மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

மஹிந்திரா நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த கார்களில் மிக உயர்தரமான மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வரஇருக்கிறது. அருமையான டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகள், பவர்ஃபுல் எஞ்சின் உள்ளிட்டவை வலுசேர்க்கும் அம்சங

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.O திரைப்படம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று, மஹிந்திரா நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கருதப்படுகிறது. அண்மையில் இந்த புதிய எஸ்யூவியை மும்பை அருகே உள்ள ஆம்பி வேலி பகுதியில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் ஓட்டி பார்த்து சோதித்த அனுபவத்தில், கிடைத்த சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை உயர்ந்த மஹிந்திரா கார்

மஹிந்திரா கீழ் செயல்பட்டு வரும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவிதான் மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வருகிறதுத. இந்த புதிய எஸ்யூவி மாடலானது ஒய்-400 மற்றும் எக்ஸ்யூவி700 என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்ட நிலையில், அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில் வருகிறது. வரும் 24ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் இந்த விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவி குறித்த விரிவான அலசல் தொகுப்பாக இந்த செய்தி அமைகிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

முதல் பார்வையிலேயே இதன் தோற்றம் கவர்ந்து இழுக்கிறது. பழைய ரெக்ஸ்டன் எஸ்யூவியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பதுடன், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் மஹிந்திரா வாரிசு என்பதை காட்டும் விதத்தில், செங்குத்து பட்டைகளுடன் கூடிய க்ரோம் க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இருபுறத்திலும் ஹெட்லைட் இணைக்கப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பானட்டையும், க்ரில் அமைப்பும் பிரித்து காட்டுவதற்காக வலிமையான க்ரோம் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, எல்டி பகல்நேர விளக்குகள், எச்ஐடி லோ பீம் ஹெட்லைட், ஹாலஜன் ஹை பீம் மற்றும் எல்இடி பனி விளக்குகள் மற்றும் அதனுடன் கார்னரிங் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வலிமையான பம்பர் அமைப்பு மற்றும் க்ரோம் பட்டை அலங்காரம் ஆகியவை அலங்கரிக்கிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

முன்புறத்தில் உணர்ந்த அந்த பிரம்மாண்டத்தை மேலும் கூட்டுகிறது பக்கவாட்டு டிசைன். வலிமையான உடல் அமைப்பு, பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் 5 ஸ்போக் மெஷின் கட் அலாய் வீல்கள் காரின் கம்பீரத்திற்கு வலு சேர்க்கிறது. கதவுகளில் ஏ பில்லரிலிருந்து சி பில்லர் வரையிலான கண்ணாடி ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் பீடிங் பிரிமீயமாக தெரிகிறது. வலிமையான டி பில்லர் சிறப்பு.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கவர்ச்சியை கூட்டும் விளக்குகள்

எல்இடி டர்ன் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டிருக்கும் சைடு மிரர்கள் இந்த காரின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் மிக சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று, ஒலி உமிழ் தன்மையுடன் கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன் இரவு நேரத்தில் காரின் தோற்றம் ஜொலிக்கிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் காரின் தோற்றத்திற்கு ஏற்றாற்போல் மிக பாந்தமாக இருக்கிறது. டெயில் லைட்டுகளை இணைப்பது போன்ற க்ரோம் சட்டம் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. மிக வலிமையான பம்பர் அமைப்பு, ஸ்கிட் பிளேட் ஆகியவையும் இந்த எஸ்யூவியின் கம்பீரத்தை அதிகரிக்கிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

காரின் உள்ளே நுழைந்ததும், வெளிப்புறத்தில் பார்த்த அதே பிரிமீயமான உணர்வை தக்க வைக்கிறது. டேஷ்போர்டு டிசைன் மிக கச்சிதமாக இருப்பதுடன், சாஃப்ட் டச் லெதர் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பான விஷயம். அதேபோன்று, இருக்கைகள், கதவுகள் என அனைத்துமே உயர் ரக லெதர் கவர் கொடுக்கப்பட்டு இருப்பது மிக பிரிமீயமான உணர்வை தருகிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் வீல்

சென்ட்ரல் கன்சோல் பகுதியிலும் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் மிக அழகாகவும், கைகளுக்கு பிடிப்பதற்கு கச்சிதமாகவும் இருக்கிறது. ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள மின்னணு திரையை கட்டுப்படுத்தும் வசதிகள் உள்ளன. எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதிகள் உள்ளன.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். இந்த சாதனத்தின் தொடுதிரை இயக்குவதற்கு எளிதாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.லைவ் ரேடியோ ஆப்ஷன் உள்ளதால், பிடித்த பாடல்களை ரெக்கார்டு செய்து மீண்டும் கேட்க முடியும். பிற சாதனங்களுக்கு பரிமாற்றம் செய்ய முடியாது என்பதால் காப்புரிமை பிரச்னை வராது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆடியோ சிஸ்டம்

இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு ஒலியின் தரம் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது ஏமாற்றம். சராசரியான ஒலிதரத்தை வழங்குகிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் அனலாக் டயல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டிற்கும் நடுவில் எல்சிடி திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து கார் ஓடிய தூரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகள்

இரட்டை வண்ணத்திலான நப்பா லெதர் இருக்கைகள் அமர்ந்து செல்வதற்கு சொகுசாக இருக்கின்றன. வெளிப்புறத்தை தெளிவாக பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை 8 நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. அதேபோன்று, இருக்கை பொசிஷனை 3 விதமான நிலைகளில் மெமரி செய்து வைத்துக் கொள்ள முடியும்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கைகளில் இடவசதி

இந்த ரகத்தில் மிக நீளமான, அகலமான கார் என்பதுடன், வீல் பேஸ் அதிகம் கொண்ட காராக இருக்கிறது. எனவே, உட்புறத்தில் தாராளமான இடவசதி தெரிகிறது. இரண்டாவது வரிசை இருக்கைகள் மிக வசதியாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கையில் இரண்டு பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும். ஆனால், கால் வைப்பதற்கான லெக் ரூம் பகுதி குறைவாக இருப்பது ஏமாற்றம். டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி மூலமாக மூன்றாவது வரிசை வரையில் விரைவான குளிர்ச்சியை உணர முடிகிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டோரேஜ் வசதிகள்

முன் இருக்கைகளுக்கான ஆர்ம் ரெஸ்ட்டுக்கு கீழ்புறத்தில் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடவசதி உள்ளது. கதவுகள், க்ளவ் பாக்ஸ் என ஸ்டோரேஜ் வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. முன்புற கதவுகளில் இரண்டு வாட்டர் பாட்டில்களை வைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளன.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட் ரூம்

இந்த எஸ்யூவியில் மூன்றாவது வரிசை இருக்கையை 60:40 என்ற விகிதத்திலும், இரண்டாவது வரிசை இருக்கையை 50:50 என்ற விகிதத்திலும் மடக்கி வைக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் இரண்டு வரிசை இருக்கைகளையும் மடக்ககும்போது சமதளமாக இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தானியங்கி பூட் ரிலீஸ்

பாக்கெட்டில் சாவியை வைத்துக் கொண்டு அருகில் வரும்போது சில அடி தூரத்தில் தானாக பூட் ரூம் கதவு திறந்து கொள்ளும். அதேபோன்று, டெயில் கேட் எனப்படும் பின்புற கதவில் உள்ள பட்டனை அழுத்தினால், தானாக மூடிக் கொள்ளும்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய வசதிகள்

காரின் உட்புறத்தில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எல்இடி விளக்குகள் அனைத்து வரிசை இருக்கைகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், இலுமினேட்டட் விளக்குகள் பொருத்தப்பட்ட கிளவ் பாக்ஸ், டயர் பிரஷர் சென்சார்கள், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் சிஸ்டம், ரியர் பார்க் அசிஸ்ட், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை பிற முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கேமரா கண்காணிப்பு வசதி

காரின் க்ரில் அமைப்பு, பின்புறம், இரண்டு சைடு மிரர்களில் தலா ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. கார் செல்லும்போதும், பார்க்கிங் செய்யும்போது, இன்ஃபோடெயின்மென்ட் திரை மூலமாக கேமராக்களை கண்காணித்து, காரை எளிதாக பார்க்கிங் செய்ய முடியும்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். யூரோ-6 மாசு தர நிர்ணயத்திற்கு இணையான இந்த எஞ்சினுடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 டிரைவ் சிஸ்டம் ஆகிய மாடல்களில் கிடைக்கும்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை குறைவான நேரமே ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதில், இந்த எஞ்சின் மிக அருமையான பிக்கப்பை வெளிப்படுத்துவதை உணர முடிந்தது. 1,600 ஆர்பிஎம் என்ற அளவிலேயே டார்க் திறன் முழுமையாக வெளிப்படுவது தெரிகிறது. அதேபோன்று, நடுத்தர வேகத்திலும் சிறப்பான செயல்திறனை உணர முடிகிறது. ஸ்டீயரிங் மிக இலகுவாக இருக்கிறது. அதிவேகத்தில் இறுக்கமாக இருந்தால் நம்பிக்கையான ஓட்டுதல் உணர்வை தரும்.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆஃப்ரோடு தகவமைப்பு

அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ், சிறப்பான டார்க்கை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த எஞ்சின் இருப்பதால் கரடுமுரடான சாலைகளையும் எதிர்கொள்ள முடியும். மேலும், இந்த எஸ்யூவியின் ஜி4 வேரியண்ட்டில் 2 வீல் டிரைவ் லோ, 4 வீல் டிரைவ் லோ மற்றும் 4 வீல் டிரைவ் ஹை ஆகிய மூன்றுவிதமான நிலைகளில் இயக்குவதற்கான அடிப்படை ஆஃப்ரோடு தகவமைப்புகளை பெற்றிருக்கிறது. மேலும், இந்த காரில் கோடை காலத்தில் முதல் கியரிலும், குளிர்காலத்தில் இரண்டாவது கியரிலும் ஸ்டார்ட் செய்வதற்கான வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டயர்கள்

இந்த எஸ்யூவியில் 255/60 R18 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டயர்கள் அதிக தரைப்பிடிப்புடன் செல்கின்றன. எனினும், இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை வளைவுகளில் திருப்பும்போது அதிக பாடி ரோல் இருக்கிறது. இது தவிர்க்க முடியாத விஷயமாக இருந்தாலும், ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் செட்டிங் மூலமாக குறைக்க முயற்சித்திருக்கலாம்.

Model ALTURAS G4 4x4
Engine 2.2-litre Euro6 Diesel
Displacement (cc) 2189
Power (bhp) 178
Torque (Nm) 420
Transmission 7-speed Automatic
Mileage (km/l) NA
Tyre Size 255/60 R18
மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், அதிக நிலைத்தன்மையுடன் செலுத்தும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், கார் உருள்வதை தவிர்க்கும் ஆன்ட்டி ரோல் ஓவர் பிரிவன்ஷன் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விதிதத்தில் செலுத்தும் இபிடி சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளன.

மலைப்பாதையிலிருந்து கீழே இறங்கும்போது சீரான வேகத்தில் கார் பாதுகாப்பாக இறங்குவதற்கும், நிறுத்திவிட்டு எடுக்கும்போது பிரேக் பிடிக்காமலேயே கார் முன்னோக்கி நகராமல் தடுப்பதற்கு துணைபுரியும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் ஹோண்டா சிஆர்வி ஆகிய எஸ்யூவி மாடல்களை கூற முடியும். எனினும், அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே வருகிறது.

Model Displacement (cc) Power/Torque (bhp/Nm) Mileage (km/l)
Alturas G4 4x4 2189 178/420 NA
Ford Endeavour 3198 200/470 11
Toyota Fortuner 2755 177/420 14.5
மஹிந்திராவின் 2.O... அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மஹிந்திரா நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த கார்களில் மிக உயர்தரமான மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வரஇருக்கிறது. அருமையான டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகள், பவர்ஃபுல் எஞ்சின் உள்ளிட்டவை வலுசேர்க்கும் அம்சங்களாக உள்ளன. சந்தையில் கலக்கி வரும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிலிருந்து மஹிந்திரா நிறுவனத்தை இந்த புதிய எஸ்யூவி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்பலாம். போட்டியாளர்களைவிட விலையை மட்டும் சவாலாக நிர்ணயித்தால், நிச்சயம் இந்தியர்கள் இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பை தருவார்கள் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
DriveSpark was invited to Amby Valley for a first-drive experience of the Alturas G4. We spent a couple of hours with the flagship Mahindra and needless to say, it really impressed us. Here's what we have to say about the Mahindra Alturas G4!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X