைத்து செலுத்துவதற்கான Sand மோடில் வைத்து செலுத்தும்போது அதிக தரைப்பிடிப்புடன், குறைவான கியரில் வைத்து கார் செல்வதை உணர முடிகிறது. அதிக டார்க் செலுத்தப்படுவதால், சக்கரங்கள் மணலில் சிக்காமல் தவழ்ந்து தாண்டுகிறது.

ஆஃப்ரோடுகளில் வைத்து செலுத்தும்போது எந்த ஒரு கரடுமுரடான நிலப்பரப்பையும் இந்த எஸ்யூவி எளிதாக கடந்து வந்துவிடும் என்ற நம்பிக்கைய கொடுக்கிறது. குறிப்பாக, இதன் டிரைவிங் மோடுகள் ஓட்டுனருக்கு அதிக நம்பிக்கையுடன் செலுத்த உதவுகின்றன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ்

பொதுவாக ஆஃப்ரோடு எஸ்யூவியை வாங்குவோருக்கு மைலேஜ் முக்கிய பிரச்னையாக இருக்காது. எனினும், இந்த ரக வாகனங்களில் டீசல் மாடலே சிறப்பான தேர்வாக கூற முடியும். இந்த எஸ்யூவி லிட்டருக்கு 11 கிமீ மைலேஜ் தருகிறது. இது நடைமுறையில் சிறப்பான மைலேஜாகவே கருத முடியும்.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய அம்சங்கள்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த எஸ்யூவியில் 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி ஆகிய எண்ணற்ற தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள் பாதுகாப்பு வசதிகளில் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் அசிஸ்ட், ஆல் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் (ATPC), எலக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், கிரெடியன்ட் ரிலீஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள் இடம்பெற்றுள்ளன.

ஏடிபிசி தொழில்நுட்பம் விளக்கம்

கரடுமுரடான சாலைகளுக்கான க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமாக கூறலாம். இதனை ஆன்செய்துவிட்டு ஆக்சிலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுத்துவிடலாம். ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை மட்டும் ஓட்டுனர் கவனித்தால் போதுமானது. மணிக்கு 1.8 கிமீ வேகம் முதல் 30 கிமீ வேகம் வரையில் வேகத்தை நிர்ணயித்து காரை இயக்கலாம். நாம் நிர்ணயிக்கும் வேகத்தில் தொடர்ந்து கார் செல்லும்.

ஜிடிசி நுட்பம் விளக்கம்: இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக கார் செங்குத்தான பகுதியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது கார் நின்றுவிட்டால், அதிக அளவில் ஆக்சிலரேஷனை அதிகரிக்கச் செய்து காரை நகர்த்த உதவும். இது ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போலவே செயல்படுகிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணத் தேர்வுகள்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி பைரோன் புளூ, ஃபைரென்ஸ் ரெட், ஃப்யூஜி ஒயிட், இன்டஸ் சில்வர், சான்டோரினி பிளாக் மற்றும் ஸ்காட்டியா க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி 5 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், டீசல் மாடலானது 4 வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடலானது ஒரே ஒரு வேரியண்ட்டிலும் கிடைக்கின்றன.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை விபரம்

Petrol Variants
HSE Rs 53.75 Lakh
Diesel Variants
Pure Rs 44.67 Lakh
SE Rs 51.24 Lakh
HSE Rs 54.76 Lakh
HSE Luxury Rs 60.43 Lakh
 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆக்சஸெரீஸ் மற்றும் வாரண்டி விபரம்

இந்த காருக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளை வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. ஆஃப்ரோடில் பயன்படுத்தும்போது தேவைப்படும் பல்வேறு ஆக்சஸெரீகளை இந்த செய்தியில் காணலாம். இந்த எஸ்யூவிக்கு 3 ஆண்டுகள் அல்லது அதற்குள் வரம்பில்லா தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சர்வீஸ் இடைவெளி

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 13,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு திட்டமும் உள்ளது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்டிரைவ் 30ஐ, ஆடி க்யூ5 45டிஎஃப்எஸ்ஐ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 300 மாடல்கள் இதன் விலை ரகத்தில் முக்கிய போட்டியாளர்களாக குறிப்பிடலாம்.

Model Displacement (cc) Power/Torque (bhp/Nm) Starting Price
Land Rover Discovery Sport 1997 237/340 Rs 53.75 Lakh
BMW X3 sDrive20i 1998 248/350 Rs 58.25 Lakh
Audi Q5 45TFSi 1984 248/370 Rs 55.27 Lakh
Mercedes-Benz GLC 300 1991 241/370 Rs 54.50 Lakh
 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து

எமது டெஸ்ட் டிரைவ் அனுபவத்தில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல், டீசல் மாடலுக்கு இணையான பல சிறப்பம்சங்களுடன் அசத்துகிறது. எனினும், இந்த விலை ரகத்தில் பலரும் அந்தஸ்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி, ஒரு சிறந்த ஆஃப்ரோடு பயன்பாட்டு மாடல் என்ற கூடுதல் வலுவுடன் போட்டியாளர்களை எதிர்கொள்கிறது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்.

உட்புற இடவசதி, ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கான ஏராளமான தொழில்நுட்ப வசதிகள், சிறந்த சஸ்பென்ஷன், கம்பீரமான தோற்றம் போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள். டீசல் மாடல் அளவுக்கு செயல்திறன் செம்மையாக இல்லை. பவர் விண்டோஸ் சுவிட்சுகள் அமைவிடம் அசகவுரியமாக இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யாது. உதவாதக்கறையாக கொடுக்கப்பட்டு இருக்கும் நெருக்கடியான மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பு.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தெரிந்துகொள்ளுங்கள்

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பகுதியிலுள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஹாலேவுட் ஆலையிலிருந்து முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவில் புனே அருகே சகன் பகுதியில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.61.35 லட்சம் மும்பை ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

 புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உங்களுக்கு தெரியுமா?

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் லோகோ எனப்படும் சின்னம் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்த டிசைனர் மதிய உணவு சாப்பிடும்போது வடிவமைக்கப்பட்ட இந்த சின்னம், பில்சார்டு என்ற கடல் மீனின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு கோள வடிவில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #லேண்ட்ரோவர்
English summary
We drive the rather niche petrol-powered LandRover Discovery Sport in the HSE (High Specification Equipment) trim to find out how much it gives justice to the iconic 'Discovery' nameplate. Read the review here.
Story first published: Friday, November 9, 2018, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X