புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த மாதம் 7 சீட்டர் ரகத்தில் புதிய மாடலாக மஹிந்திரா மராஸ்ஸோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை அண்மையில் மும்பையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். எர்டிகா டீசலைவிட சக்திவாய்ந்த மாடலாகவும், இன்னோ

எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரண்டு மாடல்களைவிட்டால் வேறு சிறந்த சாய்ஸ் கிடையாது நிலை பல ஆண்டுகளாக உள்ளது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எனினும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா ஆகிய இரண்டு கார்களுக்கும் இடையே விலை, இடவசதி, சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. இந்த இடைவெளியை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும், தேவையையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் நோக்கில், கடந்த மாதம் மராஸ்ஸோ என்ற புதிய 7 சீட்டர் எம்பிவி காரை மஹிந்திரா களமிறக்கியது.

இந்த புதிய மாடலை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தில் இந்த காரின் சாதக, பாதகங்கள் குறித்த விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கார் உருவாக்கப் பணிகள்

வட அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் உள்ள மஹிந்திராவின் தொழில்நுட்ப மையத்தில்தான் இந்த புதிய எம்பிவி கார் உருவாக்கப்பட்டது. பிற மஹிந்திரா கார்களிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் பல்வேறு புதிய டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலி மொழியில் மராஸ்ஸோ என்றால் சுறா மீனை குறிக்கும் சொல். அதன்படியே, சுறா மீன் உடல் அமைப்பை மனதில் வைத்து இந்த காரை வடிவமைத்துள்ளனர்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன் அம்சங்கள்

சுறா மீனின் பற்கள் அமைப்பு போன்ற க்ரோம் வில்லைகளுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு, ஹாலஜன் லைட்டுகள் பொருத்தப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்புடன் முகம் வசீகரிக்கிறது. பகல் நேர விளக்குகள் பனி விளக்குகள் அறையுடன் சேர்த்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த மாடலில் மட்டுமே இது கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் பார்த்தவுடன் நம்மை கவர்ந்திழுப்பது 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள். சுறா மீன் துடுப்பு போன்ற ஸ்போக்குகளுடன் இந்த சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

பில்லர்கள் கறுப்பு வண்ணத்தில் இடம்பெற்று இருப்பதுடன், இப்போது வரும் புதிய கார்களை போன்று டி பில்லரில் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு கூரையையும், பாடியையும் தனியாக பிரித்து காட்டப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் சுறா வால் பகுதியை நினைவூட்டும் விதமாக டெயில் லைட் க்ளஸ்ட்டர் காரின் தோற்றத்திற்கு சிறப்பாக இயைந்து போகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் டிசைன் அம்சங்களை பெற்று வசீகரமாக இருக்கிறது. குறையொன்றும் இல்லை.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உட்புற வடிவமைப்பு

உட்புறத்தில் நுழைந்தவுடன் நம் கவனத்தை ஈர்ப்பது டேஷ்போர்டும், சென்ட்ரல் கன்சோலில் நடுநாயகமாக காட்சி அளிக்கும் தொடுதிரை சாதனமும்தான். டேஷ்போர்டு மேட் க்ரே என்ற விசேஷ சாம்பல் வண்ணத்திலும், சென்ட்ரல் கன்சோல் பகுதி பளபளப்பான கருப்பு வண்ணத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பீஜ் வண்ண இருக்கைகள் பிரிமீயம் உணர்வை தருகின்றன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. நேவிகேஷன் வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ தொடர்பு வசதிகளை அளிக்கும். மேலும், காரின் இயக்கம் குறித்த முக்கியத் தகவல்களையும் பெறுவதற்கும் இந்த சாதனம் உதவுகிறது. ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதி இல்லை.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகள், 12V சார்ஜர் போர்ட் ஆகியவை நீண்ட தூர பயணங்களுக்கு அவசியமான விஷயங்கள்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நீண்ட தூர பயணங்கள் அதிகம் செல்லும் இந்த காரில் உட்புறத்தில் அதிக ஸ்டோரேஜ் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் வலது புறத்தில் ஸ்டோரேஜ் பாக்கெட் இருக்கிறது. க்ளவ் பாக்ஸ் அமைவிடம் சற்று அசகவுரியமாக அமைந்தள்ளது. அனைத்து கதவுகளிலும் பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் மூன்றாவது வரிசை இருக்கையிலும் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசான இருக்கைகள்

அடுத்து புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கைகள் மிக சொகுசாகவும், சவுகரியமாகவும் இருக்கின்றன. ஓட்டுனர் மற்றும் பயணிகள் இருக்கைகளை மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி இருப்பதால், சிறப்பான லம்பார் சப்போர்ட் வசதி கிடைக்கும்.

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த மராஸ்ஸோ காரின் எம்-8 டாப் வேரியண்ட்டில் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், மடக்கி வைக்கும் வசதியுடன் கைகளை வைத்துக் கொள்வதற்கான ஆர்ம் ரெஸ்ட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் இருக்கைகள் நீண்ட தூர பயணங்களின்போது அலுப்பில்லாத அனுபவத்தை வழங்கும்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மூன்றாவது வரிசை இருக்கை

மாருதி எர்டிகாவை இதன் மூன்றாவது வரிசை இருக்கை சிறப்பாக இருக்கும் என்பது முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டது. அதாவது, இன்னோவா அளவுக்கு இல்லையென்றாலும், எர்டிகாவைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

ஆனால், மூன்றாவது வரிசை இருக்கை எதிர்பார்த்த அளவு இடவசதியை அளிக்கவில்லை. உயரமான பயணிகளுக்கு போதுமான லெக் ரூம் எனப்படும் கால் வைப்பதற்கான இடவசதி குறைவாகவே இருக்கிறது. சராசரி உயரம் கொண்டவர்கள், சிறியவர்களை இங்கு அனுப்பும் நிலைதான் உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைக்கு செல்வோர், எளிதாக இரண்டாவது வரிசை இருக்கையை மடக்க முடியும் என்பதுடன் ஏறி, இறங்குவதும் எளிதாகவே இருப்பது முக்கிய விஷயம்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சர்ரவுண்ட் கூலிங் சிஸ்டம்

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் உட்புறத்தில் மிக முக்கிய அம்சம், சர்ரவுண்ட் கூலிங் ஏர் கண்டிஷன் சிஸ்டம். இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கு இந்த புதிய ஏசி வென்ட்டுகள் மூலமாக போதுமான குளிர்ச்சி விரைவாக கிடைக்க வகை செய்கிறது. மூன்றாவது வரிசை இருக்கை பயணிகள் அதிக குளிர்ச்சி தேவைப்பட்டால், அதற்கென தனி வென்ட்டுகள் இருப்பதால், விரைவாக பெற முடியும். இந்த புதிய சர்ரவுண்ட் ஏசி வென்ட் அமைப்பிற்கு மஹிந்திரா காப்புரிமை பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட் ரூம் இடவசதி

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 190 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. இரண்டு சூட்கேஸுகளை வைக்க முடியும். மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால், 690 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெற முடியும். இரண்டாவது இருக்கையையும் மடக்கி பூட் ரூம் இடவசதியை வெகுவாக அதிகரிக்க முடியும். நீண்ட தூர பயணங்களின்போது மூன்று வரிசை இருக்கைகளையும் பயன்படுத்தும்போது பூட் ரூம் இடவசதி மிக குறைவாக இருக்கும்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் செயல்திறன்

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்ட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், வெறும் 1,500 ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்திலேயே அதிகபட்சமான 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கிட்டத்தட்ட 2 டன் எடையுடைய இந்த காரை சிறப்பாகவே கையாள்கிறது இந்த டீசல் எஞ்சின். அதாவது, இன்னோவா க்ரிஸ்ட்டா அளவுக்கு எதிர்பார்க்க முடியாது. ஆனால், எர்டிகாவின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினைவிட சிறப்பான செயல்திறனை உணர முடிகிறது. அதேநேரத்தில், 7 பேர் அமர்ந்து செல்லும்போது செயல்திறனில் தொய்வு இருக்கும். ஓவர்டேக் செய்யும்போதும் எஞ்சின் செயல்திறன் எதிர்பார்த்த அளவு இல்லை.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கியர்பாக்ஸ் மிக துல்லியமான கியர் மாற்றத்தை தருகிறது. இதன் ரகத்திலான பிற கார்களில் க்ளட்ச் இயக்குவதற்கு கடினமான உணர்வை தரும். ஆனால், மராஸ்ஸோ காரின் க்ளட்ச் இயக்குவதற்கு மிக இலகுவாக இருப்பது சிறப்பு. எனினும், க்ளட்ச் இயக்கம் பிடிபடும் வரை, அவ்வப்போது லேசான திக்கல் திணறல்களை சிலர் சந்திக்க நேரிடலாம்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் சிஸ்டம்

இந்த காரின் மிக முக்கிய சிறப்புகளில் ஒன்று இதன் ஸ்டீயரிங் சிஸ்டம். கார் அதிவேகத்தில் செல்லும்போது துல்லியமாக இருப்பதுடன், கட்டுப்படுத்துவதும் எளிதாக இருக்கிறது. வளைவுகளில் திருப்பும்போது பாடி ரோல் தெரிகிறது. ஆனால், இதன் அளவிலுள்ள கார்களை ஒப்பிடும்போது பெரிய குறையாக எடுத்து சொல்ல முடியாது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன்

நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி, மோசமான சாலைகளையும் எளிதாக எதிர்கொள்கிறது மராஸ்ஸோ. இந்த காரில் முன்புறத்தில் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ட்விஸ்ட் பீம் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு குலுங்கல்களை குறைத்து பயணத்தை இனிதாக்க உதவுகிறது. எஞ்சின் அதிர்வுகளும், சப்தமும் குறைவாக இருப்பதும் இதற்கு வலு சேர்க்கும் முக்கிய அம்சங்கள். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் மிகச் சிறந்த பயண அனுபவத்தை வழங்குகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

இதுபோன்ற பிரம்மாண்ட 7 சீட்டர் கார்களுக்கு கையாளுமை திறன் மிக முக்கிய அம்சம். இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்கள் சிறந்த கையாளுமை கொண்ட கார்களாக நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. அதே வரிசையில், இதன் சிறந்த பாடி ஆன் ஃப்ரேம் கட்டமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷனும் இணைந்து சிறந்த கையாளுமையை வழங்குகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் Normal மற்றும் Eco எனற இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நார்மல் மோடில் வைத்து இயக்கும்போது எஞ்சின் செயல்திறன் மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது செயல்திறன் குறைகிறது. ஆனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

வெறும் 1,500 ஆர்பிஎம்மில் முழுமையான டார்க்கை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருந்தாலும், எதிர்பார்த்த பவர் டெலிவிரி இல்லை. ஆனால், நடுத்தர ரேஞ்சில் இதன் எஞ்சின் சிறந்த செயல்திறனை வெளிக்காட்டுகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இரண்டு ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. தவிரவும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட்டுகள் ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புரோமித் கோஷ் கருத்து

மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து ஓர் சிறந்த தயாரிப்பாக இதனை கூறலாம். வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக இருக்கும். அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட் மாடலே ரூ.13.90 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைப்பதால், மதிப்பு வாய்ந்த மாடலாகவே இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து

சர்வீஸ் நெட்வொர்க், பராமரிப்பு செலவு மற்றும் விலை அடிப்படையில் மாருதி எர்டிகாவும், தரம், இடவசதி, மறு விற்பனை மதிப்பில் இன்னோவா க்ரிஸ்ட்டாவும் சிறந்த தேர்வுகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றன.

புதிய மாருதி எர்டிகா வருகையும் மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு தொடர்ந்து பலமான சந்தைப் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கலாம். எர்டிகா டீசல் காரைவிட அதிக சக்திவாய்ந்த எம்பிவி காரை வாங்க பிரியப்படுபவர்களுக்கும், இன்னோவா க்ரிஸ்ட்டா விலையை எட்டிப்பிடிக்க முடியாதவர்களுக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ கார் சிறந்த மாற்றாக கூறலாம்.

Most Read Articles
English summary
Mahindra Marazzo Road Test Review — The MPV Which Does All?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X