20 வருசம் ஆனாலும் "மாஸ்" குறையல, இவ்வளவு விஷயங்களை யாருமே எதிர்பார்க்கல, Mahindra Scorpio - N எப்படி இருக்கு?

மஹிந்திரா நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட தனது நிறுவனத்திற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த ஸ்கார்பியோ காரை தற்போது பல்வேறு அப்டேட்கள் செய்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற காராக விற்பனை செய்து வருகிறது.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

இந்த காரின் அடுத்த வெர்ஷனாக மஹிந்திரா ஸ்கார்பியோ - என் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எப்படி இருக்கிறது இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மஹிந்திரா நிறுவனம் எந்த சூழ்நிலையிலும் எல்லா விதமான நிலபரப்புகளிலும் செல்லும் ரக்கட் வாகனங்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருந்தது. இந்நிறுவனம் தயாரிக்கும் கார் இக்கட்டாக இருந்தாலும் அதில் சொகுசு வசதி குறைவானதாகவே இருக்கும். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. மஹிந்திரா அன்று வழங்கிய அதே ரக்கட் கார்களை இன்று ஆயிரம் மடங்கு அதிகம் சொகுசு வசதிகளுடன் வழங்குகிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

கடந்த 2002ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என்ற காரை அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகளைக் கடந்து தற்போது ஸ்கார்பியோ கார் பல தலைமுறைகளைக் கண்ட பின்பு ஸ்கார்பியோ கார் பல மாற்றங்களுடன், யாரும் எதிர்பாராத புதிய உட்கட்டமைப்புகளுடன் விற்பனையாகி வருகிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என்ற பிராண்டிற்கு நல்ல பெயரைப் பெற்று வைத்துள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தற்போது ஸ்கார்பியோ என்ற பேட்ஜை புதிதாக மாற்றியுள்ளது. அதன்படி ஸ்கார்பியோ - என் என அது தன் பெயரை மாற்றியுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இந்த 20 ஆண்டுக் கால ஸ்கார்பியோ வளர்ச்சியில் பல விஷயங்கள் மாறிவிட்டது. இன்ஜின் சைஸ் சிறிதாகிவிட்டது, ஆனால் பவர்புல்லாக இருக்கிறது. தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்கார்பியோ-என் காரில் பழைய காரின் டிசைன் மட்டும் ஓரளவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அது போக இன்ஜின் உள்ளிட்டபல முக்கியமான விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த கார் ஓட்டிப்பார்க்க எப்படி இருக்கிறது? ஸ்கார்பியோவின் பெயரை ஸ்கார்பியோ - என் காப்பாற்றுமா? வாருங்கள் காணலாம்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஸ்கார்பியோ- என் காரை பற்றிய ரிவியூவை பார்க்கும் முன் ஸ்கார்பியோ என்ற பிராண்ட் எப்படி உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளது. என ஒரு ரீகேப்பை பார்த்து விட்டு வந்துவிடலாம் மஹிந்திரா நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு ஸ்கார்பியோ காரை முதன் முறையாக வெளியிட்டது. இந்த காருக்கான வேலைகளை அதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997ம் ஆண்டே துவங்கிவிட்டது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஸ்கார்பியோவிற்கு முன்பு மஹிந்திரா நிறுவனம் வில்லீஸ் ஜீப்ரக வாகனத்தைத் தயாரிப்பில் தான் பிரபலமாக இருந்தது. ஸ்கார்பியோ காரை வெளியிடும் போது கிட்டத்தட்ட அதே ஸ்கின்னில் தான் வெளியிட்டனர். ஸ்கார்பியோ தான் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட முதல் எஸ்யூவிகார். அதை அந்நிறுவனம் அடிப்படையிலிருந்தே உருவாக்கினர். மேலும் இந்நிறுவனம் முதன் முதலாகச் சர்வதேசச் சந்தைக்கு எடுத்துச் சென்ற காரும் இது தான்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு ஸ்கார்பியோ கார் அறிமுகமானது, ஐரோப்பியச் சந்தையில் 2003ம் ஆண்டு அறிமுகமானது. இன்று பல நாடுகளில் விற்பனையாகிறது. உலகம் முழுவதும் இந்த காருக்கு தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

2006ம் ஆண்டு மஹிந்திரா இந்த காரின் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷனவை அறிமுகப்படுத்தியது. 2007 ஆண்டு இந்நிறுவனம் ஸ்கோபியோவை பிக்கப் டிரக் வாகனமாக மாற்றியும் அறிமுகப்படுத்தியது. 2008ம் ஆண்டு 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் அறிமுகமானது. எஸ்யூவி கார்களில் முதல் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஸ்கார்பியோவில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

2009ம் ஆண்டு மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த கார் முகப்பு பகுதியில் சிறப்பான மாற்றங்களைப் பெற்றிருந்தது. 2014ம் ஆண்டு இந்த காரின் மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகமானது. இதில் புதிய டிசைன், பவர்புல் இன்ஜின், மார்டனான உட்கட்டமைப்பு எனப் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இத்தனை ஆண்டுகளில் ஸ்கார்ப்பியோ என்ற பெயர் இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றுவிட்டது. பலர் இந்த காரை வாங்குவதை ஒரு கனவாக வைத்திருக்கின்றனர். எத்தனை ஆண்டுகள் ஆனால் இந்த காருக்கான டிமாண்ட் மார்கெட்டில் குறையவேயில்லை. இந்நிலையில் ஸ்கார்பியோ- என் காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய ஸ்கார்பியோ மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரிலும் புதிய கார் ஸ்கார்பியோ என் என்ற பெயரிலும் விற்பனையாகும்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஸ்கார்பியோ -என் காரை அறிமுகப்படுத்தும் முன்பே இன்டர்நெட்டில் பல ஸ்பை புகைப்படங்கள், பல புரளிகள் என ஏராளமான தகவல்கள் வந்தது. இந்நிலையில் தான் அதிகாரப்பூர்வமாக மஹிந்திரா குழுமம் டிரைவ்ஸ்பார்க் குழுவை இந்த காரை ரிவியூ செய்ய அழைத்தது. எங்கள் டிரைவிங் அனுபவத்தை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

டிசைன் மற்றும் ஸ்டைல்

மாஸ், கெத்து, பவர்புல், இப்படி எந்த வார்த்தையைச் சொன்னாலும் அதற்குப் பொருந்திப் போகும் விஷயம் என்றால் மஹிந்திரா ஸ்கார்பியோ- என எனச் சொல்லிவிடலாம். இந்த காருக்கான டிசைனை மஹிந்திரா நிறுவனத்தார் சிறப்பாகச் செய்துள்ளனர்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஸ்கார்ப்பியோ என்ற பெயர் ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வாக உள்ளது. இந்த காரின் டிசைன் மொழியை தற்போதைய டிரெண்டிற்கு மாற்ற வேண்டும் என்றால் அதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஸ்கார்ப்பியோ-என் கார் பார்க்க ஸ்கார்ப்பியோ லுக்கிலும் இருக்க வேண்டும் நவீன டிசைன் அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற சவால் அவர்களுக்கு இருந்தது. இந்த சவாலில் மஹிந்திரா வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இந்த காரை பார்த்ததும் உங்களுக்கு முதலில் தோன்றுவது இது பெரிய காராக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மஹிந்திரா நிறுவனம் இந்த செக்மெண்டிலேயே பெரிய காராக இந்த ஸ்கார்பியோ- என் காரை வடிவமைத்துள்ளனர்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

காரின் முன்பக்கத்தைப் பொருத்தவரை புதிய எல்இடி ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் பழைய ஸ்கார்ப்பியோவை நினைவூட்டும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புரோஜெக்டர் மற்றும் ரிஃப்லெக்டர் சிஸ்டம் இருக்கிறது. இருக்கிறது. கிரில் பெரிதாகவும், நேர் கோடுகளுடனும் இருக்கிறது. 6 நீள க்ரோம் ஸ்டிராப்கள் இருக்கிறது. மேலும் ஊடாக ஒரு நீளமான க்ரோம் பட்டையும் இருக்கிறது. அதில் மஹிந்திராவின் புதிய லோகோவும் வழங்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

பம்பர் பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லைட் அருகே சி டைப் க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. காரின் பேனட் பெரியதாகவும் மஸ்குலர் அம்சங்களுடனும் இருக்கிறது. வீல் ஆர்ச்கள் மஸ்குலர் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இந்த காரின் மேம்படுத்தப்பட்ட டிசைன் சைடு புரோஃபைலில் தான் தெளிவாகத் தெரிகிறது. ஒரு முழு சைஸ் எஸ்யூவின் அளவை தெளிவாக உணர முடிந்தது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீல் ஆர்ச் மற்றும் ஏ பில்லர் முதல் சி பில்லர் வரையிலான சில்வர் ட்ரிம் கடைசி ஜன்னல் வரை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

காரின் பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறத்திலும் ரூஃப் ரெயில்கள் சில்வர் ஷேடிலும் கொடுக்கப்பட்டுள்ளன. கதவு கைபிடிகளில் க்ரோம் ஸ்டிரிப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளின் கீழே பெரிய கருப்பு கிளாடிக் கொடுக்கப்பட்டுள்ளது. வீலை பொருத்தவரை 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

பின் பக்கத்தைப் பொருத்தவரை பழைய ஸ்டைலில் புதிய டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் வழக்கம் போலப் பெரிய ஸ்டாக் டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க்க ஸ்வீடீஸ் கார் போலத் தோற்றம் இருந்தாலும் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

20 வருசம் ஆனாலும் இன்னும்

பின் பக்கத்தைப் பொருத்தவரை பழைய ஸ்டைலில் புதிய டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் வழக்கம் போலப் பெரிய ஸ்டாக் டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க்க ஸ்வீடீஸ் கார் போலத் தோற்றம் இருந்தாலும் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

20 வருசம் ஆனாலும் இன்னும்

பம்பருக்கு கீழே சில்வர் நிற ஸ்காஃப் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிறப்பான எஸ்யூவி என்ற பெயரை எக்ஸ்யூவி 700 காரிலிருந்து இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ - என் பெற்றுள்ளது என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.

20 வருசம் ஆனாலும் இன்னும்

காக்பிட் மற்றும் இன்டீரியர்

ஸ்கார்பியோ காரின் முதல் தலைமுறை காரை பொருத்தவரை மஹிந்திரா காருக்கு கேம் சேஞ்சர் காராக இருந்துள்ளது. இந்த காரில் உட்புற கட்டமைப்பும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய காரில் அப்போதைய அட்வான்டு டெக்னாலஜியான டேக்கோ மீட்டர், சிறிய எல்சிடி டிஸ்பிளே, என 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. தற்போதும் ஃப்யூச்சர் தொழிற்நுட்பங்களுடன் இந்த கார் பல வசதிகளைக் கொண்டிருக்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இந்த காரின் கதவைத் திறந்து உள்ளே செல்லும் போது நமக்குத் தோன்றும் முதல் விஷயம் பிரிமியம் மற்றும் ஃபேன்சி தான். மஹிந்திரா ஸ்கார்பியோ -என் காரின் உட்புற கட்டமைப்பு காபி கருப்பு நிறத்தில் லெதர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதிகள் எல்லாம் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதே தீம் கார் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரின் டோர் பேட், டேஷ்போர்டு, சென்டர் கன்சோல் எல்லாம் இந்த தீம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இந்த ஸ்கார்பியோ-என் காரின் ஸ்டியரிங் வீலை பொருத்தவரை எக்ஸ்யூவி 700 காரின் ஸ்டியரிங் வீல் அம்சத்தை பெற்றுள்ளது. அந்த காரில் உள்ள அதே ஃபில் இந்த காரிலும் உள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்டியரிங் ஆடியோ கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன்கள் உள்ளன. இது பயன்படுத்தச் சுலபமாக இருக்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஸ்டியரிங் வீலுக்கு பின்புறம் டிஜிட்டல் அனலாக் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டேக்கோ மீட்டர் அனலாக் டிஸ்பிளேவாகவும், இவை இரண்டிற்கும் இடையே 7.0 இன்ச் முழு கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பிளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மல்டிபிள் டிரிப் மீட்டர் ஓடோ மீட்டர், சராசரி மைலேஜ் இன்டிகேட்டர், மேலும் டிரைவர் தூக்கத்தை இருப்பதைக் கண்டுபிடிக்கும் தகவல்கள் கிடைக்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

டேஷ் போர்டில் வெர்டிகல் ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல அது காபி பிரெளன் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோலை பொருத்தவரை 2 ஏசி வென்ட்கள், மற்றும் 8 இன்ச் டச் ஸ்கிரின் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யக்கூடியது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மேலும் இந்த காரில் 12 ஸ்பீக்கர் கொண்ட சோனி ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது இக்வலைசரை கொஞ்சம் மாற்றினால் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இதில் 8 இன்ச் ஸ்கிரீன் மிக சிறியதாக இருக்கிறது. இதுவே 10.25 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

டச் ஸ்கிரின் கீழே இரண்டு நாப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏசி மற்றும் காரின் மற்ற விஷயங்களை கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. இந்த நாப் மற்றும் பட்டன்கள் பியானோ பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்கச் சிறப்பாக இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ -என் காரை பொருத்தவரை வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சர்ஜிங், மற்றும் இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், கொடுக்கப்பட்டுள்ளது. இது போனை இன்ஃபோடெயின்மெண்ட் உடன் இணைக்கவும் உதவும்,

20 வருசம் ஆனாலும் இன்னும்

சென்டர் கன்சோலை பொருத்தவரை கியர் லிவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி அலுமினியம் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் 4எக்ஸ்பிளோர் கண்ட்ரோல் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் விலையுயர்ந்த பிரிட்டிஷ் எஸ்யூவி காரில் மட்டும் இருக்கும் அம்சம். இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை கட்டுப்படுத்த உதவும்,

20 வருசம் ஆனாலும் இன்னும்

இதில் 4வீல் டிரைவ் லோ மற்றும் 4 வீல் டிரைவ் ஹை ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இதை அதைக் கட்டுப்படுத்தும் பட்டன்களின் மூலம் தேர்வு செய்யலாம். மேலும் இதில் ரோடு, மட், பனி, மற்றும் மணல் ஆகிய நான்கு மோடுகள் உள்ளது. பழைய காரில் 2 வீல் ஹை, 4வீல் ஹை, 4வீல் லோ ஆகிய மோடுகள் மட்டும் இருந்தது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

கம்ஃபோர்ட் மற்றும் பிராக்டிகாலிட்டி

ஸ்கார்ப்பியோவை பொருத்தவரை சொகுசு மற்றும் பிராக்கடிகாலிட்டியில் சிறப்பாக இருக்கும். மார்கெட்டில் இருக்கும் சொகுசு நிறைந்த எஸ்யூவிகளில் இதுவும் ஒன்று, சஃப்ட்டான சஸ்பென்சன், மெதுவான சீட்கள், போதுமான இட வசதிகள் இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ என் கார் அந்த செக்ஷன் கார்களிலேயே உயர்ந்து நிற்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

சீட் வடிவமைப்புகளைப் பொருத்தவரை இடுப்பு, தொட ஆகிய இடங்களில் சப்போர்ட் வழங்கியுள்ளது. பின் பக்க சீட்டும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. கடைசி வரிசை சீட்கள் காற்றோற்றமாகவும், இதே செக்மெண்டில் உள்ள மற்ற கார்களை ஒப்பிடும் போது பெரியதாகவும் வழங்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஸ்கோர்பியோ- என் காரில் சில விஷயங்கள் கவனித்தக்கதாக இருக்கிறது. உட்புறமாக ஏ பில்லர் அருகே கைப்பிடி வழங்கப்பட்டுள்ளது. இது காரில் ஏறும் போதும் இறங்கும் போதும் உதவும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. ஆஃப்ரோடு பயணங்களிலும் கார் குலுங்கும் போது பிடித்துக்கொள்ள வசதியாக வழங்கப்பட்டுள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மேனுவல் ஹேண்ட் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு ரக்கட் ஃபீலை வழங்குகிறது. பிராக்டிகாலிட்டியை பொருத்தவரை காருக்கு தேவையான இடங்களில் ஸ்டோரேஜ் ஸ்பேஸை வழங்குகின்றனர். டீப் கிளவ் பாக்ஸ், சென்டர் கன்சோலில் உள்ள கேபிஹோல்ஸ், டோர்பேனல்களில் டீப் பாக்கெட் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளடங்கும்.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மஹிந்திரா நிறுவனம் பூட் ஸ்பேஸ் குறித்த தகவல்களை வழங்கவில்லை. ஆனால் 3 வரிசை சீட்டர் கார்களிலே அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட கார் இதுவாக தான் இருக்கும். மூன்றாவது வரிசை மடங்கிவிட்டால் ஏகப்பட்ட இடம் கிடைக்கும். பெட்ரோல் டேங்கை பொருத்தவரை 57 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

இன்ஜின் செயல்திறன் மற்றும் டிரைவிங் இம்பிரஷன்

மஹிந்திரா நிறுவனம் முதன் முறையாக எஸ்யூவி காரை வெளியிடும் போது இந்த செக்மெண்டிலேயே பவர்ஃபுல் காராக வெளியிட்டனர். அப்பொழுது 2.6 லிட்டர் சிஆர்டிஇ டீசல் டர்போ இன்ஜின் வழங்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு எம்ஹாக் இன்ஜின் மாற்றப்பட்டது. அதன் மூலம் இந்த கார் மேலும் பவர்ஃபுல்லானது. ஸ்கார்பியோ - என் காரை பொருத்தவரை செக்மெண்டிலேயே பவர்ஃபுல் காராக இருக்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

டிரைவிங் இம்பிரஷனிற்கு முன்பு இந்த காரின் இன்ஜின் ஆப்ஷன் பற்றித் தெரிந்து கொள்வோம். இந்தகாரில் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் 2 விதமான ட்யூன்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மஹிந்திரா 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இது பவர்ஃபுல் இன்ஜினாக உள்ளது. இதே இன்ஜின் தான் எக்ஸ்யூவி 700 காரிலும் உள்ளது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

2.0 எம்-ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 200 பிஎச்பி பவரை 5000 ஆர்பிஎம்மிலும், 370 என்எம் டார்க் திறனை 1750 மற்றும் 3000 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. ஆனால் இந்த இன்ஜினில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இது டிராக்ஷன் கண்டரோலை ஆஃப் செய்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் நாங்கள் ஸ்கார்பியோ -என் காரின் பெட்ரோல் இன்ஜின் காரை ஓட்டி பார்க்கவில்லை.

20 வருசம் ஆனாலும் இன்னும்

டீசல் இன்ஜினை பொருத்தவரை லோயர் ஸ்டேட் டியூனில் 2.2 லிட்டர் ஆயில் பர்னர் இன்ஜின் 130 பிஎச்பி பவரை 3750 ஆர்பிஎம்மிலும், 300 என்எம் டார்க் தினறை 1500 மற்றும் 300 ஆர்பிஎம்மிலும், வெளிப்படுத்துகிறது. இது மேனுவல் கியர் பாக்ஸ் ரியல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வருகிறது. இந்த மாடலை நாங்கள் ஓட்டிப்பார்க்கவில்லை. நாங்கள் டீசல் இன்ஜினன் டாப் ஸ்பெக் மாடலை ஓட்டிப்பார்த்தோம். அதில் 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன்கள் இருந்தன.

20 வருசம் ஆனாலும் இன்னும்

நாங்கள் ஓட்டிய கார் 1750 ஆர்பிஎம்மிற்கு பிறகு அதிக டார்க் மற்றும் பவரை வெளிப்படுத்தியது. 3500 ஆர்பிஎம் வரை அது தொடர்ந்தது. அதற்குப் பின்னர் அது அதிகமாகவில்லை. 1500 ஆர்பிஎம்மிற்கு குறைவாக இருக்கும் போது டர்போ லேக் ஏற்படுகிறது. இந்த டர்போ லேக் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் சமாளிக்கும் அளவில் இருக்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் டார்க் கண்வெர்டர் என்பதால் இது மெதுவாகவே ரியாக்ட் செய்கிறது. கியர் ஸிஃப்டிங்கும் மெதுவாகவே செய்கிறது. டார்க் கண்வெர்டரில் இதைத் தான் எதிர்பார்க்க முடியும் ஆனால் அதைக் குறையாகச் சொல்ல முடியாது. காரின் பவர் சிறப்பாக இருக்கும் போது டார்க் கன்வெர்டரில் பெரியதாகப் பிரச்சனையில்லை.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மஹிந்திரா நிறுவனம் மீடியா டிரைவ்விற்கு அதன் மேனுவல் கியர் பாக்ஸ் கார் எதையும் வழங்கவில்லை. ஆனால் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கார் கட்டாயம் என்கேஜிங் டிரைவிங் மற்றும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். நாங்கள் 4வீல் டிரைவ் காரை ஓட்டினோம் இது சிறப்பான அனுபவத்தையே தந்தது

20 வருசம் ஆனாலும் இன்னும்

இதை நாங்கள் சாலையிலும் ஆஃப் ரோட்டிலும் ஓட்டிப் பார்த்தோம். இது ஆஃப்ரோடு ஹேண்டிலிங்கிற்கு சிறப்பாக இருந்தது. முக்கியமாக வளைவுகளில் திருப்பும் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ- என் காரின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் புதிதாக பென்டா லிங்க் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வாட்ஸ் லிங்கேஜ் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது. இந்த சஸ்பென்ஷன் ஒரு மேஜிக் போல இருக்கிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

பயணத்தின் போது ஸ்கார்பியோ என் கார் குழிகளைச் சுலபமாகக் கடக்கிறது. குழிகள் இருப்பதே தெரியாத அளவிற்கு இதன் அனுபவம் இருக்கிறது. கார்னர்களில் குதிக்கும் வகையில் பழைய ஸ்கார்பியோ இருக்கும். இதில் அந்த பிரச்சனையே காணாமல் போய்விட்டது. டிரைவருக்கு தற்போது நல்ல ஸ்டியரிங் அனுபவத்தை வழங்குகிறது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மஹிந்திரா ஸ்டியரிங்கை சாதாரண ரோட்டில் லைட்டாகவும் ஆஃப் ரோடுகளில் கனமானதாக மாறும்படி வடிவமைத்துள்ளது. சாலைகளில் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. 4 வீல் டிரைவ் ஆஃப் ரோடிற்கு சிறப்பான வேலை செய்கிறது. முன்பே சொன்னபடி மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் மல்டிபிள் டெரைன் மோடுகளுடன் இருக்கிறது. ஒவ்வொரு மோடிற்கும் த்ராட்டல் ரெஸ்பான்ஸ் மாறுகிறது. ஒருபட்டனை எழுதுவது மூலம் 4 வீல் ஹை மற்றும் 2 வீல் டிரைவ் ஆப்ஷன்களை மாற்றிக்கொள்ள முடியும். நாங்கள் சதி நிறைந்த பகுதியில் ஓட்டிச்சென்றோம். அந்த சங்கடமும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

ஒட்டு மொத்தத்தில் ஸ்கார்பியோ- என் இம்பிரஷிவாக இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் மற்றொரு இன்ஜினியரிங் மாஸ்டர் பீஸை வழங்கியுள்ளது. இந்த காரின் மேனுவல் கியர் பாக்ஸ் காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கார் ஏற்படுத்திவிட்டது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

ஆரம்பத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவிகள் பாதுகாப்பு விஷயத்தை பெரியதாகக் கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. மஹிந்திரா பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை அறிமுகப்படுத்திவிட்டது. எக்ஸ்யூவி 300 மற்றும் எஸ்யூவி 700 ஆகிய கார்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. அதே நிலையை தற்போது ஸ்கார்பியோ - என் காரும் அடைந்துவிட்டது.

20 வருசம் ஆனாலும் இன்னும்

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பாதுகாப்பு அம்சங்கள் ( Mahindra Scorpio - N Safety Features )

  • 6 ஏர் பேக்கள்
  • டிரைவர் சோர்வைக் கண்டறியும் சிஸ்டம்
  • 18 அம்சங்கள் கொண்ட எலெக்டரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
  • ஜியோ லோக்கேஷன் உடன் கூடிய எஸ்ஓஎஸ் பட்டன்
  • ஹில் ஹோல்டு,
  • டிசென்ட் கண்ட்ரோல்
  • ஐஎஸ்ஓபிக்ஸ் குழந்தைகள் சீட் மவுண்ட்ஸ்
  • இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • மஹிந்திரா ஸ்கார்பியோ-என் முக்கிய அம்சங்கள் (Mahindra Scorpio -N key Features)

    • 6வே பவர் டிரைவர் சீட்
    • சோனி 3டி 12 ஸ்பீக்கர் ஆடியோ
    • முன்பக்க கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்
    • வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர்
    • ஆப்ஷனல் கேப்டன் சீட்
    • கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்
    • எல்இடி லைட்டிங்
    • ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் ஆட்டோ வைப்பர்
    • 8 இன்ச் டச் ஸ்கிரீன்
    • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே
    • இதுபோல பல அம்சங்கள் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ- என் காரில் இருக்கிறது.

      20 வருசம் ஆனாலும் இன்னும்

      கலர் ஆப்ஷன்கள் (Mahindra Scorpio N Color options)

      மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரை பொருத்தவரை 7 கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

      • டேஷிங் சில்வர்
      • டீப் ஃபாரஸ்ட்
      • கிராண்ட் கேன்யான்
      • எவரெஸ்ட் ஒயிட்
      • நாப்போலி பிளாக்
      • ரெட்ரேஜ்
      • ராயல் கோல்டு
      • 20 வருசம் ஆனாலும் இன்னும்

        20 ஆண்டுகளுக்கு முன்பு இன்டஸ்டிரியையே புரட்டிப் போட்ட கார் இந்த ஸ்கார்பியோ, இந்த காரை இந்திய ஆட்டோமொபைலின் ஹீரோ என்றே அழைக்கலாம். இது மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது இண்டஸ்டிரியில் மற்றொரு புரட்சியை இந்த ஸ்கார்பியோ-என் செய்யும் எதிர்பார்க்கும் அளவிற்கு இதில் அம்சங்கள் நிறைந்திருக்கிறது. இது ஸ்கார்ப்பியோவின் வரலாற்றையே திரும்ப எழுதும் திருத்தி எழுதும் வல்லமை கொண்டது. இந்த காருக்கு நீண்ட காத்திருப்பு காலம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்கள் பிக் டாடி காரை வாங்கத் தயாராகுங்கள்.

Most Read Articles
English summary
Mahindra Scorpio N 2022 Review interior engine spec color option and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X